Thursday, July 31, 2014

வாழ்த்துவோம்

            தமிழ் மாநில சங்க உதவி செயலரும் , விருதுநகர் மாவட்ட சங்க வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவரும் ,ஒப்பந்த ஊழியர் சங்க செயல்பாட்டிற்கு உரிய வழிகாட்டியாக திகழ்ந்தவரும் ஆன தோழர் C பழனிச்சாமி அவர்கள் இன்று (31-07-2014)பணி ஓய்வு பெறுகிறார் .
                           

             அவரது பணி ஓய்வு காலம் சிறக்க விருதுநகர் மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
  

Sunday, July 27, 2014

BSNL to Lease Tower Infra No to Fiber Sharing, a good Move?

செய்தி படிக்க :-Click Here

நோக்கியா தரும் பாடம் என்ன?

மத்திய அரசு 2005-ல் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தை உருவாக்கியது. உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதும், தொழில்கள் தொடங்கு வதும், உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்வதும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும், பொருளாதார மண்டலங்களின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் நூற்றுக் கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இதற்காக, பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.2009-ல் மத்திய அரசு மின்னணு தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை அளித்திட அமைத்த பணிப் பிரிவு பல ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகளையெல்லாம் தமிழகத்தில் அதிமுக அரசு அதற்கு முன்னதாகவே 2005-ம் ஆண்டிலிருந்தே அட்சரம் பிசகாமல் அமலாக்கியிருந்தது. அதனால்தான் மேற்கண்ட பணிப்பிரிவு நாடு முழுவதும் ‘ஸ்ரீபெரும்புதூர்களை உருவாக்கிட வேண்டும்’ என்று கூறியது.2005-ல் ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்ட லத்தில் நோக்கியா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. ஏக்கருக்கு ரூ. 8 லட்சம் என்று நிலத்தை வாங்கி ஏக்கருக்கு ரூ. 4.5 லட்சம் என்று 210 ஏக்கர் நிலத்தை நோக்கியாவுக்கு மாநில அரசு வழங்கியது. பத்திரப் பதிவுக் கட்டணம் முழுமையாகத் தள்ளுபடிசெய்யப்பட்டது. தடையில்லா மின்சாரம், முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50% வரிவிலக்கு, மத்திய விற்பனை வரி மற்றும் சேவை வரி, வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி போன்ற வரிகளிலிருந்தும் விலக்குகள் வாரி வழங்கப்பட்டன. மேலும், நோக்கியா நிறுவனத்தைப் பொதுப் பயன்பாட்டு நிறுவனம் என்றும் அரசு அறிவித்தது.நோக்கியாவில் சுமார் 8,000 பேர் நேரடித் தொழிலாளர் களாகப் பணிபுரிந்தனர். தொழிலாளர்களில் 60% பேர் பெண்கள். நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்துதருவதற்கு ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி., சால்காம், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனாலி போன்ற நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் உட்பட நோக்கியா வளாகத்தில் சுமார் 22,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் சேர்ந்தனர். நோக்கியாவில் உற்பத்தி வேகமாக நடந்தது. கைபேசி உலகச் சந்தையில், 32 சதவீதத்தையும், இந்திய கைபேசி சந்தையில் 52 சதவீதத்தையும் நோக்கியா கைப்பற்றியது. கோடிகோடியாய் விற்பனை, கோடிகோடியாய் லாபம்.ரூ. 21,000 கோடி என்னவாயிற்று?கைபேசிக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த மென்பொருளுக்கு மத்திய அரசுக்குக் கட்ட வேண்டிய வரி ரூ.21,000 கோடியைக் கட்டாமல் ஏய்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே உள்நாட்டில் விற்பனை செய்த கைபேசிகளையும் ஏற்றுமதி செய்வதாக இணைத்துக் கணக்குக் காட்டி மாநில அரசுக்குக் கட்ட வேண்டிய சுமார் ரூ. 2,430 கோடியை நோக்கியா ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே, மாநில வருவாய்த் துறையும் மத்திய வருமானத் துறையும் நோக்கியா நிறுவனம் மீது வழக்கு தொடுத்தன. வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நோக்கியா நிறுவனம் வரியைக் கட்டியாக வேண்டுமென்று உத்தரவிட்டதோடு நோக்கியாவின் சொத்துக் களையும் முடக்கியது. இதற்கிடையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுவதுமுள்ள தனது கைபேசி உற்பத்தித் தொழிற்சாலைகளை நோக்கியா விற்றுவிட்டது. பெரும்புதூரிலுள்ள நோக்கியா தொழிற்சாலை மீது வரி பாக்கி வழக்கு இருப்பதால் இதை மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கவில்லை. வரி பாக்கிக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது நோக்கியா நிறுவனம் பெரும்புதூரில் தொடர்ந்து கைபேசி உற்பத்தி நடக்கும் என்றும், தொழிலாளர்களின் வேலைக்கு ஆபத்து இல்லையென்றும் நீதிமன்றத்துக்கு உறுதியளித்தது. நடை முறையில் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் செல்ல நிர்ப்பந்தித்தது.தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாக்கத் தொழிற் சங்கத் தலைமை பல முயற்சிகளை மேற்கொண்டது. மாநில தொழிலாளர் துறை, தொழில் துறை, முதல்வர் போன் றோரிடம் முறையிட்டு, தொழிற்சாலையையும், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலையையும் பாதுகாக்க வேண்டுமென்று வலியுறுத்தியது. 31.3.2014-ல் 2000-க்கும் மேற்பட்ட நோக்கியா தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கோட்டை முன்பு நடைபெற்றது. தொழிலாளர் துறையும், அரசும் இதில் தலையிடவே விரும்பவில்லை.திமுக-அதிமுக வேறுபாடு இல்லை?இந்த மாதிரி விஷயங்களில் மத்திய ஆட்சியில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எப்படி வேறுபாடு இல்லையோ, அதே மாதிரி தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதிமுக அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, அடுத்து வந்த திமுக அரசு அட்சரம் பிசகாமல் அமலாக்கியது. நோக்கியா நிறுவனம் தொடக்கத்தில் மூலதனமிட்ட ரூ. 650 கோடிக்கும் மேலாக மதிப்புக்கூட்டு வரியாக சுமார் ரூ. 850 கோடியை மாநில அரசு நோக்கியாவுக்குத் திருப்பி அளித்துள்ளது.9 ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்தின் உற்பத்தியின் மதிப்பு ரூ. 1,50,000 கோடி என்பதை நிறுவனமே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. குறைந்த மூலதனம், கொள்ளை லாபம் இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கை. ஆனால், தொழிலாளர்களின் நலன்?22 ஆயிரம் தொழிலாளர்களின் கதி?தங்களுடைய எதிர்காலம் ஒளிமயமாக அமையும் என்ற நம்பிக்கையில் பணியில் சேர்ந்த 5,000 தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் நோக்கியா நிர்வாகம் வெளியேற்றிவிட்டது. நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்த நஷ்ட ஈட்டை வாங்கவில்லையென்றால் வெறுங்கையோடு வெளியேற வேண்டியிருக்கும் என்ற பீதியில் தொழிலாளர்கள், நிர்வாகம் கொடுத்ததை விரக்தி யோடு வாங்கிக்கொண்டார்கள். சுமார் 850 தொழிலாளர்கள் மட்டுமே வேலையில் உள்ளனர். நோக்கியா மட்டுமல்ல; இந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுத்து வரும் மற்ற சிறு நிறுவனங்களும் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துவருகின்றன. பெரும்புதூர் பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நோக்கியா தொழிலாளர்கள் உட்பட 22,000 தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நோக்கமாகச் சொல்லப்பட்ட தொழில் வளர்ச்சி, நோக்கியா எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்ட 9 ஆண்டுகளோடு முடிந்துபோனது. வேலைவாய்ப்பும் குறுகிய காலத்துக்கே அளிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்கான வாய்ப்புகளின்றி நிர்க்கதியாய் விரட்டப்பட்டுள்ளனர்.ஆனால், நோக்கியா தமிழக அரசிடமிருந்து குறைந்த விலையில் நிலம், பத்திரப் பதிவு சலுகை, வரியை திரும்பப் பெற்றதில் ரூ.850 கோடி, பல்லாயிரக் கணக்கான கோடிகள் வரிச் சலுகை இத்தனையும் பெற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசுக்கு ரூ.21,000 கோடி வரிஏய்ப்பு, மாநில அரசுக்கு ரூ.2,430 கோடி வரி ஏய்ப்பு என்று நம் நாட்டுச் செல்வங்களை எல்லாம் ஏப்பம் விட்டுவிட்டுக் கூடாரத்தைக் காலிசெய்துவிட்டது. என்ன செய்யப்போகிறோம் நாம்? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோமா?
ஜி. ராமகிருஷ்ணன்மாநிலச் செயலாளர் - சிபிஐ (எம்)
              < நன்றி :- தி ஹிந்து >

Thursday, July 24, 2014

போராட்டம்

புவனேஷ்வரில் பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில் நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது. நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் பிப்ரவரி மாதம் நடைபெற்ற  ராஜ்கோட் மத்திய  செயற்குழு பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் அறைகூவலை வெற்றிகரமாக்க கேட்டு கொண்டது .அந்த அடிப்படையில் தற்போது போராட்ட  அறைகூவல்   விடப்பட்டுள்ளது .

26-08-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில்  தர்ணா போராட்டம்
25-09-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி 
15-10-2014 அன்று CMD அலுவலகம் நோக்கி பேரணி 
பிரச்சனைகள் தீராவிட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
கோரிக்கைகள் :-
விடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்
EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  அனைத்திந்திய மகாநாட்டை தமிழ் மாநில சங்கம் வரும் டிசம்பர் மாதம் நடத்த உள்ளது .

Wednesday, July 23, 2014

ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை பேசிய மாவட்ட  செயற்குழு புகைப்பட தொகுப்பு 

























GPF

           "GPF" என்ற இந்த சொல் இன்று அதிகம் பேசக்கூடிய சொல்லாகிவிட்டது . இது வருமா ! வராதா ! வந்தால் எத்தனை சதவிகிதம் .இது விசயமாக நேற்று நமது CMD அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுடன் மூத்த பொது மேலாளர் (BFCI) அவர்களை இன்று (23-07-2014) சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது  GPF payment தாமதம் ஆவதற்கு கார்போரேட் அலுவலகத்தில் பணமே இல்லையாம் (NIL Balance). வரும்  வெள்ளிகிழமைக்குள் நிதி சேர்ந்தால் போதிய ஒதுக்கீடு செய்யப்படுமாம் . அது சாத்தியம் இல்லை என்றால் வரும்  சம்பளத்திற்கான   நிதி ஒதுக்கீட்டுடன்  "GPF" க்கும்   சேர்ந்து நிதி ஒதுக்கீடு வரும்  என அவர் கூறியுள்ளார்

கேடர் பெயர் மாற்றம்

  கேடர் பெயர் மாற்றத்திற்கான  கமிட்டியின் கூட்டம் இன்று (23-07-2014) நடைபெற்றது . நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு ,நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி ,நமது துணை பொது செயலர் தோழர் .அனிமேஷ் மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர் . நிர்வாகத்தின் தரப்பில் கலந்து கொண்ட  திருமதி மது அரோரா மூத்த பொது மேலாளர் (மறு சீரமைப்பு ) கூறியதாவது . டெலிகாம் மெக்கானிக் மற்றும் RM கேடருக்கான பெயர் மாற்றத்தில் ஏற்கனவே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும் அதன் படி டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் டெலிகாம் டெக்னீசியன்  என்றும் RM ஊழியர்கள் டெலிகாம் உதவியாளர் (Telecom Assistant) என்றும் அழைக்கப்  படுவர். சீனியர் TOA மற்றும் TTA  கேடருக்கான பெயர்களை 
Sr. TOA------------------ Telecom Office Associate என்றும் TTA வை ------- Telecom Engineering Associate என்றும் நிர்வாகம் முன்மொழிந்ததை நமது சங்கம் ஏற்று கொள்ளவில்லை   
Sr.TOA கேடரை டெலிகாம் அசோசியேட்  ஆபீசர் என்றும் TTA கேடரை ஜூனியர் இஞ்சினியர் என்றும் மாற்றம் செய்ய நமது BSNLEU சங்கம் வலியுறுத்தி உள்ளது .  இது விசயமாக  முடிவுகள் எட்டப்படவில்லை 

Monday, July 21, 2014

Column: 2100 ways to win the Budget

செய்தி படிக்க :-Click Here

மத்திய செயலக முடிவுகள்

        1.பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல் இணைப்பை  பொறுத்தவரை,எம்டிஎன்எல் நிறுவனத்தின் பங்குகள் விலக்கபட்ட பிரச்னை , அந்த நிறுவனத்தின் கடன் சுமை , மற்றும் HR பிரச்னை ஆகியவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் இணைப்பை ஏற்று கொள்ள முடியாது .

               2. நெடு நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்காக கூட்டு போராட்ட குழு சார்பாக நடைபெற 07-08-2014 அன்று நடைபெற உள்ள ஆர்பாட்டத்தை பேட்ஜ் அணிந்து  மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் மிகுந்த சக்தியுடன்  நடத்த வேண்டும் . JAC  அமைப்பை மாநில  மற்றும் மாவட்ட அளவில் உருவாக்கி   அனைத்து NON EXECUTIVE சங்கங்களை அதில் இணைத்து வலிமைப்படுத்தவேண்டும் .

          3. புதிய தாராளமய கொள்கை மற்றும் வகுப்பு நல்லிணக்கம் மற்றும் 10 அம்ச  கோரிக்கைகளை  வலியுறுத்தி ஒரு சில மாநிலங்களை தவிர அனைத்து மாநிலங்களிலும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றதை மத்திய செயலக கூட்டம் பாராட்டியது . இம் முயற்சி மாவட்ட மட்டங்களிலும் தொடரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது . 

                4. ஸ்டோர் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை விஷயமாக மாநில செயலர்கள் மாவட்ட செயலர்களிடம் விபரங்களை சேகரித்து அதை மாநில தலைமை பொது மேலாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அதன் நகலை மத்திய சங்கத்திடம் சமர்பிக்க வேண்டும்.

         5.  நமது அனைத்திந்திய மகாநாடு வரும் நவம்பர் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது . அனுமதிக்கப்பட்ட சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே மகாநாட்டில் அனுமதிக்கப்படுவர் .

           6. ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின் படி பி எஸ் என் எல் காசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர்  சம்மேளனம் உருவாக்கப்படாத மாநிலங்களில் உடனடியாக அதை உருவாக்க வேண்டும் .

       7. அக்டோபர் 3 ஆம் தேதி சர்வதேச நடவடிக்கை தினத்தை வேலையின்மை எதிர்ப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் .

        8.  டிசம்பர் 11 ஆம் தேதி  தொழிலாளி  வர்க்கத்தின் தலைவர் தோழர்  K.G. போஸ்.அவர்களின் நினைவு நாளை பொருத்தமான முறையில் அனுஷ்டிக்க வேண்டும் .

       9.  ஏப்ரல் 7,8 தேதிகளில் டெல்லியில் K .G .போஸ் நினைவு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற தொழிற்சங்க வகுப்பு மிகுந்த பயன் உள்ளதாக இருந்தது என அதில் பங்கேற்ற அனைவரும் கூறியதை மத்திய செயலக கூட்டம் நினைவு கூர்ந்த்து .  

ஒரு நல்ல செய்தி

       நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் நெடு நாள் கோரிக்கையான TSM சேவையை கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என்பதை கார்போரேட்  அலுவலகம் ஏற்று கொண்டு உத்தரவை வெளியிட்டு விட்டது .இவ் உத்தரவு படி சர்வீஸ் புக் மற்றும் HRMS இல் TSM சேவை பதிவு செய்யப்படும்.பணி ஓய்வு  பெறும்  போது பென்ஷன் கணக்கிடுவதில் TSM  சேவையில் 50% எடுத்து கொள்ளப்படும் .உத்தரவு படிக்க :-Click Here

Friday, July 18, 2014

DataWind tablets to come with 1 year of free internet from BSNL

செய்தி படிக்க :-Click Here

கோரிக்கை தினம்

இன்று (18-07-2014)நடைபெற்ற கூட்டு போராட்ட குழு கூட்ட முடிவாக  வரும் 07-08-2014 அன்று "கோரிக்கை தினமாக" அனுஷ்டித்து மதிய உணவு இடைவேளை நேரத்தில் பேட்ஜ் அணிந்து "ஆர்ப்பாட்டம்" நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.27-06-2014 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது . அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க JAC மீண்டும்  11-08-2014 அன்று கூடவுள்ளது .

இன்று நெல்சன் மண்டேலா பிறந்த நாள்

மற்றவர்களது நிறம், பின்னணி, மதம் போன்றவற்றின் மீதான வெறுப்பு யாருக்கும் பிறப்பிலேயே வருவதில்லை. வெறுப்பு என்பது வெறுக்கப் பழகுவதால் ஏற்படுவதே. மக்கள் வெறுப்பதற்குப் பழக முடியுமானால் அவர்களுக்கு நிச்சயம் அன்பு காட்டக்  கற்றுத்தர முடியும். ஏனெனில் வெறுப்பைவிடவும் இயல்பாகவே அன்பு மனிதர்களுக்கு ஏற்படுகிறது.உயிருடன் இருப்பது மட்டுமே வாழ்வதென்றாகாது. மற்றவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நாம் என்ன செய்தோம் என்பதே, நாம் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமாகும். கல்வியே உலகை மாற்றுவதற்கான மிக சக்திவாய்ந்த ஆயுதம். சுதந்திரமாய் வாழ்வது என்பது தனது தளைகளை அறுத்தெறிவது மட்டுமல்ல, மற்றவர்களது சுதந்திரத்தையும் பேணும்படி வாழ்வதே. எதிலும் தோற்றதே இல்லை என்பதைவிட ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் எழுந்து நிற்பதே பெருமைக்குரிய விஷயமாகும்.

Thursday, July 17, 2014

ஒப்பந்த ஊழியர் சங்க 5 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

       ஒப்பந்த ஊழியர் சங்க 5 வது மாவட்ட செயற்குழு கூட்டம் 17-07-2014 அன்று மாலை மாவட்ட  தலைவர் தோழர் செல்வராஜூ தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது . தோழர் பாண்டியராஜன் கிளை செயலர் அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க ,மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்கள் மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி பேசினார் . E passbook சாத்தூர் மற்றும் ராஜபாளையம்  பகுதி ஊழியர்களை தவிர மற்ற அனைவர்க்கும் எடுத்தாகி விட்டதை அவர் நினைவு படுத்தினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தனது உரையில் இன்றைய BSNL நிறுவனம் எதிர்நோக்கி உள்ள நிதி நெருக்கடி, வரன்முறை இன்றி பாதுகாப்பு ,காப்பீடு, ரயில்வே  துறைகளில் அந்நிய முதலீட்டை அமல்படுத்தும் இன்றைய மத்திய அரசின் கொள்கைகள் , ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் மாவட்ட சங்கத்தின் செயல்பாடு ஆகியவற்றை விளக்கி கூறினார் .ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் M முருகையா அவர்கள் தன் சிறப்புரையில் மாநில மட்டத்தில் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை கையாளும் தன்மை குறித்தும் , நீதிமன்றங்களில் நாம் கொண்டு சென்று உள்ள பிரச்சனைகளையும் , தற்போது ஏற்பட்டுள்ள வீக்லி ஆப் சம்பள பிரச்சனை , semi  skilled சம்பள வாங்குவதற்கான முயற்சி பற்றியும்  விரிவாக விளக்கினார் .ஒப்பந்த ஊழியர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தையும் அவர் கூறினார் . தோழர் பாண்டியராஜன் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது . இன்றைய கூட்டத்தில் மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் .முத்துசாமி ,சந்திரசேகரன் ,மாவட்ட பொருளாளர்  தோழர் வெங்கடப்பன் , கிளை செயலர்கள் தோழர்கள் முத்துராமலிங்கம் ,சோலை ,சிங்காரவேலு , தோழர் மாரியப்பா , மாரிமுத்து ஆகியோர் உட்பட சுமார் 60 தோழர்கள் கலந்து கொண்டனர் .

Wednesday, July 16, 2014

உலகில் மூன்றில் ஒரு பங்கு மிகவும் ஏழைகளை கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. அமைப்பு தகவல்

              ஒளிரும் இந்தியா 
                 உலகில் மூன்றில் ஒரு பங்கு மிகவும் ஏழைகளை கொண்ட நாடு இந்தியா என்றும், 5 வயதுக்கும் கீழ் இறப்பு விகிதம் அதிகம் என்றும் ஐ.நா. மில்லினியம் வளர்ச்சி இலக்கு அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புது தில்லியில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, ஐ.நா. அமைப்பின் ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசுகையில் இதனை தெரிவித்தார்.
                                    <நன்றி :- தினமணி >

ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

              ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (17-07-2014) அன்று மாலை விருதுநகரில் நடைபெற உள்ளது.மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள செயற்குழுவில்ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவர் தோழர் M முருகையா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார் . அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் ,கிளை செயலர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
    ரவீந்திரன்                                                            முனியசாமி 
மாவட்ட செயலர்                                              மாவட்ட செயலர்
      BSNLEU                                      ஒப்பந்த ஊழியர் சங்கம் 
                                    

உலக வங்கியை புரட்டிப் போட வரும் இந்தியா, சீனா, ரஷ்யாவின் 'பிரிக்ஸ் ' வங்கி!

உதயமானது பிரிக்ஸ் வங்கி 
பஞ்சப்பாட்டில் இருந்து வெளியே வந்த 5 நாடுகள்...:  உலக வங்கியிடம் முதன்முதலில் கடன் கேட்டவை பிரான்ஸ், போலந்து, சிலி ஆகிய நாடுகள் தான். இதில் பிரான்சுக்கே முதலில் கடன் தருவோம் என்றார் அப்போதைய உலக வங்கித் தலைவரான அமெரிக்கர் ஜான் மெக்லாய். அத்தோடு அமெரிக்க மேலும் ஒரு நிபந்தனையும் விதித்தது. கடன் வேண்டுமென்றால் பிரான்ஸ் அரசில் உள்ள கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்க வேண்டும் என்றது. இதற்கு பிரான்ஸ் ஒப்புக் கொண்டதோடு கம்யூனிஸ்ட்டுகளை கழற்றிவிட்டுவிட்டு கடனை வாங்கிக் கொண்டு போனது. இது தான் உலக வங்கியின் 'அரசியல் வரலாறு'.அதே போல இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச அளவில் நாடுகளின் நிதி செலுத்தும் முறைகளை (International payment system) சீரமைக்க உருவாக்கப்பட்டது தான் சர்வதேச நாணய நிதியம். பெரும்பாலும் ஏற்றுமதி- இறக்குமதியில் அமெரிக்க டாலர்களே புழக்கத்தில் உள்ளதால், டாலர் புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவே இதை இன்னும் பல சோஷலிஸ நாடுகள் பார்க்கின்றன. இந்த அமைப்பு சர்வதேச வர்த்தகம், நாடுகளின் டாலர்கள் கையிருப்பு ஆகிய விஷயங்களில் உதவுவதோடு டாலர் பற்றாக்குறையால் தவிக்கும் நாடுகளுக்கு தங்களது இறக்குமதிக்காக கடன் கொடுத்தும் உதவுகிறது. ஆனால், இங்கேயும் கம்யூனிஸ்டுகளை அடக்குகிறோம் என்று கியூபாவை விரட்டிவிட்டனர். அதே போல சீனாவின் இடத்தை தைவானுக்குத் தந்தனர். ஆனால், சீனா கடும் சண்டை போட்ட பின்னரே மீண்டும் இடம் கிடைத்தது. இவ்வாறாக உலக வங்கியிலும் சர்வதேச நாணய நிதியத்திலும் 188 நாடுகள் இடம் பெற்றிருந்தாலும், இந்த அமைப்புகளின் பெயரில் தான் 'உலகம்', 'சர்வதேச' ஆகிய வார்த்தைகள் உள்ளனவே தவிர, உண்மையில் இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நலன்களையே மையமாகக் கொண்டு செயல்பட்டன . வளர்ந்து வரும் நாடுகள் இந்த அமைப்புகளின் நிதியுதவியை சார்ந்தே இருந்ததால், உலகளவில் அமெரிக்க, ஐரோப்பிய ஆதிக்கம் தடையில்லாமல் பரவியது. இவ்வாறு பல்லாண்டுகால பஞ்சப்பாட்டில் இருந்து வெளியே வந்த 5 பேரும் (இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் அமெரிக்கா) இணைந்த கைகளாய் மாறி உருவாக்கிய அமைப்பு தான் பிரிக்ஸ் அமைப்பு (BRICS- Brazil, Russia, India, China, and South Africa). உலக மக்கள் தொகையில் பாதிப் பேர், சுமார் 300 கோடி பேர், இந்த 5 நாடுகளில் தான் வசிக்கின்றனர். உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 5ல் 1 பங்கு இந்த நாடுகளைச் சார்ந்தது. உலகின் மொத்த வர்த்தகத்தில் 6.14 ட்ரில்லியன் டாலர்கள் இந்த 5 நாடுகளிடையே நடக்கிறது. உலக வர்த்தகத்தில் இது 17 சதவீதம். இந்த 5 பேரும் ஒன்று சேர்ந்தது, உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இங்கு தான் இருக்கோம் என்று மார்தட்டிக் கொள்ள அல்ல. உலகப் பொருளாதாரத்தை அமெரிக்கா- ஐரோப்பாவிடம் இருந்து மீட்டு எடுக்கவே. குறிப்பாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்துக்கு மாற்றாக ஒரு உலகளவிலான மாற்று வங்கியை உருவாக்கவே. அதைத் தான் நேற்று செய்து காட்டியுள்ளன பிரிக்ஸ் நாடுகள். இந்த 5 நாடுகளும் இணைந்து 50 பில்லியன் டாலரைப் போட்டு ஒரு வங்கியை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன. ஒரு பில்லியன் என்பது சுமார் ரூ. 6,000 கோடி. ஆக, ரூ. 3 லட்சம் கோடியை முதலீடாக வைத்து இந்த வங்கி உருவாக்கப்படவுள்ளது. இந்த முதலீட்டை வருங்காலத்தில் 100 பில்லியன் டாலராக, அதாவது ரூ. 6 லட்சம் கோடியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளன. வ்வளவு பெரிய பண விவகாரம் என்பதால் முதலில் பிரிக்ஸ் நாடுகள் வங்கியை உருவாக்குவதில் வேகம் எதையும் காட்டவில்லை. ஆனால், பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்ட அமெரிக்கா கடந்த ஆண்டு தனது பொருளாதாரத்தை வலுத்தப்படுத்திக் கொள்ளும் திட்டத்தில் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்களுக்கு தந்து வந்த அரசு உதவியை நிறுத்தியது. இதையடுத்து அமெரிக்க அரசின் பங்குகளில் முதலீடு செய்ய உலகளவில் போட்டி கிளம்பியது. மாபெரும் முதலீட்டாளர்கள் இந்தியா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் பங்குச் சந்தைகளில் செய்திருந்த முதலீடுகளை (டாலர்கள் என்று படிக்கவும்) எல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டு அமெரிக்கா பக்கம் ஓட, இந்தியா, ரஷ்யா, பிரேசில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. இவ்வாறு விடிந்தாலே டாலருக்கு திருவோடு தூக்கிக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று யோசித்த 5 நாடுகளும் பிரிக்ஸ் வங்கியை உருவாக்குவதை விரைவுபடுத்தின. நேற்று பிரேசிலில் வைத்து இந்த வங்கியின் துவக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. 5 நாடுகளுக்கும் திடீர் திடீரென ஏற்படும் டாலர் பஞ்சத்துக்கு இந்த 50 பில்லியன் டாலர் இருப்பு பெரும் உதவியாக இருக்கும். இந்த 50 பில்லியன் டாலர் தவிர இந்த 5 நாடுகளும் இணைந்து 100 பில்லியன் டாலர் அவசர கால நிதியையும் (Contingent Reserve Arrangement) உருவாக்க உள்ளன. டாலருக்கு எதிராக ஏதாவது ஒரு நாட்டின் கரன்சியின் மதிப்பு மிக வேகமாக சரியும்போது இந்த அவசரகால நிதி பயன்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட நாட்டின் கரன்சிகளை இந்த அவசரகால நிதி வாங்கிக் கொண்டு டாலர்களைக் கொடுத்து, அந்த நாட்டின் கரன்சி சரிவை கட்டுப்படுத்தும். இதில் 41 பில்லியன் டாலர் சீனாவிடம் இருந்து வரப் போகிறது. உலகிலேயே மிக அதிகமான அமெரிக்க டாலர்களை அன்னிய செலாவணியாக வைத்துள்ள நாடு, அமெரிக்கா அல்ல, சீனா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு பணத்தை அமெரிக்க டாலர் பங்குகளில் போட்டு வைத்துள்ளது. இந்த அவசரகால நிதிக்கு இந்தியா, ரஷ்யா, சீனா ஆகியவை தலா 18 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளன. தென் ஆப்பிரிக்கா 5 பில்லியன் டாலரை முதலீடு செய்யும். சீனா தனக்கு எப்போது தேவைப்பட்டாலும் தான் போட்ட பணத்தில் பாதியை, அதாவது 20.5 பில்லியன் டாலர்களை எடுத்துக் கொள்ளலாம். தென் ஆப்பிரிக்கா தான் போட்ட பணத்தைப் போல இரு மடங்கு பணத்தை, அதாவது 10 பில்லியன் டாலர்களை எடுத்துக் கொள்ளலாம். இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை தாங்கள் போட்ட பணமான 18 பில்லியன் டாலர்களை எடுத்துக் கொள்ளலாம். அதே போல 100 பில்லியன் டாலர் அவசர கால நிதியில் இருந்து சீனா தனக்குத் தேவைப்படும்போது தான் போட்ட பணத்தில் பாதியை எடுத்துக் கொள்வோம் என்று சொன்னதை இந்தியாவும் பிரேசிலும் ஏற்கவில்லை. ஆனால், சீனா பிடிவாதம் பிடித்ததால் இந்தியாவும் பிரேசிலும் விட்டுக் கொடுத்தன. அதே நேரத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சீனாவைச் சேர்ந்த யாருக்கும் வங்கியின் தலைவர் பதவி தரப்படாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை சீனா ஏற்றுக் கொண்டது. அதே போல வங்கியின் தலைமையகம் சீனாவில் அமைக்க இந்தியாவும், முதல் தலைவர் பதவி இந்தியாவுக்குத் தர சீனாவும் ஒப்புக் கொண்டுவிட்டன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் கடைசி நேரம் வரை கூட சிக்கல் தொடர்ந்தது. இதனால் இந்த பிரிக்ஸ் மாநாட்டில் வங்கி உருவாக்கப்படுவதே கூட சந்தேகத்துக்கு இடமானது. ஆனால், கடைசி 10 நிமிடங்களில் இரு தரப்பும் சில விட்டுக் கொடுத்தல்களைச் செய்ய வங்கி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுவிட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் டில்மியா ரெளசெப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா ஆகியோர் பிரேசிலின் போர்டலேஸா நகரில் கையெழுத்துப் போட்டனர். 50 மில்லியன் டாலர் வங்கி...:
இந்த வங்கியிலிருந்து உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியைப் பெற முடியும். இந்த வங்கி தவிர 5 நாடுகளும் இணைந்து பிரிக்ஸ் பங்கு கூட்டமைப்பையும் (BRICS Stock Alliance) உருவாக்கவுள்ளன. இதன்மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த 5 நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது எளிதாக்கப்படும். 2016ம் ஆண்டு முதல் இந்த பிரிக்ஸ் வங்கி செயல்பாட்டுக்கு வரும். இந்த வங்கியை உருவாக்குவதில் மிகத் தீவிரம் காட்டியது ரஷ்ய அதிபர் புடின் தான். அப்படி என்ன ரஷ்யாவுக்கு டாலர் பற்றாக்குறையா என்றால் இல்லை. அந்த நாட்டிடம் சுமார் 500 பில்லியன் டாலர்கள் கையிருப்பு உள்ளது. தினந்தோறும் எண்ணெய் ஏற்றுமதியால் டாலர்கள் குவிந்து கொண்டுள்ளன. ஆனால், அமெரிக்காவுக்கு எதிராக, அமெரிக்காவின் சார்ந்த நிதி அமைப்புகளுக்கு எதிராக ஒரு பலமான எதிர் அணியை உருவாக்குவதே அவரது ஒரே குறிக்கோள். இதைத் தான் செய்து காட்டியுள்ளார் புடின். புடினின் இந்த அரசியலால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் லாபம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
                                   < நன்றி :- ஒன் இந்தியா
















Monday, July 14, 2014

ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனை

கேபிள் மற்றும் ஹவுஸ் கீபிங் பகுதியில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் பட்டுவாடா  ஆகாமல் உள்ளதை இன்று நமது சங்கம் துணை பொது மேலாளர் அவர்களை சந்தித்து கடுமையாக சுட்டி காட்டியது . மாநில மட்டத்தில் வரும் உத்தரவுகளை ஒப்பந்தகாரர்கள் மதிப்பது இல்லை .உரிய தேதியில் அவர்கள் சம்பளத்தை வழங்க மறுக்கும் போது மாவட்ட நிர்வாகமே சம்பளத்தை பட்டுவாடா செய்யவேண்டும் என நாம் கூறியபிறகு மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரரை  தொலைபேசியில் தொடர்பு  கொண்டு உடனடியாக சம்பளத்தை வழங்க நிர்பந்தம் செய்த பிறகு இன்று மாலை  கேபிள் பகுதிக்கு மட்டும் சம்பளம் பட்டுவாடா அதுவும் ரூபாய் 1000/- குறைவாக ஆகி உள்ளது .இவ் விஷயம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹவுஸ் கீபிங் பகுதியில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாளை சம்பளம் பட்டுவாடா ஆக வில்லையெனில் 16-07-2014 அன்று மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது . 

Saturday, July 12, 2014

MTNL, BSNL face total debt of over Rs 21,000 cr

            The total debt of state-run telecom companies MTNL and BSNL has increased to Rs 21,208 crore at the end of June 2014.It was Rs 12,983 crore as of March 31, 2012, Parliament was informed on Friday. For BSNL, it was Rs 3,335 crore, and MTNL — Rs 9,648 crore.“As on March 31 (2014), the total debts on the books of BSNL and MTNL are Rs 5,948 and Rs 14,210 crores respectively,” Telecom Minister Ravi Shankar Prasad said in the Rajya Sabha.He said further that total debt on BSNL as the end of June stood at Rs 6,448 crore while it was Rs 14,760 crore for MTNL. Acknowledging that both BSNL and MTNL are currently in financial distress, the government said it is “quite serious” to restore the health of the two telecom services providers by adopting various measures like a whopping Rs 39,458 crore fresh investment over five years.Responding to a question on the performance of the two PSUs, the Telecom Minister said, “The Government is quite serious to improve the health of the two bodies.” He also said the government was “conscious” of the performance of the two firms which needs “substantial improvement”.He said government proposed to invest Rs 39,458 crore to bring the health of the two back over the next five years.BSNL’s market share of mobile subscriber base has dipped to 10.95 per cent, as on May 2014, from 14.87 per cent in March, 2009. During the same period, MTNL’s market share has come down to 4.83 per cent from 10.87 per cent.“The decline in landline connections and in market share of mobile subscriber base in BSNL has been sharp over the last five years whereas in MTNL, the decline in market share of mobile subscriber base over the last five years has been severe,” he said.Revenue from operations of BSNL and MTNL have dropped by 11.67 per cent and 23.87 per cent respectively over the past three years. BSNL has been incurring losses for the last five years and it touched Rs 7,085 crore in 2013-14. MTNL has been incurring losses for the last four years with losses touching Rs 5,321 crore in 2012-13.However, MTNL reported Rs 7,825 crore profit in 2013-14 mainly due to write back of provisions on account of pensionary liabilities and spectrum amortisation costs.Government has taken different measures such as waiver of Rs 1,411 crore government loan to BSNL. It has also accorded financial support to the tune of Rs 6,724.51 crore to BSNL and Rs 4,533.97 crore to MTNL on surrender of Broadband Wireless Access (BWA) spectrum, he said.
                     <நன்றி :- தி ஹிந்து >

Friday, July 11, 2014

கசப்பு மருந்து



<நன்றி :- ஆனந்த விகடன் >

டும்டும்டும்டும்.... இந்தியா ஒரு தரம்... இந்தியா ரெண்டு தரம்... இந்தியா மூணு தரம்..!

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு... ரயில்வே துறையில் அந்நிய முதலீடு... காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு...' என்று புதிய பி.ஜே.பி அரசு ஒரேயடியாக அந்நிய மோகத்தில் திளைப்பதைப் பார்க்கும்போது... ஒரு படத்தில் கவுண்டமணி அடிக்கும் கூத்துதான் நினைவுக்கு வருகிறது.வாசலில் நிற்கும் பிச்சைக்காரரைப் பார்த்து, 'சோறு இல்லை போ' என்று சொல்வார் மனைவி. உடனே சீறிக்கொண்டு கிளம்பும் கணவன் கவுண்டமணி, 'அதெப்படி சோறு இல்லைனு நீ சொல்லலாம். இந்த வீட்டுல நான் பெரியவனா... நீ பெரியவனா' என்கிற ரேஞ்சில் குதியாட்டம் போட்டபடியே அந்தப் பிச்சைக்காரரை அழைத்து, 'இப்ப நான் சொல்றேன்... உனக்கு சோறில்லை போடா' என்று சொல்வார்.காரித்துப்பியபடியே நகர்வார் பிச்சைக்காரர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தபோது, ''அவர் அந்நியர்... இந்தியாவை ஆளத் தகுதியில்லை. நாட்டையே அந்நியர்களுக்கு விற்றுவிடுவார்'' என்று கடும் எதிர்ப்புக் காட்டியது பி.ஜே.பி. இதையடுத்துதான், அந்தப் பதவியில் வந்து அழகாக அமர்ந்தார் திருவாளர் மன்மோகன் சிங். கண்டகண்ட வழிகளிலும் அந்நியர்களுக்கு இந்தியாவையே பட்டா போடப் பார்த்தார். கூட்டணி ஆட்சி எனும் குருமா ஆட்சி நடந்தபோதும், தன்னால் முடிந்தவரை இதைச் சாதிக்கவும் செய்தார். கண்டகண்ட வழிகளில் எல்லாம் அந்நியர்களுக்கு இங்கே பந்தி விரித்தார். இந்தியர்களை பங்குதாரர்களாகக் கொண்ட அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி என்றெல்லாம் கொல்லைப்புற வாயிலைத் திறந்துவிட்டார்.அப்போதெல்லாம் எதிர்ப்புக் காட்டி வந்த பி.ஜே.பி, இப்போது அதைவிட அநியாயத்துக்கும் அந்நிய மோகத்தில் மயங்கிக் கிடக்கிறது. 'நீயென்ன அந்நியனுக்கு நாட்டை விற்பது. இதோ நாங்கள் விற்கிறோம்' என்றபடி வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது மோடியின் ஆட்சி. போகிற போக்கில் நாடாளுமன்றத்தில் கூட அந்நிய முதலீடு, அதாவது அந்நியர்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்கிக் கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது.



கேட்டால், 'கையில் நிதியில்லை... வெள்ளைக்காரனிடம் கையேந்துவதைத் தவிர வேறு வழியில்லை' என்று சப்பைக் கட்டுகிறார்கள் ஏற்கெனவே மன்மோகன் சிங்குக்கு ஜால்ரா அடித்த அதே 'பொருளாதார புலிகள்'.கையில் காசில்லை என்கிறார்கள். ஆனால், நதி நீர் இணைப்புக்கு 100 கோடியை ஒதுக்கிவிட்டு, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு 200 கோடியை ஒதுக்குகிறார்கள்... 'கிடக்கறது கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில வை' என்கிற கதையாக! காசுக்காக எதற்காக வெளிநாட்டுக்காரர்களிடம் கையேந்த வேண்டும். இங்கே கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்திருப்பவர்களின் மீது கை வைக்க வேண்டியதுதானே! அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று அரசாங்க பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டியதுதானே! விவசாயிகளுக்கு கூட்டம் போடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு, கோட்சூட் போட்ட கனவான்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டங்களை நட்சத்திர ஓட்டல்களில் லட்சங்களைக் கொட்டி நடத்துவதை நிறுத்த வேண்டியதுதானே! ஸ்விஸ் வங்கியில் ஒளித்து வைத்திருக்கும் பணத்தையெல்லாம் கொண்டு வருவோம் என்றீர்களே... அதையெல்லாம் கொண்டு வரவேண்டியதுதானே. இதையெல்லாம் செய்யாமல், பணம் இல்லை என்று பஞ்சப்பாட்டுப் பாடுவது எதற்காக? பணமில்லை என்று சொல்வதில் உண்மையே இல்லை. மன்மோகன் சிங் அணிந்திருந்த அதே... அமெரிக்க முகமூடி இடம் மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை.91ஆம் ஆண்டு நிதியமைச்சராக வந்தமர்ந்ததிலிருந்து, 2014ஆம் ஆண்டு கூட்டணி அமைச்சரவையின் பிரதமராக நீடித்தது வரை அமெரிக்கா மற்றும் உலக நிதிநிறுவனத்தின் பல்வேறு ஆசைகளையும் இந்தியாவில் நிறைவேற்றத்தான் செய்தார் திருவாளர் மன்மோகன் சிங். இதன் கோர விளைவுதான் நாடு முழுக்க அந்நிய நிறுவனங்கள் பலவும் தாறுமாறாக முளைவிட்டது. குறிப்பாக பெப்ஸி, கோக் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் நிலத்தடி நீராதாரத்தை உறிஞ்சும் வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றன.'தொழிற்சாலைகள் மட்டுமே போதும்... விவசாயிகள் எல்லாம் நிலங்களை விட்டு வெளியேறுங்கள்' என்று வெளிப்படையாகவே மன்மோகன் சிங்கும்... அவருடைய கைத்தடியாக இருந்த திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் அறிவித்ததால்... எங்கே திரும்பினாலும் தொழிற்சாலைகள் முளைத்துக் கிடக்கின்றன. இதனால் புனித நதி என்று போற்றப்படும் கங்கை, காவிரி மட்டுமல்ல... கோணவாய்க்காலில்கூட கழிவு நீரே கலந்தோடுகிறது.கிராமங்கள் எல்லாம் நகர்ப்புறங்களாகிவிட்டதால், இனி விவசாய நிலங்களுக்கு எங்கே போவது என்கிற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. 'வானளாவிய கட்டடங்கள்தான் வளர்ச்சி' என்கிற நினைப்பில் நாட்டின் பெரும்பாலான நகரங்கள் கான்கிரீட் காடுகளாகிவிட்டன.தாறுமாறான இந்தப் பொருளதார வளர்ச்சியின் காரணமாக... காடுகள் வேகமாக அழிக்கப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத அளவில் காட்டுப்பகுதிகளில் 'சுற்றுலா' என்கிற பெயரில் ஓய்வு விடுதிகள் பெருகிவிட்டன. இந்த நிலையிலும்கூட உண்மைகளை உணர விரும்பாமல்... திரும்பத் திரும்ப 'வளர்ச்சி' என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு, இந்தியாவையே விற்கப் பார்க்கிறார்கள்.ஒரு ரூபாய் சம்பளம் வாங்குபவனுக்கு... ஓராயிரம் ரூபாய் மீது ஆசை... ஓராயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் மீது ஆசை. ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறவனுக்கு ஒரு கோடி மீது ஆசை... இந்த ஆசைக்கு எல்லை ஏது. இதேபோலத்தானே நீங்கள் சொல்லும் 'வளர்ச்சி'யும்.இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது ஆண்டுகளில் சாதிக்க முடியாததை... இரண்டே ஆண்டில் நரேந்திர மோடி சாதித்தே விடுவார் என்றே தோன்றுகிறது.அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் மொத்தமாக விலை பேசுவதைத்தான் சொல்கிறேன்.
             <நன்றி :- விகடன் செய்திகள் >

Thursday, July 10, 2014

20 வது லோக்கல் கவுன்சில் கூட்டம்

          09-07-2014 அன்று விருதுநகர் மாவட்ட 20 வது லோக்கல் கவுன்சில் கூட்டம்  பொது மேலாளர் திருமதி .S E ராஜம் ,ITS  தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் லேண்ட் லைன் பழுதுகளை சரி செய்ய போதுமான கேபிள் இல்லை. க்ரூப்ஸ் பகுதியில் வேலை செய்ய போதுமான ஒப்பந்த ஊழியர்கள் இல்லை மற்றும் மாவட்டத்தில் ஏராளமான பில்லர்கள் சரிந்த நிலையிலும், தரைமட்டத்திற்கு கீழேயும் உள்ளதை சரி செய்ய வேண்டும் என்பதையும்,அதே போல் BTS இல் உள்ள பழுது அடைந்த பாட்டரிகளை   மாற்றுவதற்கு போதுமான புதிய பேட்டரிகள் இல்லை என்பதால் செல் சேவை பாதிக்கப்படுவதையும் சுட்டி காட்டினோம்.
          பொது மேலாளரின் உத்தரவுகள் மாவட்டத்தில் கீழ் மட்டங்களில்  செயல் படுத்தப்படவில்லை என்பதையும், நிறுவனத்தின்  விதிகளை  புரிந்து கொள்வதில் ஏற்படும்  கோளாறுகளை களையவும், சேவையை சரி செய்ய இலாகா வண்டிகளை மற்றும் ஒப்பந்த  அடிப்படையில் ஓடும் கார்களை அனுமதிப்பதில் நிதியை காரணம் சொல்லி தட்டி கழிக்கும் அதே வேளையில் ஒப்பந்தகாரர்கள் துணையுடன் கார்கள் தவறாக பயன்படுத்துவது மாவட்டத்தில் அதிகரித்து உள்ளதை சுட்டி காட்டியும் நமது சங்க லோக்கல் கவுன்சில் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து நமது எதிர்ப்பை பதிவு செய்தோம்.
கீழ்கண்டவை விவாதிக்கப்பட்டு சில விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டன :
1. விருதுநகர் பழைய தொலைபேசி நிலையத்தில் உள்ள கோட்ட பொறியாளர், மற்றும்  துணைகோட்ட பொறியாளர்கள் அலுவலகங்களை மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்திற்கு  இடமாற்றம் செய்வதை 15-08-2014 க்குள்   செய்து முடிக்க வேண்டும். அதன் பின் பழைய தொலை பேசி நிலையத்தை வாடகைக்கு விடுவது.
2. அல்லம்பட்டி தொலைபேசி நிலையத்தை மெயின் தொலைபேசி நிலையத்தோடு  இணைப்பதற்கு கேபிள் வரைபடத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது.
3. மாவட்டம் முழுவதும்  பழுதடைந்த, தரை மட்டத்திற்கு  கீழே இருக்க கூடிய   பில்லர்களை சரி செய்ய விரைவில் டெண்டர் விடப்படும்.
4. கேபிள் மற்றும் பாட்டரிகள் தேவையை மாநில நிர்வாகத்திடம் பேசி வாங்குவதற்கு முயற்சி செய்வது .
5. வாடகை கட்டிடங்களில்  இயங்கும் RR நகர் மற்றும் வெம்பகோட்டை தொலைபேசி நிலையங்களை நமது கட்டிடங்களுக்கு மாற்ற நடவடிகையை துரிதப்படுத்துவது.
5. அனைத்து OUTDOOR டெலிகாம் மெக்கானிக்களுக்கும்  டேப்பர் வழங்க மாநில நிர்வாகத்திற்கு நிர்வாகத்தரப்பில் இருந்து மீண்டும் கடிதம் எழுதுவது.
6. Outdoor டெலிகாம் மெக்கானிக்களுக்கும், Power Plant பணியில் ஈடுபடும் TTAக்களுக்கும் Power Shoe வழங்கவும் TTAக்களுக்கு Tools Kit வழங்களும் நிர்வாகத் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டது.
7.சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள திருச்சுழி தொலை பேசி நிலையத்தை சரி செய்ய estimateக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது.
8. PORT OUT சந்தாதாரர்கள் பட்டியலை சேல்ஸ் மற்றும் IMPCS பகுதிகளுக்கு கொடுக்க வேண்டும்  என்பது ஏற்று கொள்ளப்ட்டுள்ளது .
9. Wimax சேவை நிறுத்தப்பட்டதால் உபரியான TTA வை outdoor பகுதிக்கு போடாமல் SDE(Indoor)  பகுதிக்கு நியமனம் செய்ய பொது மேலாளர் கூறி உள்ளார். சிவகாசி OCB தொலைபேசி நிலையத்தில் SDE(Indoor) பகுதியில் ஒரு TTA நியமனம் செய்யப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
10. Transmission Team பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதைச் சுட்டிக்காட்டினோம். வரும் நாட்களில் இது போன்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகமும் வலியுறுத்தியுள்ளது.
11. அருப்புக்கோட்டை Groups II பகுதிக்கு JTO அவசியம் தேவை என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளோம். நிலைமைகளை DGM ஆய்வு செய்து விரைவில் ஆவண செய்வார் என பொதுமேலாளர் உறுதியளித்துள்ளார்.
       கடுமையான நிதி நெருக்கடியை நிறுவனம் சந்தித்து வருகின்ற சூழலில் பிரச்சனைகளின் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்து நிதிச் சுமையைக் குறைக்கும்படியான திட்டமிடலை வேண்டுவதாக லோக்கல் கவுன்சில் அமைந்தது.
அத்துடன் வளர்ச்சிப் பணிகளில் தோளோடு தோள் நின்று அதிகாரிகளும் ஊழியர்களும் பணியாற்றிட வேண்டும் என்ற உணர்வையும் இக் கவுன்சில் உருவாக்கியிருந்தால் அது லோக்கல் கவுன்சிலுக்கும் நமக்கும் கிடைத்த வெற்றியே.விளாம்பட்டி பகுதியில் 3 ஆண்டுகளாக 300 இணைப்புகள் பழுதாகி இருந்ததை 1 மாத கால அவகாசத்தில் சரி செய்ததில் பெரு முயற்சி செய்த DE (Mtce ) திரு  தனுஸ்கோடி அவர்களையும் ,GSM பகுதியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து 2 கோடிக்கும் மேல் வருவாய் கிடைப்பதில் பெரும் பங்கு வகித்த AGM(S-CM) திரு ராஜகோபால் அவர்களையும் ,குறுகிய காலத்தில் தமிழ்நாடு போலீஸ் துறைக்கு 2500 மேல் செல் இணைப்புகளை வழங்கியதில் பெரும் பணியாற்றிய மார்க்கெட்டிங் SDE திரு பழனிவேல்ராஜன் அவர்களையும் ஊழியர் தரப்பு சார்பாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தோம் . 

Broadband subscriber base grew 6% to 65.3 mn till 31 May

 செய்தி படிக்க :-Click Here

Economic Survey 2013-14: Investments in telecom surged 4 times to $1.3 bn

    The telecom sector attracted over 4-fold growth in foreign investments at USD 1.3 billion during the financial year 2013-14.The sector had attracted investment worth USD 304 million in 2012-13 - about 84 percent lower compared to 2011-12, the Economic Survey tabled in Parliament said Wednesday.India's telecom sector has registered phenomenal growth during the past few years and has become the second largest telephone network in the world, next only to China, it added.Under this scheme BSNL is to provide 8,88,832 wireline broadband connections to individual users and government institutions, and set up 28,672 kiosks over six years ending 2015 at estimated subsidy of Rs 1,500 crore.The survey said: "As on March 31, 2014, a total of 5,89,783 broadband connections had been provided and 14,186 kiosks set up in rural and remote areas."The subsidy disbursed till March 31, 2014 under the scheme was Rs 329.55 crore."
"A series of reform measures by the government, innovations in wireless technology and active participation by the private sector played an important role in the growth of the telecom sector in the country," the survey said.The total telephone connections in the country increased to 933.02 million at the end of March 31, 2014 from 898.02 million a year ago. However, the total connections at the end of March 2012 were 951.35 million.Foreign Direct Investment in telecom and computer sectors outshone other top key sectors such as financial/non-financial services, construction, hotels and tourism. The top 5 sectors cumulatively accounted for 45 percent of total investments in the country last fiscal.Overall, however, cumulative FDI inflows in these top 5 services sectors declined sharply by 37.6 percent to USD 6.4 billion. FDI in computer software and hardware sector grew about 2.3 times to USD 1.12 billion in 2013-14, from USD 486 million in 2012-13."We are extremely pleased with increase in FDI. The clarity on policy and regulatory front and the expectation of new government clearly enhanced attractiveness of India as investment destination," telecom industry body COAI's Director General Rajan S Mathews said reacting on the survey data.During 2013-14, government also obtained Rs 61,162 crore from auction of spectrum. The final price were 27.6 percent more than the minimum price of telecom radiowaves fixed by government at that time.The government last fiscal had introduced new telecom licencing regime, Unified Licences, under which companies interested in providing mobile or any wireless services are required to buy spectrum separately.To enhance fixed line broadband connection in rural areas, the government entrusted state-run BSNL to provide broadband connection with minimum speed of 512 kbps in rural and remote areas under the Rural Wireline Broadband Scheme. Under this scheme BSNL is to provide 8,88,832 wireline broadband connections to individual users and government institutions, and set up 28,672 kiosks over six years ending 2015 at estimated subsidy of Rs 1,500 crore.The survey said: "As on March 31, 2014, a total of 5,89,783 broadband connections had been provided and 14,186 kiosks set up in rural and remote areas.

BSNL worst performer, ONGC highest profit-making PSU: Survey

             Oil explorer ONGC again emerged as the highest profit-making PSU of the country during 2012-13 while telecom major BSNL turned out to be the biggest loss-making enterprise, says the Economic Survey.The Survey, presented a day ahead of the General Budget, said the net profit of 149 profit-making CPSEs stood at Rs 1,43,559 crore in 2012-13 while the net loss of 79 loss-making CPSEs stood at Rs 28,260 crore. Oil and Natural Gas Corporation Ltd (ONGC), National Thermal Power Corporation Ltd (NTPC), Fertilizer Corporation of India Ltd, Coal India Ltd and Bharat Heavy Electricals Ltd (BHEL) were the top five profit-making CPSEs during 2012-13. Meanwhile, Bharat Sanchar Nigam Ltd (BSNL), Mahanagar Telephone Nigam Ltd (MTNL), Air India Ltd, Chennai Petroleum Corporation Ltd, Hindustan Photo Films Manufacturing Co Ltd, were among the top five loss-making CPSEs during 2012-13.“There was a marginal increase in the total contribution of central public sector enterprises (CPSEs) to the central exchequer by way of dividend payment, interest on government loans and payment of taxes and duties during the year, from Rs 1,62,402 crore in 2011-12 to Rs 1,62,761 crore in 2012-13,” the survey pointed out. ”This was primarily owing to increase in contribution towards service tax and sales duty. There was, however, a decline in customs duty and excise duty,” it said. There were altogether 277 CPSEs under the administrative control of various Ministries/Departments as on March 31, 2013. Out of these, 229 were operational and 48 under construction.

வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்வு!

        நிதியமைச்சரின் புதிய அறிவிப்புபடி, ஆண்டு வருவாய் ரூ. 2.5 லட்சம் வரை இருந்தால், வருமான வரி கிடையாது. ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும். ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் ஆண்டு வருவாய் இருந்தால் 20 சதவீத வரி விதிக்கப்படும். ரூ. 10 லட்சத்தக்கு மேல் வருவாய் இருந்தால், அதன் மீது, 30 சதவீத வருமான வரி விதிக்கப்படும்.
             மாத ஊதியம் வாங்குவோருக்கு வருமான வரியில் இருந்து கொஞ்சம் சலுகை தரப்பட்டுள்ள நிலையில், 80 C எனப்படும் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கும் வரிச் சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சமாக உயர்த்தியது. இதேபோல் 80 சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகையும் அதிகரித்துள்ளது. மாத ஊதியம் வாங்குவோரில் பெரும்பாலானோர் இந்த 80சி பிரிவின் கீழ் முதலீடுகள் செய்பவர்களே. வருமான வரி சட்டத்தின்படி 80சி, 80சிசி, 80சிசிசி ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் காப்பீடு எனப்படும் இன்ஷூரன்ஸ், வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எப், குழந்தைகளுக்கான கல்விக்கு செலுத்தப்படும் கட்டணம், வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் அசல் (80-சியில் வீட்டுக் கடனுக்கான வட்டி வராது), தேசிய சேமிப்பு பத்திரம், இ.எல்.எஸ்.எஸ். (மியூச்சுவல் ஃபண்ட்), ஐந்து வருட வங்கி டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்தால் 1 லட்ச ரூபாய் வரை வருமான வரிச்சலுகை கிடைத்து வருகிறது. இதுவரை மேலே சொன்ன விஷயங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்துக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டு வந்தது. இந் நிலையில் இது ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு பி.எப், இன்சூரன்ஸ் பாலிஸி, வீட்டுக் கடனுக்கான அசலை திருப்பிச் செலுத்துதல். 
                                       <நன்றி :-ஒன் இந்தியா >

பட்ஜெட் எதிரொலி: விலை உயர்பவையும், விலை குறைபவையும்

மத்திய பட்ஜெட் 2014-ன் எதிரொலி காரணமாக, சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கிறது. செல்பேசி, கம்ப்யூட்டர் விலை குறைகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், வரிவிதிப்பில் செய்த மாற்றங்களின் காரணமாக விலை உயரும், குறையும் பொருட்களின் விவரம்:
விலை உயர்பவை:

* சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலாக்கள்

* குளிர்பானம்

* இறக்குமதி செய்யப்பட்ட இரும்புப் பொருட்கள்

* எவர்சில்வர் பொருட்கள்.

* தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரக் கட்டணம்.

* உடைந்த வைரம்

* இறக்குமதி செய்யப்படும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள்

* போர்டபிள் எக்ஸ்-ரே இயந்திரங்கள்

விலை குறைபவை:

* மொபைல் போன்கள்.

* கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்

* 19 இன்ச்களுக்கு குறைவான எல்.இ.டி. எல்.சி.டி. டிவி-க்கள்

* காலணிகள் விலை

* சோப்பு

* தீப்பெட்டிகள்

* லைப் மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகள்

* பிளாஸ்டிக் பொருள்கள்

* ஆடம்பர கற்கள்

* அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

* அச்சு விளம்பரங்களுக்கான கட்டணம்

* மின் புத்தகங்கள்

* ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள்

* எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. விளக்கு பொருத்தும் பட்டிகள்

* ஸ்போர்ட்ஸ் உறைகள்

* பிராண்டட் பெட்ரோல்

* எச்.ஐ.வி / எய்ட்ஸ் மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள்

* டி.டி.டி பூச்சிக்கொல்லி மருந்துகள்
                                <நன்றி :தி ஹிந்து >

ஒரு சில திட்டங்களை தவிர்த்து, பழைய ஆட்சியின் பல்லவியையே பாடிய ஜேட்லி

இன்றைய மத்திய பட்ஜெட்டில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த பத்தாண்டுகளில் பாடிய அதே பல்லவியை பாடினார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ஒரு சில அறிவிப்புகளை தவிர்த்து பார்த்தால் சொல்லிக் கொள்ளும் படியான பெரிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. கடந்த, காங்கிரஸ் தலைமையிலான அரசின் அனைத்து 10 பட்ஜெட்களிலும் தவறாமல் இடம் பெறுவது, வறுமை ஒழிப்பு, ஊரக மேம்பாடு, சாலை மேம்பாடு, சுகாதாரம், சுத்தம் என்ற வார்த்தைகள். ஆனால் இதை நிறைவேற்ற சொல்லிக் கொள்ளும் பெரிய திட்டம் எதையும் கொண்டு வரவில்லை
ஜேட்லியின் முதல் பட்ஜெட்டிலும் இதே வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் செயல் திட்டம் வரையறுக்கப்படவில்லை. எனவே, வழக்கம்போல காகித உரையாகத்தான் இது பார்க்கப்படுகிறது. எந்த திட்டத்தையுமே எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற விவரம் இல்லாதது மட்டுமின்றி, போதிய அளவுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. அதே நேரம், வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டது பெரும்பான்மையோரால் பாராட்டப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி மீதான வரி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதும், வீட்டுக் கடன் பெற்றோரை நிம்மதியடையச் செய்துள்ளது. கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட ரூ.2037 கோடி ஒரு பெரிய திட்டமாகும். நதிநீர் இணைப்பு குறித்து ஆய்வு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது நல்ல திட்டமாகும். மற்றபடி புதிய திட்டங்கள் எதுவுமில்லாமல், புதிய கோப்பையில் பரிமாறப்பட்ட பழைய ஒயினாகவே காட்சியளிக்கிறது மோடி அரசின் முதலாவது பட்ஜெட். மக்கள் விலைவாசி உயர்வால் பசியும் பட்டினியுமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க, மத்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வரிகளை குறைக்க இந்த நிதியை பயன்படுத்தியிருக்கலாம். லக்னோ மற்றும் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில், திட்டம் அமைக்க ரூ.100 கோடியை மட்டுமே ஒதுக்கிய ஜெட்லி, சிலைக்கு 200 கோடியை ஒதுக்கியுள்ளார். மெட்ரோ திட்டத்தின் ஆய்வுக்கே அவர் ஒதுக்கிய நிதி போதாது.
                                   <நன்றி :- ஒன் இந்தியா >

Tuesday, July 8, 2014

தமிழக பயணிகளை ஏமாற்றமடைய வைத்த ரயில்வே பட்ஜெட்!

செய்தி படிக்க :-Click Here

மாநில செயலகக் கூட்டம்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Telecom department draws up list of pending policy issues

           The department of telecommunications (DoT) has drawn up a list of 21 pending policy issues and the time frame for their implementation. The issues include the merger of state-run-telcos Bharat Sanchar Nigam Ltd (BSNL) and Mahanagar Telephone Nigam Ltd (MTNL), and the auction of all available spectrum. They will be implemented in a time frame that ranges from six months to five years. “Since the action of all the above issues is time-bound, concerned departments are requested to initiate steps for timely completion of these action points,” an internal memo of the department, summarizing decisions made in a presentation to the Prime Minister, by then secretary M.F. Farooqui on 23 June, said. “This may be accorded top priority,” the note added. Farooqui retired at the end of June and additional charge of the department was given to department of electronics and information technology (DeITy) secretary R.S. Sharma. According to the note, the government expects to auction spectrum in the 800 megahertz (MHz), 900MHz, 1800MHz, 2100MHz and 2300MHz bands in the next nine months. According to a separate note on the spectrum auctions, 184MHz in the 900MHz band, 104MHz in 1800MHz, 5MHz in 2100MHz, and 20MHz in 2300MHz band in 19 circles will be available for auction. The government also plans to auction spectrum in the 700MHz band in the next two years. This band is considered the most efficient for high-speed wireless 4G data services for which many telcos are planning to use spectrum in the 1800MHz and 2300MHz bands. The department will also work towards reviving the two state-run telcos by June 2016, the first note said. The reorganization and merger of BSNL and MTNL, a key proposal for the telcos, will be done in a year, it added. DoT also plans to restructure the Universal Services Obligation Fund (USO) in the next nine months—something that has been proposed for a number of years. The fund currently has more than Rs.38,000 crore, of which Rs.20,000 crore is earmarked for the National Optical Fibre Network and another smaller amount is expected to go towards the Electronics Development Fund. Funded by mandatory payments by all telcos, USO seeks to invest in the creation of requisite infrastructure and the provision of services, especially in areas where it isn’t immediately remunerative to do so. A draft of the communication Bill, that will merge the various laws that currently govern the Indian telecom sector, including the Telegraph Act, will be ready by September 2014, the first note added. The Union cabinet is expected to approve the Bill by September 2015, after public and inter-ministerial consultations are completed. The much-awaited guidelines on spectrum sharing, trading, delicensing and harmonization are expected to be implemented in the next 6-18 months, the note said. The government is also looking at the introduction of virtual network operators (VNO), that has been on the backburner since 2009, when A. Raja was the communications minister. A VNO licence allows a company to buy communications capacity from a telco and resell it. The Telelecom Regulatory Authority of India is currently working on the policy and, according to the note , the government expects to introduce the policy in a year’s time. A comprehensive communications plan for disaster management, announced as part of communications minister Ravi Shankar Prasad’s 100-day agenda, will also be out in the next nine months, the note said. “They are being a little ambitious as most of the policies have been pending for a number of years. DoT has taken several ad hoc decisions in a sector ridden by conflicts between major players pulling it in often opposing directions. The minister has said that decisions will be made on merit alone. If he is successful in doing that, then there should not be a problem,” Mahesh Uppal, director with Com First (India) Pvt. Ltd said. “Also, much will depend on whether DoT can raise funds for its massive plans. This will require it to move faster on auction of spectrum, especially 2100MHz.”

Anil Ambani-led Reliance Communications plans to cut 37% workforce by month end

செய்தி படிக்க :-Click Here

11.04.2014 அன்று நாம் நடத்த இருக்கின்ற தர்ணா போராட்டத்தை கைவிடக் கோரி மாநில நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும் நமது போராட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Top posts vacant in 35 PSUs including Coal India, BSNL, NHPC

டைம்ஸ் ஆப்  இந்தியா செய்தி படிக்க :Click Here

இனி எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணம் உயரும்!

     எரி பொருள் விலை உயர்வுக்கு தக்கபடி ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கச்சா எண்ணை விலை உயர்வுக்கு தக்கபடி பெட்ரோல், டீசல் விலை உயர்வதை போல இனிமேல் டீசல், நிலக்கரி, மின்சார கட்டணத்துக்கு ஏற்ப ரயில் கட்டணமும் கழுத்தை நெரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த எரிபொருள் விலையை கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஆயில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்கு மாற்றினர். இதன் மூலம் சர்வதேச கச்சா எண்ணை விலையேற்றத்துக்கு தக்கபடி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது.இதனால் மாதம் ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையேற்றம் கண்டு மக்களை வாட்டி வருகிறது.இந்நிலையில் எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணங்களை நிர்ணயித்தால், ரயில் கட்டணமும், நாளொரு மேனியும், பொழுதொருவண்ணமுமாக அதிகரிக்கும்.எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் உரிமையே அரசிடம் இல்லை எனும்போது, அதனுடன் ரயில் கட்டணத்தை இணைப்பது என்பது, ரயில்வே துறையை கிட்டத்தட்ட தனியார் மயமாக்கியதற்கு சமம்தான்.
                           <நன்றி :- ஒன் இந்தியா > 

கார்ட்டூன்,


                                          <நன்றி :- தி ஹிந்து >

Monday, July 7, 2014

மத்திய சங்க செய்திகள்,

               கேடர் பெயர் மாற்றத்திற்கான கூட்டு குழு கூட்டம் வரும் 23-07-2014 அன்று காலை நடைபெற உள்ளது . அக் கூட்டத்தில் நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P  அபிமன்யு, நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி மற்றும் நமது துணை பொது செயலர் அனிமேஷ்  சந்திர மித்ரா ஆகியோர் பங்கேற்க உள்ளனர் .அன்று மாலை scheme of Bonus/Productivity Linked Incentive based on PMS பற்றி விவாதிக்க அதற்கான கூட்டு குழு கூட்டம் நடைபெற உள்ளது . அதில் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு மற்றும் NFTE சங்க தலைவர் தோழர் இஸ்லாம் அஹ்மத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்

Friday, July 4, 2014

அனைவருக்கும் ப்ரீ சிம்

            நமது அனைத்திந்திய சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியாலும் 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்ட அடிப்படையிலும் விடுபட்ட அனைவருக்கும் ப்ரீ சிம் கிடைப்பதற்கான உத்தரவு இன்று கார்போரேட்  நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த உத்தரவின்படி வழங்கப்படும் சிம்மின் விலை 20 முதல் 30 ரூபாய் இருக்கும். பணி புரியும்  மாவட்டத்திற்குள் CUG  வசதியும்ரோமிங் வசதியும் உண்டு. STD மற்றும் OFFNET  வசதி கிடையாது. ரூபாய் 200-/ ப்ரீ டாக் டைம்  உண்டு.
உத்தரவு படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...