Tuesday, December 31, 2013

2014 காலண்டர்


புத்தாண்டு வாழ்த்துக்கள்

Reach For The Stars!!
விருதுநகர் பி எஸ் என் எல் மாவட்ட சங்கத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பணி ஓய்வு



        இன்று (31-12-2013) பணி  ஓய்வு பெறும் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க விருதுநகர் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .

IDA உயர்வு

01-01-2014 முதல் IDA உயர்வு 5% ஆக இருக்கும் 

Monday, December 30, 2013

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இன்று காலமானார். அவருக்கு வயது 75 பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்த சென்றிருந்த போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார் என தகவல்கள் தெரிவிகின்றன.இயற்கை வேளாண்  விஞ்ஞானிக்கு அஞ்சலி செலுத்துவோம் .

அமெரிக்காதான் உலக அமைதிக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல்'

உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அமெரிக்காதான் என்று உலக மக்களில் கால் பங்கினர் கருதுவதாக சர்வதேச ஆய்வு ஒன்று கணிக்கிறது. செய்தி படிக்க :-Click Here

பணி ஓய்வு பாராட்டு,







        


                 30-12-2013 அன்று சிவகாசி OCB மற்றும் SDOP கிளைகளின் சார்பாக தோழர் ராமசாமி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.கிளை தலைவர்கள் தோழர் சிவபெருமான் மற்றும் தோழர் அழகுராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் ராமசாமி அவர்களுக்கு தோழர் ராஜாகனி அவர்கள் சந்தன மாலை அணிவிக்க  மாவட்ட செயலர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .தோழர் ராமசாமி அவர்களை வாழ்த்தி தோழர்கள் அய்யாசாமி ,கருப்பசாமி,ராஜு,ஜெயபாண்டியன் ஆகியோர் பேசினர் . தோழர் சமுத்திரகனி வாழ்த்தி பேசும் போது ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு பெரும் திரளாக செல்லவேண்டிய அவசியத்தை  கூறினார் . மாவட்ட செயலர் பேசிய போது அக்டோபர் 25 ஆம் தேதி நடை பெற இருந்த போராட்ட அறைகூவலின்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தன்மையையும் அதன் பிறகு சில விசயங்களில் நடைபெற்றுள்ள முன்னேற்றங்ளையும் , தேசிய கவுன்சில் மற்றும் மாநில கவுன்சில்களில் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் நமது சங்கத்துடன் NFTE  சங்கம்  ஒரு இணைந்த செயல்பாட்டுக்கு  வருவது ஒரு நல்ல அம்சம் என்று சுட்டி காட்டினார் .தோழர் ராமசாமி மாவட்ட சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 500/- வழங்கினார் .அந்த கூட்டத்தில் தோழர் அய்யாசாமி மாவட்ட மாநாட்டு நிதியாக ரூபாய் 1000/- வழங்கினார் . தோழர் முனியாண்டி நன்றி கூற கூட்டம்  இனிதே முடிவற்றது .

Sunday, December 29, 2013

TNTCWU சாத்தூர் கிளை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களுக்கு BSNLEU விருதுநகர் மாவட்டச்சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்

Saturday, December 28, 2013

சாத்தூர் கிளை மாநாடு

          சாத்தூர் கிளை மாநாடு 28-12-2013 அன்று தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் கனகாம்பரம் கிளை தலைவர் தலைமையில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. பி எஸ் என் எல் ஊழியர் சங்க கொடியை தோழர் கனகாம்பரம் ஏற்றி வைக்க, ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஏற்றி வைத்தார்.
          தோழியர் ஜெயஜோதி அஞ்சலி தீர்மானம் வாசிக்க,கிளை செயலர் தோழர் காதர்  மொய்தீன் வரவேற்புரை நல்க மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் மகாநாட்டை தொடக்கி வைத்து உரை ஆற்றினார்.
          மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கண்ணன், மாவட்ட உதவி செயலர்கள் தோழர் வெங்கடேஷ், தோழர் முத்துசாமி, ராஜை கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம், விருதை கிளை செயலர் தோழர் சிங்காரவேலு, சிவகாசி கிளை செயலர் தோழர் ராஜு, தோழர் கருப்பசாமி மற்றும் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி, மூத்த தோழர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          சிறப்புரையாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்களும் பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினர். BSNLEU சாத்தூர் கிளையின் புதிய  நிர்வாகிகளாக தோழர்கள் கனகாம்பரம், காதர் மொய்தீன், கலைஅரசன் ஆகியோர் முறையே தலைவர்,செயலர், பொருளராக ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பல்வேறு கிளைகளில் இருந்தும் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

MTNL ஊழியர்களுக்கு அரசு ஓய்வூதியம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்- சுற்றறிக்கை எண்:103

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க : Click Here

அஞ்சலி,

மூத்த P & T தொழிற்சங்க தலைவர், தோழர் T.S.ராஜன் இன்று காலமானார்.தோழர் T.S.ராஜன் முன்னாள் தமிழ் மாநில செயலாளர் ஆகவும் AITTEU CLASS III(T3) சங்க துணை பொது செயலாளர் ஆகவும் பணியாற்றியவர் .. அவர் தமிழ்நாடு பி & டி தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்தியது மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் அவர் முக்கிய பங்கை வகித்தவர் . தோழர் T.S.ராஜன் அவர்கள் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு தந்த அர்ப்பணிப்பும் அவரின் எளிமையும் அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும் . அவர் தியாகத்தின் அடையாள சின்னமாகவும் தொழிற்சங்க இயக்கத்திற்கு பல தலைவர்களை கொண்டு வந்த வந்த மிக பெரிய தலைவராக திகழ்ந்தவர்.அவருக்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன்  செங்கொடியை தாழ்த்தி அவர்க்கு அஞ்சலி செலுத்துகிறது .
மாநில சங்க இரங்கல் செய்தி படிக்க :-Click Here

Friday, December 27, 2013

மத்திய செயற்குழு கூட்டம்

நமது பி எஸ் என் எல் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 7,8 மற்றும் 9 தேதிகளில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது . இதற்கான வரவேற்பு குழு உருவாக்கப்பட்டு விட்டது .இதன் சேர்மன் ஆக தோழர் P .K .தக்கர் அவர்களும் ,பொது செயலராக தோழர் D.K.பகுற்றா அவர்களும் பொருளராக தோழர் N.J தேசாய் அவர்களும் செயல்படுவர் .

Pension of MTNL staff cleared

The Union Cabinet on Thursday cleared the long-standing issue of pension of around 43,000 MTNL employees that would cost the exchequer around Rs. 500 crore per year.“The Union Cabinet today [Thursday] approved that the erstwhile all categories of employees of the government absorbed in MTNL… may be given similar treatment in the matter of payment of pensionary benefits as available to the absorbed employees of BSNL,” an official statement said.“Based on the approval… to the erstwhile government employees absorbed in MTNL who have opted for combined pension in the same manner as in BSNL, necessary amendments… will be issued and adjustments in respect of government pension liability previously discharged by MTNL will be done within three months,” the note said.
               <நன்றி :-தி ஹிந்து >

Thursday, December 26, 2013

பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கம்

07-01-2014 அன்று நடைபெற உள்ள கருத்தரங்கத்திற்கு சிறப்பு சிறு விடுப்பிற்கான மாநில நிர்வாகத்தின் உத்தரவை பார்க்க :-Click Here

Wednesday, December 25, 2013

வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாகிவிடும்: ஊழியர் சங்கம்!

பல பணிகள் அவுட்சோர்சிங் மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதால், இன்னும் 10 ஆண்டுகளில் வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாகிவிடும் என இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு மதுரை காளவாசலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடந்த இந்த மாநாட்டின் முதல்நாள் நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அண்ணாத்துரை எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:
"இந்தியா சுதந்திரம் அடையும் வரை வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாகவே இருந்தன. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை தங்களது சொந்த தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத்தி, ரகசியமாக சொந்த ஆதாயம் பெற்றன.அதில் வேலை செய்த ஊழியர்களுக்கு எந்த சட்டப்பாதுகாப்பு கிடையாது. ஊதிய நிர்ணயம், வேலை உறுதியளிப்பு போன்ற சலுகைகளும் மறுக்கப்பட்டன. அதன்பின் வங்கிகளின் பயன், அதன் முக்கியத்துவம் கருதி வங்கிகளை மத்திய அரசு நாட்டுடமையாக்கியது. ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இதனைதொடர்ந்து தான் வங்கி ஊழியர்களுக்கும் சட்டப்பாதுகாப்புகள் வழங்கப்பட்டன.ஆனால் தற்போது வங்கிகள் அனைத்தும் மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாராக்கடனுக்காக சொத்து பறிமுதல், வாடிக்கையாளரிடம் காசோலை ஒப்படைப்பது உள்பட பல்வேறு பணிகள் ‘அவுட்சோர்சிங்‘ மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதேநிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் அனைத்து வங்கிகளும் தனியார் மயமாகிவிடும். வங்கி ஊழியர்களுக்கான சட்டம் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதை தடுக்க வங்கி ஊழியர் சங்கத்தினர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட வேண்டும். போராட்டத்தில் பொதுமக்களையும் இணைத்துக் கொள்வது முக்கியம்." என  அவர் பேசினார்.
                  <நன்றி :- இந்நேரம் .காம் >

Tuesday, December 24, 2013

கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு

நாடு முழுதும் பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள வரிப் பாக்கி மட்டும் ரூ 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது.வரி பாக்கி வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வோடஃபோன் நிறுவனம் ரூ.22,146 கோடியும், ஆதித்யா பிர்லா டெலிகாம் ரூ.3,173 கோடியும், எச்டிஎப்சி வங்கி ரூ.2,653 கோடியும், ஆந்திரா பெவரேஜஸ் கார்ப்பரேஷன் ரூ.2,413 கோடியும், மைக்ரோசாஃப்ட் இந்தியா ரூ.1,999 கோடியும், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1,856 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.1,688 கோடியும் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆடம்பர கார் வாங்குவதற்கு 8% வட்டியில் பணம் தரும் வங்கிகள் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 14% வட்டி போடுகிறது. நபார்டு வங்கியில் சிறு விவசாயிக்கு 8% வட்டியில் கடன் தருபவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு 6.5% வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். இது போக மின்சாரம், தண்ணீர், நிலம் எல்லாமுமே கார்ப்பரேட்டுகளுக்கு இலவசம்.
Photo: நாடு முழுதும் பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள வரிப் பாக்கி மட்டும் ரூ 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது.

வரி பாக்கி வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வோடஃபோன் நிறுவனம் ரூ.22,146 கோடியும், ஆதித்யா பிர்லா டெலிகாம் ரூ.3,173 கோடியும், எச்டிஎப்சி வங்கி ரூ.2,653 கோடியும், ஆந்திரா பெவரேஜஸ் கார்ப்பரேஷன் ரூ.2,413 கோடியும், மைக்ரோசாஃப்ட் இந்தியா ரூ.1,999 கோடியும், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1,856 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.1,688 கோடியும் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடம்பர கார் வாங்குவதற்கு 8% வட்டியில் பணம் தரும் வங்கிகள் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 14% வட்டி போடுகிறது. நபார்டு வங்கியில் சிறு விவசாயிக்கு 8% வட்டியில் கடன் தருபவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு 6.5% வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். இது போக மின்சாரம், தண்ணீர், நிலம் எல்லாமுமே கார்ப்பரேட்டுகளுக்கு இலவசம்.

நன்றி : வினவு & தீக்கதிர்

நன்றி : வினவு & தீக்கதிர்

BSNL Continues to Report losses, What Should be Next?

செய்தி படிக்க :-Click Here

மாறிய சூழ்நிலையில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டம் .

புதிய அங்கீகார விதிகளின் படி இரண்டு தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், தேசிய குழுவின் முதல் கூட்டம் 23.12.2013 அன்று நடைபெற்றது.இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டது பிஎஸ்என்எல் வரலாற்றில் முதல் முறையாக இருந்தது. ஊழியர் தரப்பில் இருந்து 9 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மேலும் 5 உறுப்பினர்கள் நியமனத்தை மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை மேற்கோள் காட்டி, நிர்வாகம் ஏற்று கொள்ளாததால் மீதமுள்ள 5 உறுப்பினர்கள் பங்கேற்க முடியவில்லை. கூட்டம்  ஸ்ரீ A.N.ராய் ,இயக்குனர் ( மனித வளம்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது . தோழர் .P அபிமன்யூ, ஊழ்யர் தரப்பு செயலாளர் , தோழர்.இஸ்லாம் அகமது,ஊழியர் தரப்பு தலைவர்  ஆகியோர் ஊழியர் தரப்பை வழி நடத்தினர் விவாதங்கள் மிகவும் பயனுள்ளபடி இருந்தன.பல நியாயமான பிரச்சினைகளை நிறுவனத்தின் சீரழிந்து உள்ள நிதி நிலையை காரணம் காட்டி, நிர்வாக தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்தது . பிரச்சனைகளை விவாதித்ததில் மற்றும் எதிர்கொள்வதில் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் மத்தியில் ஒட்டு மொத்த ஒற்றுமை இருந்தது.அந்த அணுகுமுறையின் விளைவாக இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இடையே பரஸ்பர விவாதத்தை அடுத்து, நிர்வாகத்திடம் ஒற்றுமையாக பிரச்சனைகள் (ITEMS ) சமர்ப்பிக்கப்பட்டன, இதேபோல், 22-12-2013 அன்று நடைபெற்ற முன் (P r e )தேசிய குழு கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்  தரப்பு உறுப்பினர்கள் மத்தியில் ஒன்றுபட்ட புரிதலை உருவாக்கியது.அதனால் இரு சங்கங்களும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நிர்வாகத்தின் முன்னே ஒரே குரலில் பேச உதவியது. இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இடையே ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை ஊழியர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் மேலும் அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து பிஎஸ்என்எல் ஐ பாதுகாக்கவும் பயனாகும் என்று சொல்ல தேவையில்லை .
மாநில  சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here


தேசிய கவுன்சில்

23-12-2013 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்டவை படிக்க :-Click Here

Saturday, December 21, 2013

மாநில செயற்குழு முடிவுகள்

தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்  சங்க மாநில செயற்குழு முடிவுகள் படிக்க :-Click Here

தனியார் தொலை தொடர்ப்பு நிறுவனங்களின் அச்சுறுத்தல்

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் எதிர்வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை புறக்கணிக்க போவதாக அச்சுறுத்தியுள்ளன.பிளாட் ரேட் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படவேண்டும் என்ற டிராய் அமைப்பின் பரிந்துரை செயல்படுத்தப்பட வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கூறி உள்ளன .

வங்கி கடன்

வங்கி கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் யூனியன் பேங்க் உடன் ஏற்பட்டுள்ளது .இது 16-12-2013 முதல் 02-11-2014 வரை அமலில் இருக்கும் . ஒப்பந்தம் படிக்க :-Click Here

மத்திய சங்க செய்திகள்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Friday, December 20, 2013

BSNL, Champion Launches ‘Apna Phone’ Low-cost, Dual-SIM Phones Starting At Rs 1,399

BSNL, Champion Launches ‘Apna Phone’ Low-cost, Dual-SIM Phones
BSNL State Owned Telecom Operator, in partnership with Champion has recently launched their latest "Apna Phone" range of feature phones targeted at masses. The low end handsets come dubbed as SQ 241 and SQ 281 and are priced very affordable price range at Rs 1,399 and Rs 1,699 respectively.The BSNL Champion Mobile Phone SQ 241 include the option of a dual SIM, video and music players, 6.1 cm screen, FM Player, Powerful speakers, powerful battery, GPRS, Bluetooth, Camera,and TF Card Support and the ability to store 200 messages and 500 contacts bundled with 1200min of talk time.On the other hand, the BSNL ChampionMobile Phone SQ 281 comes with the similar dual SIM support. It has a 1.3 MP camera, a 7.1 cm screen, Bluetooth, FM player, a music and video player-cum-recorder. It is GPRS enabled, has a big 1800mAh battery, a 3.5 mm audio jack, a Torch light and TF card support . bundled with 1200min of talk time.

வோடபோன் வருமான வரி ஏய்ப்பு

இந்திய வருமான வரித்துறை பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் நிறுவனத்திற்கு 3,700 கோடி வருமான வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளது இது விசயமாக மேல் முறை செய்ய 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2008-09 மதிப்பீடுகளின் ஒரு பகுதியாக மட்டும் உள்ளது.

வங்கி கடன்

வங்கி கடன்களுக்கான EMI (தவணை ) செலுத்தும் தேதி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி என்பதற்கு பதில் 20 தேதியாக மாற்றுவதற்கு கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது . 
             <கடித நகல் பார்க்க :-Click Here>

E1சம்பள விகிதம்

19-12-2013 அன்று நடைபெற்ற நிர்வாக கமிட்டி கூட்டத்தில் E1 சம்பள விகிதம் ஏற்று கொள்ளப்பட்டு வர இருக்கும் பிஎஸ் என் எல் போர்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் .நமது போராட்ட அறைகூவலின்படி ஏற்பட்ட உடன்பாட்டில் இது நமது சங்கத்தின் சாதனையில் ஒரு மைல் கல்

7-1-2014 கருத்தரங்கம் போஸ்டர்.

பொதுச்செயலர் பணிநிறைவு பாராட்டு விழா

அடுத்த CMD

பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் (PESB) மூலம் 19-12-2013   நடத்திய தேர்வின் முடிவில் திரு . ஸ்ரீ அனுபம் ஸ்ரீவஸ்தவா அவர்களை நமது பி எஸ் என் எல்  நிறுவனத்தின் அடுத்த CMD பதவிக்கு  பரிந்துரைத்துள்ளது  . 

Thursday, December 19, 2013

NEPP

18-12-2013 அன்று நடைபெற்ற பிஎஸ்என்எல் போர்டு கூட்டத்தில் NEPP பதவி உயர்வின் கீழ் சராசரி உள்ளீடுகளை(AVERAGE ENTRY) தளர்த்துவதற்கு 18-10-2013 அன்று நமது சங்கத்துடன் ஏற்பட்ட உடன்பாட்டு அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது .

வங்கி கடன்

நமதுஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் கொடுப்பதற்கு காலவரையறை நீட்டித்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது .

Wednesday, December 18, 2013

BSNL Reports Rs 7,884 Cr Loss For FY-13; Steps For Revival

செய்தி படிக்க :-Click Here

மீண்டும் ஒரு சுதந்திரம்

67 ஆண்டுகளுக்குப் பின் 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு.1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. அதாவது இரு ஆண்டுகளிலும் ஜனவரி 1ம் தேதி புதன்கிழமை வருகிறது. மற்ற தேதிகளும், கிழமைகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.அதே 1947ம் ஆண்டு காலண்டரை எடுத்துப் பார்த்தால், அப்படியே 2014 ம் ஆண்டு காலண்டர் போலவே இருக்கும். தேதிகளும், கிழமைகளும் ஒரே மாதிரியாக இல்லை.. இது போதாதா...1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமைடந்த ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே அதேபோன்று மீண்டும் ஒரு சுதந்திரம்  2014ம் ஆண்டு இந்தியாவில் வர வேண்டும் .  நன்றி :- ஒன் இந்தியா 

Tuesday, December 17, 2013

BSNL, Dimension Data To Host National Health Portal

செய்தி படிக்க :-Click Here

கிரிஸ்துமஸ், புத்தாண்டு சலுகையாக இலவச சிம்கார்டு வழங்கும் பி.எஸ்.என்.எல்

             கிரிஸ்துமஸ், புத்தாண்டு சலுகையாக இலவச சிம்கார்டு வழங்கும் பி.எஸ்.என்.எல்
         கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகையாக வரும் டிசம்பர் 18ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை சென்னை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இலவசமாக சிம்கார்டு வழங்குகிறது.பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, விழாக்கால சலுகைகளை அறிவித்துள்ளது. வருகிற 18ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்திலும், விற்பனை மையங்களிலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மேளா நடக்கிறது.தீபாவளிக்கு வழங்கப்பட்ட இலவச 'சிம்கார்டு' சலுகை இப்போதும் தொடர்கிறது. பி.எஸ்.என்.எல். இலவசமாக சிம்கார்டு வழங்குகிறது. ரூ.20 மதிப்புள்ள டாக்டைமிற்கு மட்டும் 20 ரூபாய் செலுத்தி இந்த சலுகையை பெறலாம். தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த சலுகை அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தகது.மேலும் சினிமா பாடல்கள், ரிங்டோன், காலர்டோன், மொபைல் டி.வி, உள்ளிட்ட வசதிகளை சலுகை கட்டணத்திலும், இலவசமாகவும் வழங்கப்படுகிறது. செல்போன் ரீசார்ஜ் முழு மதிப்பிற்கு அளிக்கப்படுகிறது.இந்த சலுகைகள் அனைத்தும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சென்னை டெலிபோன்ஸ் வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற முடியும்.
    <நன்றி :- சென்னை ஆன்லைன் .காம்>  

அட இந்தியாவில் இப்படியும் ஒரு 'ஏழை முதல்வர்'

நாட்டிலேயே திரிபுரா மாநில முதல்வர் மானிக் சர்க்கார் தான் மிகவும் ஏழ்மையான முதல்வர் ஆவார். ஏழை முதல்வர் என்று தன்னை பிறர் கூறுவதில் அவர் பெருமை கொள்கிறார். திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று மானிக் சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வர் ஆனார். முன்னதாக அவர் கடந்த ஜனவரி மாதம் வேட்புமனு தாக்கல் செய்தபோது தனது சொத்து விவரங்களையும் தெரிவித்திருந்தார். அவரது சொத்து மதிப்பை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது சர்க்காரின் கையில் வெறும் ரூ.1,080 ரொக்கம் மட்டுமே இருந்தது. அவரது வங்கிக் கணக்கில் ரூ.9,720 இருந்தது
சர்க்காரின் அம்மா அஞ்சலி சர்க்காருக்கு சொந்தமான டின் ஷெட் வடிவில் உள்ள 432 சதுர அடி வீடு அவருக்கு கிடைத்தது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.2 லட்சத்து 20,000 ஆகும்.
மானிக் சர்க்காரின் மனைவி பாஞ்சாலி பட்டாசார்யா மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெறும்போது அவருக்கு கிடைத்த பணத்தை வைத்து வைப்புத் தொகையில் ரூ.23 லட்சத்து 58 ஆயிரத்து 380 வைத்துள்ளார். மேலும் அவரிடம் ரூ.72,000 மதிப்புள்ள 20 கிராம் தங்கம் உள்ளது.
மானிக் சர்க்கார் மற்றும் அவரது மனைவியிடம் அசையும் சொத்துக்களே இல்லை. அவர்களின் அசையா சொத்து மற்றும் பண இருப்பு மொத்தம் ரூ. 24 லட்சத்து 52 ஆயிரத்து 395 ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது மானிக்கின் மாத சம்பளம் ரூ.9,200. அதையும் அவர் அப்படியே கட்சியிடம் அளித்துவிடுவார். கட்சி அவருக்கு மாதாமாதம் ரூ.5,000 செலவுக்கு அளிக்கும்.
என்னுடைய பொருளாதார நிலை குறித்த செய்திகளை ரசித்து படிக்கிறேன். என்னை ஏழை முதல்வர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். நான் எளிமையாக இருக்க கட்சி தான் காரணம் என்று அடக்கமாக தெரிவித்தார் மானிக் சர்க்கார்.
கார்போரேட்  முதலாளிகளும்  (முதலைகள்),கார்போரேட் ஊடகங்களும்  இவரை ஏற்று கொள்வார்களா ? 
                <நன்றி :- ஒன் இந்தியா 

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பொது துறை வங்கிகளை சீரழிக்கும் வங்கி  சீர்திருத்த மசோதாவை எதிர்த்தும் , புதிய ஊதிய உயர்வு உடன்பாட்டை உடனடியாக நிறைவேற்ற கோரியும்  நாளை (18-12-2013 )(புதன்கிழமை) தேசிய அளவிலான ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர் . இதில் நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பதாக ஐக்கிய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்து உள்ளது .இந்த நிலையில் ஐக்கிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து அந்த சங்க நிர்வாகிகளுடன் இந்திய வங்கி நிர்வாகம் கடந்த 14-ந்தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.இந்த நிலையில் மத்திய தொழிலாளர் துறை தலைமை கமிஷனர் பி.கே. சன்வரியா மற்றும் இந்திய வங்கி நிர்வாகத்தினர் நேற்று அனைத்து வங்கி துறையினருடன் நேற்று 2-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர்களின் தேசிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி 18-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் என்றும் இதுகுறித்து ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். முக்கிய தொழிற்சங்கம் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் பங்கேற்பதால் நாடு முழுவதும் அன்றைய தினம் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. பொது துறை வங்கிகளை பாதுகாக்க நடைபெறும் வங்கி வேலை நிறுத்தம் வெற்றி பெற பி எஸ் என் எல் விருதுநகர் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்  வாழ்த்துக்கள் 

Monday, December 16, 2013

அந்தமான் மாநில மகாநாட்டு காட்சிகள்

அந்தமான் மாநில மகாநாட்டு காட்சிகள் பார்க்க :-Click Here

ஒப்பந்த ஊழியர்கள் சம்பள பிரச்னை

ஒப்பந்த ஊழியர்களுக்கு சென்ற நவம்பர் மாத சம்பளம் 16-12-2013 வரை பட்டுவாடா ஆகாமல் இருப்பதை இன்று பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் துணை பொது மேலாளர் திரு .ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியபோது துணை பொது மேலாளர் அவர்கள் உடனடியாக ஒப்பந்தகாரரை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக சம்பளத்தை பட்டுவாடா செய்ய வலியுறுத்தியதை தொடர்ந்து ஒப்பந்தக்காரர் இன்று பட்டுவாடா செய்ய ஆரம்பித்து உள்ளார். ஒப்பந்த  ஊழியர் சம்பளத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர் மாநில தலைவர் தோழர் முருகையா அவர்களிடமும் கூறியுள்ளோம். பிரச்சனையில் உடனடியாக தலையிட்ட துணை பொது மேலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நமது நன்றி .

GPF பட்டுவாடா

கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்வதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி நமது துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் இன்று பொது மேலாளர் (BFCI ) அவர்களை சந்தித்து பேசிய போது கார்போரேட் நிர்வாகம் கடும் பண பற்றாகுறையை சந்தித்துள்ளதாகவும் போதிய நிதி இல்லை என்றும் GM  (BFCI ) அவர்கள் கூறியுள்ளார் . நமது துணை பொது செயலர் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்ய வேண்டும் என கடுமையாக வலியுறுத்தி உள்ளார் .

வங்கி கடன்

யூனியன் வங்கி,கனரா வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்த புதுப்பித்தல் பிரச்சினையை இன்று நமது துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் பொது மேலாளர் (BFCI) அவர்களுடன் விவாதித்தார்.நமது கார்போரேட் அலுவலகம் இது விசயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் மேலும் இது தொடர்பாக வங்கிகள் நமது நிறுவனத்தை அணுகி வருகின்றன என்றும் பொது மேலாளர்   (BFCI) அவர்கள் கூறியுள்ளார்.

Saturday, December 14, 2013

இரங்கல்

        நமது லோக்கல் கவுன்சில் உறுப்பினரும் முன்னால் மாவட்ட சங்க நிர்வாகியும் ஆன தோழர் L.தங்கதுரை அவர்களின் துணைவியார் இன்று காலமானார்.அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பதார்க்கு விருதுநகர் மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

Friday, December 13, 2013

Govt. urges Union Ministries, PSUs to give special preference to BSNL, MTNL

செய்தி படிக்க :-Click Here

சபாஷ் மதுரை SSA

பதிவு செய்த உடன் பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சேவை!

பதிவு செய்த உடன் பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சேவை!
          பதிவு செய்யப்பட்ட உடனேயே சேவையினைக் குறிப்பிட்ட இடங்களில் வழங்க உள்ளதாக பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அறிவித்துள்ளார். மதுரை வட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
          "பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவை மதுரை நகரில் குறிப்பிட்ட இடங்களில் உடனுக்குடன் வழங்கப்பட உள்ளது. அதன்படி, அழகர்கோவில் ரோடு, ஆத்திகுளம், புதூர் லூர்துநகர், சிட்கோ, கோமதிபுரம் 1, 5 வது தெருக்கள், மானகிரி, மாட்டுத்தாவணி, கூடல்புதூர், ஜெயராஜ் நகர், சாந்திநகர், ரயிலார் நகர், மகாத்மாகாந்தி நகர், கிருஷ்ணாபுரம் காலனி, திருப்பாலை, உச்சப்பரம்பு ரோடு, இ.பி.காலனி, பொறியாளர் நகர், எம்.எம்.எஸ்.காலனி, எழில்நகர், கண்ணனேந்தல் ஆகிய இடங்களில் பிராட்பேண்ட் இணைப்பு தேவைப்படுபவர்கள் 94861 02368 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
          மதுரையில் உள்ள 4 மாசி வீதிகள்(கீழ, மேல, தெற்கு, வடக்கு), ஆவணி மூல வீதிகள், மாரட்டு வீதிகள், வெளி வீதிகள், அழகப்பன் நகர், பழங்காநத்தம், தெப்பக்குளம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு ஆகிய இடங்களில் இணைப்பு தேவைப்படுபவர்கள் 94431 00461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
          மதுரை புது ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம், ஏ.ஏ.ரோடு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், கரிமேடு, அழகரடி, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, லட்சுமி சுந்தரம் என்களேவ், ராஜ் கிருஷ்ணா பிளாசா, ஜெய்நகர் அருகில், திருநகர் 1 & 8 வது பஸ் நிறுத்தம் வரை, ரெயில்வே காலனி, குவாலிட்டி கேர் மருத்துவமனை, எல்லஸ் நகர் ஹவுசிங்போர்டு, எஸ்.எஸ்.காலனி ஆகிய இடங்களில் இணைப்பு தேவைப்படுபவர்கள் 94861 02387 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்."
          இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.​பி.எஸ்.என்.எல்லின் இந்த அறிவிப்பு அப்பகுதி பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
             <நன்றி: இந்நேரம் டாட் காம்> 

என்ன கொடுமையடா சாமியோவ்...

          வங்கிக் கணக்கில் போடப்படும் சிலிண்டர் மீதான மானியத்திற்கும் வரி கட்ட வேண்டியது இருக்குமாம். நிபுணர்கள் கூறுவதைப் படிக்க... 

12/12/13 நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் BSNLEU தலைவர்கள்


தில்லியை திணறடித்த தொழிலாளர் பேரணியில் ஒரு பகுதி.


 
                                  சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்திய தொழிற் சங்கங்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள், வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்மேளனங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும் தில்லி ராம் லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்ற வீதி நோக்கி நடத்திய பிரம்மாண்டமான பேரணியால் தில்லி சிவந்தது. நாடு முழுதும் இருந்து தொழிலாளர்கள் டிசம்பர் 8 இலிருந்தே தில்லியை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.தில்லி, நாடாளுமன்ற வீதியினருகே அமைந்துள்ள ஜந்தர் மந்தரில் 9ஆம் தேதியிலிருந்தே பல்வேறு சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணா போராட்டங்கள் நடைபெறத் துவங்கிவிட்டன. வங்கி ஊழியர் சங்கங்கள், கிராமிய வங்கி ஊழியர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். கூடுதலாக புதுச்சேரி, ஆங்கிலோ பிரெஞ்சு தொழிலாளர்களும் தங்கள் ஆலை நவீனப்படுத்தப்பட வேண்டும் என்று முழக்கமிட்டார்கள். நாடு முழுதும் பணியாற்றும் மின் துறை ஊழியர்களும் எரிசக்தி உரிமைமனித உரிமை என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்தினார்கள்.அதேபோன்று தலித்/பழங்குடியினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளின்போது அவர்களுடைய மக்கள் தொகை விகிதாசாரத்திற்கேற்ப துணைத் திட்டத்தின்கீழ் பட்ஜெட் செலவினங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இன்று (வியாழன்) அன்று நடைபெற்ற பேரணியில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, எச்எம்எஸ், யுடியுசி உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களின் ஊழியர்களும், அங்கன்வாடி ஊழியர்களும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கிஊழியர்களும் ஆண்களும் - பெண்களும் பல லட்சம் பேர் பங்கேற்றார்கள்.பேரணியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, வட கிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் பார்க்கமுடிந்தது. குறிப்பாக பாதுகாப்புத் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, சுங்கத்துறை, உருக்குத் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ரயில்வே மற்றும் டெலிகாம் ஊழியர்கள் முழுமையாக இப்பேரணியில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது. 
நன்றி :- தீக்கதிர் 

Thursday, December 12, 2013

நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி

          காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரமாக அமலாக்கிவரும் நாசகர பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் பிரம்மாண்டமான அணிவகுப்பு நாடாளுமன்ற வீதியில் 12-12-2013 வியாழனன்று நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் தில்லியில் குவிந்துள்ளனர். அணிவகுப்பு வெற்றி பெற விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் வாழ்த்துகிறது .

Wednesday, December 11, 2013

தோழர் K .G .போஸ் அவர்களின் திரு உருவ சிலை திறப்பு விழா புகைப்படங்கள்



ஒப்பந்த ஊழியர் கையெழுத்து இயக்கம்

          ஒப்பந்த ஊழியர்களின் தமிழ் மாநில சங்க அறைகூவலின்படி K .G .போஸ் அவர்களின் நினைவு தினமான இன்று ஒப்பந்த ஊழியர்கள் வாங்கிய கையெழுத்து படிவத்தின் ஒரு நகல் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க அனைவரும் சென்றபோது  துணைப்பொது மேலாளர் திரு .சுந்தரராஜன் அவர்கள் மனுவை வாங்க மறுத்து விட்டது வருந்தத்தக்க நிகழ்வாகும். இதை  நமது சங்க நிர்வாகிகள் அனைவரும் வன்மையாக கண்டித்து உள்ளனர்.ஒப்பந்த ஊழியர்கள் என்றால் கிள்ளு கீரையாக அவர் நினைப்பதை எதிர்த்து நமது மாவட்ட சங்கம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்.
நமது இயக்க புகைப்படம் கீழே
               ஊர்வல துவக்கம் 
ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர்  தோழர் முனியசாமி உரை 
 ஊர்வல முகப்பு 
 பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் ரவீந்திரன் 
 கலந்து கொண்ட பெண் ஊழியர்கள் 
ஆர்ப்பாட்டத்தின்  ஒரு பகுதி 

 திரளான திரண்டு வந்த தோழர்கள் 
வாங்க மறுத்த துணை பொது மேலாளருடன் விவாதம் 


யார் பூனைக்கு மணி கட்டுவது

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி நகரம் தொழில் வளர்ச்சியில் முதன்மையான நகரம் மட்டுமன்றி நமது நிறுவனத்தில் அதிக இணைப்புகள் வேலை செய்து கொண்டு இருக்கக் கூடிய நகரம் .அந்நகரில் Wimax தொழில் நுட்பத்தில் இயங்ககூடிய 300 இணைப்புகள் பழுதாகி மாத கணக்கில் சரி செய்யாமல் உள்ளது . வளர்ச்சியை பற்றி மேடை தோறும் முழங்கும் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது . நமது மாநில சங்கம் இவ் விசயத்தை மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விருதுநகர் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .

டிசம்பர் 11 - தோழர் K.G.போஸ் நினைவு நாள்

புதிய போனஸ் ஃபார்முலா பேச்சு வார்த்தை தொடங்கியது

Tuesday, December 10, 2013

11 டிசம்பர் 2013 தோழர் K .G .போஸ் அவர்களின் . 39 வது நினைவு நாள்

Statue of Com.KG Bose will be installed at KG Bose Bhawan on 11th December 2013
            
A statue of Com. K.G.Bose, the Revolutionary Leader of the Central Govt. and P and T employees, will be installed at KG Bose Bhawan, New Delhi on 11th December 2013, on his 39th Death Anniversary. The Statue is being donated by the W.Bengal Circle, BSNLEU.BSNLEU has shown that it implements what it preaches. The All India Conference at Thiruvananthapuram in 2010 decided to have own building for BSNLEU CHQ at New Delhi and within the next AIC at Ludhiana in 2012, a suitable building was purchased and inaugurated in the presence of a large number of leaders and workers. A meeting of the Central Secretariat was also held there.Now the statue of Com. K.G.Bose is being installed at KG Bose Bhawan. It is only appropriate that W.Bengal Circle union has taken the responsibility to donate the same. This will be inaugurated on 11th December 2013, on the 39th death anniversary of Com.KG.-நன்றி 

VAN Namboodiri's Blog


~


மகா கவி பாரதியார் பிறந்த நாள்

டிசம்பர் 11 மகா கவி பாரதியார் பிறந்த நாள் 
பாரதியார்
பாரதியின் அற்புதமான கையெழுத்து...பாரீர் 

Monday, December 9, 2013

பிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம்

07.12.2013 அன்று பிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் விசயமாக  கவுகாத்தியில் நடைபெற்ற கருத்தரங்க படங்கள் பார்க்க :- Click Here

புதிய PLI ஃபார்முலா

புதிய PLI ஃபார்முலா முடிவு செய்வதற்கான கூட்டு குழுவின் முதல் கூட்டம் இன்று 09-12-2013 நடைபெற்றது. ஊழியர் தரப்பு சார்பாக தோழர் அபிமன்யு மற்றும் தோழர் இஸ்லாம் அகமது, ஆகியோர் கலந்து கொண்டனர் .நிர்வாக தரப்பில் பொது மேலாளர் (Estt.), பொது மேலாளர் (எஸ்), பொது மேலாளர் (Restg.) மற்றும் பொது மேலாளர் (EF) ஆகியோர் கலந்து கொண்டனர் .ஊழியர் தரப்பு சார்பாக PLI என்பது நிறுவனத்தின் இலாபத்தோடு இணைத்து கணக்கில் எடுத்து கொள்ள கூடாது என்று கடுமையாக கருத்தை பதிவு செய்துள்ளனர் . நிர்வாக தரப்பு PLI என்பது செயல்திறன் அடிப்படையில் இருக்க வேண்டும் வாதிட்டது .மேலும் அவர்கள் "GPMS" (குழு செயல்திறன் மேலாண்மை அமைப்பு) அடிப்படையில் PLI நிர்ணயி க்கப்பட வேண்டும் என்று கூறினர் . அதற்கு ஊழியர் தரப்பு GPMS இல் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினர். உதாரணமாக, அதிக இலாபம் ஈட்டும் கேரளா வட்டம் , GPMS அடிப்படையில் சட்டீஸ்கர் வட்டதை விட குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளது . இறுதியாக, ஊழியர் தரப்பு முழுமையாக GPMS பற்றி படிக்க வேண்டும் என்று கூறியது.இது சம்பந்தமாக, நிர்வாகம் ஒரு விரிவான குறிப்பை கொடுக்க ஒப்பு கொண்டது . குழுவின் அடுத்த கூட்டம் ஜனவரி, 2014 இல் நடைபெறும் .

Sunday, December 8, 2013

மக்கள் மகிழ்ச்சியாக இல்லை: சோனியா காந்தி கருத்து

உண்மையில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதால்தான் இத்தகைய முடிவைத் தந்ததாக, 4 மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். இது இவருக்கு புரிய 5 ஆண்டுகள் ஆயிருகுப்பா சாமி ! நன்றி :- தி ஹிந்து

மரண அடி

கடந்த 5 ஆண்டுகளாக தொடரந்து மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி, பொது துறைகளை சூறையாடி ,மானியங்களை வெட்டி ஏழை மக்களை இன்னல்படுத்தி,தினம்தோறும் டீசல், பெட்ரோல் விலைகளை ஏற்றி வறுமை கோட்டிற்கு புது வியாக்கியானம் செய்த மக்கள் விரோத சக்திகளுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள்.ஆனால் நாட்டு மக்களை மதவாத அடிப்படையில் பிளவு படுத்தும் சக்திகள் மீண்டு எழுவது நாட்டிற்கும் ,மக்களுக்கும் நல்லதல்ல என்பதை 4 மாநில தேர்தல் முடிவுகள் சுட்டி காட்டுகின்றன.மாற்று கொள்கைகளை முன் வைத்து மாற்றம் ஏற்பட நெடுந்தூரம் செல்ல வேண்டியதுள்ளதை தேர்தல் முடிவுகள் சுட்டி காட்டுகின்றன. 

மாநில சங்க சுற்றறிக்கை

மாநில சங்க சுற்றறிக்கை எண் 97 படிக்க :-Click Here

Saturday, December 7, 2013

மாவட்ட செயற்குழு,

13 வது மாவட்ட் செயற்குழு புகைப்பட தொகுப்பு 
மாவட்ட உதவி செயலர் M .முத்துசாமி 
                   மாவட்ட உதவி தலைவர் தோழியர் பகவதி 
 தோழர் M .கருப்பசாமி 
 தோழர் சிவஞானம் 
 தோழர் ஜெயச்சந்திரன் 
 மாவட்ட பொருளாளர் தோழர் S ,வெங்கடப்பன் 
 தோழர் ராஜ்மோகன் ,TTA 
 சமுத்திரகனியின் உபசரிப்பு 
  சமுத்திரகனியின் உபசரிப்பு 
 மாவட்ட உதவி தலைவர் தோழர் சந்திரசேகரன் 
 SDOP கிளை செயலர் தோழர் கே.சிங்காரவேலு 
சிவகாசி  SDOP கிளை செயலர் G .ராஜு 
 சிவகாசி OCB கிளை செயலர் A .ஜெயபாண்டியன் 
 சாத்தூர் கிளை செயலர் காதர் மொய்தீன் 
 ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் வெங்கடசாமி 

 மாவட்ட அமைப்பு செயலர் தோழர் .டி .அனவரதம் 
 மாவட்ட துணை தலைவர் தோழர் செல்வராஜூ 
 மாவட்ட அமைப்பு செயலர் தோழர் முனியாண்டி 
 தோழர் .R .ரசூல் 
 தோழர் M .S .இளமாறன் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...