Friday, February 28, 2014

ஆர்ப்பாட்டம்

             



                       Joint Forum அறைகூவலின்படி பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்கள் இணைப்பை சங்கங்களின் கருத்தை கேட்காமல் முடிவு செய்துள்ள அரசின் முடிவை கண்டித்து இன்று GM அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் திரு ராதாகிருஷ்ணன் , மாவட்ட செயலர் ,A I BSNLEA அவர்கள் தலைமையில் நடைபெற்றது .பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் .ரவீந்திரன் , SNEA மாவட்ட செயலர் திரு செல்வராஜ் ,SEWA BSNL மாவட்ட செயலர் சகோதரர் . கேசவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .தோழர் இளமாறன் கோஷங்கள் எழுப்ப பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட உதவி செயலர் முத்துசாமி நன்றியுரை கூறினார் .

ஆர்ப்பாட்டம்

Joint Forum ஆர்ப்பாட்டம் 
          பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் உள்ளடக்கிய Joint Forum சார்பாக ,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பைத்தியகாரதனத்தில்  அவசரகோலத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை இணைப்பதற்கு  எதிராக, மாநில  மற்றும் மாவட்ட  மட்டங்களில், இன்று 28-02-2014 மதிய உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த  அழைப்பு விடுத்துள்ளது .ஊழியர்கள் பிரதிநிதிகள் ஆலோசனை இல்லாமல், அரசாங்கம்  பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை  இணைக்க  அனுமதிக்க முடியாது. கிளைகள் அனைத்தும் ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டு  கொள்கிறது . Joint Forum அடுத்த நடவடிக்கையை முடிவு செய்ய 04-03-2014 அன்றுமீண்டும் கூட உள்ளது .

Thursday, February 27, 2014

தொழில்போட்டி செல்போன் கட்டண உயர்வைத் தடுக்கும்: தொலைத்தொடர்பு செயலர் நம்பிக்கை

செய்தி படிக்க :-Click Here

BSNL to ask DoT for dismissal of Trai's proposal on CDMA -

               Bharat Sanchar Nigam (BSNL) has opposed sector regulator Trai's suggestion to take back CDMA spectrum. It said that it will ask the telecom department to dismiss Trai's proposal calling on the telecom operator to return the bulk of its CDMA spectrum in the 800 MHz band, according to media reports. In its pre-auction recommendations on the pricing CDMA spectrum last week, Trai has suggested that BSNL return half of its current 800 MHz spectrum holdings in most circles. - 
                            <நன்றி :- Telecom Leader ship Forum >

மாவட்ட செயற்குழு

 புகைப்படங்கள்
          2014 பிப்ரவரி 25 ஆம் நாள் காலை BSNLEU விருதுநகர் மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்களையும் கிளைச் செயலர்களையும் அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து மாவட்ட மாநாட்டிற்கான திட்டமிடலுக்குகாகவும் செயல்பாட்டறிக்கையை இறுதிப்படுத்துவதற்காகவும் கணக்கு வழக்குகளை நேர்செய்வதற்காகவும் கூட்டப்பட்ட மாவட்ட செயற்குழு தலைவர் சமுத்திரக்கனியின் தலைமையில் மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரனின் தொடக்க உரையுடன் தொடங்கியது. முதலில் கிளைகள் வாரியாக கணக்கு வழக்குகள் பொருளாளர் வெங்கடப்பன் அவர்களால் நேர் செய்யப்பட்டன. மாநாட்டு வரவேற்புக் குழுவின் செயலர் தோழர் உதயகுமார் மற்றும் அருப்புக்கோட்டை கிளைச் செயலர் தோழர் ஜெயக்குமார் இருவரும் இதுவரையில் மாநாடு தொடர்பாக அருப்புக்கோட்டையில் நடந்த சாதக பாதக விஷயங்கள், பணிகள் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் அருப்புகோட்டை கிளை முழு முனைப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்.அனைத்துக் கிளைச் செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் முனியசாமியும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். 2 நாள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட அனைத்து கிளை  செயலர்களும் ஒத்துழைப்பை உறுதிப்படுத்திய சூழலில் செயற்குழு இனிதே முடிவுற்றது.

Wednesday, February 26, 2014

Cabinet may discuss Rs 7,500 cr notional loan waiver of BSNL

செய்தி படிக்க :-Click Here

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவு

                          மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது பற்றிய முழுமையான விவரங்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையில் இடம்பெறும் என தெரிகிறது . இந்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதியோடு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த வயது உயர்வு பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
                   <நன்றி :தினகரன் >

ஆர்ப்பாட்டம்

            புவனேஷ்வரில் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மத்தியசெயற்குழுவின் முடிவின் படியும் , நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் அறைகூவலின்படியும்   கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 

*விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
*அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
*சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
*பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
*சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். 

*EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.

*வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
*பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
*பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.







                இன்று விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ தலைமையில் நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் போராட்டத்தை வாழ்த்தி பேசினர் .நமது மாநில துணை செயலரும் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவருமான தோழர் முருகையா கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார் .மாவட்டம் முழுவதும் இருந்து பெரும் திரளாக  ஊழியர்கள் கலந்து கொண்டது நம் சங்கம் மேல் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது .பெரும் திரளாக அணி திரட்டிய மாவட்ட செயலர் தோழர்  முனியசாமிக்கு சபாஷ் !.
ஒப்பந்த ஊழியர் சங்க கொடிமரம் இன்று GM அலுவலகம் முன்பாக நடப்பட்டு அதன் சங்க கொடியை தோழியர் மாரியம்மாள் கோஷங்கள் முழங்க ஏற்றி வைத்தது இன்றைய ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அம்சம் .

Monday, February 24, 2014

7 வது அனைத்திந்திய மகாநாட்டிற்கு வரவேற்பு குழு

          22 ஆம் தேதி கொல்கத்தா CTO வில் தோழர் சைபால் சென்குப்தா ,உதவி பொது செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 7 வது அனைத்திந்திய மகாநாட்டிற்கு வரவேற்பு குழு உருவாகப்பட்டு விட்டது . இக் கூட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட தோழர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர் .அதில் கலந்து கொண்டு பேசிய நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் வர உள்ள அனைத்திந்திய மகாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார் .தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி .அவர்கள் வரவேற்பு குழு தலைவராகவும் ,தோழர் அதிர் குமார் சென் அவர்கள் செயல் தலைவராகவும்,அனிமேஷ் மித்ரா மற்றும் சைபால் சென்குப்தா அவர்கள் இணை பொது செயலராகவும் ,தோழர் ஓம் பிரகாஷ் சிங் பொருளாளர் ஆகவும் செயல்படுவர் .மேலும் செய்திகளுக்கு :Click Here

மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை சங்கத்தின் பொது குழு கூட்டமும் ,மூத்த தோழர் ஆத்தியப்பன் ,TTA அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவும்










                      மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை சங்கத்தின் பொது குழு கூட்டமும் ,மூத்த தோழர் ஆத்தியப்பன் ,TTA அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் 24-02-2014 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் கிளை தலைவர் தோழர் ராஜசேகரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர் ஆத்தியப்பன் ,TTA அவர்களை வாழ்த்தி தோழர்கள் அய்யாசாமி ,பெருமாள்சாமி ,இளமாறன் ,முருகேசன் அவர்கள் பேசினர் .மாவட்ட  செயலர்தோழர் ரவீந்திரன்  வாழ்த்தி பேசும் போது வர உள்ள மாவட்ட மகாநாட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டிய அவசியத்தையும் ,சென்னை சொசைட்டி தேர்தலில் நமது வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கி கூறினார் .தோழர்  ஆத்தியப்பன் ஏற்புரை நிகழ்த்தினார் .கிளை பொருளாளர் தோழர் மாரியப்பா நன்றியுரை வழங்கினார் .மாவட்ட மகாநாட்டு  சார்பாளர்கள் ஏகமானதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .

BSNL-ல் உழைப்பு சுரண்டலை ஒழிப்போம்-26.02.2014 ஆர்ப்பாட்டம்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

கார்ட்டூன்


Sunday, February 23, 2014

மோடியின் மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பின்னணிப் பாடகர்கள்!

மோடியின் மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பின்னணிப் பாடகர்கள்! எக்னாமிக் டைம்ஸ் அம்பலப்படுத்துகிறது.

           மக்கள் மத்தியில் போலி யான மலிவுப் பிரச்சாரத் தைச் செய்வது எப்படி என்பதற்கு மோடியின் பின் னால் உள்ள நிபுணர்கள் குழுவை ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.
தேர்தல் காலம் நெருங்க நெருங்க பாஜக-வினால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி எந்த எந்த வகையில் புதிய புதிய அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்ற முடியும் என அனைத்துத் துறை நிபுணர்களிடமும் ஆலோசனை கேட்டு வரு கிறார்.தேர்தலை மய்யமாக கொண்டு மூன்று நிலையில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.

அது
1. மக்களை ஏமாற்றும் புதிய திட்டங்கள்,

2. அதை மய்யமாக வைத்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவது,

3. அவற்றை அப்படியே ஊடகங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது;

இதுதான் மோடியின் தேர்தல் மோசடித் திட்டம்.மோடியின் இந்த மோசடித்திட்டத்திற்கு வலுவூட்ட பல நிபுணர்கள் கொண்டகுழு உள்ளது. இக்குழுவில் பொருளாதார நிபுணர் கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியர் அரவிந்த பங்கரியா, பிரபல பங்குவர்த்தக முதலீட்டு ஆலோசகர் குரு ரவி மந்தா, கொள்கை ஆய்வு மய்யக் குழுவில் உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் திபோராய், மனீஷ் சபர்வால் போன் றோர் உள்ளனர்.
          இந்தக்குழுவின் தலை வர் போல் செயல்படும் ஜகதீஷ் பகவதி, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மீது மதிப்பு கொண் டவர். ஆனாலும், அவரது சிந்தனைக்கு மாற்றுக் கருத்து கொண்டவர். இதில் பங்கரியா பாது காப்பு மற்றும் அயலுறவுத் துறை விவாகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராம். இந்தக்குழு தொடர்ந்து இந்தியப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மோடிக்கு ஆலோசனை அளித்து வருகிறது. இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஒருவர் இந்தக் குழுவின் ஆலோச னையின் பேரில் நரேந்திர மோடியின் உரைகள் தயா ரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் அனைவரும் மோடியின் தேர்தல் களத் தின் பின் புலத்தில் உள்ளனர்.இந்தக் குழு தற்போது நாடு எதிர்நோக்கி இருக்கும் முக்கிய பிரச்சினை யான மின்சாரத்தை முதன் மையாக எடுத்துள்ளது.24 மணி நேரம் மின்சாரம் என்பது சாமானியர்களின் கனவாகும். இதை மனதில் கொண்டு மின்சாரம் மற்றும் இந்த பிரச்சினையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது, இதன் மூலம் தன்னை பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடப் போகும் ஒருவராக காட்டிக் கொள்ள நரேந்திர மோடிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். நிறைவேற்ற இயலாதவை! மேலும் இது குறித்து ஆங்கிலப் பத்திரிகை கூறுவது மோடியின் வளர்ச்சி பற்றிய பேச்சுக்களின் பின் புலத்தில் பொருளாதார, தொழில்வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மிகப் பெரிய ஆலோசனைக்குழுவின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இவர்களின் ஆலோ சனைப்படியே நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த உரையை அனைத்து மேடை களிலும் பேசி வருகிறார்.

          பொருளாதார நலிவில் சிக்கியுள்ளதாக மாயையை முதலில் தனது பேச்சால் உருவாக்கி, அதன் பிறகு அதற்கான திட்டங்கள் இவை என்று மக்களிடம் கூறி வாக்காளர்களை கவர்ந்து (ஏமாற்றி) வருகிறார். உண்மையில் மோடிக்கு பின்புலத்தில் நிற்கும் நிபுணர்களின் ஆலோசனைகள் பெரும்பாலானவை நிறைவேற்ற இயலாதவையாகவே உள்ளன.

(நன்றி:எக்னாமிக்டைம்ஸ் நாள்:19.2.2014)

ஒரு சின்ன புள்ளி விவரம் பார்ப்போமா ?

                      2012 ம் ஆண்டு ராஜ்ஜிய சபையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் , தெரிவிக்கப் பட்ட செய்தி , குஜராத்தில் , 41 % குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தான் . 55.3% சதவிகிதம் பெண்கள் ரத்த சோகையினால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதும் தான் ..... மீன் பிடிப்பதையும் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதையும் நமக்கு அப்பறம் சொல்லிக் கொடுக்கட்டும் , அதே காலக் கட்டத்தில் ,தமிழகத்தில் மேற்சொன்ன குறைபாடுகள் கொண்ட மக்கள் குஜராத்தை காட்டிலும் குறைவு என்பது கூடுதல் தகவல் .... மக்களை ஆரோகியமாக வைக்க வேண்டும் என்றால் , முதலில் கர்பிணிகள் , குழந்தைகள் போன்றவர்களுக்கு ஊட்டச் சத்துக்கள் அவசியம் , மலிவு விலையில் உணவு அவசியம் . நதியின் மீது சோலார் தட்டுக்களை அப்பறம் அமைக்கலாம் , முதலில் மக்கள் தட்டில் சோறை போடுங்கப்பா

நெஞ்சத்தை கிள்ளிய சிவகாசி கூட்டு கிளை மாநாடு

















          22-02-2014 அன்று சிவகாசி OCB மற்றும் SDOP கிளைகளின் கூட்டு கிளை மாநாடு தோழர்கள் அழகுராஜ் மற்றும் சிவபெருமான் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
          மகாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கிவைத்து உரையாற்றினார் .நமது நிறுவனம் இன்று எதிர்நோக்கி உள்ள பிரச்சனைகளையும்,நமது விருதுநகர் மாவட்டத்தில் லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் நிறுவன வளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகளை மட்டுமே கையில் எடுத்து விவாதித்ததை எடுத்துரைத்தார்.
          வர இருக்கின்ற மாவட்ட மகாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் கூறினார் .சென்னை கூட்டுறவு சங்க தேர்தலில் நமது சங்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான தோழர்கள் சந்திரசேகரன் மற்றும் ராஜமாணிக்கம் அவர்களை அம் மகாநாட்டில் அவர் அறிமுகப்படுத்தினார்.
          பின்னர் பேசிய மாநில உதவி செயலர் தோழர் பழனிச்சாமி பேசிய போது 78.2% IDA இணைப்பை நாம் பெற்று தந்த சாதனையையும் , இன்று நமது நிறுவனம் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர் கொள்ள நடக்கின்ற இயக்கங்களுக்கு அனைத்து சங்கங்களையும்  இணைத்து தலைமை தாங்குகின்ற பேரியக்கம் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் மட்டுமே என்பதை எடுத்துரைத்தார்.
          வரும் தேர்தலில் நமது நிறுவனத்தை காக்க கூடிய சக்திகளுக்கு வாக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தையும் அவர் சுட்டி காட்டினார் .ஸதலஊழியர்கள் பிரச்சனைகளை நாம்  எதிர்கொண்டு தீர்க்கும் விசயத்தை மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் கூறினார். ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் மற்றும் கருவிகள் பற்றாகுறை விசயத்தை ஒப்பந்த ஊழியர் மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜ் சுட்டி காட்டினார் .மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,  SNEA கிளை செயலர் தோழர் சுப்பிரமணியன், மற்றும் கோட்ட பொறியாளர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          மகாநாட்டில் பெண் ஊழியர்கள்உட்பட பெரும் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டது நெஞ்சத்தை கிள்ளிய அம்சமாக விளங்கியதுOCB கிளை செயலராக தோழர் A.ஜெயபாண்டி அவர்களும் SDOP கிளை செயலராக M.கருப்பசாமி  அவர்களும்  தேர்ந்து எடுக்கப்பட்டனர்மாவட்ட மகாநாட்டிற்கு கட்டியம் கூறுவதாக சிவகாசி கிளை மகாநாடு அமைந்தது.

Saturday, February 22, 2014

தொலைத் தொடர்பு துறையின் கூடுதல் செயலருடனான சந்திப்பு

          இம்மாதம் 18ஆம் நாள் நமது பொதுச்செயலர் தோழர் அபிமன்யு மற்றும் AIBSNLEA பொதுச்செயலர் திரு பிரகலாத் ராய் இருவரும் தொலைத் தொடர்பு துறையின் கூடுதல் செயலர் திருமதி ரீட்டா டியோட்டியா அவர்களை BSNL - MTNL ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக சந்தித்தார்கள். பிரதம மந்திரிக்கு Forum சமர்ப்பித்த நினைவுக் குறிப்பின் (memorandum) உள்ளடக்கத்தை இரண்டு தலைவர்களும் விரிவாக எடுத்துரைத்தார்கள். பெரும் பொருளாதார கடன் நெருக்கடியில் இருக்கக்கூடிய MTNL உடன் BSNL இணைக்கப்படக்கூடாது என்ற ஊழியர்களின் மனநிலையை அவர்கள் எடுத்துரைத்தார்கள். தலைவர்களின் கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என கூடுதல் செயலர் உறுதியளித்துள்ளார்.
(குறிப்பு: விஷயத்தின் அவசரம் கருதி FORUMன் பிற தலைவர்கள் டெல்லியில் இல்லாத சூழலில் தலைவர்கள் இருவரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்)

கொல்கத்தா டெலிகம் ஃபேக்டரி

          கொல்கத்தா டெலிகம் ஃபேக்டரியில் உடனடியாக தொலைபேசிக் கருவிகள் உற்பத்தியைத் தொடங்க வலியுறுத்தி நமது மத்திய சங்கம் CMD க்குக் கடிதம் எழுதியுள்ளது.

பொதுச் செயலர்களுக்குக் கடிதம்

          ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி தீர்வுகாணப்படாத நீண்டகாலப் பிரச்சனைகளுக்கான ஒருங்கிணைந்த போராட்டத்தை வலியுறுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து Non-Executive தொழிற்சங்கப் பொதுச் செயலர்களுக்கும் நமது பொதுச் செயலர் கடிதம் எழுதி உள்ளார்.

18/10/2013 உடன்பாடு தொடர்பாக

          Non-Executive ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பாக 18.10.2013 அன்று ஏற்பட்ட உடன்பாட்டின் முடிவுகளை செயல்படுத்தக் கோரி மத்திய சங்கம் (17/02/2014) மனிதவள இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளது.

டெலிகாம் மெக்கானிக் தேர்வும் கல்வித் தகுதியும்

          டெலிகாம் மெக்கானிக் LDCE தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி என்றிருப்பதை ஒருமுறை தளர்த்திக் கொள்ளக்கோரி மத்திய சங்கம் (17/02/2014) மனிதவள இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளது.

Tuesday, February 18, 2014

தொழிற்சங்க முன்னோடி சிங்கார வேலரின் பிறந்தநாள்

         இன்று, சிங்காரவேலரின் 154-வது பிறந்தநாள். அவர் யாரென்று நாட்டில் பலருக்குத் தெரியாதது சரித்திரக் குற்றமே. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது சிலையை வைத்துவிட்டு, சிங்காரவேலர் மாளிகையென்று அந்தக் கட்டிடத்துக்குப் பெயர்சூட்டி மகிழ்ந்ததோடு தமிழக அரசு அவரை மறந்துவிட்டது.
          சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதைப் பற்றி பரிசீலிக்க உத்தரவிட்டபின்தான், அவரைப் பற்றிய சில தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
          வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது என்பதும் அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் என்பதும், வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள்பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் தெரியாது.
          அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் என்ற நிகழ்வு, தன்மானமுள்ள இந்தியர் எவரையும் கொந்தளிக்க வைக்கும்.
          சிங்காரவேலரின் வாழ்வையும் கொள்கைகளையும் பற்றி வெளிவந்துள்ள நூல்கள் வெகு சிலவே. எப்போதும்போல் வரலாற்று ஆசிரியர்கள் வட இந்தியாவில் உள்ள பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிலாகித்து நூல்கள் பல எழுதியிருந்தாலும் தென்னிந்தியர்களைப் பற்றி, அதிலும் குறிப்பாக சிங்காரவேலரைப் பற்றிய தகவல்களை வெளியிட மறந்துவிட்டார்களா, மறுத்துவிட்டார்களா என்று தெரியவில்லை.
          உயர் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க தமிழக அரசு சிங்காரவேலருக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் நினைவிடம் அமைப்பதோடு, பள்ளி மாணவர்களுக்கும் அவரது லட்சியத்தையும் வாழ்க்கையையும் பாடமாக வைக்க முன்வர வேண்டும்.
          1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. இந்த சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களைவிட ஓரளவுக்கு மேம்பட்ட நிலையில் சிங்காரவேலரின் பெற்றோர் இருந்தபோதிலும், சாதியப் புறக்கணிப்பு, ஒடுக்குமுறை போன்ற தளைகளிலிருந்து அவர்களால் விடுபட இயலவில்லை.
          சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்று, முறையான பயிற்சிக்குப் பிறகு, சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907-ம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். பொதுவாகவே, வழக்கறிஞர்கள் தம்மிடம் முதலில் வருபவருக்குச் சார்பாகவே வழக்குகளை, அவரது வாடிக்கையாளர் குற்றவாளியா அல்லது பாதிக்கப்பட்டவரா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக்கொள்வது வழக்கம்.
          ஆனால், அப்போதுதான் வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்துவிட்டார்.
          சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்ட்டாக உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது அவரது ஆழ்ந்த அறிவே. ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. 1902-ம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சிங்காரவேலர் மேற்கொண்ட பயணம் மகத்தான அனுபவமாக அமைந்தது.
          அவர் இங்கிலாந்தில் இருந்தபோது மற்றுமொரு முக்கியமான சம்பவமும் நடைபெற்றது. உலக புத்த மதத்தவரின் மாநாடுதான் அந்தச் சம்பவம். இந்த மாநாட்டிலும் சிங்காரவேலர் பங்கேற்றார். கிட்டத்தட்ட புத்த மதத்துக்கு அவர் மாறிவிட்டார்.
          புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகளை ஆதரித்த, தொடக்க கால முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சிங்காரவேலர். சென்னையில் தொழிலாளர் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள்பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
          அவருக்கு 1922-ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922-ல் எம்.என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923-ல் அவர் மேதினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார்.
          கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்தக் கட்சி உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுடனும் மற்ற அயல்நாட்டுப் புரட்சி மையங்களுடனும் தொடர்புகொண்டிருக்கவில்லை என்று அதன் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் அழுத்திக் கூறியிருந்தார்கள்.
          சத்திய பக்த் அமைத்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு ஈர்ப்பு மையமாக விளங்கவில்லை என்றாலும், இந்திய மார்க்சியவாதிகளின் தனித்தனிக் குழுக்களை ஒன்றாக இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை அவர் தொடர்ந்தார். ஒன்றிணைப்பு மாநாடு கூட்டுவதற்காக முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு இடதுசாரி காங்கிரஸ்காரரான ஹஜரத் மொஹானியின் தலைமையில் ஒழுங்கமைப்பு கமிட்டி நிறுவப்பட்டது.
          இதன் பயனாக இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேலுச் செட்டியாரின் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பது என்றும் அதன் மையத்தை பம்பாயில் வைத்துக்கொள்வது என்றும் அந்த மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற்குழுவின் செயலாளர்களான ஜே. பெகெர்ஹொத்தாவும் எஸ்.வி. காட்டேயும் பதவி ஏற்றார்கள்.
          மார்ச் 1924-ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது. டிசம்பர் 1925-ல் கான்பூரில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.
          1927-ல் பெங்கால்-நாக்பூர் ரயில்வே வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1928-ல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார்.
          சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங்களிலும் தென்னிந்திய ரயில்வே போராட்டங்களிலும் மும்முரமாகப் பங்கேற்றதுடன், தனது பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதியும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் ஓய்வு ஒழிவின்றி, கம்யூனிஸப் பிரச்சாரம் செய்துவந்தார்.
          மே தினம், உலக அமைதி தினம் போன்றவற்றைக் கொண்டாடியதுடன் ஆகஸ்ட் 1927-ல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார். 1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.
          சாதிக்கு எதிரான சிங்காரவேலரின் உறுதியான நிலைப்பாடும், இந்து மதச் சடங்குகள், மனுஸ்மிருதி முதலான நூல்களின் மீதான அவரது வெறுப்பும்தான் பெரியாருடனும் அவரது சுயமரியாதைக் கட்சியுடனும் நெருக்கமாகச் செயல்பட வைத்தது. பெரியார் நடத்திவந்த ‘குடிஅரசு’ இதழிலும் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்குறித்து, சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் கொண்டிருந்த பாராமுகமான போக்கை சிங்காரவேலர் அங்கீகரிக்கவில்லை. எனவேதான், சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிக்கு அவர் ஆதரவளித்தார்.
இத்தகைய ஒரு வரலாற்று முன்னோடியைப் பற்றி
“போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதில் வியப்பில்லை.
- சந்துரு, 
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, 

சமூக விமர்சகர்

நன்றி : தஇந்து

7 ஆவது மாவட்ட மாநாடு போஸ்டர்


Sunday, February 16, 2014

6 கோடிப் பெண்கள்
 எங்கே போனார்கள்?

செய்தி படிக்க :-Click Here

சென்னை கூட்டுறவு சங்க தேர்தல்

                          சென்னை கூட்டுறவு சங்க தேர்தலில் நமது விருதுநகர் மாவட்டத்தில்   போட்டியிட தோழர் C .சந்திரசேகரன் , போன் மெக்கானிக் , விருதுநகர் , தோழர் N .ராஜமாணிக்கம் ,போன் மெக்கானிக், சிவகாசி அவர்களை  நமதுBSNLEU  மாவட்ட சங்கம்  வேட்பாளர்கள் ஆக  நியமித்து உள்ளது .நமது கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் உடனடியாக தேர்தல் பணியை துவங்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .19-02-2014 அன்று காலை நமது வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள் .

Saturday, February 15, 2014

TDSAT directs MTNL to refund Rs 96.68 cr to Reliance Communication

செய்தி படிக்க :-Click Here

தொலைத்தொடர்பு மையங்களை நவீனப்படுத்த பிஎஸ்என்எல் முடிவு

செய்தி படிக்க :-Click Here

BSNL MTNL நிறுவனங்கள் இணைப்பை எதிர்க்கிறோம்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

மாநில சங்க சுற்றறிக்கை

தேங்கியுள்ள பிரச்சனைகளுக்காக பொது செயலாளர் நிர்வாகத்துடன் சந்திப்பு மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

BSNL MTNL இணைப்பு Forum முடிவுகள்

 மாநில சங்க சுற்றறிக்கை படிக்க:-Click Here 

Wednesday, February 12, 2014

செய்தி



Customers Think Vodafone and BSNL are the Best

செய்தி படிக்க :-Click Here

யாரு மனசில யாரு

       யாரு மனசில யாரு 
         இந்தியாவின் அமெரிக்க தூதர் நான்சி பாவல்,நாளை பாஜக பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடி அவர்களை சந்திக்க உள்ளார் . 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் அதில் அவரது பங்கு உள்ளது என்று , 2005 ல் இருந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது மட்டும் நரேந்திர மோடியை சந்திக்க இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் துடிப்பது, ஏன்? காரணம் என்ன ?சர்வதேச தர நிறுவனம் ' மூடி'ஸ் ' வரும் வரும் நாடளுமன்ற தேர்தலுக்கு பின் பிராந்திய கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கலாம் என்றும் அதனால் இந்தியாவில் புதிய தாராள பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவது பாதிக்கும், என்று ம் கூறியுள்ளார்,மேலும் நிச்சயமாக இந்தியாவில் செயல்படும் பல தேசிய நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கும். எனவே அமெரிக்காவின் பணக்கார நவீன தாராளவாத கொள்கைகளை செயல்படுத்த நரேந்திர மோடியை முன்னிறுத்தவே இந்த நான்சி பாவல் மற்றும் நரேந்திர மோடி இடையே ஒரு கூட்டதை நடத்த அமெரிக்காவின் திடீர் நடவடிக்கை எடுக்க காரணம்.இந்தியாவின் அடுத்த ஆட்சியை யார் முடிவு செய்ய வேண்டும்.இந்திய மக்களா? அமெரிக்காவா ? பதில் உங்கள் விரலில் !
              திரு .அனுபம் ஸ்ரீவஸ்தவா, இயக்குநர் (CM), அவர்கள் இயக்குனர்  (நிதி) பொறுப்பை  கூடுதலாக தன பணியோடு  சேர்த்து பார்ப்பார் .இதற்கான உத்தரவை படிக்க :-Click Here

Monday, February 10, 2014

7 வது மாவட்ட மாநாட்டு அழைப்பிதழ்





மக்களை ஏமாற்ற படையெடுக்கும் விளம்பரங்கள்:

       காங்கிரஸ் ரூ 500 கோடி, பாஜக ரூ 400 கோடி, இதெல்லாம் என்ன? கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதையோ விற்கும் விலையா என்று கேட்காதீர்கள். இவை அந்தந்த கட்சிகள் மே மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முந்தைய விளம்பரங்களுக்கு செலவிட இருக்கும் தொகைகள். அதாவது, தேர்தல் திருவிழா தொடங்கப் போகிறதாம். காங்கிரஸ் தனது ரூ 500 கோடி ஒப்பந்தத்தை டென்ட்சு & டேப்ரூட்டு என்ற நிறுவனத்துக்கும், செய்தித் தொடர்பு பணிகளை ஜெனிசிஸ் பர்சன்-மார்ஸ்டெல்லருக்கும், வெளிப்புற விளம்பரங்களின் பொறுப்பை ஜேடபிள்யூடி-க்கும் கொடுத்துள்ளது. பாடலாசிரியரும் விளம்பரத் துறை நிபுணருமான பிரசூன் ஜோஷியின் மென்கேன் வேர்ல்ட் குழுமம் ரூ 400 கோடி மதிப்பிலான பாஜக கணக்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கான்டிராக்ட் அட்வர்டைசிங் என்ற நிறுவனமும் பாஜகவை பிடிக்கும் போட்டியில் உள்ளது. விளம்பரங்களை போடுவதற்கான பணியை தனியாக பிரித்து லோட்ஸ்டார் மற்றும் டபிள்யூபிபி-ன் குரூப் எம், சாம் பல்சாராவின் மேடிசன் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படவுள்ளன.
          இந்தியத் தேர்தல்களில் கார்ப்பரேட் நன்கொடைகள்/ஊழல்கள் மூலம் திரட்டிய பணத்தை பயன்படுத்தி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக விளம்பரம் செய்து, கார்ப்பரேட் நலன்களுக்கான அரசாங்கத்தை பிடிக்க கட்சிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் ஆரம்பத்தில் நாம் பார்த்தது கட்சிகளை வாங்குவதற்கு முதலாளிகள் செலவழித்த தொகைகள்தான் என்று தெளிவாகிறது.
                   <நன்றி : funny tamil கார்ட்டூன் >

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

   கோவையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள். (படம்: ஜெ.மனோகரன்)
            வங்கி ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2012 அக்டோபரில் முடிந்துவிட்டது. அதன்பிறகு புதிய ஊதிய ஒப்பந்தம் போடவில்லை. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் போட வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். சுமார் 2 லட்சம் கோடி வரையுள்ள வாராக் கடனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில்  2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னையில் உள்ள பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பெரும்பாலானவைகளின் செயல்பாடுகள் முடங்கியது மட்டுமல்லாமல், அவ்வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.வங்கி ஊழியர் போராட்டம் வெல்ல பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 
                  <நன்றி :- தி ஹிந்து >

Saturday, February 8, 2014

கூட்டுறவு சங்க செய்திகள்

கூட்டுறவு சங்க செய்திகள்
OL கடன் ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக 03-03-2014 முதல் கிடைக்கும். இந்த மாதம் லோன் வாங்கினாலும் அடுத்த மாதம் புதிய லோன் (4 லட்சம் to 5 லட்சம்) தொகை கிடைக்கும்.03-03-2014 முதல் சொசைட்டி லோன் பட்டுவாடா- சம்பந்தமாக படிக்க :-Click Here

ராஜ்கோட் மத்திய செயற்குழு

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

கேபிள் பதிப்பதில் அத்துமீறல் அதிகாரிகள் உடந்தையா?

செய்தி படிக்க :-Click Here

Friday, February 7, 2014

BSNL cable theft loss down to Rs 40.65 lakh in FY14

செய்தி படிக்க :-Click Here

மத்திய செயற்குழு

நமது பி எஸ் என் எல் சங்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று (07-02-2014) குஜராத் மாநில ராஜ்காட் நகரில் இன்று  மிகவும் சிறப்பாக தொடங்கியது .செய்தி படிக்க :-Click HERE

ஒப்பந்தத் தொழிலாளர் சங்க அமைப்பு தினம்


          ஒப்பந்தத் தொழிலாளர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு மாநில சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க இரத்த தான முகாம் இன்றைய நாளில் நடத்த முடியாத சூழலில் 2014 பிப்ரவரி 16 ஆம் நாள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

          இன்று 16 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளிலும் வாயிற் கூடுகை திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் அருப்புக் கோட்டை, திருவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் கிளைகளில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிற கிளைகளான விருதுநகர், சிவகாசி மற்றும் இராஜபாளையம் ஆகிய கிளைகளில் ‘இரத்த நிறத்திலே, ஒத்த உணர்விலே தோழர்கள் கண்ட கொடி’யான TNTCWU கொடியேற்றப்பட்டது. அனைத்துக் கிளைகளிலும் இனிப்பு வழங்கப்பட்டது.

          மாவட்டம் முழுவதும் இந்த வாயிற்கூடுகை நிகழ்வில் TNTCWU  சார்பில் 55 பேரும் BSNLEU சார்பில் 60 பேரும் ஆக மொத்தம் 115 பேர் கலந்து கொண்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிகழ்வில் திரளாக கலந்து கொண்ட நிரந்தர ஊழியர்களுக்கு தங்கள் நன்றியறிதலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாவட்டச் சங்கம் உரித்தாக்குகிறது.

"உயர் நீதிமன்றம் உள்பட பல இடங்களில் பி.எஸ்.என்.எல். சிக்னல் இல்லை'

செய்தி படிக்க :-Click Here

BSNL's outstanding dues runs in hundreds of crores

செய்தி படிக்க :-Click Here

Expected IDA Increase From April 2014 for PSU Employees

                  The Expected IDA w.e.f. 01- April -2014 may increased by 1.9% to 4.2% i.e upto from 92.4% to 94.7% depends upon the Average All India Consumer Price Index Number (Industrial Worker) of the months December-2013, January-2014 & February-2014.The AICPI of the months December-2013, January-2014 & February-2014 are likely to be declared at the end of the month January-2014, February-2014 & March-2014 respectively. Even if there is no increase in AICPINs , there will be IDA Increase by 1.9%.
Top 20 Projections:

S.N.
Avg.AICPIN
Projected
Projected
IDA (%)
Projected
IDA Increase(%)
1
243.00
92.4
1.9
2
243.33
92.6
2.1
3
243.67
92.9
2.4
4
244.00
93.1
2.6
5
244.33
93.4
2.9
6
244.67
93.7
3.2
7
245.00
93.9
3.4
8
245.33
94.2
3.7
9
245.67
94.5
4.0
10
246.00
94.7
4.2
11
246.33
95.0
4.5
12
246.67
95.3
4.8
13
247.00
95.5
5.0
14
247.33
95.8
5.3
15
247.67
96.0
5.5
16
248.00
96.3
5.8
17
248.33
96.6
6.1
18
248.67
96.8
6.3
19
249.00
97.1
6.6
20
249.33
97.4
6.9

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...