Monday, December 31, 2012
Saturday, December 29, 2012
மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை மாநாடு
Friday, December 28, 2012
தோழனுக்கு தோள் கொடுத்த BSNLEU
புதிய அங்கீகார விதிகளை BSNL நிறுவனம் உருவாக்க வேண்டும் என நமது BSNLEU சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியால் தற்போது BSNL நிறுவனம் தனது சுயஅங்கீகார விதிகளை உருவாக்கிவிட்டது. தொழிற்சங்க ஜனநாயகத்தை நமது நிறுவனத்தில் உருவாக்குவதில் நாம் எடுத்த முயற்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி ஆகும். இந்த முயற்சி தொழிற்சங்க ஒற்றுமையை உருவாக்கி நமது BSNL நிறுவனத்தை காக்கவும் தொடர்ந்து நடக்க இருக்கும் போராட்டத்தை வலிமையாக்கவும் பயன்படும். இப்படியான நமது முயற்சியை NFTE சங்கம் தன் இணைய தளத்தில் சிறப்பாக பாராட்டியுள்ளது.
78.2 IDA இணைப்பு
78.2 IDA இணைப்பு விசயமாக BSNL நிர்வாகம் தேவையான விளக்கக் குறிப்புகளை DOTயிடம் சமர்பித்து 11/2 மாதங்கள் ஆகியும் DOT ஒப்புதல் கொடுக்காமல் காலதாமதம் செய்வதைச் சுட்டிக்காட்டி நமது மத்திய சங்கம் மெம்பர் (நிதி), டெலிகாம் கமிஷன் அவர்களுக்கு இன்று (28-12-2012) கடிதம் எழுதியுள்ளது.
Thursday, December 27, 2012
Wednesday, December 26, 2012
புதிய அங்கீகார விதி சாராம்சம்
1. தேர்தல் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெறும்.
2. அங்கீகார காலம் 3 ஆண்டுகளாக இருக்கும்.
3. 50 சதவீதத்திற்கும் அதிக ஓட்டு வாங்கும் பட்சத்தில் அந்த ஒரு சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும்.
4.எந்த சங்கமும் 50 சத ஓட்டு வாங்கவில்லைஎனில் குறைந்த பட்சம் 35 சத வாக்குகள் வாங்கும் சங்கத்திற்கு பிரதான அங்கீகார சங்கமாக அங்கீகாரம் கிடைக்கும் .2 ஆவது அதிக ஓட்டு வாங்கும் சங்கம் குறைந்த பட்சம் 15 சத வாக்குகள் வாங்கினால் அதற்கு 2 ஆவது சங்கமாக அங்கீகாரம் கிடைக்கும்.
5. எந்த சங்கமும் 35 சத ஓட்டு வாங்காத பட்சத்தில் குறைந்த பட்சம் 15 சத வாக்குகள் வாங்கும் 2 சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
6.குறைந்த பட்சம் 2 சத வாக்குகள் வாங்கும் சங்கங்களுக்கு LIMITED TRADE UNION வசதி மட்டும் கிடைக்கும்.
7.National JCM ,R JCM ,LCM ஊழியர் தரப்பு உறுப்பினர் எண்ணீக்கை 14 ஆக இருக்கும் , அகில இந்திய அளவில் சங்கங்கள் வாங்கும் வாக்கு அடிபடையில் JCM உறுப்பினர் எண்ணிக்கை அமையும்.
8. 7 சத ஓட்டு வாங்கும் சங்கத்திற்கு National JCM ,R JCM ,LCM அமைப்பில் 1 உறுப்பினர் கிடைக்கும்.
9. ஊழியர் தரப்பு செயலர் பதவி அதிக ஓட்டு வாங்கும் சங்கத்திற்கு கிடைக்கும். லீடர் பதவி 2 வது அதிக ஓட்டு வாங்கும் சங்கத்திற்கு கிடைக்கும்.
10. ஊழியர் தரப்பு செயலர் மூலம் மட்டுமே ஊழியர் தரப்பு பிரச்சனைகள் கொடுக்கப்படவேண்டும்.
புதிய அங்கீகார விதி,
புதிய அங்கீகார விதிகளுக்கான உத்தரவை BSNL நிர்வாகம் .வெளியிட்டு விட்டது .உத்தரவு எண் .BSNL/5-2/SR/2012 dated 26-12-2012.
Monday, December 24, 2012
வெண்மணி தியாகிகள் நினைவு நாள்
1968 டிசம்பர் 25 தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.ஆம்.அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருக்கிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை. விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர்.
இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று தஞ்சை (இன்றைய நாகை) வட்டார நிலப்பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச்சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில்தான் அந்த உச்சகட்டக் கொடுமை நடந்தது.
25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றிக்கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து, கட்டை அவிழ்த்து விட்டுச் சென்றனர். அதன் பின்பு பெருமிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள். அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடிவிட்டனர். தப்பித்து ஓடமுடியாத பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள். ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர்.
தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன. இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் (கீழ்வேளூர்) காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான்சாகும் பொழுதும் தான்வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக்கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த வெண்மணி தியாகிகள் நினைவு நாளை நினைவு கூறுவோம் .
Sunday, December 23, 2012
Friday, December 21, 2012
நாடாளுமன்றம் நோக்கி பேரணி...
காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் - மத்திய மாநில அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கலந்து கொண்ட நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியால் வியாழனன்று தில்லி மாநகரமே ஸ்தம்பித்தது.
இப்பேரணிக்கு ஐஎன்டியுசி,சிஐடியு, ஏஐடியுசி, யுடியுசி, எச்.எம்.எஸ்., உட்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் அறைகூவல் விடுத்திருந்தன.
நாடாளுமன்ற வீதியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணி - ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே பத்மநாபன், பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி., ஏஐடியுசி பொதுச்செயலாளர் குருதாஸ்தாஸ் குப்தா எம்.பி., அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் சுகுமால் சென், தொழிலாளர் முன்னேற்ற சங்கபொதுச்செயலாளர் எம். சண்முகம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
பேரணியின்போது தீக்கதிர் செய்தியாளரிடம் ஏ.கே. பத்மநாபன் கூறியதாவது :
“வருகிற 2013 பிப்ரவரி 20-21 அன்று நாடெங்கிலும் உள்ள அனைத்துத்துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் மத்திய அரசாங்கத்தினுடைய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இன்று (டிசம்பர் 20ஆம் தேதி) நாடாளுமன்றம் நோக்கி நடைபெறுகிற இப்பேரணி - ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்களும், தேசிய சம்மேளனங்களின் ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருப்பதானது, பிப்ரவரி 20-21 வேலை நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது.
மத்திய அரசினுடைய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து 2009 முதல் நடைபெற்று வரும் போராட்டங்களினுடைய தொடர்ச்சிதான் இது. நேற்றும், நேற்றைக்கு முன்தினமும் (டிசம்பர் 18-19)- பல்வேறு மாநிலங்களிலும் சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டம் என நடைபெற்ற போராட்டங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறுகிற இந்தப் பேரணியும் பிப்ரவரி 20-21 நடைபெற விருக்கும் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
மத்திய அரசைப் பொறுத்தமட்டிலும் அது தொழிலாளர்களுடைய, ஊழியர்களுடைய கோரிக்கைகளைப்பற்றி, பிரச்சனைகளைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை. இதே நாளில் நாடெங்கிலும் உள்ள வங்கித்துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து வங்கித்துறையில் ‘சீர்திருத்தம்’ என்ற பெயரால் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை அழிப்பதை எதிர்த்தும், இந்திய வங்கித்துறையை தனியார், பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கக்கூடிய நடவடிக்கையை எதிர்த்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களிலும் ஓய்வூதியம் கோரியும், கடந்த டிசம்பர் 12 அன்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து ஓய்வூதிய சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் மற்ற கோரிக்கைகளுக்காகவும் போராடியிருக்கிறார்கள். சென்ற டிசம்பர் 15 அன்று சென்னையில் மத்திய பொதுத்துறையைச் சார்ந்த சங்கங்களின் சார்பில் பிப்ரவரி 20-21 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் என அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் நடத்திடும் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி, நிச்சயமாக வரும் பிப்ரவரி 20-21 தேதிகளில் நடைபெறவிருக்கிற வேலை நிறுத்தம் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தமாக அமையும் என்பது நிச்சயம்.’’
இப்பேரணிக்கு ஐஎன்டியுசி,சிஐடியு, ஏஐடியுசி, யுடியுசி, எச்.எம்.எஸ்., உட்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் அறைகூவல் விடுத்திருந்தன.
நாடாளுமன்ற வீதியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணி - ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே பத்மநாபன், பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி., ஏஐடியுசி பொதுச்செயலாளர் குருதாஸ்தாஸ் குப்தா எம்.பி., அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் சுகுமால் சென், தொழிலாளர் முன்னேற்ற சங்கபொதுச்செயலாளர் எம். சண்முகம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
பேரணியின்போது தீக்கதிர் செய்தியாளரிடம் ஏ.கே. பத்மநாபன் கூறியதாவது :
“வருகிற 2013 பிப்ரவரி 20-21 அன்று நாடெங்கிலும் உள்ள அனைத்துத்துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் மத்திய அரசாங்கத்தினுடைய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இன்று (டிசம்பர் 20ஆம் தேதி) நாடாளுமன்றம் நோக்கி நடைபெறுகிற இப்பேரணி - ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்களும், தேசிய சம்மேளனங்களின் ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருப்பதானது, பிப்ரவரி 20-21 வேலை நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது.
மத்திய அரசினுடைய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து 2009 முதல் நடைபெற்று வரும் போராட்டங்களினுடைய தொடர்ச்சிதான் இது. நேற்றும், நேற்றைக்கு முன்தினமும் (டிசம்பர் 18-19)- பல்வேறு மாநிலங்களிலும் சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டம் என நடைபெற்ற போராட்டங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறுகிற இந்தப் பேரணியும் பிப்ரவரி 20-21 நடைபெற விருக்கும் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
மத்திய அரசைப் பொறுத்தமட்டிலும் அது தொழிலாளர்களுடைய, ஊழியர்களுடைய கோரிக்கைகளைப்பற்றி, பிரச்சனைகளைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை. இதே நாளில் நாடெங்கிலும் உள்ள வங்கித்துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து வங்கித்துறையில் ‘சீர்திருத்தம்’ என்ற பெயரால் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை அழிப்பதை எதிர்த்தும், இந்திய வங்கித்துறையை தனியார், பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கக்கூடிய நடவடிக்கையை எதிர்த்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களிலும் ஓய்வூதியம் கோரியும், கடந்த டிசம்பர் 12 அன்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து ஓய்வூதிய சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் மற்ற கோரிக்கைகளுக்காகவும் போராடியிருக்கிறார்கள். சென்ற டிசம்பர் 15 அன்று சென்னையில் மத்திய பொதுத்துறையைச் சார்ந்த சங்கங்களின் சார்பில் பிப்ரவரி 20-21 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள் என அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் நடத்திடும் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி, நிச்சயமாக வரும் பிப்ரவரி 20-21 தேதிகளில் நடைபெறவிருக்கிற வேலை நிறுத்தம் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தமாக அமையும் என்பது நிச்சயம்.’’
நன்றி :- தீக்கதிர்
Thursday, December 20, 2012
பெரும் கடனாளி ஆகும் பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.18,000 கோடி வங்கிக்கடன் பெற டெண்டர் விட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு பெரும் கடன் பெறப்போவது இதுவே முதல் முறை. எனினும், பெரிய கடன் பெருவதுற்கான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நோக்கம் தெரியவில்லை.
Wednesday, December 19, 2012
மனிதனை மறந்து...
கிங்பிஷர் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் அலைகழித்துவரும் விஜய் மல்லையா, தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி கோவிலுக்கு 3 கிலோ தங்கக்கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
விஜய் மல்லையாவால் 2005 நிறுவப்பட்ட கிங்பிஷர் விமான நிறுவனம், ஒரு காலத்தில் உள்நாட்டு விமான சேவையில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. அதன் பிறகு கடும் பண நெருக்கடியை சந்தித்த இந்நிறுவனம், கடந்த அக்டோபர் மாதம் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பிறஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைத்திருந்ததால், தொடர்ந்து செயல்படும் உரிமத்தை இழந்தது.
விஜய் மல்லையாவால் 2005 நிறுவப்பட்ட கிங்பிஷர் விமான நிறுவனம், ஒரு காலத்தில் உள்நாட்டு விமான சேவையில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. அதன் பிறகு கடும் பண நெருக்கடியை சந்தித்த இந்நிறுவனம், கடந்த அக்டோபர் மாதம் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பிறஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைத்திருந்ததால், தொடர்ந்து செயல்படும் உரிமத்தை இழந்தது.
இப்படி சர்ச்சைகளில் கிங்பிஷர் விமான நிறுவனம் சிக்கியிருக்கும் நிலையில்,அதன் நிறுவனரான விஜய் மல்லையா கோவிலுக்கு நன்கொடையாக கிலோ கணக்கில் தங்க கட்டிகளை வழங்கியிருப்பதை என்னவென்பது. செய்த பாவத்திற்குப் பரிகாரமா? அல்லது செய்யப்போகும் பாவத்திற்குப் பரிகாரமா?
ITS பிரச்சனை
கூடுதல் அரசு வழக்கறிஞர் 12-12-2012 அன்று நடைபெற்ற செயலாளர்கள் குழுவின் இறுதி கூட்டத்தின் minutesஐ நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தார். மேலும் கூடுதல் அரசு வழக்கறிஞர் இது விசயமாக மத்திய அமைச்சரவை ஜனவரி 2013 மத்தியில் இந்த பரிந்துரை மீது இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளதின் அடிப்டையில் நீதிமன்றம் 01-02-2013க்கு இவ்வழக்கை ஒத்திவைத்தது.
Tuesday, December 18, 2012
குடும்பச் செலவிற்கு மாதம் ரூபாய் 600 போதுமாம்.
புதுடில்லியில் வசிக்கும் ஏழை மக்களின் ஒரு மாதத் தேவையைச் சமாளிக்க ரூ.600 மட்டும் போதும் என அம்மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் நான்கு பேர் கொண்ட ஏழை குடும்பம் ஒன்றிற்கான ஒரு மாத உணவுத்தேவையை சமாளிக்க ரொட்டி, பருப்பு போன்றவை வாங்குவதற்கு ரூ.600 போதுமானது என கருத்து தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு புதுடில்லி நகர பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் தயாராகிவிட்டது. சாதாரன மற்றும் நடுத்தர மக்கள் மீது அடுத்த தாக்குதல் தொடங்கப்பட்டுவிட்டது .
18-12-2012தர்ணா போராட்டம்
விருதுநகரில் 18-12-2012 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டம் தோழர் தங்கவேலு, SDE, SNEA, தோழர் இளமாறன், BSNLEU ஆகியோரின் கூட்டுத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU சங்கம் சார்பாக 39 பேரும், SNEA சார்பாக 27 பேரும், AIBSNLEA சார்பாக 2 பேரும், AIBDPA சார்பாக ஒருவரும், TEPU சார்பாக இருவரும் ஆக மொத்தம் 71 பேர் கலந்து கொண்டனர். தர்ணாவை திரு வெள்ளையப்பன், SDE, ராஜபாளையம் தொடங்கிவைத்தார். கோரிக்கைகளை விளக்கி திரு P.கோவிந்தராஜன், மாவட்டச் செயலர், SNEA, தோழர் S.ரவீந்திரன் BSNLEU மாவட்டச் செயலர், தோழர் T.ஜெபக்குமார், TEPU, மாவட்டசெயலர், தோழர் பெத்தையா, SNEA, ராஜபாளையம், திரு T.ராதாகிருஷ்ணன், மூத்த கணக்கு அதிகாரி, தோழர் M.பெருமாள்சாமி, மாவட்ட உதவிச் செயலர், BSNLEU . ஆகியோர் பேசினர். தோழர் S.வெங்கடப்பன் BSNLEU மாவட்ட பொருளாளர் நன்றி கூறி தர்ணாவை முடித்துவைத்தார்.
Monday, December 17, 2012
GM அலுவலக கிளை மாநாடு
GM அலுவலகக் கிளை மாநாடு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விருதுநகர் மாவட்டச் சங்க அலுவலகத்தில் தோழர் L.சங்கையா, கிளைத்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. தோழர் L.சங்கையா அவர்கள் பணி ஓய்வுப் பாராட்டு விழாவும் அன்று நடைபெற உள்ளது. சிறப்பு அழைப்பாளர் ஆக தோழர் நாகர்கோயில் C .பழனிசாமி, மாநில உதவி செயலர் கலந்து கொள்ள உள்ளார்.
ஒப்பந்த ஊழியர்கள் பணி நிறுத்தம்
அருப்புகோட்டை பகுதியில் EOI பிரிவில் 2 ஒப்பந்த ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டு 17 நாட்கள் ஆகியும் தீர்வு ஏற்படாதது தொடர்பாக DGM (ADMN ) அவர்களிடம் இன்று (17-12-2012) விவாதம் செய்தோம். மாவட்டப் பொதுமேலாளர் உத்தரவு இட்டும் DE (MTCE), அருப்புகோட்டை அவர்கள் அவர்களை மீண்டும் பணியில் எடுத்துக் கொள்வதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளோம். 18-12-2012க்குள் இப்பிரச்னை தீர்க்கப்படும் என DGM உறுதி அளித்துள்ளார். பேட்டியில் தோழர்கள் சமுத்திரக்கனி, புளுகாண்டி, STSO, உதயகுமார், SSSO, கண்ணன், TTA ஆகியோர் மாவட்ட செயலருடன் கலந்துகொண்டனர்.
நெட்வொர்க் பகுதியில் உள்ள பிரச்சனைகளை இன்று AGM (NWO) அவர்களிடம் விவாதித்துள்ளோம். குறிப்பாக conveyance allowance கொடுப்பது விசயமாக, தட்சகுடி மற்றும் மங்களம் பகுதி towerகளை ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு பணி ஒதுக்கீடு செய்வது, டீசல் போடுவதுற்கு போதுமான வாகன ஒதுக்கீடு செய்வது போன்ற பல்வேறு பிரச்சனைகளைப் பேசி உள்ளோம்.பேட்டியில் தோழர்கள். A.ஜெயபாண்டியன், ரசூல் ஆகியோர் மாவட்ட செயலருடன் கலந்துகொண்டனர்.
NO Diary
பிஎஸ்என்எல் தன் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அனைவருக்கும் 2013ஆம் ஆண்டுக்கான டைரிகள் வழங்கபடுவதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . மற்றும் நாள்காட்டி வழங்குவதும் நிறுத்தபட்டுள்ளது
தர்ணா போராட்டம்
விருதுநகரில் 17-12-2012 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டம் தோழர் .A.சமுத்திரக்கனி BSNLEU மாவட்ட தலைவர், திரு.M.மாரியப்பன் SNEA மாவட்ட தலைவர் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU சங்கம் சார்பாக 68 பேரும், SNEA சார்பாக 7 பேரும், AIBSNLEA சார்பாக 2 பேரும், AIBDPA சார்பாக ஒருவரும் ஒப்பந்த ஊழியர் சார்பாக ஒருவரும் என மொத்தம் 79 பேர் கலந்து கொண்டனர். தர்ணாவை திரு.ராதாகிருஷ்ணன் மூத்த கணக்கு அதிகாரி தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி தோழர் ரவீந்திரன், BSNLEU மாவட்ட செயலர், தோழர்.T.ஜெபக்குமார், TEPU மாவட்ட செயலர், தோழர்.M .பெருமாள்சாமி, மாவட்ட உதவி செயலர், BSNLEU, தோழர்.கண்ணன், மாவட்ட அமைப்புச் செயலர் BSNLEU, தோழர் D.செல்வராஜ், ஒப்பந்த ஊழியர் சங்கம், திரு.மூக்கையா, விருதுநகர் கிள்ச்செயலர், SNEA, ஆகியோர் பேசினர். சிறப்புரையாக தோழர். தேனி வசந்தன் பேசினார்.
Sunday, December 16, 2012
Connections and market share of Telecom companies.
India has got total 93.522 million connections including landlines and mobiles as on 31st October 2012. India with 2.122 crore landline connections has got 68.56% of market share and is the first in this sector. In the mobile sector with 12.12 crore connections moblie, BSNL is in the 5th position. In the total connections including all services, BSNL is in the fourth position with 12.96% market share. In the mobile sector Airtel with 18.64 crore is the first followed by Vodafone with 15.37 crore, Reliance Telephones with 13.52 crores and Idea WITH 11.57 crore.
Saturday, December 15, 2012
லோக்கல் JCM
18வது லோக்கல் கூட்டு ஆலோசனை கூட்டம் (LJCM) வருகின்ற 2013 ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது .
புதிய அங்கீகாரம் விதிகள் தொடர்பான கூட்டம்
புதிய அங்கீகாரம் விதிகள் பிரச்சினை தொடர்பாக BSNLEU மற்றும் நிர்வாகத்திற்கு இடையே, 14.12.2012 அன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாம் checkoff system அடிப்டையில் எதிர்காலத்தில் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை நடத்த எண்ணியுள்ள நிர்வாகத்தின் வரைவுத் திட்டத்தை ஏற்று கொள்ள முடியாது என்றும் JCM மற்றும் சங்க நிர்வாகிகள் எண்ணிக்கையைக் குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உறுதியாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.நிர்வாகம் நம்மால் முன்மொழிவு செயப்பட்ட வழிமுறைகளில் சிலவற்றை பரிசீலிக்க உறுதியளித்துள்ளது .தோழர்.P.அபிமன்யூ, பொது செயலாளர், தோழர். V.A.N. நம்பூதிரி, தலைவர் மற்றும் தோழர் . சைபல் செங்குப்தா, உதவி பொது செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்வாகத் தரப்பில் இருந்து, ஸ்ரீ நீரஜ் வர்மா, GM(SR), ஸ்ரீ முகேஷ் மீனா, DGM (SR) மற்றும் ஸ்ரீ வாட்வா , AGM (SR) பங்கேற்றனர்.
Wednesday, December 12, 2012
17-12-2012 மற்றும் 18-12-2012 ஆகிய 2 தினங்கள் தர்ணா
கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெறவுள்ளது. விருதுநகர் தவிர்த்த அணைத்து ஊர் தோழர்களும் 17-12-2012 அன்றும் விருதுநகர் தோழர்கள் 18-12-2012 அன்றும் கலந்துகொண்டு தர்ணாவை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
The ongoing agitation on ITS repatriation issue is to be intensified. In addition to the ITS repatriation issue, the following issues connected with the viability of BSNL and MTNL are also to be included in the charter of demands.
a) Repayment of BWA spectrum fee.
b) Adequate compensation for BSNL’s rural land line operations.
c) Immediate releasing of fund from USO fund.
d) Exempting BSNL and MTNL from payment of fee for the 2G spectrum they are holding beyond 4.4 MHz.
e) Procurement of equipments and materials.
f) Exempting BSNL and MTNL from spectrum refarming.
g) Exempting BSNL and MTNL from payment for Spectrum Liberalisation.
h) Payment of pension by the government in respect of MTNL employees.
i) Immediate issuing of Presidential Directive for 78.2% IDA fixation to BSNL employees.
JAO தேர்விற்கான CPWD Manual பற்றாக்குறை தொடர்பாக...
JAO தேர்விற்கு CPWD Manual பற்றாக்குறை காரணமாக அதன் Xerox copy அல்லது CPWD இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Print copy ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் உத்தரவு வெளியிட வேண்டும் என்ற மாநிலச் சங்கத்தின் கோரிக்கையினை CGM ஏற்றுக்கொண்டுள்ளார்.
Tuesday, December 11, 2012
Red Salute to Comrade K.G.Bose - தோழர் K.G.போஸ் அவர்களுக்குச் செவ்வணக்கம்
11th December 2012 is the 38th death anniversary of Com. K.G.Bose, the revolutionary leader of the P&T employees’ movement, who died at a comparatively young age of 54. He passed away in a London Hospital on 12th December 1974, while he was being treated for cancer.
தபால் தந்தி ஊழியர் இயக்கத்தின் புரட்சிகரமான தலைவர் தோழர் K.G.போஸ் அவர்களின் 38 ஆவது நினைவு நாள் - 2012 டிசம்பர் 11. ஒப்புநோக்குகையில் தனது இளம்வயதில், 54 வயதில், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தேபோது, லண்டன் மருத்துவமனையில் 1974 டிசம்பர் 12ல் அவர் மறைந்தார்.
புரட்சிகரத் தலைவருக்கு நம் புரட்சிகரச் செவ்வணக்கம்.
Monday, December 10, 2012
TTA நியமனம் - பணியிடங்களுக்கான கலந்தாய்வு
இன்று நடை பெற்ற TTA கலந்தாய்வுக் கூட்டத்தில் :
சிவகாசி க்ரூப்ஸ் பகுதிக்கு தோழர் கணேஷ் போஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் NWO பகுதிக்கு தோழர் .ராஜகுரு, அருப்புகோட்டை CDOT பகுதிக்கு தோழியர் கனிமொழி, சிவகாசி CSC பகுதிக்கு தோழர் அஷ்ரப் அலி, விருதுநகர் carrier பகுதிக்கு தோழர் .பாண்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விருப்ப மாற்றலாக தோழர் ஜேசுராஜா அவர்கள் அருப்புகோட்டை இல் இருந்து விருதுநகர் transmission பகுதிக்கும், தோழர் ரெங்கராஜ் விருதுநகர் transmission பகுதியில் இருந்து சாத்தூர் க்ரூப்ஸ் பகுதிக்கும், தோழர் .கோபிநாத் சிவகாசி இல் இருந்து விருதுநகர் Outdoor பகுதிக்கும் மாற்றல் செய்யப்பட்டுள்ளனர். ராம்குமார் சிவகாசி csc இல் இருந்து சிவகாசி இன்டோர் பகுதிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளர்.
JCM இல் எடுக்கப்பட்ட சிவகாசி க்ரூப்ஸ் மற்றும் சாத்தூர் க்ரூப்ஸ் பகுதிக்கு TTA நியமனம் செய்யப்பட்டது நமது சங்க வெற்றி ஆகும் .
தலித் மக்களுக்கு ஆதரவாக...
தர்மபுரி மாவட்டத்தில் தாக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவாக தமிழக BSNL ஊழியர்கள்
Sunday, December 9, 2012
வால்மார்ட்டின் வலை
இந்தியாவில் தனது சூப்பர் மார்க்கெட்டை திறக்க ஆதரவளிக்கக்கோரி, இதுவரை அமெரிக்க எம்.பி.,க்களுக்கு மட்டும் சுமார் ரூ. 125 கோடி (25 மில்லியன் டாலர்) செலவழித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.
இந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சில்லரை வணிக ஜாம்பவான் என கருதப்படும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம், இந்தியாவில் கால்பதிக்கும் தங்களது முயற்சிகளுககு ஆதரவளிக்கக்கோரி, பேரம் பேசியுள்ளது வால்மார்ட். இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ. 18 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வால்மார்ட் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது கடைகள் மூலம் ஆண்டுக்கு 444 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 50 ஆயிரம் கோடி). அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும் 2020ம் ஆண்டில் இந்த தொகை 1 டிரில்லியன் டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளமே, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடை விரிக்க ஆவலுடன் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
(நன்றி :- தினமலர்
Saturday, December 8, 2012
”உலக மனித உரிமை நாள்”
ஐக்கிய நாடுகள் சபை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”உலக மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.
நோக்கம்
ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல்,சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.
புதிய அங்கீகார விதி
புதிய அங்கீகார விதிகள் அடிப்டையில் தேர்தல் நடைபெரும்பட்சதில்
BSNLEU சங்கத்தின் அங்கீகார காலம் 13-02-2013 அப்பால் நீட்டிக்கப்பட
வேண்டும் என்றும் இல்லையேல் பழைய அடிப்படையில் உறுப்பினர் சரிபார்பு
தேர்தல் நடத்த வேண்டும் என நம் சங்கம் கோரியுள்ளது . நமது BSNLEU சங்கம்
பிஎஸ்என்எல் நிறுவனம் சமர்பித்த அங்கீகாரம் விதிகள் மீது தன
கருத்துக்களை கொடுத்துள்ளது. Sr.GM (SR) அவர்கள் சரிபார்ப்பு தேர்தலை
தாமதிக்க எண்ணம் இல்லை என்று 05-12-2012 அன்று com.P.Abhimanyu, GS,
அவர்களிடம் உறுதியளித்தார். அவர் மேலும் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பு
விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார் . தாமதம் இல்லாமல் புதிய
அங்கீகாரம் விதிகள் முடிவு செய்ய பட வேண்டும் என்று நமது GS வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
Friday, December 7, 2012
Wednesday, December 5, 2012
பிப்ரவரி மாத மாவட்டச் செயற்குழு
2012 டிசம்பர் 4 அன்று நடைபெற்ற மாவட்டச்செயற்குழுவில் அமைப்பு நிலை தொடர்பான விவாதங்களில் அடுத்த மாவட்டச் செயற்குழு விரிவடைந்த மாவட்ட செயற்குழுவாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் 2012 பிப்ரவரி 8ஆம்நாள் நடத்துவதென்றும், சூழலின் அடிப்படையில் அதேநாளில் சேவைமேம்பாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டது.
விரிவடைந்த மாவட்டச்செயற்குழுவில் கிளைப்பொறுப்பில் உள்ள அனைவரும் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என்பதை அனைத்துக் கிளைச்செயலர்களும் வலியுறுத்தினார்கள். மாவட்டத்தின் பொருளாதார நிலையையையும் வரவிருக்கும் நாட்களின் செலவுகளையும் கருத்தில் கொண்டு இச்செயற்குழுவிற்கு பங்கேற்பாளர் கட்டணமாக ரூபாய் 50 வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இச்செயற்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலச் செயலரையும், மற்றுமொரு மாநில, தேசிய சங்கப் பொறுப்பாளரையும் அழைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழியர் சந்திப்பு
டிசம்பர் 4 அன்று நடைபெற்ற மாவட்டச்செயற்குழுவில் அமைப்பு நிலை தொடர்பான விவாதங்களில் டிசம்பர் மாதம் மாவட்டப் பொறுப்பாளர்களின் ஊழியர் சந்திப்புச் சுற்றுப் பயணத்திற்குத் திட்டமிடப்பட்டது.
அதன்படி
ராஜபாளையம் டிசம்பர் 13
ஸ்ரீவில்லிபுத்தூர் டிசம்பர் 14
சாத்தூர் டிசம்பர் 20
அருப்புக்கோட்டை டிசம்பர் 21
சிவகாசி டிசம்பர் 22
கிளைச்செயலர்கள் அனைத்துத் தரப்பு ஊழியர்களையும் சந்திப்பதற்கு ஆக்கப்பூர்வாமக்த் திட்டமிட வேண்டும்.
அதன்படி
ராஜபாளையம் டிசம்பர் 13
ஸ்ரீவில்லிபுத்தூர் டிசம்பர் 14
சாத்தூர் டிசம்பர் 20
அருப்புக்கோட்டை டிசம்பர் 21
சிவகாசி டிசம்பர் 22
கிளைச்செயலர்கள் அனைத்துத் தரப்பு ஊழியர்களையும் சந்திப்பதற்கு ஆக்கப்பூர்வாமக்த் திட்டமிட வேண்டும்.
டிசம்பர் 4ல் நடந்த மாவட்டச் செயற்குழு
விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயற்குழு 2012 டிசம்பர் 4ஆம் நாள் மாவட்ட BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆய்படு பொருளாக
Items for LCM & Work Committee, மாநிலச்செயற்குழு முடிவுகள் என இரண்டு முக்கியப் பொருள்களுடன் இன்னபிறவும்
செயற்குழுவிற்கு மாவட்டத்தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை தாங்கினார். ஆய்படு பொருள்களை விளக்கி மாவட்டச்செயலாளர் தோழர் ரவீந்திரன் உரையாற்றினார். மாவட்டசெயற்குழுவை மாநில உதவிச்செயலாளர் தோழர் பழனிச்சாமி, மாநில செயற்குழு முடிவுகள் குறித்துப்பேசித் தொடங்கி வைத்தார்.
வேலைநிறுத்தம் போன்ற சூழ்நிலைகளில் வெளிப்படுகின்ற நமது பலகீனத்தை மறைக்க அல்ல – பலகீனத்தைச் சரிசெய்ய நாம் தொழிற்சங்க உறுப்பினர்களை அரசியல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நமது மாவட்டம் மாநில அளவில் 5ஆவது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டியதுடன், வீச்சாகச் செயல்பட்டால் தொழிற்சங்கச் செயல்பாடுகளில் இன்னும் சிறப்பான உயரங்களை நாம் எட்ட முடியும் என்ற ஆலோசனையை முன்வைத்தார்.
வந்திருந்த கிளைச்செயலர்களும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் ஆய்படு பொருள்களின் மீது தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். பொதுவாக LCM மற்றும் Work Committeeயில் நிலுவையில் இருக்கக்கூடிய தீர்க்கப்படாத பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினார்கள். அமைப்பு நிலை விவாதத்தைத் தொடர்ந்து தொகுப்புரையுடன் செயற்குழு முடிவடைந்தது.
ஆய்படு பொருளாக
Items for LCM & Work Committee, மாநிலச்செயற்குழு முடிவுகள் என இரண்டு முக்கியப் பொருள்களுடன் இன்னபிறவும்
செயற்குழுவிற்கு மாவட்டத்தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை தாங்கினார். ஆய்படு பொருள்களை விளக்கி மாவட்டச்செயலாளர் தோழர் ரவீந்திரன் உரையாற்றினார். மாவட்டசெயற்குழுவை மாநில உதவிச்செயலாளர் தோழர் பழனிச்சாமி, மாநில செயற்குழு முடிவுகள் குறித்துப்பேசித் தொடங்கி வைத்தார்.
வேலைநிறுத்தம் போன்ற சூழ்நிலைகளில் வெளிப்படுகின்ற நமது பலகீனத்தை மறைக்க அல்ல – பலகீனத்தைச் சரிசெய்ய நாம் தொழிற்சங்க உறுப்பினர்களை அரசியல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நமது மாவட்டம் மாநில அளவில் 5ஆவது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டியதுடன், வீச்சாகச் செயல்பட்டால் தொழிற்சங்கச் செயல்பாடுகளில் இன்னும் சிறப்பான உயரங்களை நாம் எட்ட முடியும் என்ற ஆலோசனையை முன்வைத்தார்.
வந்திருந்த கிளைச்செயலர்களும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் ஆய்படு பொருள்களின் மீது தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். பொதுவாக LCM மற்றும் Work Committeeயில் நிலுவையில் இருக்கக்கூடிய தீர்க்கப்படாத பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினார்கள். அமைப்பு நிலை விவாதத்தைத் தொடர்ந்து தொகுப்புரையுடன் செயற்குழு முடிவடைந்தது.
சிவகாசி கிளைகளின் மாநாடு
சிவகாசி SDOP கிளை மற்றும் சிவகாசி OCB கிளை ஆகியவற்றின் கூட்டுக்கிளை மாநாடு 2013 ஜனவரி 12ஆம் நாள் சிவகாசியில் நடைபெற உள்ளது. இடமும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும்.
சென்னை சொசைட்டியில் வீட்டு மனைக்கான ஒப்புகைச் சீட்டு
சென்னை சொசைட்டியில் வீட்டு மனைக்காக விண்ணப்பித்திருந்த உறுப்பினர்களுக்கு அதற்கான ஒப்புகைச்சீட்டு (Acknowledgement slip) விருதுநகர் BSNL பொதுமேலாளர் அலுவலகத்தில் 2012 டிசம்பர் 7ஆம் தேதி வழங்கப்படவிருக்கிறது. ஒப்புகைச் சீட்டை நேரில் வந்தே பெற்றுக் கொள்ளவேண்டும். 7ஆம் தேதி வரஇயலாதவர்கள் 8ஆம் தேதி விருதுநகர் BSNL ஊழியர் சங்கத்தின் SDOP கிளைச்செயலாளர் தோழர் சந்திரசேகர் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு தோழர் சந்திரசேகர் அவர்களை +91 94431 83925 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு தோழர் சந்திரசேகர் அவர்களை +91 94431 83925 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Tuesday, December 4, 2012
டிசம்பர் 17, 18 இரண்டு நாட்கள் தர்ணா...
BSNL மற்றும் MTNL சங்கங்களின் Joint Forum 04-12-2012 அன்று கூடி BSNL மற்றும் MTNLன் ஸ்திரத்தன்மை, ITS பிரச்னை மற்றும் 78.2 IDA விஷயமாக மீண்டும் ஒரு போராட்ட முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி வருகின்ற 17-12-2012 மற்றும் 18-12-2012 ஆகிய இரண்டு நாட்கள் தர்ணா நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
புதிய TTA க்களின் பணியிடம் தொடர்பாக....
TTA பயிற்சி முடித்து வரவிருப்பவர்களின் பணியிடம் தொடர்பாக இன்று (டிசம்பர் 4ல்) மாவட்டப் பொது மேலாளரிடம் கண்ட நேர்காணலில் கவுண்சிலிங் அடிப்படையில் பணியிடம் ஒதுக்கக் கோரினோம். பெண்களுக்கு முனனுரிமை தரும்படியும் கேட்டுக் கொண்டோம். மாவட்ட நிர்வாகம் நமது நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
Monday, December 3, 2012
மாநில செயற்குழு முடிவுகள்
2012 நவம்பர் 29 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு, மாநிலத்தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழுவை பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
தமிழ் மாநிலத்தில் முதன்மைச் சங்கமாக BSNLEU
செப்டம்பர் மாதம் முதல் தமிழ் மாநிலத்தில் உறுப்பினர் எண்ணிக்கையில் நமது BSNLEU சங்கம் NFTE சங்கத்தைவிட கூடுதல் உறுப்பினர்களை கொண்டு முதன்மை சங்கமாக உருவெடுத்துள்ளது. அதற்காக பாடுபட்ட அணைத்து தோழர்களுக்கும் மாநில சங்கம் பாராட்டை தெரிவித்துள்ளது .
IDA அதிகரிப்பின் எதிர்பார்ப்பு...
அக்டோபர் 2012 வரையிலான நுகர்வோர் குறியீட்டு எண் 215 இல் இருந்து 2 புள்ளிகள் அதிகரித்து, 217 ஆக இருந்தது. ஆகவே 01.01.2013 முதல் IDA அதிகரிப்பு 4% ஆக இருக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
Friday, November 30, 2012
தருமபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரனம்....
உலகத்தீரே காதல் செய்வீர் என்றான் பாரதி.
தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.
தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.
இந்தக் காதலினால், பித்தம் தலைக்கேறிய ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.
நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்தமுடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச்சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.
சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளாதார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள்.
இந்த வெறியாட்டத்தை வர்க்க அரசியலை முன்னிறுத்துவதாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, பாட்டளி மக்கள் கட்சி என பெயர்வைத்துக் கொண்டாலும், (முன்நாளில் மட்டுமல்ல இந்நாளிலும்) வன்னியர் சங்சம்தான் நடத்தியது என எல்லா வெகுஜன ஊடகங்களும் அறிவிக்கின்றன. உண்மை அறியும் குழுக்களும் அறிவிக்கின்றன.
இந்த வெறியாட்டத்தை 2012 நவம்பர் 29ம் நாள் நடைபெற்ற மாநில செயற்குழு கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரனத்திற்காக ரூபாய் 1,00,000 அளிப்பதென முடிவு செய்துள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து ரூபாய் மூவாயிரத்தை நாமும் நிவாரனத்திற்கான நிதிக்காகப் பகிர்ந்து கொள்வோம்.
நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். நிவாரனங்கள் தீர்வு அல்ல. மீண்டு வருவதற்கான உதவிதான். தீர்வு என்பது தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்படியான சாதி வெறியாட்டங்களுக்கு எதிராக நாம் நமது பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதற்கு உறுதியேற்பதிலும் அதனைச் செயல்படுத்திலுமே இருக்கிறது. உறுதியேற்போம். செயல்படுத்துவோம்.
மாநில செயற்குழு...
நமது மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த மாநில செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம், பொதுச் செயலர் கலந்து கொள்வதால், சரிபார்ப்புத் தேர்தலைத் சந்திக்கவிருக்கும் நேரத்தில் மாநிலத்தின் மையப்பபகுதியில் நடத்துவதுதே சரியாக இருக்கும் என நவம்பர் 29ல் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவு செய்தது. அதன்படி அடுத்த மாநில செயற்குழு ஜனவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும். அதற்கு அடுத்த செயற்குழு, சரிபார்ப்புத் தேர்தல் முடிந்த பின்னர், வெற்றிவிழாக் கூட்டத்தை ஒட்டியதாக விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும்.
Tuesday, November 27, 2012
மாவட்ட செயற்குழு
மாவட்ட செயற்குழு கூட்டம் 04-12-2012 அன்று
விருதுநகர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
ஆய்படு பொருள் :
1.LCM/ Work committee items
2.Circle Executive report
3.Any
other items with permission of chair.
போராட்டத்தைத் தீவிரப்படுத்த ஆலோசனைக் கூட்டம்
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சங்க தலைவர்கள் Joint Forum சார்பாக 24.11.2012 அன்று டாக்டர் Kruparani Killi, கம்யூனிகேஷன்ஸ் இணை அமைச்சர் அவர்களை சந்தித்து BSNL க்கு விருப்பம் தெரிவிக்காத ITS அதிகாரிகளை உடனடியாக திரும்ப அனுப்பக் கோரினர். அதற்கான குறிப்பை அவரிடம் அளித்தனர். ITS அதிகாரிகள் விசயமாக போராட்டத்தை தீவிரபடுத்த Joint Forum முடிவு செய்துள்ளது. இது விசயமாக ஆலோசனை செய்வதற்கு 04-12-2012 அன்று Joint Forum கூடவுள்ளது.
Wednesday, November 21, 2012
பாரளுமன்றம் நோக்கிப் பேரணி
ITS அதிகாரிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கோரிக்கையை வலியுறுத்தி 2012 நவம்பர் 22 ஆம் நாள் பாராளுமன்றம் நோக்கி பெருந்திரள் பேரணி செல்வது என்ற முடிவை Joint Forum of BSNL and MTNL
unions and associations எடுத்து செயல்படுத்த உள்ளது. இந்தப் பேரணி நடக்கும் நவம்பர் 22 நாள் தேசிய அளவில் பிற தோழமைச் சங்கங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என மாநில, மாவட்ட, கிளைச் சங்கங்களுக்கு BSNLEU அறைகூவல் விடுத்துள்ளது.
JTO கேடருக்கான போட்டித் தேர்வு
நமது சங்கத்தின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக JTO கேடருக்கான போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. 31.3.2012 வரை உள்ள காலியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. 2000 முதல் 2012 வரையிலான காலியிடங்களுக்கு ஒரே தேர்வான நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஆண்டிற்கான தகுதி அவ்வருடத்தின் ஜூலை முதல் தேதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். <அனுமதிக் கடித நகல்>
போன் மெக்கானிக் போட்டித் தேர்வு
நமது சங்கத்தின் சீரிய தொடர்ந்த முயற்சியின் காரணமாக 31.3.2012 வரையிலான போன் மெக்கானிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கான அனுமதி கிடைத்துள்ளது. <அனுமதிக் கடித நகல்>
மாநில செயற்குழு
நமது மாநில செயற்குழு 29-11-2012 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் பேசவேண்டிய விஷயங்கள் ஏதும் இருந்தால் தோழர்கள் கிளைச் செயலர்கள் மூலமாக, மாவட்டச் செயலரிடம் தகவல் கொடுக்கவும்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி... 2
துணை
முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் 20-11-2012 அன்று நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் அதேஷ் குமார் குப்தா மேல் இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்பதை தோழர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். 06-12-2012
தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த BSNL CMD மற்றும் டைரக்டர் (HR)
ஆகியோருக்கு ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். நவம்பர் 20 அன்றைய கூட்டத்தில் BSNLEU
சார்பாக தோழர் .P.அபிமன்யு, தோழர் V.A.N.நம்பூதிரி, தோழர் R.L..மூட்கில், தோழர் அனிமேஷ்
மிஸ்ரா, தோழர் சுப்புராமன், TEPU, தோழர் சுரேஷ்குமார், BSNLMS ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த
கூட்டத்தை 06-12-2012 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் துணை முதன்மை தொழிலாளர்
ஆணையர்.
Tuesday, November 20, 2012
அனாமலி
1-1-2000 இல் CDA Pay scale இல் இருந்து IDA Pay Scaleக்கு மாறும் போது ஏற்பட்ட அனாமலி விசயமாக BSNL நிர்வாகம் எல்லா மாநிலங்களில் இருந்தும் தகவல்களைக் கேட்டுள்ளது. கடித நகல் <click here>
புதிய அங்கீகார விதிகளுக்கான கூட்டம்
புதிய அங்கீகார விதிகளை விவாதிப்பதற்கு 19-11-2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகம் ஒரு வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தது. அதனை விவாதிப்பதற்குத் தேவையான கால அவகாசம் பல மாதங்கள் ஆகும். ஆதலால் BSNL ஊழியர் சங்கம் 6 ஆவது சரிபார்பு தேர்தலை பழைய விதிகளின்படி நடத்தவேண்டும் என வலியுறத்தியுள்ளது. ஏனெனில் 13-02-2013 தேதி வரை BSNLEU சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளது. புதிய விதிகளை உருவாக்க அதிக காலம் ஆகும் போது 13-02-2013 தேதிக்கு பிறகு எந்த சங்கத்திற்கும் அங்கீகாரம் இல்லா சூழ்நிலை உருவாகும். இதைத்தான் நிர்வாகம் விரும்புகிறது. நிர்வாகத்தின் இந்தப் போக்கை நம் சங்கம் அனுமதிக்காது. இன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக அனைத்திந்திய செயலர் தோழர் P.அபிமன்யு, அனைத்திந்திய தலைவர் தோழர் V.A.N.நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Monday, November 19, 2012
தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு
SNEA மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜன் தலைமையில் BSNLEU மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ், மாவட்ட உதவித் தலைவர் தோழர் புழுகாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் தங்கதுரை, NFTE ராஜபாளையம் கிளைச் செயலர் தோழர் பிள்ளையார், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் கூடலிங்கம், SEWA BSNL ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள் தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்களைச் சந்தித்து, ITS அதிகாரிகள் எந்தவித நியாமுமின்றித் தொடரும் Deputation தொடர்பான விஷயங்களை விளக்கி, ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யைக் கொடுத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்கள் மனுவின் மீது ஆவன செய்து,பதில் தருவதாக வாக்களித்துள்ளார்.
நவம்பர் 22ல் கூடவிருக்கும் பாராளுமன்றம் கூட்டத் தொடருக்கு முன்னர் ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சங்கம் விடுத்த சுற்றரிக்கையின் தொடர்வினையை குறித்த காலத்தில் முடித்த ராஜபாளையம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.
தினகரன் நாளிதழில் வந்த செய்தி
Friday, November 16, 2012
புதிய அங்கீகார விதிகளுக்கான சந்திப்பு
BSNL மூன்றாம் பிரிவு ஊழியர்களின் தொழிற்சங்கத்திற்கான புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்காக இம்மாதம் 19ஆம தேதி நடைபெறவிருக்கும் சந்திப்புக் கூட்டத்திற்கான கார்ப்பரேட் அலுவலகத்தின் கடித நகல் <<click here>>
78.2% IDA fixation – DoT க்கு BSNL பதில் அனுப்பி உள்ளது
78.2% IDA fixation விசயமாக DOT ன் விசாரனைகளுக்கான பதில் கடிதத்தை BSNL நிர்வாகம் 15-11-2012 அன்று அனுப்பியுள்ளது. விரைவில் தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளில் மத்திய சங்கம் ஈடுபடும்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி...
இன்று துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் காஜியாபாத் பொதுமேலாளர் ஆதேஷ் குமார் குப்தாவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 20-11-2012 தேதிக்குள் நேரடி பேச்சுவார்த்தை நடத்த BSNL
நிர்வாகத்திற்கு ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். இன்றைய கூட்டத்தில் BSNLEU
சார்பாக தோழர் P.அபிமன்யு, தோழர் R.L.மூட்கில் SEWA BSNL சார்பாக தோழர் N.D.ராம்
கலந்து கொண்டனர். அடுத்த கூட்டத்தை 20-11-2012 தேதிக்கு
துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஒத்திவைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கிளைவாரியாக வேலைநிறுத்தத்தில்...
அருப்புகோட்டை
25
17
2
6
ஸ்ரீவில்லிபுத்தூர்
32
20
5
7
சாத்தூர்
19
19
0
0
துணைகோட்டம் ,விருதை
22
11
2
9
துணைகோட்டம் , சிவகாசி 40
25
5
10
சிவகாசி , OCB
35
14
10
11
GM Office, விருதுநகர்
63
33
21
9
ராஜபாளையம்
52
22
26
4
வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்யப் பாடுபட்ட அனைத்துத் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...