Wednesday, December 26, 2012

புதிய அங்கீகார விதி சாராம்சம்

1. தேர்தல் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெறும்.
2. அங்கீகார காலம் 3 ஆண்டுகளாக இருக்கும்.
3. 50 சதவீதத்திற்கும் அதிக  ஓட்டு வாங்கும் பட்சத்தில் அந்த ஒரு சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும்.
4.எந்த சங்கமும் 50 சத ஓட்டு வாங்கவில்லைஎனில் குறைந்த பட்சம் 35 சத வாக்குகள் வாங்கும் சங்கத்திற்கு பிரதான அங்கீகார சங்கமாக அங்கீகாரம் கிடைக்கும் .2 ஆவது அதிக ஓட்டு வாங்கும் சங்கம் குறைந்த பட்சம் 15 சத வாக்குகள் வாங்கினால் அதற்கு 2 ஆவது சங்கமாக அங்கீகாரம் கிடைக்கும்.
5. எந்த சங்கமும் 35 சத ஓட்டு வாங்காத பட்சத்தில் குறைந்த பட்சம் 15 சத வாக்குகள் வாங்கும் 2 சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
6.குறைந்த பட்சம் 2 சத வாக்குகள் வாங்கும் சங்கங்களுக்கு LIMITED TRADE UNION வசதி மட்டும் கிடைக்கும்.
7.National JCM ,R JCM ,LCM  ஊழியர் தரப்பு உறுப்பினர் எண்ணீக்கை 14 ஆக இருக்கும் , அகில இந்திய அளவில் சங்கங்கள் வாங்கும் வாக்கு  அடிபடையில் JCM உறுப்பினர் எண்ணிக்கை அமையும்.
8. 7 சத ஓட்டு வாங்கும் சங்கத்திற்கு National JCM ,R JCM ,LCM  அமைப்பில் 1  உறுப்பினர் கிடைக்கும்.
9. ஊழியர் தரப்பு செயலர் பதவி  அதிக ஓட்டு வாங்கும் சங்கத்திற்கு கிடைக்கும். லீடர் பதவி 2 வது அதிக ஓட்டு வாங்கும் சங்கத்திற்கு கிடைக்கும்.
10. ஊழியர் தரப்பு செயலர் மூலம் மட்டுமே  ஊழியர் தரப்பு பிரச்சனைகள் கொடுக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...