கிங்பிஷர் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் அலைகழித்துவரும் விஜய் மல்லையா, தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி கோவிலுக்கு 3 கிலோ தங்கக்கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
விஜய் மல்லையாவால் 2005 நிறுவப்பட்ட கிங்பிஷர் விமான நிறுவனம், ஒரு காலத்தில் உள்நாட்டு விமான சேவையில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. அதன் பிறகு கடும் பண நெருக்கடியை சந்தித்த இந்நிறுவனம், கடந்த அக்டோபர் மாதம் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பிறஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைத்திருந்ததால், தொடர்ந்து செயல்படும் உரிமத்தை இழந்தது.

இப்படி சர்ச்சைகளில் கிங்பிஷர் விமான நிறுவனம் சிக்கியிருக்கும் நிலையில்,அதன் நிறுவனரான விஜய் மல்லையா கோவிலுக்கு நன்கொடையாக கிலோ கணக்கில் தங்க கட்டிகளை வழங்கியிருப்பதை என்னவென்பது. செய்த பாவத்திற்குப் பரிகாரமா? அல்லது செய்யப்போகும் பாவத்திற்குப் பரிகாரமா?
No comments:
Post a Comment