Wednesday, June 29, 2016

பிரம்மாண்டமான எழுச்சி மிகு உற்சாகமான மாவட்ட மாநாடு

          நமது மாவட்ட மாநாட்டின் 2 நாளான இன்று பொது அரங்க நிகழ்ச்சி உற்சாகமாக தொடங்கியது. மாவட்ட தலைவர் A.சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் முதல் நிகழ்ச்சியாக அதிர் வேட்டுக்கள் வெடிக்க, எழுச்சி மிகு கோஷங்களுடன் தேசிய கொடியை நமது மூத்த உறுப்பினரும் 30/06/2016 அன்று பணி ஓய்வு பெரும் ராஜபாளையம் தோழர் ஸ்ரீனிவாசன் ஏற்றி வைக்க, நமது சங்க கொடியை தோழர் பொன்னுசாமி, ராஜபாளையம் கிளை தோழர் ஏற்றி வைக்க மாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிகள் தொடங்கின. சிவகாசி OCB கிளை செயலர் தோழர் M.முத்துசாமி அவர்கள் தியாகிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தனது வரவேற்பு உரையில் கடந்த 27 மாதங்கள் நமது மாவட்டத்தில் சங்க செயல்பாட்டை, 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை,அரசியல் கடமைகளை சரியான பார்வையில் பார்க்காத போக்கை சுட்டி காட்டினார்.மேலும் 8 வது மாவட்ட மாநாட்டை அற்புதமாக நடத்திய சிவகாசி தோழர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும் ,பாராட்டுகளையும் தெரிவித்தார். தோழர்கள் சமுத்திரக்கனி, ஜெயபாண்டியன், முத்துசாமி ,கருப்பசாமி, ராஜமாணிக்கம், முனியாண்டி, ராஜு, குருசாமி ,செல்லம்,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அனைத்து சிவகாசி தோழர்களும் கடந்த ஒரு வாரகாலமாக மாவட்ட மாநாட்டு பணிகளை சிறப்புடன் செய்ததை மாவட்ட மாநாடு வெகுவாக பாராட்டியது.

































          மேலும் அனைத்திந்திய மாநாட்டுக்கு நன்கொடையாக ரூபாய் 90,000 வழங்கி ஒட்டு மொத்தமாக நமது மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய் 1,80,000/- ஐ இன்று அனைத்திந்திய மாநாட்டுக்கு நமது மாநில செயலரிடம் வழங்கி விட்டது. நமது மாவட்ட மாநாட்டை முறையாக நமது தமிழ் மாநில செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் நமது சங்கம் பெற்ற இரட்டை ஹாட்ரிக் வெற்றி,சென்னை சொசைட்டி முறைகேடுகளை எதிர்த்து நமது போராட்டம்,அனைத்திந்திய மாநாட்டு பணிகள், செப்டம்பர் 2 போராட்டம் ஆகியவற்றை விரிவாக விளக்கினார். நமது மாநாட்டின் எழுச்சிமிகு நிகழ்வை பாராட்டினார். வாழ்த்துரையாக SNEA மாவட்ட செயலர் உயர்திரு செந்தில்குமார், சேவா (R) மாவட்ட செயலர் தோழர் பரமேஸ்வரன், AIBDPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி, சேவா (R) மாவட்ட உதவி செயலர் தோழர் கேசவன், AIBSNLEA மாவட்ட தலைவர் தோழர் A நாராயணன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

       தேனீர் இடைவேளையில் தோழர் மணிமாறனின் பல குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்புரையாக மாநில உதவி செயலரும், உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு செயலருமான தோழியர் V.P.இந்திரா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். சரிபார்ப்பு தேர்தலில் இருந்து இன்றைய சமூக அமைப்பில் பெண்கள் பிரச்சனைகள் அனைத்தையும் விரிவாக பேசினார். பின்னர் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின் புதிய நிர்வாகிகள் தேர்வை நமது மாநில செயலர் நடத்தினார். கீழ் கண்டோர் வரும் 2016-2018 ஆண்டுக்கு நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

தலைவர்:-A.சமுத்திரக்கனி ,டெலிகாம் டெக்னீசியன்  
உதவி தலைவர்கள் :- 1.R C.ராஜாராம் மனோகரன்  , டெலிகாம் 
  டெக்னீசியன் ,சிவகாசி  
2.G .ராஜு , டெலிகாம் டெக்னீசியன் ,சிவகாசி
3.G.வெங்கடசாமி , டெலிகாம் டெக்னீசியன்,
        ஸ்ரீவில்லிபுத்தூர்
4.T .அனவ்ரதம், டெலிகாம் டெக்னீசியன்,ராஜை

செயலர் :- S.ரவீந்திரன் ,அலுவலக கண்காணிப்பாளர்  
உதவி செயலர்கள்:-1.S.வெங்கடப்பன் ,டெலிகாம் டெக்னீசியன்      விருதை
2.R.ஜெயக்குமார், இளநிலை பொறியாளர்,விருதை
3.L .தங்கதுரை , இளநிலை பொறியாளர், வத்ராப்
4.A.S.அஷ்ரப் தீன், இளநிலை பொறியாளர், அருப்புக்கோட்டை

பொருளாளர் :- C.சந்திரசேகரன் , டெலிகாம் டெக்னீசியன்,விருதை   
உதவி பொருளாளர் :-தோழியர் N. மங்கையர்கரசி, அலுவலக கண்காணிப்பாளர், விருதை

அமைப்புச் செயலர்கள்
1.I .முருகன்,டெலிகாம் டெக்னீசியன் ,ராஜை  
2.T.கணேசமூர்த்தி,இளநிலை பொறியாளர் ,காரியாபட்டி  
   3.N.ராதாகிருஷ்ணன் ,டெலிகாம் டெக்னீசியன்,ராஜை  
   4.H.காதர் மைதீன் ,டெலிகாம் டெக்னீசியன்,சாத்தூர் 
   5.G.சண்முகவேலு ,டெலிகாம் டெக்னீசியன்,சிவகாசி 
   6.R.ராஜமாணிக்கம் , டெலிகாம் டெக்னீசியன்,சிவகாசி 
   7.R.முனியாண்டி , டெலிகாம் டெக்னீசியன்,சிவகாசி 

ஆடிட்டர் :- A.மாரியப்பா டெலிகாம் டெக்னீசியன், விருதை  

Monday, June 27, 2016

வாழ்த்துகள்

கடந்த வாரம் அருப்புக்கோட்டையில் நகர எல்லைக்குள் AIRTEL நிறுவனம் நமது கேபிள் இருக்கும் ரூட்டில் ‘சைடு போர்’ போட்டு ஆப்டிகல் பைபர் கேபில் பதிப்பதற்காக ரோட்டைத் துளைக்கத் தொடங்கினர். தகவல் தெரிந்ததும் திருமிகு ஜான்சன் சாமுவேல் அவர்களும், திருமிகு சரவணன் அவர்களும் நமது ஊழியர்களுடன் சென்று வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இன்றும் (27.06.2016) AIRTEL நிறுவனம் பணியில் ஈடுபட முயற்சித்தபோது, வேலையை நிறுத்த வைத்ததுடன், கோட்டப் பொறியாளர் திருமிகு சரவணன், இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி திருமிகு ஜான்சன் சாமுவேல், துணைக்கோட்டப் பொறியாளர் திருமிகு சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் TTA தோழர்கள் மதிகண்ணன், அஷ்ரஃப்தீன், இராஜேந்திரன், வெங்கடேஷ், TM தோழர்கள் தியாகராஜன், காசிராஜ், அழகர், முனியசாமி, சத்தியவரதன் ஆகியோர் திரளாகச் சென்று அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். AIRTEL நிறுவனத்தினரும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். நமது நியாயமான கோரிக்கையினைப் புரிந்து கொண்ட நகர காவல் நிலைய ஆய்வாளர் இயந்திரங்கள் மூலம் வேலை செய்வதை நிறுத்தி உள்ளார். அவருக்கு நமது நன்றி.
BSNL நமது நிறுவனம். முன்னரே புதைக்கப்பட்டுள்ள BSNL CABLEகள் நமக்கு வருமானம் தரக்கூடிய சொத்து. இதனைப் புரிந்து கொண்டு கைகோர்த்த அதிகாரிகள் ஊழியர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் நெஞ்சார்ந்த நன்றியும்.
இந்த ஒற்றுமைதான்
இன்றைய நிலையில் தேவையாக இருக்கிறது.
BSNL நமது நிறுவனம். BSNL நிறுவனத்தையும் BSNLன் சொத்துக்களையும் காப்பது
நமது கடமை.

Sunday, June 26, 2016

தொடங்கியது 8 வது மாவட்ட மாநாடு

     விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர்சங்கத்தின் 8 வது மாவட்ட மாநாடு இன்று இனிதே தொடங்கியது.மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை வகிக்க மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆய்படு பொருள் ஏற்று கொள்ளப்பட்டு, தோழர் முத்துசாமி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, தலைவர் உரையுடன் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் அமர்வு தொடங்கியது. முறையாக பிரதிநிதிகள் அமர்வை மாநில அமைப்பு செயலர் தோழர் கிறிஸ்டோபர் தொடக்கி வைத்து 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் பெற்ற பிரமாண்டமான வெற்றி, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, நாம் நிறுவனத்தை மேம்படுத்த நடத்தி கொண்டு உள்ள நடவடிக்கைகள், செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றி கரமாக நடத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 வது முறையாக வெற்றி பெற்றது மட்டும் இன்றி இந்த 7 வது சரிபார்ப்பு தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக 50% வாக்குகள் மேல் பெற்று வெற்றி பெற்றதை பாராட்டினார். நமது ஆண்டறிக்கையில் மார்க்கெட்டிங் பணிகளுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை வரவேற்றார். மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சமர்ப்பித்த ஆண்டறிக்கை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. தோழர் வெங்கடப்பன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை மாவட்ட மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 21 பிரதிநிதிகளும், மாவட்ட சங்க நிர்வாகிகளில் 18 பேரும், பார்வையாளர்களாக 8 பேரும், AIBDPA சார்பாக தோழர் புளுகாண்டியும் கலந்து கொண்டனர்.
இன்றைய முடிவுகள் :-
1. மாவட்ட மாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிக்கு அனைவரும்  குடும்பத்தோடு கலந்து கொள்வது.
2. செப்டம்பர் 2 வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நமது மாவட்டத்தில் நடத்துவது. 
3. தொழிற்சங்க பயிற்சி வகுப்பை இயற்கை எழில் சூழ்ந்த அச்சன்கோவிலில் வரும் 2016 ஆகஸ்ட் மாதம் நடத்துவது.இதற்கான பொறுப்பை சென்னை RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் மேற்கொள்வது.  
4. வரும் நவம்பர் மாதம் தோழர் செல்வராஜ் பணி ஓய்வு விழாவை ஒரு கலை இலக்கிய ,குடும்ப விழாவாக நடத்த தோழர் செல்வராஜ் அவர்களிடம் ஒப்புதல் கேட்பது. 
5. ஸ்ரீவில்லிபுத்தூர் தோழியர் பகவதி அவர்கள் பணி ஓய்வு பாராட்டு விழாவை ஒரு விரிவடைந்த செயற்குழுவாக மற்றும் செப்டம்பர் 2 வேலை நிறுத்த ஆயுத்த கூட்டமாக நடத்த  வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த ஒப்புதல் கேட்பது 
6. இனி வரும் காலங்களில் செயற்குழு கூட்டங்களை முழு நாளாக நடத்த வேண்டும்.
7. அனைத்திந்திய மாநாட்டு நன்கொடையாக வரும் 29 ஆம் தேதி 90,000/- ரூபாயாக கொடுத்து விடுவது .( ஏற்கனவே ரூபாய் 70,000/- வழங்கி விட்டோம்). இலக்கை முடிக்க அனைத்து கிளைகளும் ஒப்புதல் வழங்கி உள்ளன.
8. 21-06-2016,22-06-2016 இரண்டு நாட்கள் நமது தோழர்கள் பங்கேற்ற மார்க்கெட்டிங் பணிகள் பாராட்டப்பட்டது. 




















11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...