சாத்தூர் கிளை மாநாடு 18/06/2016 அன்று கிளை தலைவர் தோழர் .வெங்கடாசலபதி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர் ஜெயச்சந்திரன் அஞ்சலி உரை நிகழ்த்த ,கிளை செயலர் தோழர் காதர் மைதீன் வரவேற்புரை நிகழ்த்த ,முறையாக கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தொடக்கி வைத்தார் .கிளை செயலர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை ,பொருளாளர் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன .புதிய நிர்வாகிகளாக தோழர்கள் வெங்கடாசலபதி, கலையரசன் ,ஜெயச்சந்திரன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி மற்றும் RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் ,ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் ராமச்சந்திரன் ,SNEA கிளை செயலர் முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .





No comments:
Post a Comment