12 வது ராஜபாளையம் கிளை மாநாடு 20/06/2016 அன்று ராஜபாளையம் நகரில் தோழர் அனவ்ரதம் ,கிளை தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நமது மூத்த தோழர் பொன்னுச்சாமி நமது சங்க கொடியை ஏற்றி வைக்க ,அஞ்சலி உரையை தோழர் சிவஞானம் நிகழ்த்த ,கிளை செயலர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது .கிளை பொருளர் சிவஞானம் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது .மாவட்ட செயலர் தொடக்க உரை நிகழ்த்த ,SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாற்று சங்கங்களில் இருந்து விலகி நமது சங்கத்தில் இணைந்த தோழர்கள் குட்டிராஜா ,சோமசுந்தரம் ,கிருஷ்ணன் ஆகியோர் கிளை சங்கத்தால் கவுரவிக்கப்பட்டனர் .புதிய நிர்வாகிகளாக தோழர்கள் தியாகராஜன் ,முத்துராமலிங்கம் ,அனவ்ரதம் ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளாளர்க தேர்ந்தெடுக்கப்பட்டனர் .















No comments:
Post a Comment