Monday, June 27, 2016

வாழ்த்துகள்

கடந்த வாரம் அருப்புக்கோட்டையில் நகர எல்லைக்குள் AIRTEL நிறுவனம் நமது கேபிள் இருக்கும் ரூட்டில் ‘சைடு போர்’ போட்டு ஆப்டிகல் பைபர் கேபில் பதிப்பதற்காக ரோட்டைத் துளைக்கத் தொடங்கினர். தகவல் தெரிந்ததும் திருமிகு ஜான்சன் சாமுவேல் அவர்களும், திருமிகு சரவணன் அவர்களும் நமது ஊழியர்களுடன் சென்று வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இன்றும் (27.06.2016) AIRTEL நிறுவனம் பணியில் ஈடுபட முயற்சித்தபோது, வேலையை நிறுத்த வைத்ததுடன், கோட்டப் பொறியாளர் திருமிகு சரவணன், இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி திருமிகு ஜான்சன் சாமுவேல், துணைக்கோட்டப் பொறியாளர் திருமிகு சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் TTA தோழர்கள் மதிகண்ணன், அஷ்ரஃப்தீன், இராஜேந்திரன், வெங்கடேஷ், TM தோழர்கள் தியாகராஜன், காசிராஜ், அழகர், முனியசாமி, சத்தியவரதன் ஆகியோர் திரளாகச் சென்று அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். AIRTEL நிறுவனத்தினரும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். நமது நியாயமான கோரிக்கையினைப் புரிந்து கொண்ட நகர காவல் நிலைய ஆய்வாளர் இயந்திரங்கள் மூலம் வேலை செய்வதை நிறுத்தி உள்ளார். அவருக்கு நமது நன்றி.
BSNL நமது நிறுவனம். முன்னரே புதைக்கப்பட்டுள்ள BSNL CABLEகள் நமக்கு வருமானம் தரக்கூடிய சொத்து. இதனைப் புரிந்து கொண்டு கைகோர்த்த அதிகாரிகள் ஊழியர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் நெஞ்சார்ந்த நன்றியும்.
இந்த ஒற்றுமைதான்
இன்றைய நிலையில் தேவையாக இருக்கிறது.
BSNL நமது நிறுவனம். BSNL நிறுவனத்தையும் BSNLன் சொத்துக்களையும் காப்பது
நமது கடமை.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...