Showing posts with label ITS issue.. Show all posts
Showing posts with label ITS issue.. Show all posts

Wednesday, April 17, 2013

ITS issue

BSNLக்கு விருப்பம் கொடுக்காத  ITS அதிகாரிகளை  DOT க்கு திருப்பி  அனுப்பும் பிரச்சனையில்  BSNLEU, SNEA மற்றும் AIBSNLEA, தாக்கல் செய்த வழக்கு  18-04-2013 அன்று  முதன்மை நிர்வாக நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாண்புமிகு தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக BSNL நிர்வாகத்தின்  நடவடிக்கை  உள்ளதை எதிர்த்து மேற்குரிய சங்கங்கள் வழக்கு தொடுத்து உள்ளன .

Monday, March 18, 2013

ITS அதிகாரிகள் பிரச்சனை

ITS  அதிகாரிகளை DOT க்கு திரும்ப அழைக்கும்  பிரச்சினையில் DOT செயலாளர், CMD  பிஎஸ்என்எல்க்கு  எதிராக BSNLEU, SNEA மற்றும் AIBSNLEA தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை, மாண்புமிகு தில்லி உயர் நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டு DOT  செயலாளர், CMD  பிஎஸ்என்எல்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது 

Saturday, March 16, 2013

தில்லி உயர் நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு

          ITS பிரச்னை விசயமாக DOT & பிஎஸ்என்எல் நிர்வாகம் அண்மையில் இட்ட (அப்புடிப் போயிட்டு இப்படி வர்றது) ஆணைகள் தொடர்பாக BSNLEU, SNEA & AIBSNLEA சங்கங்கள் மூலம் தில்லி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tuesday, March 12, 2013

ITS பிரச்னை தொடர்பான - நாடகம்

            டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் BSNLக்கு  விருப்பம் கொடுக்காத ITS அதிகாரிகள் அனைவரையும் DOTக்கு 6 வார காலத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த DOT நிர்வாகமும் BSNL  நிர்வாகமும் ஒரு வேடிக்கையான நாடகம் நடத்தி முடித்திருக்கின்றன. இரண்டு   ஆணைகளை நேற்று DOT மற்றும் பிஎஸ்என்எல் நிர்வாகங்கள்  வெளியிட்டன. அந்த உத்தரவின்படி,  விருப்பம் கொடுக்காத அனைத்து அதிகாரிகளும் நேற்று  DOTக்கு அனுப்பபட்டு    அவர்கள் அனைவரும் மீண்டும் அதே நாளில்  பிஎஸ்என்எல்க்கு திரும்ப DEPUTATION அடிப்படையில்  அனுப்பப்பட்டனர்.

Friday, February 15, 2013

UNITED FORUM கூட்டம் மற்றும் சில தகவல்கள்

            UNITED  FORUM கூட்டம் வரும் 17-02-2013 அன்று மதியம் 3 மணி அளவில் TEPU சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அந்த;f கூட்டத்தில் 6 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான  பிரசார யுக்தி மற்றும் சுற்றுபயணம் பற்றி முடிவு எடுக்கப்படும்.

            ITS அதிகாரிகள் பிரச்சனையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று BSNL நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி பண்ணிவிட்டது .அதனுடைய முந்தைய தீர்ப்பை  6 வார காலத்திற்குள்  அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

            தேர்தல் வரை நமது சங்க அங்கீகாரம் நீட்டிக்கபட வேண்டும் என நாம் கோரியதை தலைமைத் தொழிலாளர் ஆணையர் முடிவிற்கு நிர்வாகம் காத்துள்ளது .

Wednesday, January 23, 2013

Joint Forum தலைவர்களின் அமைச்சருடனான சந்திப்பு...

           BSNL/NTNL Joint Forumன் சங்கத் தலைவர்கள் 2013 ஜனவரி 22 அன்று மத்திய அமைச்சர் திருமிகு ஜிதேந்தர் சிங் அவர்களைச் சந்தித்து BSNLக்கு விருப்பம் தராத ITS அதிகாரிகள் விஷயத்தில் விரைவில் தீர்வு காண வலியுறுத்தினார்கள். தோழர்களின் கருத்துக்களை கவனமாகக் கேட்ட அமைச்சர் தொலைத்தொடரவு அமைச்சரின் கவனத்திற்கு இந்தத் தகவல்களை அவசியம் கொண்டு செல்வதாக உறுதி கூறினார். அமைச்சருடனான சந்திப்பில் தோழர் M.K. பக்க்ஷி, தோழர் V.A.N.நம்பூதிரி மற்றும் தோழமைச் சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Wednesday, December 19, 2012

ITS பிரச்சனை

          கூடுதல் அரசு வழக்கறிஞர் 12-12-2012 அன்று நடைபெற்ற செயலாளர்கள் குழுவின் இறுதி கூட்டத்தின் minutesஐ நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தார். மேலும் கூடுதல் அரசு வழக்கறிஞர் இது விசயமாக மத்திய அமைச்சரவை ஜனவரி 2013 மத்தியில் இந்த பரிந்துரை மீது இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளதின் அடிப்டையில் நீதிமன்றம் 01-02-2013க்கு இவ்வழக்கை ஒத்திவைத்தது.

Tuesday, December 4, 2012

டிசம்பர் 17, 18 இரண்டு நாட்கள் தர்ணா...

          BSNL மற்றும் MTNL சங்கங்களின் Joint Forum 04-12-2012 அன்று கூடி BSNL மற்றும் MTNLன் ஸ்திரத்தன்மை, ITS பிரச்னை மற்றும் 78.2 IDA விஷயமாக மீண்டும் ஒரு போராட்ட முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி வருகின்ற 17-12-2012 மற்றும் 18-12-2012 ஆகிய இரண்டு நாட்கள் தர்ணா நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

Tuesday, November 27, 2012

போராட்டத்தைத் தீவிரப்படுத்த ஆலோசனைக் கூட்டம்

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சங்க தலைவர்கள் Joint Forum சார்பாக 24.11.2012 அன்று டாக்டர் Kruparani Killi, கம்யூனிகேஷன்ஸ் இணை அமைச்சர் அவர்களை சந்தித்து BSNL க்கு விருப்பம் தெரிவிக்காத ITS அதிகாரிகளை உடனடியாக திரும்ப அனுப்பக் கோரினர். அதற்கான குறிப்பை அவரிடம் அளித்தனர். ITS அதிகாரிகள் விசயமாக போராட்டத்தை தீவிரபடுத்த Joint Forum முடிவு செய்துள்ளது. இது விசயமாக ஆலோசனை செய்வதற்கு 04-12-2012 அன்று Joint Forum கூடவுள்ளது.

Wednesday, November 21, 2012

பாரளுமன்றம் நோக்கிப் பேரணி

          ITS அதிகாரிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கோரிக்கையை வலியுறுத்தி 2012 நவம்பர் 22 ஆம் நாள் பாராளுமன்றம் நோக்கி பெருந்திரள் பேரணி செல்வது என்ற முடிவை  Joint Forum of BSNL and MTNL unions and associations எடுத்து செயல்படுத்த உள்ளது. இந்தப் பேரணி நடக்கும் நவம்பர் 22 நாள் தேசிய அளவில் பிற தோழமைச் சங்கங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என மாநில, மாவட்ட, கிளைச் சங்கங்களுக்கு BSNLEU அறைகூவல் விடுத்துள்ளது.

குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி... 2

          துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் 20-11-2012 அன்று  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதேஷ் குமார் குப்தா மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை  தோழர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். 06-12-2012 தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த BSNL CMD மற்றும் டைரக்டர் (HR)  ஆகியோருக்கு  ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். நவம்பர் 20 அன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக தோழர் .P.அபிமன்யு, தோழர் V.A.N.நம்பூதிரி, தோழர் R.L..மூட்கில், தோழர் அனிமேஷ் மிஸ்ரா, தோழர் சுப்புராமன், TEPU, தோழர் சுரேஷ்குமார், BSNLMS ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டத்தை 06-12-2012 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் துணை முதன்மை தொழிலாளர் ஆணையர்.

Monday, November 19, 2012

தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு


          SNEA மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜன் தலைமையில் BSNLEU மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ், மாவட்ட உதவித் தலைவர் தோழர் புழுகாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் தங்கதுரை, NFTE ராஜபாளையம் கிளைச் செயலர் தோழர் பிள்ளையார், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் கூடலிங்கம், SEWA BSNL ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள் தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்களைச் சந்தித்து, ITS அதிகாரிகள் எந்தவித நியாமுமின்றித் தொடரும் Deputation தொடர்பான விஷயங்களை விளக்கி, ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யைக் கொடுத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்கள் மனுவின் மீது ஆவன செய்து,பதில் தருவதாக வாக்களித்துள்ளார். 


          நவம்பர் 22ல் கூடவிருக்கும் பாராளுமன்றம் கூட்டத் தொடருக்கு முன்னர் ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சங்கம் விடுத்த சுற்றரிக்கையின் தொடர்வினையை குறித்த காலத்தில் முடித்த ராஜபாளையம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

தினகரன் நாளிதழில் வந்த செய்தி

Friday, November 16, 2012

குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி...

      இன்று துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காஜியாபாத் பொதுமேலாளர் ஆதேஷ் குமார் குப்தாவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 20-11-2012 தேதிக்குள்  நேரடி பேச்சுவார்த்தை நடத்த BSNL நிர்வாகத்திற்கு ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். இன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக தோழர் P.அபிமன்யு, தோழர் R.L.மூட்கில்  SEWA BSNL சார்பாக தோழர் N.D.ராம் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டத்தை 20-11-2012 தேதிக்கு துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஒத்திவைத்துள்ளார்.

Thursday, November 15, 2012

பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு...

          22-11-2012 ஆம்  தேதி கூடவுள்ள பாராளுமன்ற குளிர் கால  கூட்ட தொடருக்கு முன் கிளை செயலர்கள் தங்கள் பகுதியை உள்ளடக்கிய பாராளுமன்ற உறுப்பினரிடம்   ITS அதிகாரிகள் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக BSNL நிறுவனத்தில் Deputation அடிப்படையில் தொடர்வதை  விளக்கி ஏற்கனவே பிரதமரிடம் சமர்ப்பித்த  கோரிக்கை மனுவை கொடுக்கவேண்டும்

பிரதமரிடம் சமர்ப்பித்த  கோரிக்கை மனு

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...