Monday, July 29, 2019

இரங்கல்

தளவாய்புரம் தொலைபேசி நிலையத்தில்   கேபிள் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர் தோழர் .குத்தாலகனி    அவர்கள் நேற்று மாலை காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 

Thursday, July 25, 2019

பொது மேலாளருடன் நேர்காணல்

              நமது மாவட்ட சங்கம் இன்று தூத்துகுடியில் நமது மாவட்ட   முதன்மை பொது மேலாளர் அவர்களை சந்தித்தது. இன்றைய (25/07/2019) பேட்டியின்போது மாவட்ட  செயலருடன் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார், மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன், மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர் .இன்றைய பேட்டியின்போது  ஊழியர் நலம் சார்ந்த விஷயங்கள் மற்றும் வருமானத்தை அதிகரிப்பது விசயமாக பேசப்பட்டது. வரும் நாட்களில் நமது BSNLEU சங்கம் சிம் விற்பனை மற்றும் FTTH கொடுப்பது  விஷயங்களில் கவனம் செலுத்தும் என்று உறுதி அளித்தோம். கீழ் கண்ட விஷயங்களை விவாதித்து உள்ளோம்.
1.     Welfare சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு Nodal அதிகாரியாக திரு .செந்தில்குமார் AGM செயல்படுவார் .
2.     மருத்துவ சிகிச்சைக்கு referral வாங்குவதற்கு எந்த ஊரில் இருந்தும் தூத்துக்குடி அலுவலகத்திற்கு FAX அனுப்பி referral லெட்டர் தூத்துக்குடி intranet இல் வெளியிடப்படும் என்று GM உறுதி அளித்து உள்ளார் .அதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் .
3.     நமது மாவட்டத்தில் பணி நிறைவு பெறும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு  நிர்வாகத்தரப்பில் நடத்தப்படும் பணி நிறைவு விழா நமது மாவட்டத்திலேயே நடைபெறும் என்றும் அதை DGM (CFA), விருதுநகர் நடத்துவார் .
4.     பென்ஷன் பேப்பரை சமர்ப்பிக்கும் ஊழியர் தூத்துக்குடிக்கு அனுப்பும் முன்னர் அதை check பண்ணி கொடுக்கும் பொறுப்பு ஒரு கணக்கு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.
5.     சிவகாசி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கூடுதல் பணியாளர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தரைவழி இணைப்புகள், பிராட் பேண்டு  இணைப்புகள் மற்றும் circuits இருப்பதையும் வருமானத்தில் அதிகம் இருப்பதையும் சுட்டி காட்டி உள்ளோம். ஓய்வு வயது குறைப்பு என்று வந்தால் அங்கு ஒரு ஊழியர் தான் இருப்பார் என்று சுட்டி காட்டி உள்ளோம் .
6.     நெட்ஒர்க் பகுதியில் ஊழியர் பற்றாக்குறையை சுட்டி காட்டி உள்ளோம். ஊழியர்கள் உபரியாக உள்ள பகுதியையும் நாம் நிர்வாகத்தின்   கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். தொலைபேசி நிலையங்களில் உள்ள இணைப்புகளின் எண்ணிக்கை ,ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்ய பொது மேலாளர் துணை பொது மேலாளர் ,தூத்துக்குடி அவர்களுக்கு உத்தரவு இட்டுள்ளார் .
7.     சிவகாசி பகுதியில் ஒரு Transmission Team உருவாக்க பட வேண்டும் என பொது மேலாளரிடம் வலியுறுத்தப்பட்டது
8.     மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையான விஷயங்களை பொது மேலாளர் அவர்களிடம் கூறி இருக்கிறோம் .
9.      இலாகா குடியிருப்புகளில் வசிக்கும் 3rd பார்ட்டிகளிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் வசூல் செய்யாமல் இருப்பதை சுட்டி காட்டி உள்ளோம் .
10. EOI பகுதியில் உள்ள உபரி ஒப்பந்த ஊழியர்களை நெட்ஒர்க், லைன் ஒர்க், சேல்ஸ் மற்றும் CSC பகுதியில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் .
11.  பிசினஸ் ஏரியா  இணைப்பால் உபரியாக உள்ள ஊழியர் எண்ணிக்கையில் சில தவறுகளை சுட்டி காட்டி உள்ளோம், உபரி ஊழியர்களை பிற section களில் நியமனம் செய்வதை விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம் .
12.  மேளாக்கள் மற்றும் ரோடு ஷோக்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து சிம் களை வாங்கி விற்க வேண்டும் என நாம் கூறியதை நிர்வாகம் ஏற்று கொண்டு அதற்கான உத்தரவை பிறப்பித்து விட்டது.
நேர்காணலில் ஒத்துழைத்த பொது மேலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் நன்றிகள்.

Tuesday, July 16, 2019

எழுச்சிகரமாக நடைபெற்ற சென்னை தர்ணா

ல மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும் ,ஆட் குறைப்பு திட்டத்திற்கு எதிராகவும் இன்று சென்னையில் தர்ணா எழுச்சிகரமாக நடைபெற்றது .நமது மாவட்டத்தில் இருந்து 41   தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் ,பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .
Image may contain: one or more people and outdoor
Image may contain: 4 people, crowd and outdoor
Image may contain: 16 people, crowd and outdoor
Image may contain: 6 people, including Palanisamy Palanisamy and Srinivasan JJ, crowd
Image may contain: 10 people, people smiling, crowd and outdoor


Friday, July 5, 2019

ஆர்ப்பாட்ட காட்சிகள்

ஜியோவின் பொய் பிரச்சாரத்தை கண்டித்து இன்று விருதுநகர் மாவட்டத்தில் AUAB சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் .இன்றைய ஆர்ப்பாட்டத்தில் SNEA மற்றும் AIBSNLEA அதிகாரிகள் பங்கேற்றனர் .
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing and people walking
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 3 people, people standing, crowd and outdoor
Image may contain: 2 people, tree and outdoor
Image may contain: 1 person, standing, crowd and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor

செயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்

உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என 02.07.2019 தேதியிட்ட கடித எண்: BSNL/5-1/SR/2018 மூலமாக விண்ணப்பித்திருக்கும் அனைத்து சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கும் BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் 2019, மே மாதத்துடன் முடிவடைந்து விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் விண்ணப்பித்திருக்கும் சங்கம், ஏதாவது போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றால் அந்த சங்கத்தை உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் மிரட்டல் விடப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்த வாதம் பொருத்தமற்றது மட்டுமல்ல, நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுவதும் ஆகும். இந்த அர்த்தமற்ற கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. பதிவு செய்யப்பட்ட சங்கம் என்ற அடிப்படையில், சட்டபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட BSNL ஊழியர் சங்கத்திற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. இது தொடர்பாக முதன்மை தொழிலாளர் நல ஆணையரிடமும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் எனில், தனது தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க, BSNL ஊழியர் சங்கம் நீதிமன்றத்திற்கும் செல்லும்.

காமாலை நோயாளி மதிவாணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்!

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

03.07.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்ட முடிவுகள்

03.07.2019 அன்று SNEA பொதுச்செயலாளர் தோழர் K.செபாஸ்டின் தலைமையில் நடைபெற்ற AUAB கூட்டத்தில் BSNLEU, SNEA, AIBSNLEA, BSNL MS மற்றும் ATM சங்கங்களின்  பொதுச்செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். ALTTC மற்றும் இதர BSNLன் சொத்துக்களை DoT எடுத்துக் கொள்வதற்கு இந்தக் கூட்டம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் இந்தக் கூட்டத்தில் BSNLன் காலியிடங்கள், டவர்கள் மற்றும் ஃபைபர்கள் பணமாக்குவதில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை விவாதித்தது. அதன் பின்னர் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டன:-
# BSNLன் புத்தாக்கம் மற்றும் இதர சில பிரச்சனைகள் தொடர்பாக புதிய CMDஐ சந்தித்து விவாதிப்பது. 
# BSNLன் வருவாயை அதிகரிக்க, BSNLல் பணியாற்றும் ஊழியர்களையும் அதிகாரிகளையும், “உங்கள் வாயிற்படியில் BSNL" இயக்கத்தை தீவிரப்படுத்த கேட்டுக் கொள்கிறது. 
# BBNLன் பராமரிப்புகளை BSNL இடம் இருந்து எடுத்துக் கொண்டதை எதிர்த்து DoTக்கு கடிதம் எழுதுவது.
# AUABஐ சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும் படி, மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கும், தொலை தொடர்பு துறையின் செயலாளருக்கும் நினைவூட்டும் கடிதம் எழுதுவது.

AUABயின் முடிவுகளை முழுமையாக அமலாக்குவோம்.

Thursday, July 4, 2019

பாராளுமன்றத்தில் திரு இளமறம் கரீம்

BSNLன் புத்தாக்கத்திற்காக தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என 01.07.2019 அன்று மாநிலங்களவையில் திரு இளமறம் கரீம் அவர்கள் பிரச்சனையை எழுப்பினார். BSNLன் பொருளாதார நிலை கவலைக்கிடமாகவும், நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருவது தொடர்பாகவும் தெரிவித்ததோடு, மின்சாரக் கட்டணம் கூட அந்த நிறுவனத்தால் கட்டமுடியவிலை என்றும், ஒப்பந்த ஊழியருக்கு ஆறு மாத காலமாக தரப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த மாநிலங்களவையின் தலைவர் திரு வெங்கையா நாயுடு அவர்கள், இது ஒரு முக்கியமான பிரச்சனை என்றும் அது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் அவையில் இருக்கும் சமயத்தில் மாநிலங்களவையில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

BSNL மற்றும் MTNLல் VRS திட்டத்தை அமலாக்கவும், ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைக்கவும் அரசு முன்மொழிவு

BSNL மற்றும் MTNL ஆகியவற்றில் விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்கவும், அவற்றின் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைக்கவும் ஒரு அமைச்சரவைக் குறிப்பை தொலை தொடர்பு துறை முன்மொழிந்துள்ளதாக THE TIMES OF INDIA பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஊழியர்களின் ஊதியத்திற்கான செலவை குறைப்பதற்காக, BSNLல் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதாம். இத்துடன் BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு, 4 G அலைக்கற்றைகளும் ஒதுக்கப்படுமாம். BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் நிலங்கள், டவர்கள் மற்றும் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் ஆகியவற்றை பணமாக்கவும் அரசு முயற்சிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. BSNL மற்றும் MTNL நிறுவனங்களை மூடுவதால், அரசிற்கு 1.2 லட்சம் கோடி ரூபாய்கள் செலவாகும் என்பதால், அரசு இவற்றை மூட விரும்பவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

72 மணி நேர தொடர் உண்ணாவிரதம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 4 மாத காலமாக ஊதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்தும் , உடனடியாக ஊதியத்தை வழங்க கோரியும் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக 2/7/2019 முதல் துவங்கியது .முதல் நாள் உண்ணாவிரதத்தை TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை தாங்க ,அந்த சங்கத்தின் மாநில சங்க நிர்வாகி தோழர் வெளிச்சமின் துவக்கி வைத்தார் .முதல் நாள் உண்ணாவிரதத்தில் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்கள் பங்கேற்றனர் .2 நாள் உண்ணாவிரதத்தை BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் .3 நாள் உண்ணாவிரதத்தை AIBDPA சங்க மாவட்ட தலைவரும் அதன் மாநில சங்க நிர்வாகியுமான தோழர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார் .3 நாள் உண்ணாவிரதப்போராட்டத்தை வாழ்த்தி நகர JCTU செயலர் தோழர் தேனீ வசந்தன் , நமது அருமை தோழர் முருகையா அவர்களின் சகோதரரும் ,நெடுஞ்சாலை பணியாளர் சங்கத்தின் பொறுப்பாளருமான தோழர் மாரிமுத்து AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி மற்றும் SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர் .Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 6 people, people sitting, crowd and outdoor
Image may contain: 3 people, people sitting, outdoor and indoor
Image may contain: 1 person, sitting, crowd and outdoor
Image may contain: 1 person, standing, tree and outdoor
Image may contain: 3 people, people sitting and outdoor
Image may contain: 4 people, people sitting, table, crowd, outdoor and indoor
Image may contain: 5 people, including Christopher Roy M, people sitting, crowd and outdoor
Image may contain: 3 people, outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 6 people, people smiling, people sitting, crowd and indoor
Image may contain: 1 person, sitting, tree and outdoor
Image may contain: 8 people, outdoor
Image may contain: 1 person, sitting, tree, table, crowd and outdoor
Image may contain: 3 people, people sitting and outdoor
Image may contain: 5 people, people sitting, tree and outdoor
Image may contain: one or more people, people sitting and outdoor
Image may contain: 7 people, including Indira Palanichamy, crowd and outdoor
Image may contain: one or more people, people standing, shoes and outdoor
Image may contain: 4 people, people sitting, crowd, outdoor and indoor

Image may contain: 1 person, standing
Image may contain: 2 people, people sitting, table and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 5 people, people sitting, wedding, crowd and outdoor

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...