Thursday, July 25, 2019

பொது மேலாளருடன் நேர்காணல்

              நமது மாவட்ட சங்கம் இன்று தூத்துகுடியில் நமது மாவட்ட   முதன்மை பொது மேலாளர் அவர்களை சந்தித்தது. இன்றைய (25/07/2019) பேட்டியின்போது மாவட்ட  செயலருடன் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார், மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன், மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர் .இன்றைய பேட்டியின்போது  ஊழியர் நலம் சார்ந்த விஷயங்கள் மற்றும் வருமானத்தை அதிகரிப்பது விசயமாக பேசப்பட்டது. வரும் நாட்களில் நமது BSNLEU சங்கம் சிம் விற்பனை மற்றும் FTTH கொடுப்பது  விஷயங்களில் கவனம் செலுத்தும் என்று உறுதி அளித்தோம். கீழ் கண்ட விஷயங்களை விவாதித்து உள்ளோம்.
1.     Welfare சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு Nodal அதிகாரியாக திரு .செந்தில்குமார் AGM செயல்படுவார் .
2.     மருத்துவ சிகிச்சைக்கு referral வாங்குவதற்கு எந்த ஊரில் இருந்தும் தூத்துக்குடி அலுவலகத்திற்கு FAX அனுப்பி referral லெட்டர் தூத்துக்குடி intranet இல் வெளியிடப்படும் என்று GM உறுதி அளித்து உள்ளார் .அதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் .
3.     நமது மாவட்டத்தில் பணி நிறைவு பெறும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு  நிர்வாகத்தரப்பில் நடத்தப்படும் பணி நிறைவு விழா நமது மாவட்டத்திலேயே நடைபெறும் என்றும் அதை DGM (CFA), விருதுநகர் நடத்துவார் .
4.     பென்ஷன் பேப்பரை சமர்ப்பிக்கும் ஊழியர் தூத்துக்குடிக்கு அனுப்பும் முன்னர் அதை check பண்ணி கொடுக்கும் பொறுப்பு ஒரு கணக்கு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.
5.     சிவகாசி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கூடுதல் பணியாளர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தரைவழி இணைப்புகள், பிராட் பேண்டு  இணைப்புகள் மற்றும் circuits இருப்பதையும் வருமானத்தில் அதிகம் இருப்பதையும் சுட்டி காட்டி உள்ளோம். ஓய்வு வயது குறைப்பு என்று வந்தால் அங்கு ஒரு ஊழியர் தான் இருப்பார் என்று சுட்டி காட்டி உள்ளோம் .
6.     நெட்ஒர்க் பகுதியில் ஊழியர் பற்றாக்குறையை சுட்டி காட்டி உள்ளோம். ஊழியர்கள் உபரியாக உள்ள பகுதியையும் நாம் நிர்வாகத்தின்   கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். தொலைபேசி நிலையங்களில் உள்ள இணைப்புகளின் எண்ணிக்கை ,ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்ய பொது மேலாளர் துணை பொது மேலாளர் ,தூத்துக்குடி அவர்களுக்கு உத்தரவு இட்டுள்ளார் .
7.     சிவகாசி பகுதியில் ஒரு Transmission Team உருவாக்க பட வேண்டும் என பொது மேலாளரிடம் வலியுறுத்தப்பட்டது
8.     மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையான விஷயங்களை பொது மேலாளர் அவர்களிடம் கூறி இருக்கிறோம் .
9.      இலாகா குடியிருப்புகளில் வசிக்கும் 3rd பார்ட்டிகளிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் வசூல் செய்யாமல் இருப்பதை சுட்டி காட்டி உள்ளோம் .
10. EOI பகுதியில் உள்ள உபரி ஒப்பந்த ஊழியர்களை நெட்ஒர்க், லைன் ஒர்க், சேல்ஸ் மற்றும் CSC பகுதியில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் .
11.  பிசினஸ் ஏரியா  இணைப்பால் உபரியாக உள்ள ஊழியர் எண்ணிக்கையில் சில தவறுகளை சுட்டி காட்டி உள்ளோம், உபரி ஊழியர்களை பிற section களில் நியமனம் செய்வதை விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம் .
12.  மேளாக்கள் மற்றும் ரோடு ஷோக்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து சிம் களை வாங்கி விற்க வேண்டும் என நாம் கூறியதை நிர்வாகம் ஏற்று கொண்டு அதற்கான உத்தரவை பிறப்பித்து விட்டது.
நேர்காணலில் ஒத்துழைத்த பொது மேலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் நன்றிகள்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...