03.07.2019 அன்று SNEA பொதுச்செயலாளர் தோழர் K.செபாஸ்டின் தலைமையில் நடைபெற்ற AUAB கூட்டத்தில் BSNLEU, SNEA, AIBSNLEA, BSNL MS மற்றும் ATM சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். ALTTC மற்றும் இதர BSNLன் சொத்துக்களை DoT எடுத்துக் கொள்வதற்கு இந்தக் கூட்டம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் இந்தக் கூட்டத்தில் BSNLன் காலியிடங்கள், டவர்கள் மற்றும் ஃபைபர்கள் பணமாக்குவதில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை விவாதித்தது. அதன் பின்னர் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டன:-
# BSNLன் புத்தாக்கம் மற்றும் இதர சில பிரச்சனைகள் தொடர்பாக புதிய CMDஐ சந்தித்து விவாதிப்பது.
# BSNLன் வருவாயை அதிகரிக்க, BSNLல் பணியாற்றும் ஊழியர்களையும் அதிகாரிகளையும், “உங்கள் வாயிற்படியில் BSNL" இயக்கத்தை தீவிரப்படுத்த கேட்டுக் கொள்கிறது.
# BBNLன் பராமரிப்புகளை BSNL இடம் இருந்து எடுத்துக் கொண்டதை எதிர்த்து DoTக்கு கடிதம் எழுதுவது.
# AUABஐ சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும் படி, மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கும், தொலை தொடர்பு துறையின் செயலாளருக்கும் நினைவூட்டும் கடிதம் எழுதுவது.
AUABயின் முடிவுகளை முழுமையாக அமலாக்குவோம்.
No comments:
Post a Comment