Showing posts with label தர்ணா போராட்டம். Show all posts
Showing posts with label தர்ணா போராட்டம். Show all posts
Thursday, November 24, 2016
Wednesday, September 7, 2016
தர்ணா போராட்டம்
தர்ணா போராட்டம்
UNITED FORUM
Settle United Forum's 24 point charter of demands, including:-
- Immediate negotiations for Wage Revision w.e.f. 01.01.2017.
- Payment of Rs.7,000/- as adhoc PLI.
- Settle stagnation by granting annual stagnation increments.
- Implement DoP&T orders on promotions of SC/ST employees.
- Pension contribution of Directly Recruited employees.
Saturday, October 17, 2015
Wednesday, September 16, 2015
தர்ணா போராட்டம்
FORUM சார்பாக விருதுநகர் மாவட்டத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 6வரை தர்ணா போராட்டம் நடைபெற்றது .NFTE சங்க மாவட்ட செயலர் தோழர் .R சக்கணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தர்ணாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் . தோழர் சக்கணன் அவர்கள் தன் தலைமை உரையில் நமது ஒற்றுமையை வலிமைப்படுத்தி இயக்கங்களில் நமது ஊழியர் பங்களிப்பை அதிகபடுத்த வேண்டும் என்று கூறினார் .தர்ணா போராட்டத்தை BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கிவைத்து பேசுகையில் இந்த அரசு திட்டமிட்டு BSNL நிறுவனத்தை நலிவடைய செய்யும் முயற்சியே 20000 கோடி மதிப்பில் ஆன டவர்களை பிரித்து தனி நிறுவனம் ஆக்குவது மற்றும் பங்கு விற்பனை செய்யப்பட்ட MTNL நிறுவனத்தை வரும் டிசம்பர் மாதம் நம் நிறுவனத்தோடு இணைப்பது என்பதை நடைமுறைபடுத்துவது என்பதை விரிவாக விளக்கி பேசினார் .நமது கட்டமைப்பை மேம்படுத்தாமல் நமது நிறுவனம் 42000 கோடி வருவாயை வரும் 2017-2018 ஈட்டும் என்பது மிகைபடுத்தப்பட்ட ஒன்று என்பதையும் அவர் சுட்டி கட்டினார் . தர்ணாவில் பேசிய இளைய தோழர்கள் ஜேசுராஜா ,கோபிநாத் ,கேசவன் ஆகியோர் புதிய உணர்வோடு போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியத்தை கூறியது தர்ணா போராட்டத்திற்கு மெருகூட்டியது .SNEA , மாவட்ட செயலர் தோழர் செல்வராஜ் , திரு மாரியப்பன் ,AGM, திரு ராஜகோபால் ,AGM, ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்கள் அய்யாசாமி மற்றும் பெருமாள்சாமி ,BSNLEU மாவட்ட தலைவர் சமுத்திரகனி , பவுண்ராஜ் NFTE ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர் .இறுதியாக AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் இந்த டவர் நிறுவனம் உருவாகுவது என்பது உடனடியாக நடைபெறவில்லை .இதற்கான முயற்சி பல வருடங்களாக நடைபெற்று வருவதையும் ,1990-91 இல் புதிய பொருளாதார கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டவுடன் நடை பெறும் நிகழ்ச்சியின் ஒரு பகுதி தான் இது என்பதை உதாரணங்களுடன் கூறினார் . தொடர் போராட்டங்களின் விளைவாக நமது BSNL நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக காப்பாற்றபட்டு உள்ளதையும் ,கடும் நஷ்டத்தில் உள்ள போது கூட அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் TTA தோழர்களின் ஊதிய இழப்பு பிரச்சனையில் ஒரு சின்ன முன்னேற்றம் ஆகியவற்றை தன பேச்சில் குறிப்பிட்டார் .தோழர் இளமாறனின் அதிரடி கோஷங்களுடன் ஒரு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தோடு தர்ணா போராட்டம் நிறைவு பெற்றது .



Thursday, January 8, 2015
3 ஆம் நாள் தர்ணா போராட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் Forum சார்பாக அகில இந்திய அளவில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக 3 ஆம் நாள் தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் R.முனியசாமி தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்புரையாக CITU செயலர் தோழர் அசோகன் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். கடந்த இரண்டு நாட்களைவிட இன்று தர்ணாவில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். AIBSNLEA சங்கத்தை சேர்ந்த கணக்கு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். ஒப்பந்த ஊழியர்கள் இன்று பெருமளவில் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.




Wednesday, January 7, 2015
2 ஆம் நாள் தர்ணா போராட்டம்
BSNL ஐ பாதுகாக்க Forum சார்பாக விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆம் நாள் தர்ணா போராட்டம் தோழர் M.மாரியப்பன், SNEA, மாவட்ட தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர் தங்கவேலு, SNEA தர்ணா போராட்டத்தை முறையாக துவக்கி வைத்தார். தோழர் வெங்கடேஷ், BSNLEU மாவட்ட உதவி செயலர், திரு. T.ராதாகிருஷ்ணன், மாநிலச் சங்க நிர்வாகி, AIBSNLEA, தோழர் கண்ணன், BSNLEU, மாவட்ட உதவி தலைவர், தோழர் அஸ்ரப் தீன், திரு விக்டர் சாம்சன், SDE ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
















































