Thursday, January 31, 2019

சுற்றறிக்கை எண்:-126

சுற்றறிக்கை எண்:-126:-படிக்க Click Here

தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் AUAB சந்திப்பு

AUAB தலைவர்கள் மற்றும் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் ஆகியோர் இடையேயான சந்திப்பு இன்று (30.01.2019) நடைபெற்றது. COMMITTEE OF PERIODIC INTERACTIONல் உள்ள AUAB பிரதிநிதிகளான தோழர் P.அபிமன்யு GS BSNLEU & CONVENOR AUAB, தோழர் சந்தேஸ்வர் சிங் GS NFTE & CHAIRMAN AUAB, தோழர் K.செபாஸ்டின் GS SNEA மற்றும் தோழர் பிரகலாத்ராய் GS AIBSNLEA ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தொலை தொடர்பு துறையின் சார்பில் திரு R.K.கண்டேல்வால் Joint Secretary(Admn.), திரு S.K.ஜெய்ன் DDG (Estt.), திரு ராஜிவ் குமார் DDG (Budget) ஆகியோரும் பங்கு பெற்றனர். திருமிகு சுஜாதா T.ரே, Director (HR) மற்றும் திரு A.M.குப்தா, GM(SR), ஆகியோர் BSNL சார்பாக பங்கு பெற்றனர். 3வது ஊதிய மாற்றம், 4G அலைக்கற்றை ஒதுக்கீடு, வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. 3வது ஊதிய மாற்ற பிரச்சனையில், 5% ஊதிய நிர்ணய பலனுடன் ஊதியமாற்றத்தை தொலை தொடர்பு துறை முன்மொழிந்தது. AUAB இதனை ஏற்றுக் கொண்டால், 05.02.2019ல் நடைபெற உள்ள டிஜிட்டல் கமிஷன் (பழைய டெலிகாம் கமிஷன்) கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, அதன் பின் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என தொலை தொடர்பு துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 5% ஊதிய நிர்ணய பலன் என்பது மிக மிக குறைவு என்பதால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என AUAB தெரிவித்து விட்டது. அதன் பின்னர், AUAB மீண்டும் BSNL CMDஉடன் விவாதித்து விட்டு ஓரிரு தினங்களில் மீண்டும் வந்து தன்னை சந்திக்கும்படி தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் ஆலோசனை வழங்கினார். 03.12.2018 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 15% ஊதிய நிர்ணய பலன் தருவதற்கு சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்ததை நாம் நினைவு கூற வேண்டும். மேலும் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் நடைபெற்ற கடந்த கூட்டத்தில் 0% ஊதிய நிர்ணய பலனை தொலை தொடர்பு துறையின் சார்பாக முன்மொழியப்பட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களின் புத்தாக்கம்/ மறு கட்டமைப்பு ஆகியவற்றை பரிசீலிக்க 2019, பிப்ரவரி 5ஆம் தேதி டிஜிடெல் கமிஷ(பழைய டெலிகாம் கமிஷன்)னின் கூட்டம் நடைபெற உள்ளது

நேற்றைய தினம் AUAB மற்றும் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, 2019 பிப்ரவரி 5ஆம் தேதி டிஜிடல் கமிஷனின் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் புத்தாக்கம்/ மறு கட்டமைப்பு ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்படும். BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதில் ஒப்புதல் வழங்கப்பட்டால், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு செல்லும். நிதி ஆயோக்கின் பிரதிநிதியாக அதன் நிதிச் செயலாளர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

UAB மற்றும் CMD BSNL இடையே சந்திப்பு

தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரோடு 30.01.2019 நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUAB பிரதிநிதிகள் CMD BSNLஐ சந்தித்து விவாதித்தனர். மனிதவள இயக்குனரும் உடன் இருந்தார். BSNLன் புத்தாக்கம் தொடர்பாக தொலை தொடர்பு துறைக்கு ஒரு விளக்கத்தை BSNL CMD வழங்க உள்ளார். இந்த பின்னணியில் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் முன்மொழிந்த 5% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய 3வது ஊதிய மாற்றம் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது என AUAB தலைவர்கள் CMD BSNL இடம் தெரிவித்தனர். ஊழியர்களுக்கு 15% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றம் வழங்கப்பட வேண்டும் என BSNL CMDயை தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

Tuesday, January 29, 2019

நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளார்

2 நாட்களாக தொடர்ந்து மாவட்ட செயலர் ,மாவட்ட  தலைவர் மற்றும் மாநில சங்க நிர்வாகி சமுத்திரக்கனி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் விளைவாக தோழர் திரு நாராயணன் அவர்கள் மீண்டும் காக்கிவாடன்பட்டி தொலை பேசி  நிலையத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் .ஆனால் எரிச்சநத்தம் தொலை  பேசி நிலையத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர் மூர்த்தி அவர்கள் மீண்டும் பணி நியமனம் செய்வதில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தவறான தகவல்களை மாநில நிர்வாகத்திற்கு கொடுத்து உள்ளது .அதனால் அவர் நியமனத்தில் உள்ள தடைகளை உடைக்க வரும் 05/02/2019 அன்று நமது தமிழ்  மாநில  செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளார் .நமது தமிழ் மாநில சங்கம் இப் பிரச்சனையை கையில் எடுப்பதால் 2 நாட்களாக தொடர்ந்து  மாவட்ட செயலர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது . இரண்டு நாள் போராட்டத்தில் உற்சாகமாக ,தீரமாக பங்கேற்ற அத்துணை தோழியர்களுக்கும் தோழர்களுக்கும்   புரட்சிகர  நல்  வாழ்த்துக்கள் .

Friday, January 25, 2019

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 
மல்லி செக்யூரிட்டி நிறுவனம் 2 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை மாநில மட்டத்தில் GM (SR ) அவர்களிடம் நமது உதவி அனைத்திந்திய பொது செயலர் ,மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுட்டிக்காட்டி பேசியபோது 1 வார கால அவகாசத்தில் விருதுநகர் முதன்மை பொது மேலாளர் தீர்வு காண்பார் என்று கூறி இன்றுடன் 1 வார அவகாசம் முடிந்தது .நிர்வாகத்தோடு கூட பேச மாட்டேன் என்று அந்த நிறுவனம் சர்வாதிகாரமாக நடப்பதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது .2 ஊழியர்களை மீண்டும் பணிக்கு அனுமதித்து உத்தரவு வரும் வரை மாவட்ட செயலர் ரவீந்திரன்  28/01/2019 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளார். இப் போராட்டத்தில் நமது தமிழ் மாநில செயலர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்களும் இணைய  உள்ளார் .அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் சரியாக காலை 10 மணிக்கு PGM அலுவலகம் முன் திரளுமாறு தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .

Thursday, January 24, 2019

ஜனவரி 8, 9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை

ஜனவரி 8, 9 தேசம் தழுவிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 286  ஊழியர்களில் 122 பேர் வேலைநிறுத்தத்தில் பதிவு செய்துள்ளனர் . அந்த 122 போராளிகளுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் . மேற்கூறிய வேலைநிறுத்தம் அன்று விடுப்பு எடுத்த ஊழியர்கள் எண்ணிக்கை 75. பணியில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 89. வேலை நிறுத்தம் செய்த 122 ஊழியர்களில் 116 பேர் நமது BSNLEU ஊழியர்கள் .5 பேர் NFTE ஊழியர்கள் .1 பெண் ஊழியர் சேவா சங்கத்தை சேர்ந்தவர் .கிளை வாயிலாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற நமது ஊழியர்கள் எண்ணிக்கை .

 Branch      Total members        Strike                         லீவு                    டூட்டி  
GM (O)              31                     25                                3                            3
Sivakasi             42                     31                                7                            4
Rajapalayam      39                     19                               17                           3
Aruppukottai      10                       7                                 2                           1
Sattur                  12                     10                                 1                           1
VGR O/D           14                      11                                2                           1
Srivilliputhur      17                      13                                3                           1  
_________________________________________________________________
Total                 165                     116                             35                          14
--------------------------------------------------------------------------------------------------
Strike %
BSNLEU        = 70.30%
NFTE              =  4.80%
கிளை ரீதியாக % நமது ஊழியர்கள் பங்கேற்பு
GM office branch  = 80.64%
சாத்தூர்    = 83.33%
அருப்புக்கோட்டை     =70%
சிவகாசி                          =75.47%
ஸ்ரீவில்லிபுத்தூர்           =76.47%
VGR O/D Branch                =78.57%
ராஜபாளையம்             =48.71%
 ஒட்டு மொத்த மாவட்ட அளவில் :
Strike :- 42.65%
Leave :-26.22%
duty   :- 31.11%
நமது மாவட்ட சங்க நிர்வாகியாக இருந்தவரும் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் JTO ஆக பணி புரியும் தோழர் அஷ்ரப் தீன் இந்த தேச பாதுகாப்பு போராட்டத்தில் பங்கேற்று பதிவு செய்ததை மாவட்ட சங்கம் நெஞ்சார பாராட்டுகிறது 

2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்ற தோழர்களை JE இலாகா தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்- BSNLEU கோரிக்கை

+2 முடிக்காமல் நேரடியாக பட்ட பெற்றவர்களை JE இலாகா தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என ஹைதராபாத் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை பெற்ற தோழர்களுக்கு கடந்த JE இலாகா தேர்வில், இந்த தீர்ப்பு அமலாக்கப்பட்டு விட்டது. இந்த நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்காலத்தில் வரும் JE இலாகா தேர்விலும் அமல்படுத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் 37ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்தில் எழுப்பியது. அப்போது அந்த பிரச்சனையை கார்ப்பரேட் அலுவலகத்தின் ESTABLISHMENT பிரிவில் விவாதிக்கலாம் என பதிலளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர் வரும் JE இலாகா தேர்வுகளிலும் அமலாக்க வேண்டும் என 23.01.2019 அன்று Sr.GM(Est) அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

10,000 கோடி ரூபாய் அலைக்கற்றை கட்டணத்தைக் கட்ட வோடோபோன் ஐடியா நிறுவனம் இரண்டு ஆண்டு காலம் கழித்து கட்ட அனுமதி கோரியுள்ளது.

வோடோபோன் ஐடியா நிறுவனம் கட்ட வேண்டிய வருடாந்திர அலைக்கற்றை கட்டணம் 10,000 கோடி ரூபாயை இரண்டு ஆண்டு காலம் கழித்து கட்டுவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. அந்த நிறுவனம் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இவ்வாறு கோரியுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இதே கோரிக்கையை COAI என்கிற CELLULAR OPERATOR ASSOCIATIONS OF INDIAவும் முதலிலேயே கோரியுள்ளது. இதே போன்ற கோரிக்கையை ASSOCHAMம் ஏற்கனவே முன்வைத்துள்ளது.

Friday, January 18, 2019

உண்ணாவிரதப்போராட்டம் ஒத்திவைப்பு

மல்லி செக்யூரிட்டி நிறுவனம் காக்கிவாடன்பட்டியில் பணி புரிந்த தோழர் திருநாராயணன் அவர்களையும் எரிச்சநத்தம் தொலைபேசி நிலைய காவல் பணி புரிந்த தோழர் மூர்த்தி என்பவரையும் தன்னிச்சையாக பணி நீக்கம் செய்ததை எதிர்த்து மாவட்ட செயலர் 21/01/2019 முதல் தொடங்க இருந்த  உண்ணாவிரதப்போராட்டம் , இன்று நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பா மற்றும் TNTCWU சங்க மாநில தலைவர் தோழர் முருகையா அவர்களும் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் GM (SR) அவர்களுடன் நடத்திய   பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் ,நமது மாவட்ட முதன்மை பொது மேலாளர் வரும் வாரத்தில் இப் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என்று நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பா அவர்களிடம் கொடுத்த உறுதி மொழியின் அடிப்படையிலும்  ஒத்திவைக்கப்பட்டு உள்ளது .
அடுத்தவாரம் பிரச்சனை தீரவில்லை என்றால் நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன்  தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நமது முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெறும் .

Monday, January 14, 2019

ஒப்பந்த ஊழியர்களை தான்தோன்றித்தனமாக வேலைநீக்கம் செய்யும் மல்லி செக்யூரிட்டி நிறுவனம்

தொழிலாளர் சட்டங்களை காலில் போட்டு மிதிக்கும் மல்லி செக்யூரிட்டி நிறுவனம் 
காக்கிவாடன் பட்டி தொலைபேசி நிலையத்தில் செக்யூரிட்டி பணி புரிந்த திருநாராயணன் என்பவரை நீக்கி விட்டு தற்போது புதிதாக ஹரி என்பவரை நியமித்து உள்ளது .அதுவும் இரண்டாவது சனிக்கிழமை அலுவலகம் விடுமுறை என்றபோதிலும் அந்த நிறுவனம் பிறப்பித்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் அவசர அவசரமாக  ஏற்று கொள்ள  வேண்டிய அவசியம் என்ன. எரிச்சநத்தம் தொலை பேசி நிலையத்தில் 1-10-2017 க்கு பிறகு  புதிதாக பணிக்கு வந்த ஒரு நபரை கார்பொரேட் அலுவலக உத்தரவை மீறி பணிக்கு சேர்த்த அவசியம் என்ன ? நீ ஆடு .நான் நடிப்பது போல் நடிக்கிறேன் என்ற பாணியில் மாவட்ட நிர்வாகம் கண்ணை மூடிக்கொண்டு மௌனம் சாதிக்கிறது . இந்த  நிறுவனம் தற்போது 2 ஊழியர்களை பலி வாங்கி உள்ளது .மாநில சங்கத்திற்கு இன்று இந்த தகவலை சொல்லி இருக்கிறோம் . GM (SR ) அவர்களை சந்தித்த பின் மாநில சங்க வழிகாட்டலின் படி ஒரு போராட்டத்தை மாவட்ட சங்கம் நடத்தும் .

Thursday, January 10, 2019

உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

மல்லி செக்யூரிட்டி நிறுவனம் தன்னிச்சையாக ஒரு ஊழியரை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து இன்று மாவட்ட சங்கம் தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாநில சங்க வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக்கப்பட்டு உள்ளது . மீண்டும் உண்ணாவிரத போராட்டம் வரும் 21/01/2019 அன்று முதன்மை மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மிக பிரமாண்டமாக நடைபெறும் .

தொழிலார் விரோத போக்கை கையாளும் மல்லி செக்யூரிட்டி நிறுவனம்

காக்கிவாடான்பட்டியில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக செக்யூரிட்டி பணி செய்த திருநாராயணன்  என்ற ஊழியரை எந்தவித தகவலும் இன்றி பணி நீக்கம் செய்து  புதிதாக ஒரு ஊழியரை (அதுவும் காலையில் ஓட்டுநராகவும் இரவில் செக்யூரிட்டி ஆகவும் இரட்டை பணி) அதுவும் குற்ற பின்னணி உள்ளவரை பணிக்கு அமர்த்திய மல்லி செக்யூரிட்டி நிறுவனத்தின் அடாவடி போக்கை பல முறை நிர்வாகத்தோடு பேசியும் நிர்வாகம் அந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்யும் போக்கை கண்டித்து மாவட்ட செயலர் வரும் 10 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளார் . இப் பிரச்சனையை மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் .ஏற்கனவே இந்த நிறுவனம் இன்னோவேடிவ் நிறுவனம் போல் ஊழியர்களுக்கான EPF ,ESI பணத்தை முறையாக செலுத்தாததால் நாகர்கோயில் மாவட்டத்தில் show cause நோட்டீஸ் இந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது . எல்லாம் தெரிந்தும் மாவட்ட நிர்வாகம் மௌனம் காப்பது யாரை காப்பாற்ற என்று தெரியவில்லை . 
தொடர் உண்ணாவிரத போராட்டம் 
 10/01/2019 காலை 1000 மணி 
அணி திரள்வோம் . மல்லி  செக்யூரிட்டி நிறுவனத்தின் அடாவடி போக்கை கண்டித்து 

Saturday, January 5, 2019

ஜனவரி 8,9 வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் வரும் ஜனவரி 8,9 தேதிகளில் நடைபெற இருக்கும் பொது வேலை நிறுத்த விளக்க  கூட்டங்கள் நடைபெற்று  வருகின்றன . டிசம்பர் 29 ஆம் தேதி காலையில் சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார் .கிளை செயலர் காதர் அவர்கள் முன்னிலை வகிக்க ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் விளக்க உரை நிகழ்த்தினார் .மாலை ராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் தியாகராஜன் தலைமை வகிக்க தோழர் ராதாகிருஷ்ணன்  வரவேற்புரை நிகழ்த்தினார் . ஜனவரி 8,9 வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றியும் ,அதை வெற்றி  செய்யவேண்டிய நோக்கத்தையும் மாவட்ட செயலர் ரவீந்திரன்  விரிவாக பேசினார் . டிசம்பர் 3 முதல் AUAB சார்பாக நடைபெற இருந்த  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஓத்தி வைத்த  காரணங்கள் பற்றி மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி பேசினார் .நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாடு முடிவுகள் ,அது நடைபெற்ற அம்சங்கள் பற்றி மாவட்ட தலைவர் தோழர் .ஜெயக்குமார் பேசினார் .ஒப்பந்த ஊழியர் சங்க பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் .வேலுச்சாமி ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார் .மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளை பிள்ளையார் நன்றி நவின்றார் . அதே போல் சிவகாசியில் 31/12/2018 அன்று காலை 10 மணிக்கு  நுழை வாயிற் கூட்டமாக நடைபெற்றது .அதற்கு தோழர் ராஜையா ,கிளை தலைவர் தலைமை வகித்தார் .இங்கும் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி பேசினர் .கிளை பொருளாளரும் ,மாவட்ட சங்க நிர்வாகியுமான தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் அன்று மதியம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  நடைபெற்ற கூட்டத்திற்கு ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் .இங்கு தோழர்கள் வெங்கடசாமி ,ரவீந்திரன் , சமுத்திரக்கனி ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர் .GM அலுவலகத்தில் 01/01/2019 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் சிங்காரவேல் தலைமை வகித்தார் . ஆய்படு பொருளை சமர்ப்பித்து கிளை செயலர்கள் தோழர்கள்  இளமாறன் மற்றும் மாரிமுத்து பேசினர் .ஜனவரி 8,9 வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றியும் ,அதை வெற்றி  செய்யவேண்டிய நோக்கத்தையும் மாவட்ட செயலர் ரவீந்திரன்  விரிவாக பேசினார் .நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாடு முடிவுகள் ,அது நடைபெற்ற அம்சங்கள் பற்றி மாவட்ட தலைவர் தோழர் .ஜெயக்குமார் பேசினார் .மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் நன்றி நவின்றார் .02/01/2019 அன்று அருப்புக்கோட்டை கிளை கூட்டத்திற்கு தோழர் உதயகுமார் தலைமை தாங்கினார் .இங்கு போராட்டத்தை விளக்கி தோழர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார் ,மதிகண்ணன் ஆகியோர் பேசினர் .
Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: 11 people, including Lazar Jesumariyan, people sitting, crowd and outdoor
Image may contain: 3 people, including Braja Braja, people sitting, people standing and outdoor
Image may contain: one or more people, crowd, wedding and outdoor
Image may contain: 4 people, tree, crowd and outdoor
Image may contain: 8 people, including SubbaRao Akula Bsnl Kadapa and Mani Pattabi, people sitting and people standing
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 4 people, including Chandrasekar Selvi, people smiling, people standing
Image may contain: 5 people, including Putumbaka Asokababu, people standing, tree, child and outdoor
Image may contain: 2 people, people smiling, people sitting, table, child, tree and outdoor
Image may contain: 1 person, outdoor
Image may contain: 2 people, crowd and outdoor
Image may contain: 4 people, including K S Vasan, crowd and outdoor
Image may contain: 3 people, people sitting
Image may contain: one or more people, people sitting and outdoor

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...