மல்லி செக்யூரிட்டி நிறுவனம் காக்கிவாடன்பட்டியில் பணி புரிந்த தோழர் திருநாராயணன் அவர்களையும் எரிச்சநத்தம் தொலைபேசி நிலைய காவல் பணி புரிந்த தோழர் மூர்த்தி என்பவரையும் தன்னிச்சையாக பணி நீக்கம் செய்ததை எதிர்த்து மாவட்ட செயலர் 21/01/2019 முதல் தொடங்க இருந்த உண்ணாவிரதப்போராட்டம் , இன்று நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பா மற்றும் TNTCWU சங்க மாநில தலைவர் தோழர் முருகையா அவர்களும் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் GM (SR) அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் ,நமது மாவட்ட முதன்மை பொது மேலாளர் வரும் வாரத்தில் இப் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என்று நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பா அவர்களிடம் கொடுத்த உறுதி மொழியின் அடிப்படையிலும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது .
அடுத்தவாரம் பிரச்சனை தீரவில்லை என்றால் நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நமது முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெறும் .
No comments:
Post a Comment