தொழிலாளர் சட்டங்களை காலில் போட்டு மிதிக்கும் மல்லி செக்யூரிட்டி நிறுவனம்
காக்கிவாடன் பட்டி தொலைபேசி நிலையத்தில் செக்யூரிட்டி பணி புரிந்த திருநாராயணன் என்பவரை நீக்கி விட்டு தற்போது புதிதாக ஹரி என்பவரை நியமித்து உள்ளது .அதுவும் இரண்டாவது சனிக்கிழமை அலுவலகம் விடுமுறை என்றபோதிலும் அந்த நிறுவனம் பிறப்பித்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் அவசர அவசரமாக ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் என்ன. எரிச்சநத்தம் தொலை பேசி நிலையத்தில் 1-10-2017 க்கு பிறகு புதிதாக பணிக்கு வந்த ஒரு நபரை கார்பொரேட் அலுவலக உத்தரவை மீறி பணிக்கு சேர்த்த அவசியம் என்ன ? நீ ஆடு .நான் நடிப்பது போல் நடிக்கிறேன் என்ற பாணியில் மாவட்ட நிர்வாகம் கண்ணை மூடிக்கொண்டு மௌனம் சாதிக்கிறது . இந்த நிறுவனம் தற்போது 2 ஊழியர்களை பலி வாங்கி உள்ளது .மாநில சங்கத்திற்கு இன்று இந்த தகவலை சொல்லி இருக்கிறோம் . GM (SR ) அவர்களை சந்தித்த பின் மாநில சங்க வழிகாட்டலின் படி ஒரு போராட்டத்தை மாவட்ட சங்கம் நடத்தும் .
No comments:
Post a Comment