Thursday, December 26, 2019

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VRS கொடுத்த தோழர்கள் ரவீந்திரன் ,கண்ணன் ,சிங்காரவேலு ,வெள்ளைப்பிள்ளையார்  மற்றும் பாஸ்கரன் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர் .பொறுப்பு மாவட்ட செயலராக தோழர் சமுத்திரக்கனி அவர்களும் ,பொறுப்பு மாவட்ட பொருளாராக தோழர் இளமாறன் அவர்களும் உதவி மாவட்ட செயலராக தோழர் முத்துச்சாமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .மாவட்ட மாநாட்டை வரும் மார்ச் 2020 இல் நடத்துவது என்றும் கிளை மாநாடுகளை வரும் ஜனவரி மாதத்திற்குள் நடத்தவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது .இந்த கூட்டத்தில் மாவட்ட உதவி பொருளர் தோழர்  மாரியப்பா வரும் 31/12/2019 அன்று பணி நிறைவை ஒட்டி  பாராட்டப்பட்டார் .புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டுக்கள் .இக் கூட்டத்தில் சிறப்புரையாக தோழர்கள் பாபு ராதாகிருஷ்ணன் ,மாநில செயலர் தமிழ் மாநிலம் மற்றும் சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலாளர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர் .இக் கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் முத்துசாமி அவர்களும்  பங்கேற்றார் கடந்த மாநாட்டில் இருந்து தற்போது 24/12/2019 வரையில் ஆன நிதி நிலை அறிக்கையை மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் சமர்ப்பித்தார் . 
Image may contain: 2 people
Image may contain: 4 people, people standing
Image may contain: 5 people, including Lazar Jesumariyan, people smiling, people standing
Image may contain: 4 people, people sitting
Image may contain: 4 people, people sitting and indoor
Image may contain: 5 people, including Ravi Indran and Prsr Rajamanickam, people smiling, people standing and indoor

Wednesday, December 18, 2019

11 வது மாவட்ட செயற்குழு

அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது .அனைவரும் தவறாது காலை 10 மணிக்கு சங்க அலுவலகத்தில்  சங்கமிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் .
ஆய்படு பொருள் :- 
1.மாறிவரும் சூழலில் மாவட்ட சங்கத்தை வழிநடத்த புதிய பொறுப்பாளர்கள் தேர்வு .
2. மாவட்ட சங்க நிர்வாகி தோழர் A .மாரியப்பா   அவர்களுக்கு பணி நிறைவு  பாராட்டு 
2. ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் 
3. நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தல் 
4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
                              மாவட்ட சங்கம்,, விருதுநகர் 

Tuesday, October 15, 2019

அஞ்சலி

நமது அஞ்சலி BSNLEU சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் முன்னாள் செயலரும் நமது மாவட்ட சங்க நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்த அன்பு தோழர் K .சமுத்திரம் அவர்கள் உடல் நல குறைவால் இன்று காலமானார் அவருக்கு நமது மாவட்ட சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்குகிறோம் .

Thursday, October 10, 2019

9 வது மாவட்ட செயற்குழு

இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி முறையாக மாவட்ட செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் . மாவட்ட செயலர் சமர்பித்த ஆய்வறிக்கை மீது விரிவான விவாதம் நடைபெற்றது . பிரச்சனைகளை தொகுத்து மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் பேசினார் . விவாத குறிப்பின் மேல் நடைபெற்ற விவாததிற்கு மாவட்ட செயலர் பதிலளித்தார் . தொகுக்கப்பட்ட  பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்பித்து உரிய தேதியை கேட்டு முதன்மை பொதுமேலாளரை பேட்டி காண்பது என்று முடிவெடுக்கப்பட்டது .லோக்கல் கவுன்ஸில் உறுப்பினர்களாக தோழர்கள் ரவீந்திரன் , சமுத்திரகனி , ஜெயக்குமார் , கணேசமூர்த்தி , இளமாறன் , காதர்மொய்தீன் , தங்கதுரை மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர் .ராஜபாளையம் தோழர் பிச்சை அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா இன்றைய மாவட்ட செயற்குழுவில் நடைபெற்றது .தோழரின் சேவைகளை பாராட்டி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன்,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் கண்ணன் மற்றும் வெள்ளை பிள்ளையார் ,தோழர் பொன்ராஜ் மற்றும் முருகன் ஆகியோர் பேசினர் .மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவருக்கு பொன்னாடை போர்த்தி கவரவித்தார் .மாவட்ட சங்கம் சார்பாக ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது .
Image may contain: 4 people
Image may contain: 1 person, sitting
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: one or more people and people sitting
Image may contain: 2 people, people sitting
Image may contain: 1 person, standing and indoor
Image may contain: 5 people, including Lazar Jesumariyan, people standing and indoor
Image may contain: 1 person
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 4 people, people sitting
Image may contain: 3 people, including மதி கண்ணன், people sitting

Wednesday, October 9, 2019

07.10.2019 அன்று நடைபெற்ற UAB கூட்ட முடிவுகள்

7.10.2019 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் BSNLEU, SENA, AIBSNLEA, AIGETOA, FNTO, BSNL MS, AIBSNL OA, BSNL ATM மற்றும் BSNL OA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் பங்கு பெற்றனர். அந்தக் கூட்டத்திற்கு SNEA சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் K.செபாஸ்டின் தலைமை தாங்கினார். நிரந்தர ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாதது, ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் வழங்காதது, மின் கட்டணம் கட்டாதது, மேலும் BSNLன் புத்தாக்கம் ஆகிய பிரச்சனைகளை அந்தக் கூட்டம் பரிசீலித்தது. மேலும் கால தாமதப்படுத்தாமல் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசிய தேவை உள்ளதென இந்தக் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது. போராட்டம் மற்றும் பிரச்சாரங்களின் பல்வேறு வடிவங்களும் இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இறுதியாக, இதர சங்கங்களுடன் கலந்தாலோசித்து விட்டு அடுத்த கட்ட இயக்கங்களை 11.10.2019 அன்று அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

9 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

விருதுநகர் பி எஸ் என் எல்  ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு  கொள்கிறோம் . 
ஆய்படு பொருள் :-
1. 8 வது உறுப்பினர் சரிபார்ப்பு ஓர் ஆய்வு .
2. லோக்கல் கவுன்சில் உறுப்பினர்கள்  தேர்வு 
3.லோக்கல் கவுன்சில்லில் கொடுக்க படவேண்டிய  பிரச்சனைகள் 
4. ஸ்தல மட்ட பிரச்சனைகள் 
5.ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் 
6. பணி நிறைவு பாராட்டு 
7. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 

Thursday, September 19, 2019

சதிகளையும், துரோகங்களையும் மீறி BSNL ஊழியர் சங்கம் , 7ஆவது முறையாக தொடர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.


தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக நடைபெற்றுள்ள தேர்தலில், 7வது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரலாற்று சாதனையை மீண்டும் ஒரு முறையை BSNL ஊழியர் சங்கம் படைத்துள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும், சதிகளையும் துரோகங்களையும் தாண்டி இந்த மகத்தான வெற்றியை நமது சங்கம் பெற்றுள்ளது. BSNL நிறுவனத்தையும், அதன் ஊழியர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் ஒரே சங்கம் BSNL ஊழியர் சங்கம் தான் என பெரும்பாலான ஊழியர்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி பறை சாற்றுகிறது. 
கடந்த இரண்டு மாதங்களாக, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய, மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளும், முன்னணி ஊழியர்களும், TNTCWU மற்றும் AIBDPA தலைவர்களும் கடுமையாக செய்திட்ட தேர்தல் பணிகளின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. அத்தனை தோழர்களையும் தமிழ் மாநில சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 
அனைத்திற்கும் மேலாக நமது சங்கத்தின் தலைமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாக்களித்து வரும் அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராடுதல்களையும், நன்றிகளையும் உரித்தக்கிக் கொள்கிறது.

Wednesday, September 18, 2019

விருதுநகர் மாவட்டத்தில் BSNLEU சங்கம் தொடர்ந்து 5 வது முறையாக வெற்றி

8 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் தொடர்ந்து 5 வது முறையாக விருதுநகர் மாவட்டத்தில்  வாகை சூடியது .இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நமது சங்கம் 27 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது .கடும் அவதூறு பிரச்சாரம் நமது சங்கத்தின் மீது வீசப்பட்டாலும் கொள்கை உறுதியோடு நமக்கு வாக்கு அளித்த ஊழியர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த  நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
மொத்த வாக்குகள்   = 260
பதிவானவை              = 256
BSNLEU                           = 137 
NFTE                                =  110
Invalid                               =      4
BTU                                   =      1
ATM                                  =      1 
BSNLDEU                         =      1
BSNL EC                           =      1
TEPU                                  =      1       



Tuesday, September 17, 2019

மாவட்ட வாரியாக வாக்கு பதிவு விவரங்கள்


 மாவட்ட வாரியாக வாக்கு பதிவு விவரங்கள் 

8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் விருதுநகர் மாவட்ட வாக்கு பதிவு  விவரம் 
மொத்த வாக்கு = 260
பதிவான வாக்கு =256
பூத்  வாரியாக வாக்கு பதிவு விவரம் 
அருப்புக்கோட்டை 
மொத்த வாக்கு = 37
பதிவான வாக்கு =35
தபால் வாக்கு = 1
ஸ்ரீவில்லிபுத்தூர் 
மொத்த வாக்கு = 26
பதிவான வாக்கு =26
விருதுநகர் 
மொத்த வாக்கு = 90
பதிவான வாக்கு = 88
சிவகாசி 
மொத்த வாக்கு =64
பதிவான வாக்கு =64
ராஜபாளையம் 
மொத்த வாக்கு = 43
பதிவான வாக்கு =42
ஜனநாயக முறையில் தங்கள் உரிமையை பதிவு செய்த அத்துணை ஊழியர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் 

Saturday, September 14, 2019

தேர்தல் சிறப்பு கூட்டம்

No photo description available.
13/09/2019 அன்று ராஜபாளையம் நகரில் நமது BSNLEU சங்கம் சார்பாக தேர்தல் சிறப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தோழர் வெள்ளைப்பிள்ளையார் வரவேற்பு உரை நிகழ்த்தினார் . தொடக்க உரையாக தோழர் ரவீந்திரன் மாவட்ட செயலர் பேசினார் .தேர்தல் விளக்க  உரையாக மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் , மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் விரிவாக பேசினர் .BSNL நிறுவனம் தற்போது எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் ,மத்திய அரசு BSNL நிறுவனத்தை முடக்க நினைக்கும் போக்கு ,ஒற்றுமையை உருவாக்கி தொடர் இயக்கங்கள் நடத்தி நிறுவனத்தை காப்பதற்கு நமது சங்க முயற்சிகளை  விரிவாக விளக்கினார்கள் .VRS ,ஓய்வு வயது குறைப்பு என்பது நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிதான் என்பதை சுட்டி காட்டினார்கள். 2000 ம் ஆண்டு BSNL நிறுவனம்  உருவாக்கப்பட்ட போதே நமது K G போஸ் அணி எச்சரிக்கை செய்தது , நிறுவனமாக மாறும் போது இன்று நாம் இழப்பதை 19 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கூறினோம் ,ஆனால் அன்று அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக இருந்த NFTE, FNTO மற்றும் BTEU சங்கங்கள் 1000 ரூபாய் கிடைத்தவுடன் , 2 பைசாவுக்கு வடை விற்கும் ,5 பைசாவுக்கு டீ விற்கும் ,விமானத்தில் பறக்கலாம் என்று வாய் சவடால் பேசி நிறுவனமாக மாறியதை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்றனர் .தற்போது ஜியோ  நிறுவனத்தின் போட்டியால் நமது வருமானம் 32000 கோடியில் இருந்து 18000 கோடியாக குறைந்ததால் கடும் நெருக்கடியை நமது நிறுவனமும் ,ஊழியர்களும் சந்தித்து கொண்டு உள்ளனர் .BSNL நிறுவனத்தை மத்திய அரசு புறக்கணிப்பதை எதிர்த்து மக்கள் மத்தியில் நாம் தெருமுனை பிரச்சாரம் மூலம் கொண்டு சென்றோம் .மக்களவை பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினோம் .NFTE சங்கம் இது போன்ற இயங்கங்களில் ஒரு போதும் கலந்து கொண்டது இல்லை .ஆகஸ்ட் மாத சம்பளம் இதுவரை பட்டுவாடா செய்யாததை எதிர்த்து உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம் .அதெற்கெல்லாம் இயக்கம் நடத்தாத NFTE சங்கம் சம்பளம் போடாமல் இருப்பதற்கும் நமது சங்கம் தான்  காரணம் என்று அவதூறு பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்க அலையும் அசிங்கத்தை சுட்டி காட்டினோம் ,நமக்கு இருக்கும் அதே அங்கீகாரம் தான் அவர்களுக்கும் இருக்கிறது .அதிரடி போராட்டம் நடத்த வேண்டியது தானே .இரை தேட வரும் உயிரினங்கள் போல இவர்கள் ஓட்டு நேரம் மட்டும் வருவார்கள் ,இயங்கங்கள் வரும் போது காணாமல் போவார்கள் .ஊழியர்கள் மீண்டும் இவர்களுக்கு பாடம் புகட்ட தயார் ஆகிவிட்டார்கள் .8 சரிபார்ப்பு தேர்தலில் 7 வது முறையாக வாகை சூட முதன்மை சங்கமாக மட்டும் அல்லாது ஒரே சங்கமாக மலருவோம் .சிறப்பு கூட்டத்தை நமது கிளை செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறி நிறைவு செய்தார் .
Image may contain: 9 people, including Ravi Indran, crowd and outdoor
Image may contain: 6 people, including Srinivasan JJ, people sitting, crowd, wedding and outdoor
Image may contain: 1 person, sitting, table, crowd and outdoor
Image may contain: one or more people, people sitting, crowd, table and outdoor
Image may contain: 1 person, sitting and outdoor

Image may contain: one or more people, people sitting, crowd, tree and outdoor
Image may contain: 4 people, tree and outdoor
Image may contain: 3 people, people sitting, crowd and outdoor
Image may contain: 10 people, tree, crowd and outdoor
Image may contain: 4 people, crowd, tree, table and outdoor
Image may contain: one or more people, people sitting and outdoor
Image may contain: 4 people, people sitting, tree and outdoor

Thursday, September 5, 2019

முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி

ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து மாவட்ட நிர்வாகம் இட்ட உத்தரவை எதிர்த்து 04/09/2019 அன்று நமது சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .உடனடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.இதே வேளையில் தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நமது இரண்டு மாவட்ட சங்கங்கள் நிர்வாகத்தோடு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வரும் 13/09/2019 வரை அந்த ஆட்குறைப்பு உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது . வரும் 12/09/2019 அன்று மாலை 330 மணிக்கு தூத்துக்குடியில் முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் நடைபெற உள்ள பேட்டியில் இந்த விஷயத்தை நமது சங்கம் பேச உள்ளது .

விரிவடைந்த மாவட்ட செயற்குழு

உற்சாகத்தோடும் ,   எழுச்சியுடனும் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட   செயற்குழு 
03/09/2019 அன்று விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்றது .முதல்  நிகழ்ச்சியாக சங்க கொடியேற்றமும் ,கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது .மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார் .அதன் பின் ஆகஸ்ட் மாத ஊதியத்தை வழங்குவதை காலதாமதம் செய்யும் நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அதன் பின் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற எழுச்சி மிகு கூட்டத்தில் 8 வது சரிபார்ப்பு தேர்தலை விளக்கி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பேசினர் .எழுச்சி உரையாக மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் விரிவாக உரை நிகழ்த்தினார் .FTTH கருத்தரங்கை தோழர் கண்ணன் அவர்கள் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் . 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட இச் செயற்குழுவை  மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி நவின்று முடித்து வைத்தார் .
Image may contain: 1 person, outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 1 person, smiling
Image may contain: 2 people, outdoor
Image may contain: one or more people, crowd and outdoorImage may contain: one or more people, crowd, tree and outdoor\

Image may contain: one or more people and outdoor
Image may contain: 2 people, people standing, crowd and outdoor
Image may contain: 1 person, standing, child and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: 4 people, crowd and outdoor
Image may contain: one or more people, crowd, tree, shoes, table and outdoor
Image may contain: 1 person

Wednesday, August 7, 2019

ஊழியர் நலன் காக்க ,BSNL நிறுவனத்தை பாதுகாக்க வாக்களிப்பீர்

No photo description available.

கடலூரில் நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழு

கடலூரில் 5-8-2019 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாநில  செயற்குழு மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைளை கண்டு தொய்வடைந்த   தோழர்களுக்கு ஒரு புத்துணர்வை உண்டாக்கியது . BSNL  உருவாகிய காலத்தில் இருந்து இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் BSNL நிறுவனத்தை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகள் அத்தனையையும் முறியடித்த வரலாறை மிக நேர்த்தியுடன் அற்புதமாய் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார் .நமது மாவட்டத்தில் இருந்து அனைத்து கிளை செயலர்கள் கலந்து கொண்டனர் .நமது மாவட்டம் சார்பாக அருப்புக்கோட்டை தோழர் கண்ணன் அவர்கள் அச் செயற்குழுவில் உரை நிகழ்த்தினார் .
Image may contain: 9 people, including Indira Palanichamy, people standing and outdoor
Image may contain: 10 people, including Indira Palanichamy, Chellappa Chandrasekar, Mohandosscpm Mohandosscpm and Ravi Indran, people smiling, people standing, crowd and outdoor
Image may contain: 14 people, including Kannan Kandasamy, Babu Radhakrishnan Radhakrishnan and Chellappa Chandrasekar, people standing and crowd
Image may contain: 1 person
Image may contain: 4 people, including Chellappa Chandrasekar, people smiling, people standing
Image may contain: 9 people, including மதி கண்ணன், Ravi Indran and Christopher Roy M, people standing and outdoor
Image may contain: one or more people
Image may contain: 6 people, including மதி கண்ணன், people smiling, crowd and indoor
Image may contain: 2 people


11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...