13/09/2019 அன்று ராஜபாளையம் நகரில் நமது BSNLEU சங்கம் சார்பாக தேர்தல் சிறப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தோழர் வெள்ளைப்பிள்ளையார் வரவேற்பு உரை நிகழ்த்தினார் . தொடக்க உரையாக தோழர் ரவீந்திரன் மாவட்ட செயலர் பேசினார் .தேர்தல் விளக்க உரையாக மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் , மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் விரிவாக பேசினர் .BSNL நிறுவனம் தற்போது எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் ,மத்திய அரசு BSNL நிறுவனத்தை முடக்க நினைக்கும் போக்கு ,ஒற்றுமையை உருவாக்கி தொடர் இயக்கங்கள் நடத்தி நிறுவனத்தை காப்பதற்கு நமது சங்க முயற்சிகளை விரிவாக விளக்கினார்கள் .VRS ,ஓய்வு வயது குறைப்பு என்பது நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிதான் என்பதை சுட்டி காட்டினார்கள். 2000 ம் ஆண்டு BSNL நிறுவனம் உருவாக்கப்பட்ட போதே நமது K G போஸ் அணி எச்சரிக்கை செய்தது , நிறுவனமாக மாறும் போது இன்று நாம் இழப்பதை 19 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கூறினோம் ,ஆனால் அன்று அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக இருந்த NFTE, FNTO மற்றும் BTEU சங்கங்கள் 1000 ரூபாய் கிடைத்தவுடன் , 2 பைசாவுக்கு வடை விற்கும் ,5 பைசாவுக்கு டீ விற்கும் ,விமானத்தில் பறக்கலாம் என்று வாய் சவடால் பேசி நிறுவனமாக மாறியதை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்றனர் .தற்போது ஜியோ நிறுவனத்தின் போட்டியால் நமது வருமானம் 32000 கோடியில் இருந்து 18000 கோடியாக குறைந்ததால் கடும் நெருக்கடியை நமது நிறுவனமும் ,ஊழியர்களும் சந்தித்து கொண்டு உள்ளனர் .BSNL நிறுவனத்தை மத்திய அரசு புறக்கணிப்பதை எதிர்த்து மக்கள் மத்தியில் நாம் தெருமுனை பிரச்சாரம் மூலம் கொண்டு சென்றோம் .மக்களவை பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினோம் .NFTE சங்கம் இது போன்ற இயங்கங்களில் ஒரு போதும் கலந்து கொண்டது இல்லை .ஆகஸ்ட் மாத சம்பளம் இதுவரை பட்டுவாடா செய்யாததை எதிர்த்து உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம் .அதெற்கெல்லாம் இயக்கம் நடத்தாத NFTE சங்கம் சம்பளம் போடாமல் இருப்பதற்கும் நமது சங்கம் தான் காரணம் என்று அவதூறு பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்க அலையும் அசிங்கத்தை சுட்டி காட்டினோம் ,நமக்கு இருக்கும் அதே அங்கீகாரம் தான் அவர்களுக்கும் இருக்கிறது .அதிரடி போராட்டம் நடத்த வேண்டியது தானே .இரை தேட வரும் உயிரினங்கள் போல இவர்கள் ஓட்டு நேரம் மட்டும் வருவார்கள் ,இயங்கங்கள் வரும் போது காணாமல் போவார்கள் .ஊழியர்கள் மீண்டும் இவர்களுக்கு பாடம் புகட்ட தயார் ஆகிவிட்டார்கள் .8 சரிபார்ப்பு தேர்தலில் 7 வது முறையாக வாகை சூட முதன்மை சங்கமாக மட்டும் அல்லாது ஒரே சங்கமாக மலருவோம் .சிறப்பு கூட்டத்தை நமது கிளை செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறி நிறைவு செய்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment