Showing posts with label மாவட்டம். Show all posts
Showing posts with label மாவட்டம். Show all posts

Thursday, September 8, 2016

2016 செப்டம்பர் 8 - தர்ணா

24 அம்ச கோரிக்கைகைகளின் தீர்வை கோரி 08-09-2016 அன்று தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் ,வெங்கடப்பன் ,அஸ்ரப் தீன் ,கிளை செயலர்கள் கண்ணன் ,இளமாறன் ,கருப்பசாமி ,முத்துசாமி ,சமுத்திரம் ஆகியோரும் ராஜபாளையம் கிளை சார்பாக தோழர் பொன்ராஜ் அவர்களும் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் பெருமாள்சாமி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் காதர் ,ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,ராதாகிருஷ்ணன் ,ஆகியோர் பேசினர் .நிறைவுரையாக மாவட்ட செயலர் பேசினார் .மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 90 பேர் தர்ணாவில் பங்கேற்றனர் .31/08/2016 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் சமுத்திரவள்ளி அவர்கள் போராட்டத்தில் கௌரவிக்கப்பட்டார் .இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாவட்ட சங்க நிர்வாகி மங்கையற்கரசி அவர்கள் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 16,000/- வழங்கினார் .வாரி வழங்கிய தோழியருக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் நன்றி கூறி தர்ணாவை நிறைவு செய்தார் .




















































Tuesday, August 23, 2016

2016 ஆகஸ்ட் 24ல் கிளைகள்தோறும் ஆர்ப்பாட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து கிளைகள்தோறும் ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்க மாநிலம் கல்கத்தா மத்திய தந்தி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் BSNL ஊழியர் சங்க அலுவலம் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டது. அலுவலக உபகரணங்கள், மின்விசிறி, மின் விளக்குகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதுடன் அலுவலகத்தில் பணிபுரியும் BSNLEU தோழர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது BSNL சொத்துக்களை நாசப்படுத்தும் தாக்குதலாகவும் இருக்கிறது. ஆனால், ஆச்சர்யப்படும் விதமாக மேற்கு வங்க முதன்மைப் பொது மேலாளர் இந்த வன்முறையாளர்கள்மீது தாக்குதல் தொடர்பாக எந்த FIRம் தாக்கல் செய்யவில்லை.
திரிணாமுல் குண்டர்களுக்கு மேற்கு வங்க முதன்மைப் பொது மேலாளர் மறைமுகமாக ஆதரவளிக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயம் BSNLன் முதன்மை மேலாண்மை இயக்குநரின் (CMD) கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளால். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இப்படியான சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் இந்த வன் செயலைக் கண்டித்து 24.08.2016ல் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி மத்திய சங்கம் வழிகாட்டியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 24.08.2016 அன்று
கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்

Tuesday, July 5, 2016

கருப்பு அட்டையணிந்து ஆர்ப்பாட்டம்

இயக்குநர் குழுவின் எதிர்மறை நிலைப்பாட்டை எதிர்த்து
கருப்பு அட்டை அணிந்து கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் காட்சிகள்.








Wednesday, August 12, 2015

டவருக்கான துணை நிறுவன அனுமதிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலிருந்து...

BSNL நிறுவனத்தில் இருந்து 20000 கோடி மதிப்பில் ஆன 65000 டவர்களை பிரித்து தனி நிறுவனமாக மாற்ற மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை கண்டித்து இன்று  FORUM சார்பாக மாவட்டம் முழுவதும் மிக சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அறச்சீற்றத்தின்  ஆவேச காட்சிகள் . 
ராஜபாளையம் 




ஸ்ரீவில்லிபுத்தூர்



சிவகாசி





விருதுநகர்












அருப்புக்கோட்டை



11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...