இன்று AUAB சார்பாக போராட்ட விளக்க கூட்டம் -சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் நடைபெற்றது .சிவகாசி நுழை வாயில் கூட்டத்திற்கு BSNLEU கிளை தலைவர் தோழர் ராஜையா தலைமை தாங்கினார் .போராட்டத்தின் அவசியத்தையும் ,கோரிக்கைகளை விளக்கியும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,முன்னாள் SNEA கிளை செயலர் தோழர் M .சுப்ரமணியன் ,SNEA சங்க தோழர் தனசேகரன் .AIBDPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் பேசினர் . பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களும் ,அதிகாரிகளும், ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்றனர் .அதே போல் சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு SNEA தோழர் முத்தையா தலைமை வகிக்க ,BSNLEU கிளை செயலர் தோழர் காதர் மொய்தீன் முன்னிலை வகிக்க அக் கூட்டத்தில் மாவட்ட செயலர் ரவீந்திரன் ,SNEA சங்க மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கேசவன் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பேசினர் .இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
Thursday, November 29, 2018
Wednesday, November 28, 2018
போராட்ட விளக்க கூட்டம் -ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்
இன்று AUAB சார்பாக போராட்ட விளக்க கூட்டம் -ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்றது .ராஜபாளையம் நுழை வாயில் கூட்டத்திற்கு SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு தலைமை தாங்கினார் .போராட்டத்தின் அவசியத்தையும் ,கோரிக்கைகளை விளக்கியும் AIBSNLEA மாவட்ட பொருளாளர் தோழர் மணிகண்டன் , BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பேசினர் .மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளைப்பிள்ளையார் நன்றி நவின்றார் . பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களும் ,அதிகாரிகளும் பங்கேற்றனர் .
ஸ்ரீவில்லிபுத்தூர் நுழை வாயில் கூட்டத்திற்கு கிளை தலைவர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் .இக் கூட்டத்தில் SNEA மாவட்ட நிர்வாகி திரு கேசவன் ,AIBSNLEA மாவட்ட பொருளாளர் திரு மணிகண்டன் ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி விரிவாக பேசினர் .தோழர் தங்கதுரை நன்றி நவின்றார் .
Tuesday, November 27, 2018
போராட்ட விளக்க கூட்டம்
இன்று விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக போராட்ட விளக்க கூட்டம் AIBSNLEA மாவட்ட பொருளாளர் திரு .மணிகண்டன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் SNEA மாவட்ட பொருளாளர் திரு செல்வராஜ் ,அச் சங்கத்தின் மாவட்ட சங்க நிர்வாகி திரு கேசவன் ஆகியோரும் ,BSNLEU சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி மற்றும் BSNLEU மாநில சங்க நிர்வாகி உடுமலைப்பேட்டை தோழர் சக்திவேல் ஆகியோரும் போராட்டத்தை விளக்கி விரிவாக பேசினர் .BSNLEU ,SNEA மற்றும் AIBSNLEA ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பெரும் அளவில் பங்கேற்றனர் .
Tuesday, November 20, 2018
சாத்தூர் கிளை மாநாடு
15/11/2018 அன்று மாலை 530 மணிக்கு மேல் BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் சாத்தூர் கிளை மாநாடு சாத்தூர் தொலை பேசி நிலைய வளாகத்தில் அதன் தலைவர் தோழர் ஜெயச்சந்திரன் தலைமையில் எழுச்சிகரமாக நடைபெற்றது . மாவட்ட செயலர் ரவீந்திரன் முறையாக கிளை மாநாட்டை வைத்து உரை நிகழ்த்தினார் .அக் கிளை மாநாட்டில் தோழர்கள் ஜெயச்சந்திரன் ,காதர் மொய்தீன் ,மோகனசுந்தரம் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாராக தேர்வு செய்யப்பட்டனர் .அக் கூட்டத்தில் பணி நிறைவு பெற்ற தோழர் வெங்கடேசன் ,,JTO, சிவகாசி அவர்கள் கவுரவிக்கப்பட்டார் .தோழர் வெங்கடேசன் அவர்கள் BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களுக்கு தலா ரூபாய் 500 நன்கொடை வழங்கினார் இக் கூட்டத்தில் கதிரேசன் ,JTO, ஓய்வூ தியர் சங்க தோழர் ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர் .
3 வது மாவட்ட செயற்குழு
இன்று 3 வது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .வரும் 3/12/2018 முதல் நடக்க இருக்கின்ற காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ,ஜனவரி மாதம் நடைபெற இருக்கின்ற 2 நாள் வலை நிறுத்தம் .அமைப்பு நிலை ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,அனைந்திந்திய மாநாடு ,நடந்து முடிந்த போராட்டங்ககள் ஒரு ஆய்வு என்ற பொருளில் விவாத குறிப்பை மாவட்ட செயலர் வழங்கி தொடக்க உரை நிகழ்த்தினார் .19/11/2018 அன்று நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர் சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலர் அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி விரிவாக பேசினார் .விவாத குறிப்பின் பெயரில் நடைபெற்ற விவாதத்தில் அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர் .
1.வரும் 27/11/2018 அன்று அனைத்து சங்க மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தை விருதுநகரில் காலை 1130 மணி அளவில் நடத்துவது .
2.28/11/2018 அன்று ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நுழை வாயிற் கூட்டம் நடத்துவது .
3.29/11/2018 அன்று சிவகாசி மற்றும் சாத்தூரில் நுழை வாயிற் கூட்டம் நடத்துவது .
4.30/11/2018 அன்று அருப்புக்கோட்டையில் கூட்டம் நடத்துவது .
5.தொடர்ந்து AUAB சார்பாக நடைபெறும் இயக்கங்களை புறக்கணிக்கும் NFTE சங்கத்தோடு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்துவது .
6.BSNL at your door step இயக்கத்தை சக்திமிக்க இயக்கமாக நடத்துவது
7.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நமது ஊழியர்கள் ,ஒப்பந்த ஊழியர்கள் மீது நடைபெறும் அராஜக போக்கு இனி நிகழாது என்று மாவட்ட பொது மேலாளர் கொடுத்த உறுதி மொழியை நம்பிக்கையோடு எதிர்கொள்வது .
8. ஸ்ரீவில்லிபுத்தூர் எழுத்தர் பற்றாக்குறைக்கு நமது ஆலோசனையை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து இருக்கிறோம் .
9.GM அலுவலகத்தில் நமது ஊழியர்களுக்கு தொடந்து பிரச்சனைகளை உருவாக்கி வரும் ஒரு அதிகாரியின் போக்கு சரியல்ல என்பதை பொது மேலாளர் அவர்களுக்கு சுட்டி காட்டி உள்ளோம் .தேவைப்பட்டால் உரிய தொழிற் சங்க நடவடிக்கையை நமது சங்கம் மேற்கொள்ளும் .
10.ஜனவரி மாதம் நடக்க உள்ள வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க மாவட்டம் முழுவதும் ஒரு சுற்றுப்பயண நிகழ்ச்சி அனைத்திந்திய மகாநாட்டிற்கு பின் வெளியிடப்படும் .
11.சார்பாளர் மற்றும் பார்வையாளர் ஆகியோருக்கு பிரதிநிதிகள் கட்டணத்தில் 50% தொகையை மாவட்ட சங்கம் ஏற்று கொள்ளும் .
12.தல மட்ட பிரச்சனைகளை மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் தொகுத்து வழங்கி அது முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்படும் .
13.மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் வெங்கடசாமி ஆகியோர் கிளை செயலர்களாக தேர்வு செய்யப்பட்டதால் அவர்கள் வகித்த மாவட்ட அமைப்பு செயலர் பதவிகளுக்கு ராஜபாளையம் தோழர்கள் பொன்ராஜ் மற்றும் வேலுசாமி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .
14.நடந்து முடிந்த தர்ணா மற்றும் பேரணி நிகழ்வுகளை பெரும் வெற்றிகரமாக்கிய அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளை மாவட்ட செயற்குழு பெரிதும் பாராட்டியது .
15.நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அனைத்து கிளை மாநாடுகளையும் நடத்திய அனைத்து கிளைகளுக்கு மனமார்ந்த நன்றியை மாவட்ட சங்கம் தெரிவித்து கொள்கிறது
16. 3/12/2018 முதல் தொடங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க அனைத்து பணிகளையும் உடனடியாக தொடங்குவது .
மாவட்ட பொருளர் நன்றி கூற மாவட்ட செயற்குழு இனிதே நிறைவுற்றது .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...