இன்று AUAB சார்பாக போராட்ட விளக்க கூட்டம் -ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்றது .ராஜபாளையம் நுழை வாயில் கூட்டத்திற்கு SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு தலைமை தாங்கினார் .போராட்டத்தின் அவசியத்தையும் ,கோரிக்கைகளை விளக்கியும் AIBSNLEA மாவட்ட பொருளாளர் தோழர் மணிகண்டன் , BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பேசினர் .மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளைப்பிள்ளையார் நன்றி நவின்றார் . பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களும் ,அதிகாரிகளும் பங்கேற்றனர் .
ஸ்ரீவில்லிபுத்தூர் நுழை வாயில் கூட்டத்திற்கு கிளை தலைவர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் .இக் கூட்டத்தில் SNEA மாவட்ட நிர்வாகி திரு கேசவன் ,AIBSNLEA மாவட்ட பொருளாளர் திரு மணிகண்டன் ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி விரிவாக பேசினர் .தோழர் தங்கதுரை நன்றி நவின்றார் .
No comments:
Post a Comment