Thursday, April 19, 2018

தமிழக ஆளுனருடன் சந்திப்பு...

          நமது அகில இந்திய ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL, துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி 19.04.2018 அன்று அனைத்து மாநில தலைநகர்களிலும், பேரணி நடத்தி ஆளுனரை சந்தித்து மனு வழங்க வேண்டும் என அறைகூவல் விடுத்திருந்தது.

          தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL சார்பாக சென்னையில் பேரணி நடத்துவதற்கும் ஆளுனரை சந்திப்பதிற்கும் அனுமதி கோரி விண்ணப்பித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் நிலவும் சூழ்நிலைகளை காரணம் காட்டி நமக்கு பேரணி நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் ஆளுனரை சந்தித்து மனு வழங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆளுனரை சந்திக்க நமது AUABல் உள்ள ஏழு மாநில செயலாளர்களின் பெயர்களை நமது தோழர்கள் ஆளுனர் மாளிகைக்கு அனுப்பியிருந்தோம். ஆனால் ஒரு சில காரணங்களால் ஐந்து நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 

          அதன் அடிப்படையில் 19.04.2018 அன்று காலை 10.30 மணிக்கு ஏழு சங்கங்களின் சார்பாக கையொப்பமிட்ட மனுவினை தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் (CS, BSNLEU), தோழர் G.S.முரளிதரன் (Offciating CS, NFTE), தோழர் R.ராஜசேகர் (CS, SNEA), தோழர் C.துரையரசன் (CS, AIBSNLEA) மற்றும் தோழர் M.ஓம்பிரகாஷ் (DS, SEWA BSNL) ஆகியோர் தமிழக ஆளுனர் திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து வழங்கினர். 

          மனுவினை முழுமையாக படித்து பார்த்த ஆளுனர், மனு விளக்கமாகவும், தெளிவாகவும் உள்ளது என்று கூறிய அவர் அந்த மனுவினை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.

சாத்தூர் கிளையின் பொதுக்குழு

            சாத்தூர் கிளையின் பொதுக்குழு கிளைத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தோழர் காதர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட மாநாடு தொடர்பான திட்டமிடலுக்காக நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன், மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.மத்திய செயற்குழு

கண்டன ஆர்ப்பாட்டம்

சிறுமி ஆசிஃபா’விற்கு நிகழ்ந்த மனிதாபிமற்ற மத வன்முறைக்கு BSNLEU வர்க்க அமைப்பின் கண்டன முழக்கங்கள்...
Friday, April 13, 2018

கவன ஈர்ப்பு தினம்

அகர்தலா மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள்

All Unions and Associations of BSNL தர்ணா

          All Unions and Associations of BSNL சார்பாக 2018 ஏப்ரல் 12 அன்று விருதுநகர் பொதுமேலாளர் அலுவலகத்தின் முன்பு அமைக்கப்பட்ட துணை டவர் நிறுவனத் திட்டத்தை திரும்பப்பெறக்கோரி தர்ணா நடைபெற்றது.

          இந்தத் தர்ணாவிற்கு SNEA மாவட்டத் தலைவர் திரு செந்தில்குமார் தலைமை தாங்கினார். BSNLEUவின் பொறுப்பு மாவட்டச் செயலர் தோழர் கண்ணன் முன்னிலை வகித்தார். BSNLEUவின் மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். AIBSNLEAவின் மாவட்டச் செயலர் திரு பிச்சைக்கனி, NFTE BSNLன் தோழர் ரமேஷ், ஓய்வூதியர் சங்கத்தின் தோழர் சின்ன முனியாண்டி, SNEA மாநிலக் குழுவின் திரு கோவிந்தராஜன், அதிகாரிகள் சங்கத்தின் திரு நாராயணன், BSNLEUவின் மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கண்டன உரையாற்றினர். BSNLEUவின் மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். 

            கோரிக்கை முழக்கங்களுடன் மாலை 5 மணிக்கு முடித்துக் கொள்ளப்பட்ட தர்ணாவில் ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைத்துச் சங்கங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tuesday, April 10, 2018

10-04-2018 ஆர்பாட்டக் காட்சிகள்

          PCR சட்டத் திருத்தமும் அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் 11 போர் படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 10 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டக் காட்சிகளில் சில...
பிரதிபலன் எதிர்பார்க்காமல் என்றைக்குமே நியாயத்தின் பக்கம் நிற்கும் தோழர்களுக்கு வாழ்த்துகளும்... வணக்கங்களும்...11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...