Showing posts with label மாநாடு. Show all posts
Showing posts with label மாநாடு. Show all posts

Wednesday, September 6, 2017

BSNL ஊழியர் சங்கம் - கிளை மாநாடு - அருப்புக்கோட்டை

BSNLEU – அருப்புக்கோட்டை
13 ஆவது கிளை மாநாடு
09.09.2017 – சனிக்கிழமை – மாலை 5.00 மணி – தொலைபேசி நிலையம்
தலைமை          : தோழர் U.B.உதயகுமார், கிளைத்தலைவர்
அஞ்சலி            : தோழர் A.சோலை, கிளை உதவிச் செயலர்
வரவேற்புரை      : தோழர் A.கண்ணன், கிளைச் செயலர்
தொடக்கவுரை     : தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை விவாதம்
வாழ்த்துரை   : திருமிகு சரவணன், கோட்டப் பொறியாளர்
    தோழர் R.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர்
    தோழர் கணேச மூர்த்தி, மாவட்ட உதவிச் செயலர்,
                  தோழர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலர், TNTCWU
                  தோழர் மனோகர், கிளைச் செயலர், SNEA
                  தோழர் ராஜாராம், ஒருங்கிணைப்பாளர், JCTU
நோக்கஉரை   : தோழர் சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்

BSNL ஊழியர் சங்கம் – அருப்புக்கோட்டை கிளை

Tuesday, March 11, 2014

மகாராஷ்டிரா மாநில மாநாடு

             
           நமது பிஎஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 2 நாள் மகாராஷ்டிரா மாநில மாநாடு, 09.03.2014 அன்று அகமது நகரில் தொடங்கியது. மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊழியர் சங்கத்தின் கொடி மாநிலத் தலைவர் தோழர் நாகேஷ் நலவாடே (Nagesh Nalawade), அவர்களால் ஏற்றி வைக்கபட்டது. சங்க கொடி வரவேற்பு குழு செயலாளர் விட்டல் ஔட்டி அவர்களால் ஏற்றி வைக்கபட்டது. 527 பிரதிநிதிகள், 45 பார்வையாளர்கள் மாநாட்டில் கலந்து .கொண்டனர். மாநாட்டில் பொதுச்செயலர தோழர் P.அபிமன்யு, மகாராஷ்ட்ரா தலைமைப் பொது மேலாளர் திரு. ஆனந்த் குல்கர்னி, தோழர் அஜித் அபயங்கர் (சிஐடியு) தோழர் மாநிலத் தலைவர் நாகேஷ் நலவாடே மாநில தலைவர் மற்றும் தோழர கௌண்டே (மாநில அரசு ஊழியர் சங்கம்) உரையாற்றினர்.

              மாநிலச் செயலர் தோழர் ஜீடாம் செயல்பாட்டறிக்கையினை முன்வைத்தார். பிரதிநிதிகளின் அறிக்கை மீதான கருத்துக்களை தொடர்ந்து, பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யு விரிவாக பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார். புதிய தாராளவாத கொள்கைகளுக்கு எதிராக போராட சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த முயற்சி தேவை என்பதை வலியுறுத்தினார்.
புகைப்பட தொகுப்பு பார்க்க : Click Here

Tuesday, November 12, 2013

திகைக்க வைத்த அருப்புகோட்டை கிளையின் பொதுக்குழு கூட்டம்

அருப்புகோட்டை கிளையின் பொதுக்குழு கூட்டம் இன்று (12-11-2013) அருப்புகோட்டை தொலை பேசி நிலைய வளாகத்தில் கிளை தலைவர் தோழர் U .B .உதயகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட மகாநாட்டை அருப்புகோட்டையில் நடத்துவது என்ற மாவட்ட செயற்குழுவின் முடிவை அருப்புகோட்டை கிளை சங்கம் ஏற்று கொண்டது . மார்ச் மாதம்  முதல் வாரத்தில் மாநில செயலரின் தேதி வாங்கிகொண்டு 2 நாட்களாக மாவட்ட மகாநாட்டை நடத்துவது. நன்கொடை விசயமாக பேசியவுடன் கிளை உறுப்பினர்கள் அங்கேயே கிட்டதட்ட ரூபாய் 50,000/- க்கும் மேல் நன்கொடை கொடுக்க இசைந்து விட்டது நம்மை திகைக்க வைத்தது .நம் சங்கத்தின் மேல்  நம் உறுப்பினர்களின் திடமான பற்றை,நம்பிக்கையை என்னவென்பது !  மகாநாட்டின் வரவேற்பு குழு  செயலராக தோழர் .U .B .உதயகுமார்  தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் .
"மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது"  என்பதை 24 உறுப்பினர்களை கொண்ட அருப்புகோட்டை கிளை நிருபித்துவிட்டது .கிளை செயலர் தோழர் .R .ஜெயக்குமார் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் கண்ணன் , சந்திரசேகரன் , தோழர் ராஜ்மோகன் , இளம் தோழர் .அஷ்ரப் தீன் , தோழர் கிருஷ்ணசாமி , தோழர் செல்வராஜ் , தோழர் கணேசன் ,தோழர் சுப்புராம் ,தோழியர் ஆலிஸ் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்  வாழ்த்துக்கள் 

Monday, November 11, 2013

A I B S N L E A மகாநாட்டில் நமது பொது செயலர்

11-11-2013 அன்று நாசிக்கில் நடைபெற்று கொண்டு இருக்கும்   A I B S N L E A மகாநாட்டில் நமது பொது செயலர் கலந்து கொண்டு உரையாற்றும் போது FORUM OF BSNL சங்கங்கள் மற்றும்  அசோசியேசனால் சாதித்தவற்றை நினைவுகூர்ந்தார்.மேலும் இதை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தையும் சுட்டி காட்டினார் .வேலை கலாசாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் அதே நேரத்தில் அரசின் தனியார்மய ஆதரவு கொள்கைக்கும்,பொது துறைக்கு எதிரான போக்கிற்கும் எதிராக போராட வேண்டிய கட்டாயத்தையும் அவர் சுட்டி காட்டினார். புகைப்படம் பார்க்க :-Click Here

Friday, August 9, 2013

மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்புமாநாடு

          மத்திய ஐ.மு.கூட்டணி-2 அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக் கைகளுக்குக்கூட செவி மடுக்க மறுப்பதைக் கண்டித்தும், அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்றுபட்டு நின்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்புமாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்தியத் தொழிற்சங்கங்களின் சார்பில் தேசிய சிறப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
          சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உட்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பிலும் மத்திய அரசு ஊழியர் களின் மகாசம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர்கள் அலுவலர்கள் கூட்ட மைப்பு, பாதுகாப்புத்துறை ஊழியர்கள், இன்சூரன்ஸ், வங்கி ஊழியர்கள், ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு உட்பட அனைத்து சங்கங்களின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
          கடந்த பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெற்ற இருநாள் வேலை நிறுத்தத்தில் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளை மாநாட்டுப் பிரதிநிதிகள் முழக்கமிட்டு எதிரொலித்தார்கள். மத்திய அரசாங்கத்தின் சார்பில் மே 22 அன்று மத்தியத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ஒரு மாதம் கழித்து அரசுடன் கலந்தாலோசனை செய்து விட்டு சந்திப்பதாகக் கூறினார். ஆயினும் இதுவரையிலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.மாறாக, அது தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.
          அரசின் இந்த அலட்சியத்திற்கு எதிராக பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்கள் போராட்டப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டனர். தனியாருக்கு ஆலையைத் தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எதிராக நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப்பின்னணியிலேயே தேசிய சிறப்பு மாநாடு நடைபெற்றது.
          சிறப்பு மாநாட்டினை சிஐடியு தலைவர் ஏ.கே.பத்மநாபன் உட்பட 11 மத்தியத் தொழிற்சங்கங்களின் மூத்த தலைவர்கள் தலைமையேற்று வழி நடத்தினார்கள். மாநாட்டின் வரைவுப் பிரகடனத்தை வெளியிட்டு தபன்சென் (சிஐடியு), குரு தாஸ் தாஸ் குப்தா (ஏஐ டியுசி), பிஎன் ராய் (பிஎம் எஸ்), கேகே நாயர் (ஐஎன் டியுசி), பேச்சிமுத்து (தொமுச) உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களிலிருந்தும் தலைவர்கள் உரையாற்றினர்.
          இதைத் தொடர்ந்து பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.தொழிலாளர் போராட் டத்தை நாடு தழுவிய அளவில் விரிவாக எடுத்துச் செல்வது என்றும், மாநிலத் தலைநகரங்களில் 2013 செப்டம்பர் 23 அன்று பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது என்றும், டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்டமான முறையில் பேரணி / ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும் சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்தது. தில்லியில் பேரணி நடைபெறும் நாளன்று நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டங்கள் / பேரணிகள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திக்கு :-CLICK HERE

Monday, July 29, 2013

தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு



          பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.
          தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட 5 வது மாநாடு மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் 2013 ஜூலை 21 ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பி.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார் மற்றும் மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் எம்.பி.வடிவேல் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
          முன்னதாக, தேசியக் கொடியை டி.ஆர்.ராசப்பன் மற்றும் சங்க கொடியை எஸ்.சண்முகசுந்தரமும் ஏற்றி வைத்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் சம்பத் தலைமையில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து மாநாட்டை துவக்கி வைத்தும், சுந்தரக்கண்ணன் என்பவரால் வடிவமைக்கப்பட்டிருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கான கோவை மாவட்ட இணையதளத்தை (http://tntcwucbt.blogspot.in/ http://tntcwu.blogspot.in/) தொடங்கிவைத்தும் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.முருகையா தொடக்க உரையாற்றினார்.
          இம்மாநாட்டை வாழ்த்தி மாநில பொருளாளர் கே.விஸ்வநாதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜே.ராஜாமணி, சுந்தரக்கண்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், மாநில உதவித் தலைவர் வி.வெங்கட்ராமன், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்ரமணியம், மாநில அமைப்பு செயலாளர் ஏ.முகமது ஜாபர் ஆகியோர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் தாலுகா செயலாளர் சி.பெருமாள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதிய நிர்வாகிகள்
          இம்மாநாட்டில், தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக எம்.முத்துக்குமார், செயலாளராக டி.ரவிச்சந்திரன், பொருளாளராக கே.கருப்புசாமி மற்றும் 19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டில், 400க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Courtesy for source : http://tntcwu.blogspot.in/

Sunday, June 23, 2013

ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட 5 வது மாநாடு







          ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட 5 வது மாநாடு இன்று விருதுநகர் இல் BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் தோழர் செல்வராஜ், மாவட்ட தலைவர் தலைமையில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது.
          ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை நமது மாவட்ட உதவி செயலர் M .பெருமாள்சாமி ஏற்றி வைக்க,தோழர் சிவஞானம்  கோஷம்  இட BSNLEU மகாநாட்டை தோழர் வேலுசாமி மாவட்ட செயலர் வரவேற்புரையுடன் துவக்கி வைத்தார்.








          BSNLEU  சங்க மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் துவக்க உரை ஆற்றினார். MAN POWER டெண்டர்  பகுதியில் வேலை செய்பவர்களுக்கு semi-skilled அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவேண்டும் எனவும், அப்போதுதான்  தேவையான எண்ணிக்கையில் MAN POWER பகுதியில் வேலைக்கு ஊழியர்கள் வருவார்கள் என குறிப்பிட்டார்.
          BSNLEU மாவட்ட செயலர் ரவிந்திரன் பேசுகையில்  நமது மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர் பிரச்னையில் நமது சங்கம் எடுத்துள்ள முயற்சிகளை விரிவாக பேசினார்.






          சிறப்புரையாக மாநில செயலர் தோழர் M.முருகையா அவர்கள் நமது சங்க முயற்சியால் தற்போது மாநில நிர்வாகம் பிரதி மாதம் 10 தேதிக்குள் ஒப்பந்த ஊழிய்ரகளுக்கு ஊதியம் வழக்கப்பட வேண்டும் என உத்தரவு இட்டதை சுட்டி காட்டினார்.




          ஒரு கருத்தோவியமான  ஆண்டு அறிக்கையை தோழர் மதிகண்ணன் வாசிக்க, அருப்புகோட்டை கிளை செயலர் தோழர் R.ஜெயக்குமார் அவர்கள் விக்கிரமாதித்தன் சிம்மாசன கதை சொல்லி நமது சங்கம் செய்துள்ள சாதனைகளை கூறினார்.
          மாநாட்டில் வரும் 30-06-2013 அன்று பணி ஒய்வு பெறும்  மூத்த தோழர் M .பெருமாள்சாமி அவர்கள் சால்வை போற்றி கௌரவிக்கபட்டார். 
          மாநாட்டில் தோழர்  செல்வராஜ், டி.எம். தோழர் முனியசாமி, தோழர் மாரிமுத்து  ஆகியோர் முறையே  தலைவர், செயலர், பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.




புதிய மாவட்ட  செயலர் தோழர் முனியசாமிக்கு BSNLEU மாவட்ட சங்கத்தின் புரட்சிகர  நல்வாழ்த்துக்கள் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...