அருப்புகோட்டை கிளையின் பொதுக்குழு கூட்டம் இன்று (12-11-2013) அருப்புகோட்டை தொலை பேசி நிலைய வளாகத்தில் கிளை தலைவர் தோழர் U .B .உதயகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட மகாநாட்டை அருப்புகோட்டையில் நடத்துவது என்ற மாவட்ட செயற்குழுவின் முடிவை அருப்புகோட்டை கிளை சங்கம் ஏற்று கொண்டது . மார்ச் மாதம் முதல் வாரத்தில் மாநில செயலரின் தேதி வாங்கிகொண்டு 2 நாட்களாக மாவட்ட மகாநாட்டை நடத்துவது. நன்கொடை விசயமாக பேசியவுடன் கிளை உறுப்பினர்கள் அங்கேயே கிட்டதட்ட ரூபாய் 50,000/- க்கும் மேல் நன்கொடை கொடுக்க இசைந்து விட்டது நம்மை திகைக்க வைத்தது .நம் சங்கத்தின் மேல் நம் உறுப்பினர்களின் திடமான பற்றை,நம்பிக்கையை என்னவென்பது ! மகாநாட்டின் வரவேற்பு குழு செயலராக தோழர் .U .B .உதயகுமார் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் .
"மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது" என்பதை 24 உறுப்பினர்களை கொண்ட அருப்புகோட்டை கிளை நிருபித்துவிட்டது .கிளை செயலர் தோழர் .R .ஜெயக்குமார் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் கண்ணன் , சந்திரசேகரன் , தோழர் ராஜ்மோகன் , இளம் தோழர் .அஷ்ரப் தீன் , தோழர் கிருஷ்ணசாமி , தோழர் செல்வராஜ் , தோழர் கணேசன் ,தோழர் சுப்புராம் ,தோழியர் ஆலிஸ் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment