Showing posts with label வேலை நிறுத்தம். Show all posts
Showing posts with label வேலை நிறுத்தம். Show all posts

Monday, March 16, 2015

வேலை நிறுத்தம்

கேபிள் பகுதியில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத சம்பளம் வழங்காத INNOVATIVE நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ,லேபர் ஆபிசர் உத்தரவை அமல்படுத்தாத   INNOVATIVE நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்கும் முகமாக நாளை (17-03-2015) கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்க உள்ளது . 
சம்பளம் வழங்காமல் ஒப்பந்த ஊழியர்களின் அடி வயிற்றில் அடிக்கும்  INNOVATIVE நிறுவனத்தை நமது மாவட்டத்தில்  இருந்து வெளியேற்றும்  போராட்டமாக இப் போராட்டம் அமைய வேண்டும் என  பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது . 

Thursday, November 27, 2014

வேலை நிறுத்தம்...

          2014 நவம்பர் 27 வேலை நிறுத்தம்... தமிழகத்தில் 75% ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிகரமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்.

Tuesday, December 17, 2013

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பொது துறை வங்கிகளை சீரழிக்கும் வங்கி  சீர்திருத்த மசோதாவை எதிர்த்தும் , புதிய ஊதிய உயர்வு உடன்பாட்டை உடனடியாக நிறைவேற்ற கோரியும்  நாளை (18-12-2013 )(புதன்கிழமை) தேசிய அளவிலான ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர் . இதில் நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பதாக ஐக்கிய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்து உள்ளது .இந்த நிலையில் ஐக்கிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து அந்த சங்க நிர்வாகிகளுடன் இந்திய வங்கி நிர்வாகம் கடந்த 14-ந்தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.இந்த நிலையில் மத்திய தொழிலாளர் துறை தலைமை கமிஷனர் பி.கே. சன்வரியா மற்றும் இந்திய வங்கி நிர்வாகத்தினர் நேற்று அனைத்து வங்கி துறையினருடன் நேற்று 2-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர்களின் தேசிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி 18-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் என்றும் இதுகுறித்து ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். முக்கிய தொழிற்சங்கம் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் பங்கேற்பதால் நாடு முழுவதும் அன்றைய தினம் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. பொது துறை வங்கிகளை பாதுகாக்க நடைபெறும் வங்கி வேலை நிறுத்தம் வெற்றி பெற பி எஸ் என் எல் விருதுநகர் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்  வாழ்த்துக்கள் 

Saturday, October 19, 2013

வேலை நிறுத்தம் ஒத்தி வைப்பு

19-10-2013 அன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில்  25-10-2013 அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பது என்று முடிவு   எடுக்கக் பட்டுள்ளது 

Tuesday, September 24, 2013

வேலை நிறுத்தம் 25-10-2013க்கு தள்ளி வைக்கப்பட்டது.

          17-09-2013ல் நடைபெற்ற கூட்டத்தில் சில கோரிக்கைகள் மீது நிர்வாகம் கொடுத்துள்ள உத்தரவாதங்களின் அடிப்படையிலும், 04-10-2013ல் நடைபெற உள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்படலாம் என்ற நம்பிக்கையிலும் இன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வேலை நிறுத்தம் 25-10-2013க்கு தள்ளி வைக்கப்பட்டது.

Monday, September 23, 2013

பரிசீலனை கூட்டம்

UNITED FORUM சார்பாக போராட்ட தயாரிப்புக்கான பரிசீலனை கூட்டம் 24-09-2013 அன்று BSNL MS அலுவலகத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது

Thursday, September 12, 2013

பேச்சுவார்த்தை

BSNL நிர்வாகம் UNITED   FORUM சார்பாக கொடுத்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி பேச்சுவார்த்தைக்கு  நமது சங்கத்தை 17 ஆம் தேதி அழைத்து உள்ளது .நிர்வாகத்தின் கடிதம் படிக்க :-CLICK HERE

Wednesday, July 10, 2013

போராட்ட அறைகூவல்

          ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை கொல்கத்தாவில்  நடைபெற்ற நமது BSNLEU சங்க மத்திய செயற்குழு  கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.

1.NEPP யில் இழைக்கப்பட்ட அநீதிகள் .
2.நீண்ட நாட்களாய் தீர்க்கப்படாமல் உள்ள அனாமலி.

3.RM மற்றும் GR "D " கேடரில் ஏற்பட்டுள்ள ஊதியத்தேக்கம்.
4. கேடர் பெயர்  மாற்றம்.

5. 01-01-2007 ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய 
    குறைப்பு விஷயம்.
6. கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு.

7. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம், மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பு.
8.BSNL ல் நியமனம் பெற்றவர்களின் பென்சன் விஷயம்.

இப்பிரச்சனைகள் மீதான நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து...

19-07-2013 இல் ஆர்ப்பாட்டம்.
20-08-2013, 21-08-2013 மற்றும் 22-08-2013 தினங்களில்  தொடர் தர்ணா.
04-09-2013 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்.

Friday, May 17, 2013

78.2% IDA இணைப்பு

          78.2% IDA இணைப்பு விசயத்தில் BRPSE அமைப்பின் செயலர் கூறுகையில் தொலை தொடர்புத் துறை 78.2% IDA இணைப்பு பிரச்சினை விசயமாக BRPSE அமைப்பிடம் கலந்து ஆலோசிக்க தேவையில்லை எனக் கூறியுள்ளார்.மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் "நலிவடைந்த" பொதுத்துறை நிறுவனம் என அறிவிக்கப்படவில்லை.  ஆதலால் தொலை தொடர்புத் துறை இவ் விஷயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என செயலாளர், BRPSE அவர்கள் கூறியுள்ளார். DOT திட்டமிட்டு 78.2% IDA இணைப்பை காலதாமதம் செய்வதை எதிர்த்து 12-06-2013 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

Saturday, February 16, 2013

பிப்ரவரி 20,21க்கான Strike Notice

பிப்ரவரி 20, 21 இரண்டு நாட்கள் அனைத்து மத்திய சங்கங்களும் கலந்து கொண்டு நடைபெறஉள்ள வேலைநிறுத்தத்தை நாம் அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமானதாக்குவோம்.

14 சங்கங்களின் தேசியத் தலைவர்கள் கையெழுத்திட்டு நிர்வாகத்திற்கு அளித்த

Friday, February 8, 2013

பிப்ரவரி 20, 21பொதுவேலை நிறுத்தம்

          பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் பொதுவேலை நிறுத்தம் செய்வது என்று சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி, ஏஐடியுசி உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர், மாநில அரசு ஊழியர், வங்கி காப்பீடு, தொலைதொடர்பு, பாதுகாப்புத்துறை போன்ற 40க்கும் மேற்பட்ட துறை வாரியான சம்மேளனங்களும் இணைந்து அறிவிப்பு விடுத்துள்ளன.

          விலைவாசியை கட்டுப்படுத்து, வேலைபாதுகாப்பை உறுதிபடுத்தி வேலை வாய்ப்புகளை பெருக்கு, தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்து, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பை உறுதி செய், தொழிற்சங்க உரிமைகளை அமல்படுத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

          பொதுத்துறையை விற்பனை செய்வது, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூலதனத்தை அனுமதிப்பது, பொதுவினியோக பொருட்களுக்கு பணம் தந்து விடுவோம் என்று கூறி படிப்படியாக உணவு மானியத்தை கைவிடும் முயற்சியில் ஈடுபடுகின்ற மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் நமது BSNLEU முழுமையாக பங்கேற்க உள்ளது.

          பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெறும் அனைத்திந்திய வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்திட நமது மாவட்ட சங்கம் அனைவரையும் கேட்டு கொள்கிறது.

Monday, February 4, 2013

பகிர்ந்து கொள்வதற்கான சில தகவல்கள்

1.டெலிகாம் மெகானிக் போட்டித்தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு :-
      ஜெனரல் :40 வயது 
      OBC           :43  வயது 
      SC              : 45  வயது
இந்த வயது வரம்பை மேலும் தளர்த்த 30-01-2013 அன்று நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் நாம் வலியுறுத்தி உள்ளோம். நிர்வாகம் கவனமுடன் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது.

2. நமது சங்க அங்கீகார காலத்தை நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி நமது மத்திய சங்கம் துணைமுதன்மை தொழிலாளர் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது.

3. பிபரவரி மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு  முறையான நோட்டீஸ் நிர்வாகத்திற்கு கொடுத்தாகிவிட்டது. இதில் BSNLEU, NFTE (BSNL ), TEPU ,SEWA BSNL, BSNLWRU, BTEU (BSNL), BSNL MS, ATM  மற்றும் பல சங்கங்கள் கையெழுத்து  இட்டுள்ளன.

4. JTO போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை வெளியிட நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

Friday, November 16, 2012

விருதுநகர் மாவட்டத்தில் கிளைவாரியாக வேலைநிறுத்தத்தில்...

கிளையின் பெயர்    உறுப்பினர் எண்ணிக்கை   வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள்  லீவ்       பணிக்கு வந்தோர்  

அருப்புகோட்டை                         25                                                  17                                            2                        6

ஸ்ரீவில்லிபுத்தூர்                           32                                                  20                                             5                        7  

சாத்தூர்                                                19                                                   19                                          0                       0

துணைகோட்டம் ,விருதை     22                                                  11                                            2                       9 

துணைகோட்டம் , சிவகாசி     40                                                   25                                            5                       10

சிவகாசி ,  OCB                                  35                                                   14                                           10                      11

GM Office, விருதுநகர்                    63                                                    33                                           21                       9 

ராஜபாளையம்                              52                                                    22                                            26                      4      

மொத்த சதவீதம்             =        56.46

வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்யப் பாடுபட்ட அனைத்துத் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

விருதுநகர் மாவட்டத்தில் 100 விழுக்காடு உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வைத்த ஒரே கிளையான சாத்தூர் கிளை - செயலருக்கும், உறுப்பினர்களுக்கும் நமது வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தின் காரணமாக சாத்தூர் CSC மூடப்பட்டது. சாத்தூர் CSC தொலைபேசி நிலைய வளாகத்திற்கு உள்ளே இருப்பதால் சாத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தின் பிரதான வாசல் மூடப்பட்டு இன்று வேலைநிறுத்தம் என எழுதி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் வேலைநிறுத்தத்தின் காரணமாக மூடப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையங்கள்
தூத்துக்குடி SSA       : திருச்செந்தூர்
நாகர் கோயில் SSA    : நாகர் கோயில் 2 மையங்கள்
  கன்னியா குமரி
                          நெய்யூர்
                          கரிங்கால்
நீலகிரி SSA           : அனைத்து மையங்களும்
மதுரை       : மதுரை மத்திய தந்தி அலுவல அனைத்து மையங்களும்
                 TVS நகர்
                 உயர் நீதி மன்ற மையம்
விருதுநகர் SSA        : சாத்தூர்

கடலூர் மற்றும் தர்மபுரி SSAக்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100% வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். வாழ்த்துகள்.
பிற SSAக்களிலும் பெரும்பாண்மையான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
எந்தச் சூழ்நிலையிலும், வர்க்க உணர்வோடு தோளோடு தோள் நிற்கும் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

தமிழகத்தில் வேலைநிறுத்தம்

விருதுநகர் – 55.74%
மொத்தம்       : 287
வேலை நிறுத்தம்     : 160
விடுப்பு         :  71
பணி            :  56

கடலூர் – 71.92%
மொத்தம்       : 261
வேலை நிறுத்தம்     : 187
விடுப்பு         :  36
பணி            :  38
ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100%

தர்மபுரி – 96.5%
மொத்தம்       : 320
வேலை நிறுத்தம்     : 309

நீலகிரி – ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100%

            நாகர்கோயில் மாவட்டத்தில் SEWA உறுப்பினர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாகர்கோயில் தொலைபேசி நிலையத்தின் முன்னால் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 75 ஊழியர்கள் கலந்து கொண்டனர். AIBSNLEA உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
        சூழலைப் பயன்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டு நடத்திய நாகர்கோயில் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

Thursday, November 15, 2012

வேலை நிறுத்தத்தை வரலாற்று வெற்றி பெற்றதாக மாற்றுவோம்

         கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காஜியாபாத் பொது மேலாளர் ஆதேஸ் குமார் குப்தா மீது BSNL நிர்வாகமோ, DOTயோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. BSNL நிர்வாகத்தின் மீதும் DOT மீதும் தங்களைத் தற்காத்துக் கொள்ள ITS தனது அதிகாரத்தைச் செலுத்துகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் நாளை வேலை நிறுத்தம் என்று நாம் முன்னரே எடுத்த முடிவில் எந்த மாற்றத்திற்கும் வாய்ப்பே இல்லை.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தன் இன்னுயிரை நீத்த தோழர் சுகேந்தர் பால் சிங் அவர்களுக்கு செவ்வஞ்சலி செலுத்தும் விதமாக வேலை நிறுத்தத்தை வரலாற்று வெற்றி பெற்றதாக மாற்றுவோம்.

வேலை நிறுத்தம் 00:00 மணி முதல் 00:00 மணிவரை

மாநிலச் சங்கங்களின் வேலை நிறுத்தச் சுற்றரிக்கை

BSNL ஊழியர் சங்கம்
& 
தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
மாநிலச் சங்கங்களின் வேலை நிறுத்தச் சுற்றரிக்கை

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...