நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் மூன்றாம் நாள் (26.07.2018) காட்சிகள்:CLICK HERE
Thursday, July 26, 2018
நன்றி
ஒற்றுமைக்கு பங்கம் வந்தாலும் தடைகளை தாண்டி எழுச்சியுடன் நடைபெற்ற 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்கள் ,மற்றும் அதிகாரிகள் ,ஓய்வூதியர்கள் ,ஒப்பந்த ஊழியர்கள் ,கடந்த 3 நாட்களும் வந்த அனைத்து தோழர்களுக்கும் தங்கள் கைகளால் குளிர் பானம் செய்து வழங்கிய நமது SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து மற்றும் மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் ,ராஜபாளையம் பகுதில் இருந்து ஒட்டு மொத்தமாக ஊழியர்களை அணிவகுத்து வர செய்த நமது ராஜை பகுதி மாவட்ட சங்க மற்றும் கிளை சங்க தோழர்கள் ,3 நாட்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற நமது மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,2 நாட்கள் பங்கேற்ற நமது சிவகாசி மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் ,பந்தல் மற்றும் சேர் ஏற்பாடு செய்த மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் ,3 நாட்களும் எழுச்சிமிகு கோஷங்களை எழுப்பிய நமது GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் ,போராட்ட நிதிக்கு உதவிய SNEA மற்றும் AIBSNLEA சங்கத்திற்கும் ,நமது அனைத்து மாவட்ட சங்க மற்றும் கிளை செயலர்களுக்கும் முஷ்டி உயர்த்தி நன்றியை உரித்தாக்குவோம் .
3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு
விருதுநகர் GM அலுவலகம் முன்பாக இன்று 3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் போராட்டம் SNEA மாவட்ட பொருளாளர் தோழர் செல்வராஜ் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது .இன்றைய உண்ணாவிரதத்தை அருப்புக்கோட்டை SNEA தோழர் சம்பத்குமார் முறையாக துவக்கி வைத்தார் .அதன் பின் BSNLEU மாவட்ட செயலாளர் ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார் .இன்றைய போராட்டத்திற்கு ராஜபாளையம் தோழர்கள் ஒட்டு மொத்தமாக அணிவகுத்து வந்தது ஒரு சிறப்புமிகு நிகழ்வு .இன்றைய கூட்டத்தில் BSNLEU மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் , தோழர் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் விரிவாக இன்றைய போராட்டத்தின் அவசியம் பற்றி பேசினர் .
Wednesday, July 25, 2018
உண்ணா விரதத்தின் இரண்டாம் நாள் காட்சிகள்
நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் இரண்டாம் நாள் (25.07.2018) காட்சிகள் பார்க்க : CLICK HERE
3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 2 ஆம் நாள் நிகழ்வு
3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 2 ஆம் நாள் நிகழ்வு இன்று SNEA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . BSNLEU சங்கம் சார்பாக இன்று சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை தோழர்கள் கலந்து கொண்டனர் . கோரிக்கைளை விளக்கி BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் ,சாத்தூர் கிளை செயலர் தோழர் காதர் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி ,SNEA அருப்புக்கோட்டை கிளை செயலர் மனோகரன் ,SNEA மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் கேசவன் ,வெங்கடேஷ் மற்றும் AIBSNLEA சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ,அதன் மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி , BSNLEU சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி ,SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் ஆகியோர் பேசினர் .BSNLEU மாவட்ட செயலர் கோரிகளை விளக்கி பேசி நன்றி கூறி உண்ணா விரத போராட்டத்தை நிறைவு செய்தார் .
நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் முதல் நாள் (24.07.2018) தமிழக காட்சிகள்
தமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் பார்க்க :-CLICK HERE
முத்திரை பதித்த மூன்றாவது தமிழ் மாநில மாநாடு! பாண்டிச்சேரி - 15.07.2018:- மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-CLICK HERE
BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் தமிழ்மாநில 3 வது மாநில மாநாட்டிற்கு நமது மாவட்டம் சார்பாக பங்கேற்ற தோழியர்கள்
மாநாட்டு நிகழ்வுகள்
3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
நான்காம் தலைமுறை அலைக்கற்றையை BSNL நிறுவனத்திற்கு வழங்கிடு ,3 வது ஊதிய மாற்றத்தை BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக அமல்படுத்திடு ,1-1-2017முதல்BSNL ஓய்வூதியர்களுக்கு பென்ஷனை மாற்றிடு , பென்ஷன் பங்கீட்டு தொகையை வாங்குகின்ற ஊதியத்தில் கணக்கீடு ,போன்ற கோரிக்கைகளில் நமது துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற கோரி விருதுநகர் மாவட்டத்தில் PGM அலுவலகம் முன்பாக இன்று முதல் (24/07/2018) 3 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் முதல் நாள் தோழர் K .R .கிருஷ்ணகுமார் ,BSNLEU மாவட்ட துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது .உண்ணா விரத போராட்டத்தை BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி முறையாக தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் ,BSNLEU சங்கம்சார்பாக தோழர்கள் இளமாறன் ,இன்பராஜ் ,முனியாண்டி ,குருசாமி ,சந்திரசேகரன் ,முத்துசாமி ,ராஜேந்திரன் ஆகியோரும் ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,சிவஞானா ம் ,தோழர் புளுகாண்டி ,ஜெயராஜ் ஆகியோர் பேசினர் .
Wednesday, July 11, 2018
ஆர்ப்பாட்டம்
விருதுநகர் GM அலுவலக வளாகத்தில் இன்று அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்திற்கு SNEA மாவட்ட செயலர் திரு செந்தில்குமார் அவர்கள் தலைமை தாங்கினார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,BSNLEU மாநில உதவி செயலர் தோழர் முருகையா , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைகனி ஆகியோர் பேசினர் .BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி நன்றி நவின்றார்
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...