Showing posts with label அருப்புக்கோட்டை. Show all posts
Showing posts with label அருப்புக்கோட்டை. Show all posts

Monday, October 8, 2018

கிளை மாநாட்டு அழைப்பிதழ்


BSNLEU – அருப்புக்கோட்டை
14 ஆவது கிளை மாநாடு
10.10.2018 – புதன்கிழமை – மாலை 5.00 மணி – தொலைபேசி நிலையம்
தலைமை       : தோழர் U.B. உதயகுமார், கிளைத்தலைவர்
அஞ்சலி         : தோழர் கணேசமூர்த்தி, மாவட்ட அமைப்புச்செயலர்
வரவேற்புரை   : தோழர் A.சோலை, கிளைச் செயலர்
தொடக்கவுரை  : தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை விவாதம்
             வாழ்த்துரை : திருமிகு சரவணன், கோட்டப் பொறியாளர், APK
    தோழர் A.சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்
    தோழர் R.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர், BSNLEU
                தோழர் வேல்ச்சாமி, பொறுப்பு மாவட்டச் செயலர், TNTCWU
                தோழர் மனோகர், கிளைச் செயலர், SNEA
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
BSNL ஊழியர் சங்கம் – அருப்புக்கோட்டை கிளை

Wednesday, September 26, 2018

அருப்புக்கோட்டை கிளை பொதுக்குழு

          அருப்புக்கோட்டை கிளையின் பொதுக்குழு செப்டம்பர் 25ஆம் நாள் மாலை அருப்புக்கோட்டை தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர் உதயகுமார் தலைமை வகித்தார். கிளைச்செயலர் தோழர் சோலை ஆய்படுபொருளை விளக்கி உரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் மூன்றாவது ஊதியக் குழுவின் நிலை மற்றும் வரவிருக்கும் போராட்ட களங்களை விளக்கி உரையாற்றினார். மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் நடந்து முடிந்த டெல்லி பேரணி அனுபவங்கள், வரவிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் மாநில மாநாடு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

             அருப்புக்கோட்டை கிளைகளின் கிளை மாநாடுகள் அக்டோபர் 10ஆம் தேதி மாலை நடத்தப்படும் என பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.












Monday, September 24, 2018

அருப்புக்கோட்டை கிளை - பொதுக்குழு

25-09-2018, செவ்வாய் மாலை 5 மணிக்கு அருப்புக்கோட்டை கிளையின் பொதுக்குழு கிளைத்தலைவர் தோழர் உதயகுமார் தலைமையில் நடைபெற உள்ளது.

ஆய்படு பொருள் : 
1. டெல்லி பேரணி அனுபவங்கள்
2. மூன்றாவது ஊதியக் குழு
3. கிளை மாநாடு 
4. இன்ன பிற - தலைவர் அனுமதியுடன்

சிறப்புரை
தோழர் இரவீந்திரன், மாவட்டச் செயலர்
தோழர் ஜெயக்குமார், மாவட்டத் தலைவர்
தோழர சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்

Sunday, September 10, 2017

அருப்புக்கோட்டை கிளை மாநாடு

அருப்புக்கோட்டை கிளை மாநாடு அதன் தலைவர் தோழர் உதயகுமார் தலைமையில் 09/09/2017 அன்று மாலை  5 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் பதவி உயர்வு பெற்று செல்வதை  ஒட்டி அவருக்கு சிறப்பான பாராட்டு விழாவும் கிளை மாநாட்டுடன் இணைந்து நடைபெற்றது. தியாகிகளுக்கு தோழர் சோலை அஞ்சலி செலுத்தினார். அதன் பின் கிளை செயலர் தோழர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முறையாக கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்தார். மாநாட்டை வாழ்த்தி SNEA மாவட்ட தலைவர் தோழர் சரவணன், கோட்ட பொறியாளர், அருப்புக்கோட்டை, மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார், JCTU தோழர் ராஜாராம், மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் தோழர்கள் முத்துசாமி, காதர்  மொய்தீன், மாரியப்பா, மாரிமுத்து, சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி சிறப்புரை நிகழ்த்தினார். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் உதயகுமார் ,சோலை மற்றும் அய்யனார் அவரகள் தலைவர் ,செயலர் மற்றும் பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .அதன் பின் நடைபெற்ற பாராட்டு விழாவில் தோழர்கள்  அனைவரும் தோழர் அஷ்ரப் தீன் அவர்களின் தொழிற்சங்க பணியை நினைவு கூர்ந்தனர். மாவட்ட சங்கம் சார்பாக தோழர் அஷ்ரப் தீன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பெற்றார். புதிய கிளை செயலர் தோழர் சோலை நன்றி நவின்றார்.





































Image may contain: 1 person, sitting

Image may contain: 7 people, people smiling, people sitting

Image may contain: 5 people, people sitting and indoor

Image may contain: 8 people, people sitting and indoor

Image may contain: 4 people, people sitting

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...