Wednesday, September 26, 2018

அருப்புக்கோட்டை கிளை பொதுக்குழு

          அருப்புக்கோட்டை கிளையின் பொதுக்குழு செப்டம்பர் 25ஆம் நாள் மாலை அருப்புக்கோட்டை தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர் உதயகுமார் தலைமை வகித்தார். கிளைச்செயலர் தோழர் சோலை ஆய்படுபொருளை விளக்கி உரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் மூன்றாவது ஊதியக் குழுவின் நிலை மற்றும் வரவிருக்கும் போராட்ட களங்களை விளக்கி உரையாற்றினார். மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் நடந்து முடிந்த டெல்லி பேரணி அனுபவங்கள், வரவிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் மாநில மாநாடு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

             அருப்புக்கோட்டை கிளைகளின் கிளை மாநாடுகள் அக்டோபர் 10ஆம் தேதி மாலை நடத்தப்படும் என பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.












No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...