இன்று (19/09/2018) விருதுநகர் BSNLEU சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயலர் முன்மொழிய அனைவரும் தியாகிகளுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் முன்மொழியப்பட்ட ஆய்படு பொருளை மாவட்ட செயற்குழு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டது . அதன் பின் தலைவர் தனது தலைமையுரையில் டெல்லி பேரணியில் பெருமளவில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட தோழர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார் .மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் விரிவாக பேசினார் .தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் 68 ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை ,அதில் பங்கேற்ற ஊழியர்களின் தியாகத்தை கண்ணெதிரே பார்ப்பது போல் ஒரு அற்புத உரை நிகழ்த்தினார் .அதே போல் ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையின் அம்சங்களையும் விரிவாக எடுத்துரைத்தார் .ஆய் படு பொருள் மீது மாவட்ட செயலர் ஒரு விரிவான குறிப்பை கூற ,கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் விவாதத்தில் பங்கேற்றனர் . மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் .ஒப்பந்த ஊழியர் சங்க செயற்குழுவும் இன்று இணைத்தே நடைபெற்றது . மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் நன்றி நவின்றார் .
1. TNTCWU மாநில மாநாட்டிற்கு நமது மாவட்ட சங்க பங்கேற்பாக ரூபாய் 5000/- நமது தமிழ் மாநில சங்கத்திடம் கொடுக்கப்பட்டது .
2. TNTCWU மாநில மாநாட்டிற்கு நமது மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய் 3000/- விருதுநகர் மாவட்ட TNTCWU சங்கத்திற்கு வழங்கப்பட்டது .
3.டெல்லி பேரணிக்கு அனைவரையும் ஒருங்கிணைத்து அற்புத பணியாற்றிய தோழர்கள் ஜெயக்குமார் ,மாரியப்பா ,சந்திரசேகரன் ஆகியோரை மாவட்ட செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டது .
4.அனைத்திந்திய மாநாட்டு பிரதிநிதிகளாக தோழர்கள் S ரவீந்திரன் ,மற்றும் R ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டனர் . தோழர் A .குருசாமி பார்வையாளராக கலந்து கொள்வார் .
5 மாநாட்டு பொது அரங்கில் பங்கேற்க அனைவரையும் திரட்டுவது . அதில் பங்கேற்கும் தோழர்கள் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் ரூபாய் 1000/கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது .
6.அனைத்து கிளை மாநாடுகளையும் வரும் அக்டோபர் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது .
7.ஊழியர்களுக்கு விடுப்பு கொடுப்பதில் ஒரு கடுமையான நிலை கையாளப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் ஒரு சரியான புரிதலை உண்டாக்க கடைசி கட்ட முயற்சியை மாவட்ட தலைவரும் ,மாநில அமைப்பு செயலரும் செய்வார்கள் .
8. மாவட்டம் முழுமையும் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று ரோடு ஷோ வில் பங்கேற்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது .
9.தேவைப்படும் இடங்களில் விருப்பம் இருப்பவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாவட்ட முதன்மை பொது மேலாளர் மற்றும்துணை பொதுமேலாளர் ஒப்பு கொண்ட பிறகு திடீரென அதை அமல்படுத்த முடியாது என்று சொல்வதின் மர்மத்தை உடைக்கவேண்டிய அவசியத்தை வர இருக்கும் லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைப்போம் .
குறிப்பாக AO (சேல்ஸ்) பகுதியில் சிம் எடுக்க ,பைல் எடுக்க ஊழியரே இல்லை .விருப்பம் கொடுத்த ஊழியருக்கு கூட உத்தரவு போட நிர்வாகத்திற்கு மனம் இல்லை என்பதை நாம் ஏற்கமுடியாது .அதே போல் கல்குறிச்சி தொலை பேசி நிலையத்திற்கு விருப்பம் இருந்தும் கடந்த 10 மாதங்களாக நியமனம் செய்யாமல் இருப்பது நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை காட்டுகிறது .
10. டெல்லி பேரணியில் ஏற்பட்ட செலவினங்களில் மீதமான தொகையை மாவட்ட சங்கத்தின் வளர்ச்சிக்கு கொடுத்த அத்துணை இதயங்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி.
11.வரும் அக்டோபர் 9 ஆம் தேதி லோக்கல் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது .
12. இளம் தோழர்களுக்கான பயிலரங்கத்தை விருதுநகர் அல்லது சிவகாசியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது .ஒட்டு மொத்த மாவட்ட செயற்குழுவே வரவேற்பு குழுவாக செயல்படும் .
வாழ்த்துக்களுடன்
மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment