கார்போரேட் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக ஒட்டு மொத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை புறக்கணிக்கும் நடுவண் அரசை கண்டித்து நியூ டெல்லியில் செப்டம்பர் 5 ஆம் தேதி மிக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது .இந்த பேரணியில் இந்தியா முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அணிவகுத்தனர் .நமது மத்திய சங்கம் இந்த பேரணியில் BSNLEU பங்கேற்கும் என்று அறிவித்தவுடன் நமது விருதுநகர் மாவட்ட சங்கம் அனைத்து கிளைகளின் பொது குழு கூட்டத்தை நடத்தி ஊழியர்களை திரட்டியது .இந்த மகத்தான பேரணியில் நமது மாவட்ட சங்கம் சார்பாக 42 தோழர்கள் கலந்து கொண்டது மட்டும் இன்றி அவர்கள் தம் குடும்பத்தாரும் என மொத்தம் 91 பேர் கலந்து கொண்டது மாவட்ட சங்க செயல்பாட்டில் ஒரு மைல் கல் எனலாம் ,இதற்கான ஏற்பாட்டை முழு வீச்சில் ஈடுபட்ட நமது மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் அவர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி .பல்லாயிரகணக்கான மைல்கள் பயணம் ,தொடர் மழை ,கடும் போக்குவரத்துக்கு நெருக்கடி அத்தனையும் கடந்து கலந்து கொண்ட நமது அத்துணை தோழர்கள் அவர்தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட சங்கம் தனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .நமது பிரச்சனைகளுக்காக மட்டும் அல்ல , தேசத்தை பாதுகாக்க நடக்கும் இயக்கங்களிலும் முத்திரை பதிக்கும் ஒரே சங்கம் நமது BSNLEU சங்கம் மட்டுமே என்பதை இந்த டெல்லி பேரணியே உணர்த்தும் .இந்த பேரணியில் நம்முடன் இணைந்து வந்த AIBDPA சங்க தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,ஜெயபாண்டியன் ,ஜெயபால் மற்றும் அதிகாரி தோழர் நாராயணன் ஆகியோருக்கும் நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment