இன்று (0/09/2018) 15 வது சிவகாசி கிளை மாநாடு அதன் தலைவர் தோழர் ராஜய்யா தலைமையில் மிக சிறப்பாக மற்றும் எழுச்சியுடன் நடைபெற்றது .மாநாட்டின் முதல் நிகழ்வாக தேசிய கொடியை தோழர் பொன்னுசாமி ஏற்றி வைக்க ,சங்க கொடியை தோழர் சுப்ரமணியன் ஏற்றி வைத்தார் .தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .கிளை செயலர் தோழர் கருப்பசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி ஆய் படு பொருளை சமர்ப்பித்து அதை கிளை மாநாடு ஏற்று கொண்டது .அதன் பின் மாவட்ட செயலர் முறையாக கிளை மாநாட்டை தொடக்கி வைத்தார் .அதன் பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கை கிளை செயலர் மற்றும் கிளை பொருளாரரால் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்று கொள்ளப்பட்டது .மாநாட்டை வாழ்த்தி மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,ஒப்பந்த ஊழியர் சங்க பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் வேலுச்சாமி ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் CITU நகர செயலர் தோழர் லாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .அதன் பின் சிறப்புரையாக தோழர் பழனிக்குமார் ,மாநில அமைப்பு செயலர் ஒரு அற்புத உரை நிகழ்த்தினார் .முதலாளித்துவம் தன்னுடைய நலன்களை பாதுகாக்கின்ற அரசியல் வாதிகளை ஆட்சி கட்டிலில் அமர்த்துவதை கைவிட்டு தானே ஆட்சியில் அமர்வதிற்கான நிகழ்வுகளை நோக்கி நாடு செல்வதையும் ,நமது நிறுவனத்தை பாதுகாப்பதற்கு நமது சங்கம் நடத்திய போராட்டங்கள் ,ஒன்றுபட்ட போராட்டத்தால் துணை டவர் நிறுவனம் கைவிடப்படுவது ,ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தையின் சாரம்சங்கள் ,வரக்கூடிய பொது வேலை நிறுத்தம் ஆகியவற்றை பற்றி ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார் .அவரது உரை யை கேட்ட அனைவரும் மிகவும் பாராட்டினர் .அதன் பின் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கிளை தலைவர் செயலர் மற்றும் பொருளாளராக தோழர்கள் ராஜய்யா ,கருப்பசாமி ,இன்பராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment