14 வது இணைந்த ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகளின் கூட்டு மாநாடு இன்று (27/10/2018) அதன் தலைவர் தோழர் தியாகராஜன் அவர்கள் தலைமையில் மிகவும் எழுச்சியுடன் அய்யனார் அருவி கரையோரம் நடைபெற்றது . ஒரு மினி மாவட்ட மாநாடு போல் நடைபெற்ற இம் மாநாட்டு பணிகளை ராஜபாளையம் தோழர்கள் குறிப்பாக தோழர் வெள்ளைப்பிள்ளையார் ,பொன்ராஜ் ,ராதாகிருஷ்ணன் ,பொன்னுச்சாமி ,ரவிச்சந்திரன் ,வேலுச்சாமி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தலைமையில் மிகவும் கட்டுப்பாட்டுடன் ,செய்தது பாராட்ட தக்கது .நமது சங்க கொடியை கிளையின் மூத்த தோழர் பிச்சை விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றினார் .ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை தோழியர் மாரியம்மாள் ஏற்றிவைத்தார் .அதன் பின் கிளை தலைவர் தோழர் தியாகராஜன் தலைமை உரைநிகழ்த்த ,அஞ்சலி தீர்மானத்தை தோழர் முருகன் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் கிளை செயலர்கள் தோழர்கள் பொன்ராஜ் மற்றும் தங்கதுரை ஆகியோர் ஆய்படு பொருளை சமர்ப்பித்து வரவேற்புரை நிகழ்த்தினர் .அதன் பின் முறையாக மாவட்ட செயலர் மாவட்டத்தின் பிரச்சனைகள் தொகுத்து வழங்கி மாநாட்டை முறையாக துவக்கி வைத்தார் ,அதன் பின் சிறப்புரையாக தோழர் K.பழனிக்குமார் அரசின் கொள்கைகள் ,மற்றும் ஊதிய மாற்றம் பெறுவதற்கு நாம் தலைமை தாங்கி நடத்தும் போராட்டங்கள் ,அதை தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தையின் சாராம்சங்கள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார் .அதன் பின் கிளை மாநாட்டை வாழ்த்தி நமது மாநில அமைப்பு செயலர் சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு மற்றும் கோட்ட பொறியாளர் திரு தங்கவேல் ஆகியோர் பேசினர் .தோழர்கள் தியாகராஜன் ,ராதாகிருஷ்ணன் ,ரவிச்சந்திரன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாராக ராஜபாளையம் கிளைக்கு தேர்ந்து எடுக்க பட்டனர் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு தோழர்கள் ரவிச்சந்திரன் ,வெங்கடசாமி ,தங்கதுரை ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாராக தேர்வு செய்யப்பட்டனர் .புதிய கிளை செயலர்கள் நன்றி நவில மாநாடு இனிதே நிறைவு பெற்றது .



































