Friday, October 12, 2018

14 வது அருப்புக்கோட்டை கிளை மாநாடு

14 வது  அருப்புக்கோட்டை கிளை மாநாடு  10/10/2018 அன்று அருப்புக்கோட்டை தொலைபேசி நிலைய வளாகத்தில் அதன் தலைவர் தோழர் உதயகுமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் கோஷங்கள் எழுப்ப ,நமது சங்க கொடியை  அந்த கிளையின் மூத்த  தோழர் அய்யனார் ஏற்றி வைக்க மாநாடு இனிதே துவங்கியது . மறைந்த தியாகிகளுக்கு தோழர் கணேசமூர்த்தி அஞ்சலி தீர்மானம் வாசிக்க அனைவரும் அஞ்சலி செலுத்தினர் .கிளை செயலர் தோழர் சோலை  தனது வரவேற்புரையோடு அவர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை முறையாக விவாதத்தோடு ஏற்று கொள்ளப்பட்டது .அதன் பின் முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாநாட்டை துவக்கி வைத்தார் .வர இருக்க கூடிய   போராட்டங்கள் மற்றும் ஜனவரி மாதம்  நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை  நிறுத்தம் ,மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள்  பற்றி விரிவாக பேசினார் .மாநாட்டை வாழ்த்தி மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் மாரியப்பா ,குருசாமி , ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட  துணை தலைவர்  தோழர் முனியசாமி ,கிளை செயலர்கள் தோழர்கள் கருப்பசாமி மற்றும் மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .தோழர்கள் உதயகுமார் ,சோலை மற்றும் டீ தியாகராஜன் ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .ஒப்பந்த ஊழியர் கிளை மாநாடும் இம் மாநாட்டுடன் இணைந்து நடைபெற்றது .
Image may contain: 2 people, people standing, sky and outdoor
Image may contain: one or more people, people standing, crowd and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 3 people, including Mani Maran, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting, table and indoor
Image may contain: 4 people, people sitting


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...