Friday, January 31, 2014

உலக நாட்டாமையின் வருத்தத்தை பாரீர்


                     உலக நாட்டாமைக்கு  இந்தியாவில்  கூட்டணி ஆட்சி வந்தால் புதிய பொருளாதார கொளகை மற்றும் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வந்து விடுமோ என்று   அச்சம் தெரிவித்து உள்ளதை மேற்குறிய  செய்தி தெரிவிக்கிறது இந்தியாவின் இறையாண்மையில் இவர்களின் அக்கறையை என்னவென்பது ?
                       <நன்றி : தினமலர் >

ஊதிய குறைப்பு பிரச்னை

     01-01-2007 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு(TTA, TOA மற்றும் RM) ஊதிய குறைப்பு ஏற்பட்டதை தீர்க்க திட்டவட்டமாக JTO கேடருக்கு வழங்கப்பட்டதை போல் 5 இன்கிரிமெண்ட் வழங்க வலியுறுத்தி நமது சங்கம் மீண்டும் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.3 பொது மேலாளர் அடங்கிய குழு ஒரு இன்கிரிமெண்ட் மட்டும் வழங்க வேண்டும் என்றும் அதற்கு நிலுவை தொகை கிடையாது என்றும் பரிந்துரைத்த பாரபட்சத்தால் நமது நிறுவனத்தின் செயல் திறன் பாதிக்கப்படும் என நமது சங்கம் எச்சரித்து உள்ளது .நமது சங்க கடிதம் படிக்க :-Click Here

Over 2 million telephone subscribers unhappy with their service providers, claims TRAI

செய்தி படிக்க :-Click Here

GoM nod sought for monetisation of BSNL real estate

செய்தி படிக்க :-Click Here

BSNL ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் தோழர் M.நாராயணசாமி இன்று BSNL பணி நிறைவு

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Thursday, January 30, 2014

காந்தி தேசம்


                                      <நன்றி :- தீக்கதிர் > 

Wednesday, January 29, 2014

BSNL to complete 2G, 3G expansion by mid-year

செய்தி படிக்க :-Click Here

11-ஆவது BSNL ஊழியர் சேமநல வாரியத்திற்கான ஆய்படு பொருட்கள்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here 

மத்திய சங்க செய்திகள்

நமது உதவி பொது செயலர் தோழர் .ஸ்வபன் சக்கரவர்த்தி நிர்வாகத்திடம் பேசியவை :-

1.29 வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி SC /ST  ஊழியர்களுக்கு இலாகா தேர்வில் தேர்வு பெறுவதற்கு தகுதி மதிப்பெண் குறைக்கப் பட  வேண்டும் என்பது நடை முறைப்படுத்தப்படவில்லை என்பதை SR GM (Rect ) அவர்களிடம் சுட்டிக்  காட்டினார் .தேசிய கவுன்சில் முடிவின் படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என SR GM (Rect ) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .
2.கேடர் பெயர் மாற்றம் விசயமாக உடனடியாக அதற்கான கமிட்டியை கூட்ட வேண்டும் என Sr.GM (Restructuring) அவர்களிடம் நமது உதவி செயலர் கேட்டு கொண்டுள்ளார் ..அங்கீகரிக்கபட்டுள்ள மற்றொரு சங்கம் கேடர்களுக்கான பெயர்களை கொடுத்தவுடன் கமிட்டி கூடும் என Sr.GM (Restructuring) அவர்கள் கூறியுள்ளார் .
3. LTC  விசயமாக நிர்வாகம் இரு வேறுபட்ட நிலைபாட்டை கையாள்வதை(BSNL பகுதியில் deputation அடிப்படையில்  வந்தவர்களுக்கு LTC சலுகையை அனுமதிப்பதும் ,நமது BSNL நிறுவனத்தில் நிரந்தரமாக பணி புரிபவர்களுக்கு LTC சலுகையை நிதி நெருக்கடியை காரணம் காட்டி  மறுப்பது ) எதிர்த்து நமது சங்கம் கடிதம் கொடுத்துள்ளது ..கடித நகல் பார்க்க :- Click Here

Tuesday, January 28, 2014

கெட்ட பஞ்சாயத்து!

படிக்க:-Click here 

2014 ஆம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தை தொடும்..

             
             பொருளாதார மந்த நிலை மற்றும் தொழிற் பெருக்கத்தில் காணப்படும் தேக்கம் ஆகியவை வேலைவாய்ப்புகளை மங்க வைப்பதாகவும் இதனால் இந்தியாவில் வேலையற்றோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலக தொழிலாளர் அமைப்பு (ILO), நாட்டின் வேலை வாய்ப்புகளின் மந்த நிலையைச் சுட்டிக்காட்டி கடந்த இரண்டாண்டுகளில் வேலையின்மை நிலை உயர்ந்துவருவதாக தன்னுடைய ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அமைப்பு அளித்துள்ள புள்ளிவிவரங்கள் மற்றும் கணிப்பின்படி, இந்த வருடம் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 3.8 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றன.அமைப்புசாரா மற்றும் விவசாயம் சார்ந்த வேலைகளில் மிகவும் குறைந்த ஊதியத்திற்கும் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யவும் நிர்பந்த்திக்கப்படுவதால் தெற்காசியாவில் வேலைவாய்ப்புகள் நெருக்கடிக்குள்ளகியுள்ளன என உலக தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கை கூறுகிறது.இந்தியாவின் வேலைவாய்ப்பு விகிதம் 2011 ஆம் ஆண்டு முதல் உயர்ந்து கொண்டிருப்பதாகவும், அப்போதிருந்த 3.5% விகிதத்திலிருந்து உயர்ந்து 2012 ஆம் ஆண்டில் 3.6 சதவிகிதமாகவும் 2013 ஆம் ஆண்டில் 3.7 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த வருடம் வேலையின்மை 3.8 சதவிகித்தை எட்டும் என 2014ஆம் ஆண்டின் உலக வேலைவாய்ப்பு நிலையறிக்கை தெரிவிக்கிறது.
                               <நன்றி :- ஒன் இந்தியா >

சபாஷ் மத்திய பிரதேச மாநில இந்தூர் பி எஸ் என் எல் ஊழியர் சங்கம்

சபாஷ் ! இது தான்  பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் 
      மத்திய பிரதேச மாநில இந்தூர் பி எஸ் என் எல் ஊழியர் மாவட்ட சங்கம் 18-01-2014 அன்று வாடிக்கையாளர் மகிழ்விப்பு மேளாவை சிறப்பாக நடத்தியது.அம் மேளாவில் 522 சிம் விற்பனை செய்யப்பட்டது.மேலும் 11 FTTH இணைப்புகள் கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்டன . மேளாவில் கலந்து கொண்ட மத்திய பிரதேச மாநில தலைமை பொது மேலாளர் N .K .யாதவ் நமது முயற்சிகளை பாராட்டினார் .தொழிற்சங்கங்களின் இது போன்ற ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பிஎஸ்என்எல் நிதி ஆதாரத்தை வலுவடைய செய்யும் என பொது மேலாளர் அவர்கள் குறிப்பிட்டார் . நமது மத்திய சங்கம் இந்தூர் மாவட்ட சங்கத்திற்கு தனது பாராட்டை தெரிவிப்பதோடு, இம் முயற்சியை தேசமே ஒரு உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை எதிர்த்து போராடும் அதே நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்ற இது போன்ற முயற்சிகள் மிகவும் அவசியம் ஆகிறது . மேளா நிகழ்ச்சியை பார்க்க :-Click Here  

Monday, January 27, 2014

BSNL, MTNL to exploit Rs 1,00,000 cr land bank

செய்தி படிக்க :-Click Here

பணி ஓய்வு பாராட்டு விழா

பஞ்சாப்பில் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு மற்றும் R.L .மௌட்கில்,உதவி பொது செயலர் அவர்களுக்கு நடந்த பணி ஓய்வு பாராட்டு விழா செய்தி படிக்க :Click Here

கனரா வங்கி கடன்

     BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் (loans) வழங்குவதற்கு நமது நிறுவனத்திற்கும் கனரா வங்கிக்கும்  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 31-12-2014 வரை இது அமலில் இருக்கும் . செய்தி பார்க:-Click Here

மாநிலச் செயலக முடிவுகள்

சென்னை கூட்டுறவு சங்க தேர்தல்


ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் - சிவகாசி

          25/01/2014 அன்று சிவகாசியில் நடைபெற்ற ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கிளை மாநாட்டில் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக தோழர் G. ராஜு, TM அவர்களும் செயலராக தோழர் P.ராமசந்திரன் அவர்களும் பொருளராக தோழர் சவரிமுத்து அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.
Saturday, January 25, 2014

Moving towards merging MTNL with BSNL: Sibal

செய்தி படிக்க :-Click Here

மாநில சங்க சுற்றறிக்கை

மாநில சங்க சுற்றறிக்கை எண் 109 படிக்க :-Click Here

குடியரசு தின வாழ்த்துக்கள்

          அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் மத்தியில் அமைதி, நட்பு, சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று, நாம் அனைவரும் இந்த குடியரசு விழாவில் விழாவில் உறுதிமொழி எடுத்து கொள்வோம் என அனைவர்க்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

Friday, January 24, 2014

இது தானா பொருளாதார வளர்ச்சி

                    தலைநகர் டெல்லியில் 2013 டிசம்பர் முதல், சுமார் 400 அடையாளம் தெரியாத உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன என சாம் என்ற ஒரு தன்னார்வ அமைப்பு தெரிவிக்கிறது. இறந்த அனைவரும் வீடற்றவர்களாக தெருவில் வாழ்ந்து கடுமையான குளிரில் இறந்துள்ளனர் இன்னொரு பக்கத்தில், இந்திய அரசு புதிய தாராள  பொருளாதார கொள்கைகளை வேகமாக செயல்படுத்தி ஒரு பொருளாதார வல்லரசாக இந்தியா  மாறி வருகிறது என்று  கூசாமல் பொய் சொல்லி வருகிறது. அவர்கள் சொல்லும் இந்த பொருளாதார வளர்ச்சி நாட்டின் பொது மக்களுக்கு எந்த வித பலனும் இல்லை என்ற ஒரு கடினமான உண்மையை இந்திய நாட்டின் தலைநகரில் நடந்த இம் மரணங்கள்  வெளிச்சம் போட்டு காட்டுகின்றது .

MTNL, BSNL likely to offer free roaming plans from Jan 26

 MTNL and BSNL are likely to launch new roaming plans from January 26 that will offer their subscribers free calls, sources said      State-owned telecom firms and are likely to launch new plans from January 26 that will offer their subscribers free calls, sources said."MTNL has plans to make roaming free for its customers on its network in Delhi and Mumbai without any additional charge," said an official source.He added, however, that BSNL will also have a roaming plan for free calls, but its customers may have to shell out Re 1 a day to avail of the facility.

  The schemes are likely to be in place from January 26.

          Several private telecom operators already offer plans under which, for a monthly or daily fee starting Rs 5, people get all incoming calls without roaming charges.MTNL has operations in Delhi and Mumbai only, while BSNL has operations across country except in these two circle.MTNL's Mumbai customer will not have to pay any extra charge when they travel to Delhi, and same scheme will apply for its Delhi customers.Further details of PSUs plans could not be ascertained. Source said that Telecom Minister Kapil Sibal is likely to announce this scheme within couple of days.  "Minister (Sibal) had asked the PSUs in November to come up with free roaming scheme. Though MTNL made it free, BSNL will levy charge so that it can bear cost. Customers availing scheme will enjoy local tariff wherever they travel," the source said.As per latest the data released by telecom regulator Trai, 9.78 crore subscribers while MTNL has 35.75 lakh customers on its network.
             <நன்றி :-BUSINESS STANDARD>

Thursday, January 23, 2014

புதைக்கப்படும் தொழிற்சங்க மாண்பு

                    நமது விருதுநகர் மாவட்ட சங்க மாநாடு வரும் மார்ச் 5, 6 தேதிகளில் அருப்புகோட்டையில் நடைபெற உள்ளது. நமது மாவட்ட மாநாட்டை அருப்புகோட்டை தொலைபேசி நிலையத்தில் கட்டப்பட்ட நாளில் இருந்தே பயன்பாடு இன்றி உள்ள மீட்டிங் ஹாலில்  வாடகை கொடுத்து நடத்துவதற்கு முறையான விண்ணப்பத்தை மாவட்ட சங்கம் நிர்வாகத்திடம் கொடுத்தோம். விண்ணப்பம் கொடுத்து நீண்ட நாட்களுக்கு பின் போதுமான வசதிகள் இல்லை என்பதால் அனுமதி இல்லை என்று நிர்வாகம் நமக்கு கடிதம் கொடுத்தது. நாம் உடனடியாக பொது மேலாளர் அவர்களை மதுரை மாவட்ட செயலர் தோழர் சூரியன் அவர்கள் மூலம் தொடர்பு கொண்டு  இருக்கின்ற வசதிகளில் நாங்கள் மாநாட்டை நடத்திக் கொள்கிறோம் என்பதை எடுத்துரைதோம். இதனடிப்படையில் நமது துணைப்  பொது மேலாளர் மீட்டிங் ஹாலை ஆய்வு செய்வதற்காக அருப்புகோட்டை சென்றார். அவர் சென்ற மறு நிமிடம் NFTE சங்கம் அருப்புகோட்டையில் நமது மாவட்ட மாநாடு நடத்த அனுமதி கொடுக்க கூடாது என்று கடிதம் கொடுத்து அவர்களின் தொழிற்சங்க மாண்பை பறை சாற்றியுள்ளார்கள். இது விசயமாக மாவட்டச் செயலர் உடனடியாக NFTE மாவட்ட செயலரிடம் தொடர்பு கொண்டு இது சரியல்ல என்பதை சுட்டி காட்டியபோது நாளை பேசலாம் என்றும், அடுத்து பேசும் போது 2 நாட்கள் கழித்து பேசலாம் என்றும் தட்டி கழிக்கும் போக்கைக் கையாண்டதால் NFTE ராஜபாளையத்தில் நடத்தும் மாவட்ட மாநாட்டில் வாழ்த்துரை வழங்கும் நிகழ்ச்சி நிரலை நமது சங்கம் புறக்கணிக்கும்.
 தடைகளைத் தகர்ப்போம்!
 அணிவகுப்போம்! அருப்புகோட்டையை நோக்கி!
முதன்மை சங்கமாம் 
 பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் அனுமதியின்றி ஒரு அணுவும் அசைய அனுமதியோம்...

<<< தகவல் பலகைக்கான அச்சுப் பிரதி >>>

Wednesday, January 22, 2014

செய்தி

          தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு தொகையை (SUC) அந்நிறுவனங்களின் ஆண்டு மொத்த வருவாய் அடிப்படையில் கட்டுவதில் அரசை ஏமாற்றுகிறன. (மொத்த வருவாயை குறைத்துக் காட்டி) இதை அடுத்து, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் வரவு - செலவு கணக்கை மத்திய தலைமை கணக்காயம் ஆய்வு செய்ய முடியும் என்றும், இவர்களிடம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமான கணக்கை காட்ட வேண்டும் என்றும் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனியார் தொலை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியையும், சிக்கலையும் ஏற்படுத்தியதை அடுத்து அந்நிறுவனங்கள் டில்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பில் செய்ய உள்ளன.

மனிதவளம்: உலக மயமும் உள்ளூர் நலனும்

செய்தி படிக்க : Click Here

Tuesday, January 21, 2014

இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் அனைத்திந்திய மாநாடு

அனைத்திந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் அனைத்திந்திய மகாநாட்டில் நமது பொது செயலர்: Click Here

பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்

         புவனேஷ்வரில்   பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்  சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில்  நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது.

 • 26-02-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் 
 • 26-03-2014 அன்று தர்ணா போராட்டம் 
 • 23-04-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி 
 • CMD அலுவலகம் நோக்கி பேரணி (தேதி பின்னர் அறிவிக்கப்படும் )
 • ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

கோரிக்கைகள் :-
 1. விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
 2. அரசாங்கத்தின்  உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
 3. சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி  ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
 4. பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
 5. சமவேலைக்கு சமஊதியத்தை  ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். 
 6. EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
 7. வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும்  வழங்கிட வேண்டும்.
 8. பழி   வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
 9. பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர்  சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.

Monday, January 20, 2014

சீனப் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்

செய்தி படிக்க:-Click Here:-

TelecomTALK Nationwide Broadband Survey – BSNL & Airtel Emerge as Customer’s Choice in Wired Segment

செய்தி படிக்க :-Click Here

நாக்பூரில் நமது பொது செயலர்

பார்க்க :-Click Here

கனரா வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்

     கனரா வங்கியுடன் கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுபிப்பதில்  கடும் கால  தாமதம் ஏற்பட்டதை நமது சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு தொடர்ந்து எடுத்து கூறியதை அடுத்து பி எஸ் என் எல் நிர்வாகம் கனரா வங்கி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் வங்கி நிர்வாகம் தொடர்ந்து ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் கால தாமதம் செய்து வந்தது .தற்போது கனரா வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சென்ற ஆண்டுகாலத்தை விட  அதிக வட்டி விகிதத்துடன் புதுப்பித்துள்ளது .இது விசயமாக நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் இன்று  பொது மேலாளர் (BFCI ) அவர்களை சந்தித்து வட்டி விகிதத்தை  குறைக்க மீண்டும் பேச்சுவார்த்தையை வங்கி நிர்வாகத்தோடு  மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார் .

Draft of Junior Telecom Officer (T) Recruitment Rules.

Recruitment Rules of JTO(T) படிக்க :-Click Here

Saturday, January 18, 2014

GM அலுவலக 11 வது கிளை மாநாடு

சிந்தனைக்கு விருந்து அளித்த  சிறப்புமிகு GM  அலுவலக 11 வது கிளை மாநாடு  

          விருதுநகர் GM அலுவலக கிளை மாநாடு இன்று (18-01-2014) தோழர் A.மாரிமுத்து அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கக் கொடியை மூத்த தோழர் V.சுப்ரமணியம் கோஷங்கள் முழங்க ஏற்றி வைத்தார். கிளை செயலர் தோழர் M.S.இளமாறன் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் M.ராஜசேகர் அஞ்சலித் தீர்மானம் வாசித்தார்மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன்  தொடக்க உரையில் கடுமையான நெருக்கடியான சூழ்நிலையிலும்கூட நமது சங்கம் போராட்ட நிலைபாட்டை எடுத்து தொடர்ந்து 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தி, அதனைத் தொடர்ந்து ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பை விடுத்ததையும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தன்மைகளையும் முன்னேற்றத்தையும் சுட்டிக் காட்டினார். நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பொதுத் துறைகளை பாதுகாக்கும் சக்திகளை அடையாளம் கண்டு வாக்கு அளிக்கும் உன்னதமான ஆயுதம் நம் விரலில் உள்ளதை சுட்டி காட்டினார். சிறப்புரை ஆற்றிய மாநில துணை தலைவரும், உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு கன்வீனருமான தோழர் V.P.இந்திரா அவர்கள் பேசும்போது கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதரிக்க கூடிய சக்திகளுக்கா? இல்லை நம்மை போன்ற நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் ஏழை மக்களை காப்பாற்ற கூடிய சக்திகளுக்கா? என்பதை நாம் வர உள்ள தேர்தலில் பதிவு செய்ய வேண்டும் என்றார் தற்போது இயக்க நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு அதிகரித்து உள்ளதை அவர் சுட்டி காட்டினார் .நமது நிறுவனத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியத்தையும் ,தற்போது ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்ததில் நமது நிறுவனத்திற்கு 6724 கோடி ரூபாய் வருவதற்கு நாம் தொடர்ந்து நடத்திய இயக்கங்கள் காரணம் என்பதையும் அவர் குறிப்பிட்டார் . தற்போது புதிய அங்கீகார விதிகள் வந்த பின் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கமும் ,NFTE சங்கமும் இணைந்து கவுன்சில்களில் ஊழியர் பிரச்சனைகளை கையாள்வதால் தீர்வில் ஒரு நல்ல முன்னேற்றம் தென்படுவதை அவர் சுட்டி காட்டினார் . நமது விருதுநகர் மாவட்ட இணைய தளத்தை தோழியர் V.P.இந்திரா அவர்கள் வெகுவாக பாராட்டினார் ஆனால் அதிகம் பேர் அதை பார்க்காமல் உள்ளதை வருத்தத்துடன் குறிபிட்டார் .வாழ்த்துரையில் மூத்த கணக்கு அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் , ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் .M .அய்யாசாமி , ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R .முனியசாமி ஆகியோர் வாழ்த்தினர். புதிய நிர்வாகிகளாக தோழர் .M .ராஜசேகர் ,தோழர் M .S .இளமாறன் , தோழர் A .மாரியப்பா ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் மற்றும் பொருளாளர் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டனர். வரும் 31-01-2014 அன்று பணி ஓய்வு பெறும்  தோழியர் ஜெயலட்சுமி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா கிளை மகாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்டது .மாவட்ட அமைப்பு செயலர் தோழியர் மங்கையர்க்கரசி அவர்கள் தோழியர் ஜெயலட்சுமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்த,மாநில துணை தலைவர் தோழியர் இந்திரா அவர்கள்  சந்தன மாலை அணிவிக்க ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நினைவு பரிசை வழங்கினார்.
       புகைப்பட தொகுப்பு

        

UP(WEST)மாநில மகாநாடு,

நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க உத்தரபிரதேச (மேற்கு ) மாநில 2 நாள் மகாநாடு இன்று தொடங்கியது .பார்க்க படிக்க :-Click Here

நாள்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ். தகவல்களை திருடிய அமெரிக்கா

செய்தி படிக்க : Click here

Friday, January 17, 2014

புத்தாண்டில் புது வரவு -பெரு வரவு

         15-01-2014 மாலை நிலவரப்படி 200க்கும் மேற்பட்ட தோழர்கள் BSNLEU சங்கத்தில் இணைந்துள்ளனர். இதில் 175க்கும் மேலான தோழர்கள் NFTE தலைமையை புறக்கணித்து(மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட) நம்மிடம் இணைந்தவர்கள் என்பதை சென்னை தொலைபேசி மாநில சங்கம் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Thursday, January 16, 2014

Could 4G Refunds To BSNL, MTNL Open Pandora’s Box?

செய்தி படிக்க :-Click Here

BSNL launches 2 smartphones

செய்தி படிக்க :-Click Here

BSNL, MTNL told to source part of equipment from ITI

செய்தி படிக்க :-Click Here

BSNL-ன் நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்....

மாநில சங்க சுற்றறிக்கை எண் 108 படிக்க :-Click Here

பரிவு அடிப்படையில் பணி நியமனம்

          பரிவு அடிப்படையில் பணி நியமனம் விசயமாக கீழ்கண்ட  சில திருத்தங்களை நிர்வாகம் செய்ய உள்ளது .இந்த திருத்தங்கள் நிர்வாக கமிட்டி ஒப்புதலுக்கு விரைவில் செல்ல உள்ளது 
 i )உடல் ஊனமுற்ற மகன் / மகள். 
(ii) பெற்றோர்  இருவரையும் இழந்த  மகன் / மகள்
(iii)வாடகை வீட்டில் வாழும் விண்ணப்பதாரர். 
(iv)அரசாங்கம் ஓய்வூதிய வராத  இறந்தவரின் வாரிசு 
 பரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில்  மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற நமது  BSNLEU சங்கத்தின் தீவிர முயற்சியே இம்மாற்றம் . 

2 G அலைகற்றை ஏலம்

      வரும் 2014 பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி 2 G அலைக்கற்றை ஏலம் நடைபெற உள்ளது .இதில் வீடியோகான் ,சிஸ்டமா சியாம் மற்றும் லூப் மொபைல் நிறுவனங்களை தவிர்த்து தற்போதுள்ள 8 கம்பெனிகள் கலந்து கொள்ள உள்ளன.
2014 ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்ந்துள்ள   5 %  IDA  உத்தரவை பி எஸ் என் எல் நிர்வாகம் வெளியிட்டு விட்டது .உத்தரவை பார்க்க :-Click Here

Tuesday, January 14, 2014

கிளை மகாநாடு

BSNLEU


பி.எஸ்.என்.எல்.எம்ப்ளாயீஸ் யூனியன்

  விருதுநகர் GM (O) கிளை


11 வது கிளை மாநாடு மற்றும்

தோழியர் G.ஜெயலெட்சுமி பணி நிறைவு பாராட்டு விழா

அன்புள்ள தோழர்களே, தோழியர்களே,

வணக்கம்

விருதுநகர் GM அலுவலக கிளையின் 11 வது கிளை மாநாடு விருதுநகர் GM அலுவலக வளாகத்தில் 18.01.2014 மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம்.

  
சங்க கொடியேற்றல்: P.ஆத்தியப்பன்
தலைமை:A.மாரிமுத்து,கிளை தலைவர்

அஞ்சலி: M.ராஜசேகர்

வரவேற்புரை:M.S.இளமாறன்,                                                      கிளைச்செயலர்,

துவக்கவுரை:S.ரவீந்திரன்,

                           மாவட்டச் செயலர்
ஆண்டறிக்கை வரவு-செலவு, அமைப்பு நிலை விவாதம், தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள் தேர்வு இன்ன பிற தலைவர் அனுமதியுடன்

சிறப்புரை: V.P.இந்திரா,கன்வீனர்,
மகளிர் ஒருங்கிணைப்பு குழு
வாழ்த்துரை:1. A.சமுத்திரகனி
மாவட்டத் தலைவர்,
2. T.ராதாகிருஷ்ணன்,  
AIBSNLEA
 3. C. சந்திர சேகரன்,
மாவட்ட உதவி செயலர்
4. G.மூக்கையா கிளைச்செயலர் SNEA
5. K. சிங்கார வேலு கிளைச்செயலர், SDOP
  6.S. வெங்கடப்பன்,  
மாவட்ட பொருளாளர்,

நன்றியுரை: புதிய செயலர்

A. மாரி முத்து             M.S.இளமாறன்           T.சித்ரவேல்

கிளைத்தலைவர்   கிளைச்செயலாளர்  கிளைப்பொருளாளர்

Monday, January 13, 2014

கேடர் பெயர் மாற்றம்

         கேடர் பெயர் மாற்றம் விசயமாக கூட உள்ள கூட்டு குழுவின் உறுப்பினர்களாக தோழர் P.அபிமன்யு , தோழர் V .A .N .நம்பூதிரி மற்றும் தோழர் அனிமேஷ் சந்திர மித்ரா ஆகியோர் இருப்பர் . நமது சங்கம் இது விசயமாக நிர்வாகத்திற்கு கொடுத்த கடிதம் பார்க்க :-Click Here 

புதிய பதவி உயர்வு,

      புதிய பதவி உயர்வில் சராசரி பதிவுகளால் (AVERAGE ENTRY) பதவி உயர்வு மறுக்கப்படுவது மாற்றப்பட வேண்டும் என நமது சங்கம் தேசிய கவுன்சிலில் தொடர்ந்து வலியுறுத்தியது.25-10-13 அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தில் மிக முக்கிய கோரிக்கை இதுவாகும்.18-10-2013 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி இன்று பி எஸ் என் எல் நிர்வாகம் அதற்கான உத்தரவை வெளியிட்டு விட்டது . உத்தரவை படிக்க :-Click Here

மானிய விலை சிலிண்டர் விலையை ரூ.100 வரை அதிகரிக்க திட்டம்..?

மக்களை தாக்க அடுத்த ஏவுகணை செய்தி படிக்க :-Click Here

பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்வு

செய்தி படிக்க :-Click Here

கார்ட்டூன்,
நன்றி :- தீக்கதிர் 

Sunday, January 12, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்

        விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் அனைவருக்கும் தன் இனிய  பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது  

BSNL may install mobile towers in naxal-hit areas by year-end

செய்தி படிக்க :-Click Here

Saturday, January 11, 2014

ஐரோப்பாவின் அழிவு இத்தாலியில் ஆரம்பமாகிவிட்டது

                          
                         ஐரோப்பாவின் பொருளாதாரச் சரிவு இன்னும் ஒரு சில வருடங்களுக்குள் நிகழலாம் என்றும் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு அதற்கு முன்னதாக நிகழலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இத்தாலியில் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவது இலகுவானதல்ல என்றும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வது குறித்துக் எதிர்வுகூற முடியாதென்றும் இத்தாலிய ஜனாதிபதி ஜோர்ஜியோ நாப்புலிதானோ கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு சமூகப் பதற்றமும் அமைதியின்மையும் நிறைந்ததாக இருக்கும் என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் மீட்க முடியாத நிலையை நோக்கிச் சரிந்து செல்கிறது. ஐ.எம்.எப், உலக வங்கி, பல்தேசிய நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டுக்கொள்ளை மக்களைப் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளிக்கொண்டிருக்கின்றது. 41.6 வீத இளைஞர்களுக்கு வேலையில்லை. மக்கள் நாள்தோறும் தெருக்களில்ன் இறங்கிப் போராடுகிறார்கள். போராட்டங்கள் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்படுகின்றன. பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் காலவரையறையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதன் மற்றைய எல்லையில் 57 வீதமான இளைஞர்கள் ஸ்பெயின் நாட்டில் வேலையற்றவர்களாகியுள்ளனர். கிரேக்கத்தில் நிலைமை அனைத்திலும் கவலைக்கிடமானது. பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி ஆகியன பொருளாதாரச் சரிவையும் பல்தேசிய வியாபாரிகளின் பகல்கொளையையும் நிறுத்த முடியாமல் மக்க்கள் மீது சுமைகளை செலுத்துகின்றன.போர்களையும், அழிவுகளையும் கட்டவிழ்த்துவிட்டு தற்காலிகமாக பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ள முனையும் அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே வரலாற்றில் ஏகபோக நாடுகள் என்று எழுதப்பட்டிருக்கும்.
                      <நன்றி :பி பி சி தமிழ் >

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...