பொருளாதார மந்த நிலை மற்றும் தொழிற் பெருக்கத்தில் காணப்படும் தேக்கம் ஆகியவை வேலைவாய்ப்புகளை மங்க வைப்பதாகவும் இதனால் இந்தியாவில் வேலையற்றோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலக தொழிலாளர் அமைப்பு (ILO), நாட்டின் வேலை வாய்ப்புகளின் மந்த நிலையைச் சுட்டிக்காட்டி கடந்த இரண்டாண்டுகளில் வேலையின்மை நிலை உயர்ந்துவருவதாக தன்னுடைய ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அமைப்பு அளித்துள்ள புள்ளிவிவரங்கள் மற்றும் கணிப்பின்படி, இந்த வருடம் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 3.8 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றன.அமைப்புசாரா மற்றும் விவசாயம் சார்ந்த வேலைகளில் மிகவும் குறைந்த ஊதியத்திற்கும் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யவும் நிர்பந்த்திக்கப்படுவதால் தெற்காசியாவில் வேலைவாய்ப்புகள் நெருக்கடிக்குள்ளகியுள்ளன என உலக தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கை கூறுகிறது.இந்தியாவின் வேலைவாய்ப்பு விகிதம் 2011 ஆம் ஆண்டு முதல் உயர்ந்து கொண்டிருப்பதாகவும், அப்போதிருந்த 3.5% விகிதத்திலிருந்து உயர்ந்து 2012 ஆம் ஆண்டில் 3.6 சதவிகிதமாகவும் 2013 ஆம் ஆண்டில் 3.7 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த வருடம் வேலையின்மை 3.8 சதவிகித்தை எட்டும் என 2014ஆம் ஆண்டின் உலக வேலைவாய்ப்பு நிலையறிக்கை தெரிவிக்கிறது.
<நன்றி :- ஒன் இந்தியா >
No comments:
Post a Comment