சிந்தனைக்கு விருந்து அளித்த சிறப்புமிகு GM அலுவலக 11 வது கிளை மாநாடு
விருதுநகர் GM அலுவலக கிளை மாநாடு இன்று (18-01-2014) தோழர் A.மாரிமுத்து அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கக் கொடியை மூத்த தோழர் V.சுப்ரமணியம் கோஷங்கள் முழங்க ஏற்றி வைத்தார். கிளை செயலர் தோழர் M.S.இளமாறன் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் M.ராஜசேகர் அஞ்சலித் தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தொடக்க உரையில் கடுமையான நெருக்கடியான சூழ்நிலையிலும்கூட நமது சங்கம் போராட்ட நிலைபாட்டை எடுத்து தொடர்ந்து 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தி, அதனைத் தொடர்ந்து ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பை விடுத்ததையும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தன்மைகளையும் முன்னேற்றத்தையும் சுட்டிக் காட்டினார். நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பொதுத் துறைகளை பாதுகாக்கும் சக்திகளை அடையாளம் கண்டு வாக்கு அளிக்கும் உன்னதமான ஆயுதம் நம் விரலில் உள்ளதை சுட்டி காட்டினார். சிறப்புரை ஆற்றிய மாநில துணை தலைவரும், உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு கன்வீனருமான தோழர் V.P.இந்திரா அவர்கள் பேசும்போது கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதரிக்க கூடிய சக்திகளுக்கா? இல்லை நம்மை போன்ற நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் ஏழை மக்களை காப்பாற்ற கூடிய சக்திகளுக்கா? என்பதை நாம் வர உள்ள தேர்தலில் பதிவு செய்ய வேண்டும் என்றார் தற்போது இயக்க நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு அதிகரித்து உள்ளதை அவர் சுட்டி காட்டினார் .நமது நிறுவனத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியத்தையும் ,தற்போது ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்ததில் நமது நிறுவனத்திற்கு 6724 கோடி ரூபாய் வருவதற்கு நாம் தொடர்ந்து நடத்திய இயக்கங்கள் காரணம் என்பதையும் அவர் குறிப்பிட்டார் . தற்போது புதிய அங்கீகார விதிகள் வந்த பின் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கமும் ,NFTE சங்கமும் இணைந்து கவுன்சில்களில் ஊழியர் பிரச்சனைகளை கையாள்வதால் தீர்வில் ஒரு நல்ல முன்னேற்றம் தென்படுவதை அவர் சுட்டி காட்டினார் . நமது விருதுநகர் மாவட்ட இணைய தளத்தை தோழியர் V.P.இந்திரா அவர்கள் வெகுவாக பாராட்டினார் ஆனால் அதிகம் பேர் அதை பார்க்காமல் உள்ளதை வருத்தத்துடன் குறிபிட்டார் .வாழ்த்துரையில் மூத்த கணக்கு அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் , ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் .M .அய்யாசாமி , ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R .முனியசாமி ஆகியோர் வாழ்த்தினர். புதிய நிர்வாகிகளாக தோழர் .M .ராஜசேகர் ,தோழர் M .S .இளமாறன் , தோழர் A .மாரியப்பா ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் மற்றும் பொருளாளர் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டனர். வரும் 31-01-2014 அன்று பணி ஓய்வு பெறும் தோழியர் ஜெயலட்சுமி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா கிளை மகாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்டது .மாவட்ட அமைப்பு செயலர் தோழியர் மங்கையர்க்கரசி அவர்கள் தோழியர் ஜெயலட்சுமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்த,மாநில துணை தலைவர் தோழியர் இந்திரா அவர்கள் சந்தன மாலை அணிவிக்க ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நினைவு பரிசை வழங்கினார்.
No comments:
Post a Comment