நமது விருதுநகர் மாவட்ட சங்க மாநாடு வரும் மார்ச் 5, 6 தேதிகளில் அருப்புகோட்டையில் நடைபெற உள்ளது. நமது மாவட்ட மாநாட்டை அருப்புகோட்டை தொலைபேசி நிலையத்தில் கட்டப்பட்ட நாளில் இருந்தே பயன்பாடு இன்றி உள்ள மீட்டிங் ஹாலில் வாடகை கொடுத்து நடத்துவதற்கு முறையான விண்ணப்பத்தை மாவட்ட சங்கம் நிர்வாகத்திடம் கொடுத்தோம். விண்ணப்பம் கொடுத்து நீண்ட நாட்களுக்கு பின் போதுமான வசதிகள் இல்லை என்பதால் அனுமதி இல்லை என்று நிர்வாகம் நமக்கு கடிதம் கொடுத்தது. நாம் உடனடியாக பொது மேலாளர் அவர்களை மதுரை மாவட்ட செயலர் தோழர் சூரியன் அவர்கள் மூலம் தொடர்பு கொண்டு இருக்கின்ற வசதிகளில் நாங்கள் மாநாட்டை நடத்திக் கொள்கிறோம் என்பதை எடுத்துரைதோம். இதனடிப்படையில் நமது துணைப் பொது மேலாளர் மீட்டிங் ஹாலை ஆய்வு செய்வதற்காக அருப்புகோட்டை சென்றார். அவர் சென்ற மறு நிமிடம் NFTE சங்கம் அருப்புகோட்டையில் நமது மாவட்ட மாநாடு நடத்த அனுமதி கொடுக்க கூடாது என்று கடிதம் கொடுத்து அவர்களின் தொழிற்சங்க மாண்பை பறை சாற்றியுள்ளார்கள். இது விசயமாக மாவட்டச் செயலர் உடனடியாக NFTE மாவட்ட செயலரிடம் தொடர்பு கொண்டு இது சரியல்ல என்பதை சுட்டி காட்டியபோது நாளை பேசலாம் என்றும், அடுத்து பேசும் போது 2 நாட்கள் கழித்து பேசலாம் என்றும் தட்டி கழிக்கும் போக்கைக் கையாண்டதால் NFTE ராஜபாளையத்தில் நடத்தும் மாவட்ட மாநாட்டில் வாழ்த்துரை வழங்கும் நிகழ்ச்சி நிரலை நமது சங்கம் புறக்கணிக்கும்.
தடைகளைத் தகர்ப்போம்!
அணிவகுப்போம்! அருப்புகோட்டையை நோக்கி!
முதன்மை சங்கமாம்
பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் அனுமதியின்றி ஒரு அணுவும் அசைய அனுமதியோம்...
<<< தகவல் பலகைக்கான அச்சுப் பிரதி >>>
முதன்மை சங்கமாம்
பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் அனுமதியின்றி ஒரு அணுவும் அசைய அனுமதியோம்...
<<< தகவல் பலகைக்கான அச்சுப் பிரதி >>>
No comments:
Post a Comment