Showing posts with label அனைத்திந்திய மகாநாடு. Show all posts
Showing posts with label அனைத்திந்திய மகாநாடு. Show all posts

Wednesday, October 8, 2014

7 th AIC

  கொல்கொத்தாவில் நடைபெற உள்ள BSNLEU சங்கத்தின் 7வது அகில இந்திய மகாநாட்டை  நவம்பர் மாதம் 6 ஆம் தேதி காலை 1000 மணிக்கு சி ஐடி யூ சங்கத்தின் அனைத்திந்திய தலைவர் தோழர் A K பத்மநாபன் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார் . 7 ஆம் தேதி பொது அரங்கம் நிகழ்ச்சியும் ,பேரணியும் மற்றும் உழைக்கும் மகளிர் கருத்தரங்கமும் நடைபெறும் . BSNL புத்தாக்கம் பற்றிய கருத்தரங்கம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது .CMD ,டைரக்டர் (CM), சகோதர சங்க தலைவர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர் . சார்பாளர் கட்டணம் ரூபாய் 800/- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .ராஜ்கோட் செயற்குழுவின் அடிப்படையில் அனுமதிக்கபட்ட சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் .

Thursday, September 18, 2014

7வது அனைத்திந்திய மகாநாடு

       நமது 7வது அனைத்திந்திய மகாநாடு வரும் நவம்பர் 6,7,8,9 தேதிகளில் கொல்கொத்தா  நகரில் நடைபெற உள்ளது .அகில இந்திய பகுதி பணம் செலுத்திய அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மத்திய  சங்கம் தெரிவித்து உள்ளது . கூடுதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்து உள்ளது .ஏற்கனவே ராஜ்கோட் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட இம்  முடிவை மாவட்ட சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது . நவம்பர் 8 ஆம் தேதி “Revival of BSNL” தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும் என்றும் அதில் பங்கேற்க நமது CMD அவர்களை அழைக்க இன்று  நமது பொது செயலர் தோழர் அபிமன்யு மற்றும்  உதவி பொது செயலர் தோழர்  சுவோபன் சக்கரவர்த்தி ஆகியோர் இன்று CMD திரு A .N .ராய் அவர்களை சந்தித்தனர் .CMD அவர்கள் நமது அழைப்பை ஏற்று கொண்டு உள்ளார் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...