30/04/2017 அன்று பணி ஓய்வு பெறுபவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டு விழா நேற்று தளவாய்புரம் மற்றும் சிவகாசியில் நடைபெற்றது .சொக்கநாதன்புதூர் டெலிகாம் டெக்னீசியன் தோழர் சோமசுந்தரத்திற்கு பார்த்து விழா ராஜபாளையம் கிளை தலைவர் தோழர் தியாகராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் பொன்ராஜ் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் முருகன் ,ராதாகிருஷ்ணன் ,அனவ்ரதம் ஆகியோர் பாராட்டி பேசினர் .தோழர் சோமசுந்தரம் அவர்களின் வேலை திறன் ,மற்றும் நமது சங்க கொள்கைகள் மற்றும் நமது போராட்ட தன்மை கண்டு நமது சங்கத்தில் கடந்த ஆண்டு இணைந்தது மட்டும் இன்றி நமது AIBDPA சங்கத்திலும் இணைந்ததை பாராட்டி மாவட்ட செயலர் பேசினார் .ராஜபாளையம் கிளை தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர் .AIBDPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் தோழர் சிவஞானம் ஆகியோரும் பங்கேற்றனர்
அன்று மாலை 4 மணிக்கு சிவகாசியில் தோழர் வைரவசாமி அவர்களுக்கு நடைபெற்ற பார்த்து விழாவில் சிவகாசியில் பல் தோழர்கள் பங்கேற்றனர் .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜமாணிக்கம் ,தோழர் ராஜு ,முன்னாள் மாவட்ட சங்கநிர்வாகி முனீஸ்வரன் ,AIBDPA மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ஜெயபாண்டியன் ,கிளை செயலர் தோழர் கருப்பசாமி ,கிளை பொருளர் தோழர் இன்பராஜ் உட்பட பலர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் தோழர் வைரவசாமியை பாராட்டி கௌரவித்தார் .