06/04/2017 அன்று சிவகாசி கிளை பொது குழு கூட்டம் தோழர் ராஜாராம் மனோகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர்கள் முத்துசாமி மற்றும் கருப்பசாமி அவர்கள் ஆய்படு பொருளை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினர் .முன்னதாக தியாகிகளுக்கு தோழர் முத்துசாமி அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்த அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .மறைத்த ஒப்பந்த ஊழியர் தோழர் அசோக் குமார் குடும்ப நிவாரண நிதி திரட்டுவது ,மே மாதம் 19,20 தேதிகளில் நடைபெற உள்ள தமிழ் மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு ,ஸ்தல மட்ட பிரச்சனைகள் உட்பட பல பிரச்சனைகள் விவாதத்தில் வந்தன .இன்று நமது நிறுவனம் எதிர் நோக்கி உள்ள பிரச்சனைகள் ,ஒப்பந்த ஊழியர் சம்பள மற்றும் EPF பிரச்சனைகள் ,மாறுதல்கள் பிரச்சனைகள் மற்றும் மறைந்த தோழர் அசோக் குமாருக்கு நாம் செய்ய வேண்டிய மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றை மாவட்ட செயலர் விரிவாக விளக்கினார் .மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் ,கிளை செயலர் ராமர் ஆகியோர் ஆய்படு பொருள் மீது விரிவாக பேசினர் .கிளை பொருளாளர் தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் .மாநில மாநாட்டு பிரதிநிதிகளாக தோழர்கள் சமுத்திரக்கனி ,கருப்பசாமி,முத்துசாமி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .ஏப்ரல் மாதம் முழுவதும் தோழர் அசோக் குமார் குடுமப நிவாரண நிதி திரட்டுவதில் கவனம் செலுத்துவது .ஏப்ரல் 15 ஆம் தேதி கிளை கூட்டம் நடத்துவது .சந்தா நிலுவை தொகையை விரைந்து முடிப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன
.









No comments:
Post a Comment