Showing posts with label ராஜபாளையம் கிளை மாநாடு. Show all posts
Showing posts with label ராஜபாளையம் கிளை மாநாடு. Show all posts

Thursday, October 12, 2017

எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் நடைபெற்ற ராஜபாளையம் கிளை மாநாடு

அக்டோபர் 7 ஆம் தேதி  ராஜபாளையம் கிளை மாநாடு மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் அதன் தலைவர் தோழர் R .தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது .எழுச்சி மிகு கோஷங்களுடன் நமது சங்க கொடியை தோழர் ரவிச்சந்திரன் ஏற்றி வைத்தார் .TNTCWU சங்க கொடியை அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ஏற்றி வைத்தார் .தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட சங்க நிர்வாகி தோழர் அனவ்ரதம் வாசிக்க அனைவரும் தியாகிகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர் அதன் பின் முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கிளை மாநாட்டை  துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் ..வர இருக்கும் போராட்டங்கள் ,மதுரையில் நடைபெற உள்ள நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் திரளாக பங்கேறக் வேண்டிய அவசியத்தை கூறினார் .தோழர் பொன்ராஜ் ,கிளை செயலர் முன் வைத்த ஆண்டறிக்கை மீது விவாதம் நடைபெற்று ஒப்புதல் பெறப்பட்டது .இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட உதவி செயலர்கள்  தோழர் முத்துச்சாமி மற்றும் தோழர் வெள்ளை பிள்ளையார் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி சிறப்புரை நிகழ்த்தினார் .பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . ஒட்டு மொத்தத்தில்  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் எஃகு கோட்டை விருதுநகர் மாவட்டம் என்பதை பறைசாற்றியது   ராஜபாளையம் கிளை மாநாடு.புதிய நிர்வாகிகளாக தோழர்கள் தியாகராஜன் ,பொன்ராஜ் ,ரவிச்சந்திரன் ஆகியோர் முறையே தலைவர் செயலர் பொருளாராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
Image may contain: 8 people, people standing and outdoor
.Image may contain: 3 people, people standing, tree and outdoor
Image may contain: one or more people, cloud, sky and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: one or more people and people sitting
Image may contain: 6 people, people sitting, tree and outdoor
Image may contain: 11 people, people sitting
Image may contain: one or more people, tree and outdoor
Image may contain: 2 people, people smiling, people sitting and people standing
Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting and people standing
Image may contain: 4 people, people sitting and crowd
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, sitting, tree and outdoor
Image may contain: 5 people, people sitting, tree and outdoor
Image may contain: 2 people, people smiling
Image may contain: one or more people, crowd and outdoor

Tuesday, June 21, 2016

ராஜபாளையம் கிளை மாநாடு

12 வது  ராஜபாளையம் கிளை மாநாடு 20/06/2016 அன்று ராஜபாளையம் நகரில் தோழர் அனவ்ரதம் ,கிளை தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நமது மூத்த தோழர் பொன்னுச்சாமி நமது சங்க கொடியை ஏற்றி வைக்க ,அஞ்சலி உரையை தோழர் சிவஞானம் நிகழ்த்த ,கிளை செயலர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது .கிளை பொருளர் சிவஞானம் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது .மாவட்ட செயலர் தொடக்க உரை நிகழ்த்த ,SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாற்று சங்கங்களில் இருந்து விலகி நமது சங்கத்தில் இணைந்த தோழர்கள் குட்டிராஜா ,சோமசுந்தரம் ,கிருஷ்ணன் ஆகியோர் கிளை சங்கத்தால் கவுரவிக்கப்பட்டனர் .புதிய  நிர்வாகிகளாக தோழர்கள் தியாகராஜன் ,முத்துராமலிங்கம் ,அனவ்ரதம் ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளாளர்க தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

Friday, June 17, 2016

ராஜபாளையம் கிளை மாநாடு

ராஜபாளையம் கிளை மாநாடு 
நாள் ::- 20.06.2016, திங்கள்கிழமை . நேரம் :- மாலை 5-00 மணி
 இடம் :- தொலைபேசி நிலைய வளாகம், இராஜபாளையம்.

                     நிகழ்ச்சி நிரல்

சங்ககொடி ஏற்றுபவர் : 
தோழர் P.பொன்னுச்சாமி , TM
தலைமை : 
தோழர் T.அனவரதம் – கிளைத்தலைவர் , BSNLEU
தியாகிகளுக்கு அஞ்சலி : 
தோழர் P.சிவஞானம்-கிளைப்பொருளாளர் , BSNLEU
வரவேற்புரை : 
தோழர் T.முத்துராமலிங்கம் – கிளைச்செயலாளர் , BSNLEU 
துவக்கவுரை : தோழர் S.ரவீந்திரன், மாவட்ட செயலாளர், BSNLEU

                  **  ஆய்படுபொருள்  **
  • ஆண்டறிக்கை,வரவு செலவு அறிக்கை.
  • அமைப்பு நிலை விவாதம்
  • தீர்மானங்கள்
  • புதிய நிர்வாகிகள் தேர்வு,இன்ன பிற தலைவர் அனுமதியுடன்.
சிறப்புரை : தோழர்  சமுத்திரக்கனி, மாவட்டத்தலைவர் , BSNLEU
வாழ்த்துரை : தோழர் S.தங்கவேல், கிளைச்செயலாளர் , SNEA
               தோழர் ராமச்சந்திரன் – மாவட்டச்செயலர் , TNTCW
               தோழர் M .வேலுச்சாமி – மாநில அமைப்புச்செயலர்,TNTCW   
நன்றியுரை : புதிய செயலர்.

தோழர், தோழியர் அனைவரும் தவறாது கலந்துகொள்ள அன்புடன்
அழைக்கின்றோம்.


                        தோழமையுடன்,

                 இராஜபாளையம் கிளை         

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...