Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Wednesday, February 25, 2015

தியாகத்தின் திரு உருவம் மறைந்தது....வீரவணக்கம் தோழரே..Red salute.


          ஒரு நுற்றாண்டு காலம் சமூகத்தை ஆதர்ஷிக்க ஒருவரால் இயலுமா, இயலும் என்பதை இந்த உலகிற்கு தன் வாழ்கையின் மூலம் நிறுவி சென்றுள்ளார் ஒருவர். சுதந்திர போராட்ட தியாகி, இளம் கம்யூனிஸ்ட்டாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இறுதிவரை அப்படியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தோழர் ஐ.மாயாண்டி பாரதி மதுரையில் நேற்று (24-02-2015) காலமானார். அவருக்கு வயது 98. தனது 15வது வயதில் இருந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடர்ந்து மதுரை, வேலூர், சென்னை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற சிறைகளிலேயே தனது இளமைக்காலத்தை கழித்துள்ளார். ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என்பதாகவே அவரது வாழக்கை இருந்தது என்பதை அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதை பெருமையாக கருதுவோம். தன் மரணம் வரை மதுரையில் தொடர்ந்து கூட்டங்களில் பேசி தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் சுதந்திர போரின் அவசியம் இந்த நாட்டில் வந்து விட்டது என்பதை அவர் உரக்க அறிவித்து விட்டுத்தான் விடைபெற்றுள்ளார்.
(புகைப்படம் : முத்துக்கிருஷ்ணன்)

Friday, May 2, 2014

அழிவதற்கு ஒரு நகரம்!

          ஒரு நகரத்தைப் பற்றி இப்படி ஒரு தலைப்புடன் எழுதலாமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பிழைப்பதற்காகச் செத்துக்கொண்டிருப் பவர்கள் வாழும் ஒரு நகரத்தைப் பற்றி எழுதும்போது வேறு எப்படித் தலைப்பிட முடியும்? நீங்கள் அலாங்கைப் பார்க்க நேரில் வர வேண் டாம்; அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் கதைகளைக் கொஞ்ச நேரம் கேளுங்கள். இதைவிட மோசமான ஒரு தலைப்பையே தேடு வீர்கள். அலாங்கின் கதை நாம் அவசியம் பேச வேண்டியது. ஏனென்றால், அதன் அழிவு, வளர்ச்சி என்ற சொல்லிலிருந்தே தொடங்குகிறது.
த இந்து - கட்டுரை தொடர்ந்து படிக்க : Click Here

Wednesday, April 30, 2014

ஏப்ரல் 30 ஹிட்லர் தற்கொலையும் அதன் தொடர்ச்சியான மே முதல் நாளும்

கோயபல்சும் ஹிட்லரும்
குடும்பத்தாருடன் கோயபல்ஸ்
          பெர்லினை சோவியத் படைகள் சுற்றிவளைத்திருந்த சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டு உயில் எழுதிய ஹிட்லர் 1945 ஏப்ரல் 30ல் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இருவருடைய உடலையும் வெளியில் யாருக்கும் தெரியாதவகையில் ஹிட்லரின் கொ.ப.செ. கோயபல்ஸ் எரித்துவிட்டார். பருத்தி வீரன் ஸ்டைலில் காணாப் பிணமாக்கி விட்டார்.
          பெர்லினில் 1945 மே1ல் வெற்றியின் அடையாளமாக சோவியத் கொடியேற்றப்பட்டது. ஜெர்மன் வானொலி ஹிட்லர் இறந்ததாக அறிவித்தது. இதே நாளில் உலகம் முழுவதிற்கும் இன்றுவரையில் தன் பொய்களால் போற்றப்படும் கோயபல்ஸ் தன் மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
          ஏறக்குறைய முசோலினி மற்றும் ஹிட்லரின் மரனத்துடன் இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்து விட்டது. முத்து துறைமுகத் தாக்குதலுக்கான பழிதீர்த்தல் என்றபெயரில் நடத்தப்பெற்ற அமெரிக்காவின் ஜப்பான் மீதான அணுகுண்டு தாக்குதல் என்பது அத்துமீறல்தான்.

Tuesday, April 29, 2014

ஏப்ரல் 29ல் ஹிட்லர்

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. ஹிட்லர் பெர்லின் நகர சுரங்கத்தில் தங்கியிருந்தார். அவருடன் அவருடைய நீண்டநாள் காதலி ஈவாபிரவுனும் தங்கியிருந்தார்.

ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள் ஏப்ரல் 28 இரவு அதாவது 29ஆம் தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் 29 விடிகாலைவரை நடந்தன. 29ஆம் தேதி திருமணம் பதிவு செய்யப்பட்டது. ஹிட்லர் உயிலும் எழுதினார்.

ஏப்ரல் 29 - பாரதிதாசன் பிறந்தநாள்

படம் : புகழேந்தி
தொழிலறிந்த ஏழைமக்கள்
தொழில்புரிந்து செல்வர்பால்
அழிவிலாமு தல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்
பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள்தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழைமக்கள் 
சோற்றிலே மண்போடுவார்!

நடவுசெய்த தோழர்கூலி

நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த 
கயவர்கூட்ட மீதிலே
கடவுளென்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.

(தளை அறு என்ற தலைப்பில் பாரதிதாசன் எழுதிய பாடலின் இரண்டு பத்திகள் மட்டும்)

Monday, April 28, 2014

ஏப்ரல் 28 - ஃபாசிஸ்ட் முசோலினி இறந்தநாள்

























            பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922க்குப்பின் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கிப் பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டார். சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப்போரில் நுழைந்ததன் வழியாக நாசிப்படைகளின் கூட்டு தோல்வியைத் தழுவியது.

         ஏப்ரல் 1945 ஏப்ல் 28ல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் (உள்நாட்டு எதிர்ப்புப் படையாகச் செயல்பட்டவர்கள்) அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகோண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் ஏறக்குறைய அதன் முடிவை நெருங்கியிருந்தது.

Saturday, April 26, 2014

ஏப்ரல் 26 - பெ.சுந்தரம் பிள்ளை நினைவுநாள்



              1855ல் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்து, தத்துவப் பேராசியராயாய் பணியாற்றியவர். தன்னுடைய 36 ஆம் வயதில் (1891ல்) மனோன்மணீயம் என்ற நாடகநூலை எழுதி வெளியிட்டார். இந்நாடகநூல் எழுதப்பெற்று 80 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நூலில் உள்ள ‘நீராருங் கடலுடுத்த...’ என்ற பாடல் சிற்சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்தாக 1970ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இன்று மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையின் நினைவு நாள்.

திருத்தப்பட்ட பாடல் வடிவம்

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

ஏப்ரல் 25 - புதுமைப்பித்தன் பிறந்தநாள்

படம் : அருணோதயம்
            நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப் பித்தன் பிறந்தநாள். 108 ஆண்டுகளுக்கு முன் பிறந்த புதுமைப்பித்தன் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதைகள் ‘பொன்னகரம்’ மற்றும் ‘துன்பக்கேணி’. பொன்னகரம் (1934) அன்றைய சென்னையின் சேரிப்பகுதியைச் சேர்ந்த அம்மாளு என்ற பெண் தன் கணவனின் மருத்துவச் செலவிற்காக கற்பை மீறுவது தொடர்பான கதை. மருத்துவம் அன்றைக்கும் வணிகமாகத்தான் இருந்தது என்பதையும், கற்பு என்பது ஒருவகையில் மேலாதிக்கக் கற்பிதம்தான் என்பதை நிலைநிறுத்துத முயன்ற கதை. துன்பக்கேணி சென்ற நூற்றாண்டில் இலங்கை முதலான நாடுகளுக்கு தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்ட தலித்துகளின் வாழ்வைப் பிரதிபலித்தது. இவ்விரு கதைகளும் சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் பாடங்களாக இருந்து வந்தன. ஜெய்சாம்யாக் என்பவர் தொடுத்த ‘துன்பக்கேணி’ என்ற சிறுகதையை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற வழக்கினைக் காரணம்காட்டி இச்சிறுகதை நீக்கப்பட்டது. துணையாக பொன்னகரமும் கல்விச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் இடம் மறுக்கப்பட்ட புதுமைப்பித்தனை, அவரது பிறந்தநாளில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தன் படைப்புகளில் பிரதிபலித்த நவீன இலக்கியத்தின் முன்னோடியாக நினைவு கூர்வோம்.

Wednesday, April 23, 2014

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்

          ‘புத்தகத்தை வாசித்ததால் நான் கெட்டுப்போனேன்’ என்று சொல்பவர்களை நாம் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை. ‘அன்றே ஒழுங்காக வாசித்திருந்தால் இன்று நன்றாக இருந்திருப்பேன்’ ‘புத்தகம் படித்துக் கற்றுக் கொண்டேன்’ என்பவை நாம் அடிக்கடி கேட்கும் வாக்கியங்கள்.  இன்றைய மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது புத்தகங்கள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே. நம் தோழர்களில் எத்தனை பேர் வாசிப்பை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்? ‘நேரமே கிடைக்கவில்லை தோழர்’ என்ற நொண்டிச்சாக்கை கூடைநிறைய நிரப்பித் தலையில் சுமந்து கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு ‘வாசிப்பதில்லையா?’ என்று கேட்பவர்கள் மேல் எறிந்து கொண்டிருக்கப் போகிறோம்.

          இந்த ஆண்டு உலக புத்தக தினத்தில் ‘வாசிப்பை வாழ்க்கையின் நெறிகளில் ஒன்றாக்குவோம்’ என உறுதியேற்போம்.

‘கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்
கற்றதைப் பயன்படுத்தின் கொண்டே மேலும் கற்க வேண்டும்’
- தோழர் சப்தர் ஹாஷ்மி

ஏப்ரல் 23 - தோழர் லீலாவதி நினைவு நாள்
















          நீதியை நிலைநாட்ட நிமிர்ந்து நின்ற தோழர் லீலாவதி மண்ணில் வெட்டி வீழ்த்தப்பட்ட நாள் இன்று. குடிநீர் விற்பனையையும் அரசியல் ரவுடித்தனத்தையும் எதிர்த்து தன்னுடைய இன்னுயிரையும் ஈந்த வீராங்கனை லீலாவதியை நினைவில் நிறுத்துவோம்! ஜனநாயகத்தை நிலைநிறுத்த, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க மக்களைத் திரட்ட உறுதியேற்போம்!
நன்றி :தீக்கதிர்

Monday, April 14, 2014

அவர் ஏற்றி வைத்த தீபத்தை தொடர்ந்து எரியச் செய்வோம்

.                







        "தாழ்த்தப்பட்ட மக்கள் கண்ணியமான வாழ்விற்காகவும் வறுமையிலிருந்து தப்புவதற்காகவும் நெடுங்காலமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். “டாக்டர் அம்பேத்கர் ஏற்றி வைத்த போராட்டத் தீபத்தை ஏழை, எளிய மக்களுக்குச் சமூகநீதி என்ற இலக்கை நாம் அடையும்வரை தொடர்ந்து எரியச் செய்யவேண்டும்...”

Thursday, April 3, 2014

ஆப்பிரிக்க கதை - வென்றது குறட்டையா? பாட்டா? (யூமாவாசுகி)

ஓவியம்: ராஜே
இரண்டு பயணிகள் மாலை நேரத்தில் ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் கிராமத் தலைவரிடம் சென்றார்கள். “நாங்கள் இன்று இரவு இந்த கிராமத்தில் தங்கலாமா?” என்று கேட்டார்கள்.
“தாராளமாகத் தங்கலாம். அந்நியர்கள் தங்குவதற்கு இங்கே ஒரு வீடு இருக்கிறது. அங்கே நீங்கள் சாப்பிடலாம், தூங்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊரில் ஒரு பழைய பழக்கம் இருக்கிறது. அந்நியர்கள் தங்கும் வீட்டில் தூங்குபவர்கள் குறட்டைவிடக் கூடாது. குறட்டை விடும் ஆளை நாங்கள் கொன்றுவிடுவோம்!” என்று தலைவர் சொன்னார்.
பயணிகள் இருவரும் அந்த வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே அவர்களுக்கு சிறப்பான இரவு உணவு அளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் படுத்தார்கள். மிகுதியான களைப்பால் படுத்த உடனே தூக்கம் வந்துவிட்டது.
சற்று நேரத்திற்குப் பிறகு பயணிகளில் ஒருவர் குறட்டை விடத் தொடங்கினார்:
“கொர்ர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்...”
மற்றொருவர் இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். அவர், “மக்கள் இந்த குறட்டை ஒலியைக் கேட்டால் இவரைக் கொன்றுவிடுவார்களே! எப்படி இவரைக் காப்பாற்றுவது?” என்று சிந்தித்தார். அவருக்கு ஒரு வழி தோன்றியது. அதன்படி அவர் பாடத் தொடங்கினார்.
கொர்ர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்...
ஒன்றாய் வந்தோம் பயணியர் இருவர்
சென்றே கிராமத் தலைவரைப் பார்த்தோம்
அருமை உணவை அன்புடன் அளித்தார்
இங்கே தங்க இடமும் கொடுத்தார்!
கொர்ர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்...
இந்த கிராமம் இனிய கிராமம்
இந்த மக்கள் நல்ல மக்கள்
ஆடும் மாடும் நாயும் பூனையும்
அன்பு காட்டி மகிழுது பாரீர்!
கொர்ர்ர்...கொர்ர்ர்...கொர்ர்ர்...
என்று குறட்டை ஒலியின் லயத்திற்கேற்ப அவர் பாடினார். விட்டு விட்டுக் குறட்டை ஒலிக்கும்போது, அவரும் இடைவிட்டுப் பாடினார்.
பாட்டைக் கேட்டு கிராமத்தினர் விழித்தார்கள்.
அந்தப் பாட்டு அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பாட்டின் ஓசையில் குறட்டை ஒலி கேட்கவில்லை.
இவ்வளவு அற்புதமான பாட்டை அவர்கள் முன்பு ஒருபோதும் கேட்டதில்லை. மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள், பாட்டுக்கு ஏற்றபடி நடனமாடத் தொடங்கினார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள எல்லோரும் நடனமாடினார்கள், சேர்ந்து பாடினார்கள். கிராமத் தலைவரும் நடனமாடினார்!
பொழுது விடியும்வரை பயணி களில் ஒருவர் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். இன்னொருவர் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தார். கிராமத்தினரும் இரவு முழுக்க இடைவிடாமல் ஆடினார்கள், பாடினார்கள்.
மறு நாள் காலையில் இரண்டு பயணிகளும் சென்று கிராமத் தலைவரைப் பார்த்து விடைபெற்றார்கள். தங்களுக்கு உதவி செய்ததற்காக நன்றி சொன்னார்கள். கிராமத் தலைவர் அவர்களை வாழ்த்தினார். அத்துடன் அவர்களுக்கு அன்பளிப்பாக நிறையப் பணம் கொடுத்தார்.
“இதில் உள்ள பணத்தை நீங்கள் இருவரும் எடுத்துக்கொள்ளுங்கள். நேற்றிரவு நீங்கள் எங்களைப் பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியதற்காக எங்கள் பரிசு இது! நாங்கள் எல்லாம் நேற்று நன்றாகப் பாடினோம், ஆடினோம்! உங்களுக்கு மிகவும் நன்றி!” என்று சொன்னார்.
பணத்தை வாங்கிக்கொண்டு பயணிகள் இருவரும் கிராமத்தை விட்டுச் சென்றார்கள். போகும் வழியில் இருவருக்கும், பணத்தைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக சச்சரவு ஏற்பட்டது.
குறட்டைவிட்டுத் தூங்கிய நண்பர், “எனக்குத்தான் அதிகப் பணம் வேண்டும். நேற்று நீங்கள் நன்றாகப் பாடுவதற்குக் காரணம் என் குறட்டை ஒலிதானே? நான் குறட்டை விடாமல் இருந்திருந்தால் நீங்கள் பாடியிருக்க முடியுமா” என்று கேட்டார்.
இன்னொருவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்கள் குறட்டையின் காரணமாக நேற்றிரவே உங்கள் கதை முடிந்திருக்கும். என் பாட்டுதான் உங்கள் உயிரைக் காப்பாற்றியது. இதற்காக நீங்கள் எனக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். எனக்குத்தான் அதிகப் பணம் வேண்டும்!”
அவர்கள் இது குறித்து வாக்குவாதம் செய்துகொண்டே சென்றார்கள். குழந்தைகளே, நீங்கள் இந்தப் பிரச்சினையைக் கொஞ்சம் தீர்த்து வைக்கிறீர்களா
நன்றி : த இந்து http://tamil.thehindu.com/

Tuesday, February 18, 2014

தொழிற்சங்க முன்னோடி சிங்கார வேலரின் பிறந்தநாள்

         இன்று, சிங்காரவேலரின் 154-வது பிறந்தநாள். அவர் யாரென்று நாட்டில் பலருக்குத் தெரியாதது சரித்திரக் குற்றமே. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது சிலையை வைத்துவிட்டு, சிங்காரவேலர் மாளிகையென்று அந்தக் கட்டிடத்துக்குப் பெயர்சூட்டி மகிழ்ந்ததோடு தமிழக அரசு அவரை மறந்துவிட்டது.
          சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதைப் பற்றி பரிசீலிக்க உத்தரவிட்டபின்தான், அவரைப் பற்றிய சில தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
          வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது என்பதும் அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் என்பதும், வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள்பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் தெரியாது.
          அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் என்ற நிகழ்வு, தன்மானமுள்ள இந்தியர் எவரையும் கொந்தளிக்க வைக்கும்.
          சிங்காரவேலரின் வாழ்வையும் கொள்கைகளையும் பற்றி வெளிவந்துள்ள நூல்கள் வெகு சிலவே. எப்போதும்போல் வரலாற்று ஆசிரியர்கள் வட இந்தியாவில் உள்ள பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிலாகித்து நூல்கள் பல எழுதியிருந்தாலும் தென்னிந்தியர்களைப் பற்றி, அதிலும் குறிப்பாக சிங்காரவேலரைப் பற்றிய தகவல்களை வெளியிட மறந்துவிட்டார்களா, மறுத்துவிட்டார்களா என்று தெரியவில்லை.
          உயர் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க தமிழக அரசு சிங்காரவேலருக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் நினைவிடம் அமைப்பதோடு, பள்ளி மாணவர்களுக்கும் அவரது லட்சியத்தையும் வாழ்க்கையையும் பாடமாக வைக்க முன்வர வேண்டும்.
          1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. இந்த சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களைவிட ஓரளவுக்கு மேம்பட்ட நிலையில் சிங்காரவேலரின் பெற்றோர் இருந்தபோதிலும், சாதியப் புறக்கணிப்பு, ஒடுக்குமுறை போன்ற தளைகளிலிருந்து அவர்களால் விடுபட இயலவில்லை.
          சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்று, முறையான பயிற்சிக்குப் பிறகு, சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907-ம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். பொதுவாகவே, வழக்கறிஞர்கள் தம்மிடம் முதலில் வருபவருக்குச் சார்பாகவே வழக்குகளை, அவரது வாடிக்கையாளர் குற்றவாளியா அல்லது பாதிக்கப்பட்டவரா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக்கொள்வது வழக்கம்.
          ஆனால், அப்போதுதான் வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்துவிட்டார்.
          சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்ட்டாக உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது அவரது ஆழ்ந்த அறிவே. ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. 1902-ம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சிங்காரவேலர் மேற்கொண்ட பயணம் மகத்தான அனுபவமாக அமைந்தது.
          அவர் இங்கிலாந்தில் இருந்தபோது மற்றுமொரு முக்கியமான சம்பவமும் நடைபெற்றது. உலக புத்த மதத்தவரின் மாநாடுதான் அந்தச் சம்பவம். இந்த மாநாட்டிலும் சிங்காரவேலர் பங்கேற்றார். கிட்டத்தட்ட புத்த மதத்துக்கு அவர் மாறிவிட்டார்.
          புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகளை ஆதரித்த, தொடக்க கால முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சிங்காரவேலர். சென்னையில் தொழிலாளர் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள்பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
          அவருக்கு 1922-ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922-ல் எம்.என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923-ல் அவர் மேதினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார்.
          கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்தக் கட்சி உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுடனும் மற்ற அயல்நாட்டுப் புரட்சி மையங்களுடனும் தொடர்புகொண்டிருக்கவில்லை என்று அதன் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் அழுத்திக் கூறியிருந்தார்கள்.
          சத்திய பக்த் அமைத்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு ஈர்ப்பு மையமாக விளங்கவில்லை என்றாலும், இந்திய மார்க்சியவாதிகளின் தனித்தனிக் குழுக்களை ஒன்றாக இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை அவர் தொடர்ந்தார். ஒன்றிணைப்பு மாநாடு கூட்டுவதற்காக முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு இடதுசாரி காங்கிரஸ்காரரான ஹஜரத் மொஹானியின் தலைமையில் ஒழுங்கமைப்பு கமிட்டி நிறுவப்பட்டது.
          இதன் பயனாக இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேலுச் செட்டியாரின் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பது என்றும் அதன் மையத்தை பம்பாயில் வைத்துக்கொள்வது என்றும் அந்த மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற்குழுவின் செயலாளர்களான ஜே. பெகெர்ஹொத்தாவும் எஸ்.வி. காட்டேயும் பதவி ஏற்றார்கள்.
          மார்ச் 1924-ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது. டிசம்பர் 1925-ல் கான்பூரில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.
          1927-ல் பெங்கால்-நாக்பூர் ரயில்வே வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1928-ல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார்.
          சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங்களிலும் தென்னிந்திய ரயில்வே போராட்டங்களிலும் மும்முரமாகப் பங்கேற்றதுடன், தனது பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதியும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் ஓய்வு ஒழிவின்றி, கம்யூனிஸப் பிரச்சாரம் செய்துவந்தார்.
          மே தினம், உலக அமைதி தினம் போன்றவற்றைக் கொண்டாடியதுடன் ஆகஸ்ட் 1927-ல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார். 1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.
          சாதிக்கு எதிரான சிங்காரவேலரின் உறுதியான நிலைப்பாடும், இந்து மதச் சடங்குகள், மனுஸ்மிருதி முதலான நூல்களின் மீதான அவரது வெறுப்பும்தான் பெரியாருடனும் அவரது சுயமரியாதைக் கட்சியுடனும் நெருக்கமாகச் செயல்பட வைத்தது. பெரியார் நடத்திவந்த ‘குடிஅரசு’ இதழிலும் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்குறித்து, சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் கொண்டிருந்த பாராமுகமான போக்கை சிங்காரவேலர் அங்கீகரிக்கவில்லை. எனவேதான், சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிக்கு அவர் ஆதரவளித்தார்.
இத்தகைய ஒரு வரலாற்று முன்னோடியைப் பற்றி
“போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதில் வியப்பில்லை.
- சந்துரு, 
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, 

சமூக விமர்சகர்

நன்றி : தஇந்து

Tuesday, January 21, 2014

இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் அனைத்திந்திய மாநாடு

அனைத்திந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் அனைத்திந்திய மகாநாட்டில் நமது பொது செயலர்: Click Here

Saturday, December 21, 2013

தனியார் தொலை தொடர்ப்பு நிறுவனங்களின் அச்சுறுத்தல்

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் எதிர்வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை புறக்கணிக்க போவதாக அச்சுறுத்தியுள்ளன.பிளாட் ரேட் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படவேண்டும் என்ற டிராய் அமைப்பின் பரிந்துரை செயல்படுத்தப்பட வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கூறி உள்ளன .

Sunday, October 6, 2013

அக்டோபர் 8 மக்கள் கவிஞன் பட்டுகோட்டை சுந்தரம் நினைவு நாள்


இடதுசாரி இயக்கத்தின் இடையறா ஈர்ப்பாளி..!

          இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில், எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. . தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில்,தளங்களில் பயணித்தது. இவர்களை தமிழ் உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமை படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனனும், , பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். துரோணரை நேரில் கண்டு பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து ,தலை சிறந்தவனாய் விளங்கிய ஏகலைவன் போல,பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.


தன்மானம் மிக்க பட்டுக்கோட்டையார்..!

          திரை உலகில் நுழைய பட்டுக்கோட்டையார் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் 10-ம் நெம்பர் வீட்டில் ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார். சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என். ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே.தேவரும் தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை துவக்க காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராகவும் தைரியசாலியாகவும் இருந்தார். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதி கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தை கேட்க பட அதிபரிடம் சென்றால்,. 'பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ' என்று பதில். ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். 'நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்ற பட அதிபர் வீட்டிற்குள் போய்விட்டார்.உடனே கல்யாணசுந்தரம் சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தை கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை? இதோ 'தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?'இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.
    குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்.
 குள்ள நரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம்.
          “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ,
      கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ,
 எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா ,
            விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா ,
         சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா ”.
            நினைவு கொள்வோம் மக்கள் கவிஞனை.

Saturday, July 13, 2013

கார்ட்டூன்

ஜாதி எக்ஸ்பிரஸ் 
                                                      
                                             நன்றி :-ஆனந்த விகடன் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...