Showing posts with label ராஜபாளையம். Show all posts
Showing posts with label ராஜபாளையம். Show all posts

Tuesday, August 11, 2015

உற்சாகம் ஊட்டிய ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

இன்று (11-08-2015)  ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது . கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் சமர்ப்பித்த ஆய்படு பொருள் மீது விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 நடைபெற  நிறுத்தத்தின் அவசியத்தையும் அதை வெற்றிகரமாக்க வேண்டிய  கட்டாயத்தையும்   மாவட்ட  உதவி    தலைவர் கண்ணன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் வலியுறுத்தி பேசினர் .பன்னாட்டு கம்பெனிகளின்  வேட்டை களமாக இந்திய தேசத்தை ஆக்கும் மத்திய அரசின் போக்கை  தோழர் மதி கண்ணன் கதைகள் கூறி எடுத்துரைத்தார் .மாவட்ட செயற்குழுவின் முடிவுகளை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் . ஸ்தல மட்ட பிரச்சனைகளை கையாள்வதில் மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விளக்கி தோழர் சமுத்திரகனி விளக்கினார் .LCM உறுப்பினர் தோழர் தங்கதுரை ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம் ஆகியோர் செப்டம்பர் 2 போராட்டத்தை பற்றி பேசினர் . மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் நன்றியுரையோடு மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விரிவாக கூறினார் .பெரும் அளவில் ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .

















Thursday, July 9, 2015

ராஜபாளையம் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் வாடிக்கையாளர் சேவை மைய துணைக் கோட்டப் பொறியாளரின் ஊழியர் விரோத, வாடிக்கையாளர்களை மதிக்காத, BSNLன் வளர்ச்சிக்கு எதிரான போக்கைக் கண்டித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் காட்சிகளில் சில...





















Sunday, December 28, 2014

சிறப்புமிகு ராஜபாளையம் கிளை மாநாடு

          ராஜபாளையம் BSNLEU மற்றும் TNTCWU  சங்கங்களின் கூட்டு  கிளை மாநாடு 27-12-2014 அன்று ராஜபாளையம் தொலைபேசி நிலைய வளாகத்தில் மூத்த தோழர் சந்திரசேகரன்  நமது BSNLEU சங்க கொடியை ஏற்றிவைக்க, TNTCWU சங்க கொடியை தோழர் பொன்னுசாமி ஏற்றிவைக்க மாவட்ட துணை செயலர் தோழர் வெங்கடேசனின் கோஷங்களுடன் மிக சிறப்பாக தொடங்கியது .தோழர் அனவரதம் அவர்கள் தலைமை வகிக்க கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
          அதன் பின் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நடுவண்  அரசின் கொள்கைகள் நாட்டின் ஏழை எளிய மக்களுக்கும் ,நடுத்தர வர்க்க மக்களுக்கும் மிக பெரிய அடியாக இருப்பதை சுட்டி காட்டி BSNL ஐ பாதுகாக்க வர உள்ள இயங்கங்களை பட்டியல் இட்டு கூறி வர உள்ள போராட்டங்களை 100 சத பங்களிப்போடு செய்ய வேண்டிய அவசியத்தை கூறி முறையாக கிளை மகாநாட்டை துவக்கி வைத்தார்.
          வாழ்த்துரையாக மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி, தோழர் வெங்கடேஷ் , TNTCTW மாவட்ட செயலர் தோழர் முனியசாமி , மூத்த தோழர் சிவஞானம் TNTCTWU சங்க மாநில பொறுப்பாளர் தோழர் வேல்சாமி  ஆகியோர் பேசினர். சிறப்புரையாக மாநில உதவிசெயலர் தோழர் முருகையா பேசும் போது ராஜபாளையம் கிளைக்கும் அவருக்கும் 25 ஆண்டு காலமாக உள்ள இணைப்பை பற்றி பெருமிதமாக கூறி மாநில செயற்குழுவின் முடிவுகளையும், ஒன்றுபட்ட போராட்டத்தின் அவசியம் பற்றியும், மக்கள் விரோத நடுவண் அரசின் போக்கையும் விரிவாக எடுத்துரைத்தார் .கிளை செயலர் தோழர் த .முத்துராமலிங்கம்  சமர்ப்பித்த ஆண்டு அறிக்கையும், கிளை பொருளாளர் சிவஞானம் சமர்ப்பித்த நிதி நிலை  அறிக்கையும்  ஏற்று கொள்ள பட்டு  புதிய நிர்வாகிகளாக தோழர்கள் அனவரதம் ,முத்துராமலிங்கம், சிவஞானம் ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.


















11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...