Monday, May 30, 2016

பிரமாண்டமான வெற்றி விழா

            

                    வெற்றி விழா
         விருதுநகர் GM அலுவலக கிளை மற்றும் SDOP கிளைகளின் கூட்டு மாநாடு 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் இரட்டை ஹாட்ரிக் வெற்றி பெற்றதை ஒட்டி வெற்றி விழா மாநாடாக கொண்டாடப்பட்டது . நமது சங்க கொடியை மூத்த தோழர் மலைச்சாமி அவர்கள் அதிர்வேட்டு முழங்க விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றினார் .கிளை செயலர்கள் M .S .இளமாறன் ,K .சிங்காரவேலு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த அஞ்சலி தீர்மானத்தை தோழர் சிங்காரவேலு வாசிக்க ,.மகாநாட்டை தொடக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் A .சமுத்திரகனி உரைநிகழ்த்தினர் ..நமது மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார் .வாழ்த்துரையாக சேவா BSNL (இரவீந்திரன் ) அணியின் மாவட்ட செயலர் தோழர் V .பரமேஸ்வரன், முன்னாள் RJCM உறுப்பினர் தோழர் S.குருசாமி , உதவி மாவட்ட செயலர் தோழர் S.கேசவன் , SNATTA மாவட்ட செயலர் தோழர் R.கோபிநாத் , AIDBPA மாவட்ட செயலர் தோழர் M.அய்யாசாமி , தோழர் T.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர் .GM அலுவலக கிளை நிர்வாகிகளாக தோழர்கள் N .மங்கையர்க்கரசி STS .M.S.இளமாறன் , A.மாரியப்பா ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளர் ஆக தேர்ந்தெடுக்கபட்டனர் .SDOP கிளை நிர்வாகிகளாக தோழர்கள் சிங்காரவேலு ,A.மாரிமுத்து , P .லக்ஷ்மணன் ஆகியோர் தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் . தோழர் மாரியப்பா நன்றியுரை நிகழ்த்த வெற்றி விழா மாநாடு இனிதே நிறைவுற்றது . 


























Monday, May 23, 2016

மத்திய , மாநில சங்க செய்திகள்

மாநில சங்க சுற்றறிக்கை எண் 101படிக்க :-Click Here

நன்றி

    Displaying RADHA.jpgDisplaying RADHA.jpg    நமது விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி விழா நிகழ்ச்சிக்கு நமது முன்னாள் மாவட்ட செயலரும் , ஓய்வு பெற்ற சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசருமான தோழர் T.ராதாகிருஷ்ணன் அவர்கள் ரூபாய் 5000/- வழங்கியுள்ளார் .அவருக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் .

Sunday, May 22, 2016

வெற்றி விழா

வெற்றி விழா
வரும் 30 ம் தேதி GM அலுவலக வளாகத்தில் GM அலுவலக மற்றும் SDOP , விருதுநகர் கிளைகளின் இணைந்த மாநாடும் , சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் இரட்டை ஹாட்ரிக் வெற்றி பெற்றதற்கு மாபெரும் வெற்றி விழாவும் தோழர்கள் முருகேசன் மற்றும் லக்ஷ்மணன் அவர்கள் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது.

இடம் :- GM அலுவலக வளாகம்              நேரம் :- மாலை 4 மணி 

தலைமை :- தோழர்கள் முருகேசன் மற்றும் லக்ஷ்மணன் 
வரவேற்புரை:- 
தோழர்கள் :- K .சிங்காரவேலு , 
M .S .இளமாறன் 

துவக்க உரை  :- 
1.S .ரவீந்திரன் , மாவட்ட செயலர் BSNLEU 
2. A .சமுத்திரகனி , மாவட்ட தலைவர் 
                               
சிறப்புரை:-
A.பாபு ராதாகிருஷ்ணன் , மாநில செயலர், BSNLEU 
வாழ்த்துரை :- கூட்டணி சங்க தோழர்கள் 
1.தோழர் .T.ராதாகிருஷ்ணன் ,AIBDPA 
2. தோழர் .V .பரமேஸ்வரன் 
3.தோழர் S. குருசாமி 
4.தோழர் S..கேசவன் 
5.தோழர்  R .கோபிநாத் 
   நன்றியுரை : தோழர் A.மாரியப்பா 

                  அனைவரும் வருக வருக 

Saturday, May 14, 2016

அஞ்சலி

அஞ்சலி
நமது BSNLEU முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகியும் ஒப்பந்த ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட  தலைவருமான தோழர் M .செல்வராஜூ அவர்கள் இன்று உடல் நல குறைவால் காலமானார் .அன்னார்  மறைவுக்கு BSNLEU மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த   அஞ்சலியை செலுத்துகிறது .அவர் மறைவால் துயறுரும் அவர் தம்  குடும்பத்தார்க்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது . 

Friday, May 13, 2016

CMD அவர்களின் வாழ்த்து

congratulate Mr Abhimanyu for being elected for BSNL's union election (group C & D)and hope this new change will enhance BSNL for even brighter future.

7 வது சரிபார்ப்பு தேர்தலில் முதன்மை சங்கமாக BSNLEU வெற்றி பெற்றதற்கு நமது பொது செயலர் தோழர் அபிமன்யுவை வாழ்த்தும் நமது CMD 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...