வெற்றி விழா
விருதுநகர் GM அலுவலக கிளை மற்றும் SDOP கிளைகளின் கூட்டு மாநாடு 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் இரட்டை ஹாட்ரிக் வெற்றி பெற்றதை ஒட்டி வெற்றி விழா மாநாடாக கொண்டாடப்பட்டது . நமது சங்க கொடியை மூத்த தோழர் மலைச்சாமி அவர்கள் அதிர்வேட்டு முழங்க விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றினார் .கிளை செயலர்கள் M .S .இளமாறன் ,K .சிங்காரவேலு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த அஞ்சலி தீர்மானத்தை தோழர் சிங்காரவேலு வாசிக்க ,.மகாநாட்டை தொடக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் A .சமுத்திரகனி உரைநிகழ்த்தினர் ..நமது மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார் .வாழ்த்துரையாக சேவா BSNL (இரவீந்திரன் ) அணியின் மாவட்ட செயலர் தோழர் V .பரமேஸ்வரன், முன்னாள் RJCM உறுப்பினர் தோழர் S.குருசாமி , உதவி மாவட்ட செயலர் தோழர் S.கேசவன் , SNATTA மாவட்ட செயலர் தோழர் R.கோபிநாத் , AIDBPA மாவட்ட செயலர் தோழர் M.அய்யாசாமி , தோழர் T.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர் .GM அலுவலக கிளை நிர்வாகிகளாக தோழர்கள் N .மங்கையர்க்கரசி STS .M.S.இளமாறன் , A.மாரியப்பா ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளர் ஆக தேர்ந்தெடுக்கபட்டனர் .SDOP கிளை நிர்வாகிகளாக தோழர்கள் சிங்காரவேலு ,A.மாரிமுத்து , P .லக்ஷ்மணன் ஆகியோர் தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் . தோழர் மாரியப்பா நன்றியுரை நிகழ்த்த வெற்றி விழா மாநாடு இனிதே நிறைவுற்றது .
No comments:
Post a Comment