Friday, October 30, 2015

ரோடு ஷோ ஸ்ரீவில்லிபுத்தூர்

29/10/2015 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சங்கம் கிருஷ்ணன் கோவிலில் ரோடு ஷோ நடத்தியது .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், கிளை செயலர் தோழர் சமுத்திரம் ,லோக்கல் கவுன்சில் உறுப்பினர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர் .குறுகிய நேரத்தில் 85 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .அதே நாளில்  ஸ்ரீவில்லிபுத்தூரில்  நடைபெற்ற இன்னொரு ரோடு ஷோவில் 23 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன 1 MNP பெறப்பட்டது .அதில் நமது தோழர்கள் வெங்கடசாமி மற்றும் திருப்பதி ஆகியோரும் NFTE சங்க தோழர் அழகப்பன் அவர்களும் கலந்து கொண்டனர் .சிறிய நகரில் குறுகிய நேரத்தில் 108 சிம்கள் விற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் .

Tuesday, October 27, 2015

ரோடு ஷோ சிவகாசி

இன்று விருதுநகர் மாவட்ட சங்கம் சிவகாசி நகரில் 3 இடங்களில் மாவட்ட செயலர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமையில் ரோடு ஷோ நடத்தியது .கிளை செயலர்கள் தோழர் ஜெயபாண்டியன் ,கருப்பசாமி கிளை தலைவர்  தோழர் அழகுராஜ் ,கிளை பொருளாளர் தோழர் இன்பராஜ் , மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் முனியாண்டி , ராஜு ,RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் ,தோழர்கள்  நாகேந்திரன்  மற்றும் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .ரோடு ஷோவில் 202 சிம்கள் விற்கப்பட்டன . 5 தரை வழி இணைப்புகள்  Broad பேண்ட் வசதியுடன் பெறப்பட்டன .19/10/2015 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழு முடிவை அமல்படுத்திய சிவகாசி கிளைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி .




Monday, October 26, 2015

மத்திய சங்க செய்திகள்

மத்திய சங்க செய்திகள் 

1. மாறுதல் கொள்கையில் (Transfer Policy ) கிராமப்புற பகுதியில் சேவைக்கு 3 ஆண்டுகள் Tenure என நிர்ணயம் .

2.அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்கு மேலாக விடுப்பு எடுத்தால் அது Tenure காலத்தில் கழிக்கப்படும் .
இந்த மாற்றத்திற்கான நமது கருத்துக்களை மத்திய சங்கம் கேட்டுள்ளது .
3. மார்க்கெட்டிங் பணியை தீவிர படுத்த மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது .செப்டம்பர் மாதம் 1 லட்சம் சந்தாதாரர்களை MNP மூலமாக நாம் பெற்றுள்ளோம் என்பது புதிய சாதனை .
4. JTO பயிற்சிக்கு சென்றுள்ள TTA களுக்கு TA முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும் என நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் GM (T&BFCI), அவர்களை சந்தித்து பேசியுள்ளார் . உரிய நிதி ஒதுக்கீடு தமிழ் மாநிலத்திற்கு அனுப்ப GM (T&BFCI) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .

Friday, October 23, 2015

8 வது மாவட்ட மாநாடு

                              சபாஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் 
8 வது மாவட்ட மகாநாட்டுக்கான நிதி வசூலை பல கிளைகள் முறையாக தொடங்கி விட்டன .ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சங்கம் அதன் இலக்கான 25,000/- ரூபாயை வசூல் செய்து 20,000 ரூபாயை மாவட்ட சங்கத்திடம் 19/10/2015 அன்று நடைபெற்ற சிறப்பு செயற்குழுவில் கொடுத்துவிட்டது .இலக்கை முதலில் முடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .விருதுநகர் கிளைகள் 24,500 ஐ முதல் தவணையாகவும் அருப்புகோட்டை கிளை முதல் தவணையாக ரூபாய் 10,000/- கொடுத்து உள்ளன . சிவகாசி கிளைகள் கிட்டத்தட்ட 40,000 ரூபாய் வசூல் செய்து உள்ளது .மாவட்ட மாநாடு ஊழியர் மத்தியில் ஒரு எழுச்சியை உருவாக்கி உள்ளது . 


ரோடு ஷோ

19/10/2015 அன்று நடைபெற்ற சிறப்பு மாவட்ட செயற்குழுவின் முடிவின் படி இன்று (23/10/2015 ) அருப்புகோட்டை ராஜீவ் நகரில் BSNLEU சார்பாக ரோடு ஷோ நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன்,மாவட்ட உதவி தலைவர் தோழர் மதி கண்ணன் ,லோக்கல் கவுன்சில் உறுப்பினர் தோழர் ஜெயகுமார் ,அருப்புகோட்டை கிளை செயலர் தோழர் சோலை ,மாவட்ட உதவி செயலர் தோழர் அஷரப் தீன் ,SNEA கிளை செயலர் தோழர் மனோகர் , udaan டீம் தோழர் .தினகரன் , கணேசன் டெலிகாம் மெக்கானிக்  ஆகியோர் கலந்து கொண்டனர் .108 சிம்கள் விற்கப்பட்டன .4 MNP மற்றும் 3 லேன்ட் லைன்  இணைப்புகள் பெறப்பட்டன .அருப்புகோட்டை கிளை சங்கத்திற்கு மாவட்ட சங்கத்தின்  வாழ்த்துக்கள் .

Tuesday, October 20, 2015

சிறப்பு மாவட்ட செயற்குழு

19/10/2015 அன்று மாலை விருதுநகர் மாவட்ட சிறப்பு  செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர்  தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .கீழ் கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன .
1. மாவட்ட மாநாட்டு நிதியை அனைத்து கிளைகளும் 2016 ஜனவரி மாதம் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க  வேண்டும் .
2. அடுத்த செயற்குழு கூட்டம் சாத்தூர் இல் 26/11/2015 அன்று நடைபெறும் .
3.தோழர் C வெங்கடேஷ் அவர்கள் JTO பதவி உயர்வு பெற்று பயிற்சிக்கு சென்று விட்டதால் அவர் வகித்த வொர்க் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு தோழர்  A சண்முககுமார் ,TTA அவர்களை நியமிப்பது என்றும் அவர் வகித்த மாவட்ட உதவி செயலர் பதவிக்கு ராஜபாளையம் தோழர் தியாகராஜன் ,STS அவர்களை தேர்வு செய்ய மாவட்ட செயற்குழு ஏகமனதாக முடிவு  செய்தது .
4. காலியாக கூடிய இடங்களுக்கு உபரியாக இருக்க கூடிய இடங்களில் இருந்து stay அடிப்படையில் மாறுதல்கள் போட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது .
5. நமது சங்கம் சார்பாக ரோடு ஷோ நடத்துவது அதில் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் அருப்புகோட்டையில் வரும் 23/10/2015 அன்று நடத்துவது .




 


Monday, October 19, 2015

இந்தியாவில் நுழைய பல மில்லியன் டாலரை லஞ்சமாக கொட்டிக் கொடுத்த வால்மார்ட்.... ஷாக் ரிப்போர்ட்!

Wal-Mart paid millions of dollars in bribes in India

வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு வசதியாக சுங்கத்துறை கெடுபிடிகள் இல்லாமல் இருப்பதற்காகவும் சரக்குகளை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவுவதற்காகவும் அரசு அதிகாரிகளுக்கு பல மில்லியன் டாலர்களை லஞ்சமாக கொடுத்தாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மத்திய அரசு அதிகாரிகளும், வால்மார்ட் அதிகாரிகளும் இந்த புகார்களை மறுத்துவந்த நிலையில் தற்போது உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் வால் ஸ்டீர்ட் ஜேர்னல் பத்திரிகையில் வால்மார்ட் நிறுவனத்தின் லஞ்ச நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், சுங்கத்துறை கெடுபிடிகள் இல்லாமல் சரக்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்காக பல அதிகாரிகளுக்கு வால்மார்ட் லஞ்சம் கொடுத்தது குறித்து அமெரிக்காவில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் ரூ300, ரூ13,000 ஆயிரம் என அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பல மில்லியன் டாலர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
                 நன்றி ;-ஒன் இந்தியா நியூஸ்  

தர்ணா போராட்டம்

தற்காலிக போனஸ் கேட்டு போரம் சார்பாக இன்று தர்ணா போராட்டம் விருதுநகர் மாவட்டத்தில் NFTE மாவட்ட செயலர் தோழர் .சக்கணன் தலைமையில் காலை தொடங்கியது கோரிக்கையை விளக்கி SNEA மாவட்ட செயலர் தோழர் G .செல்வராஜ் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் T ராதாகிருஷ்ணன் , BSNLEU தோழர்கள் சமுத்திரகனி ,முத்துசாமி ,மதிகண்ணன் ,அஷ்ரப்தீன் , ஆகியோரும் ஓய்வூதியர் சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் பெருமாள்சாமி , NFTE சங்கம் சார்பாக தோழர்கள் ரமேஷ் ,பவுண்ராஜ் , SNEA சங்கம் சார்பாக தோழர் மனோகர் ,AIBSNLEA சார்பாக தோழர் நாராயணன் , தோழர் R பிரேம்குமார் ஆகியோர் பேசினர் . தர்ணாவை நிறைவு  வைத்து  BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் உரை நிகழ்த்தினார் . 20 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் தர்ணாவில் கலந்து கொண்டனர் .தோழர் இளமாறனின் எழுச்சி மிகு கோஷங்களுடன் போராட்டம் நிறைவுற்றது .


BSNL to allow landline users avail free call benefit on Mobile

BSNL mobile subscribers will soon be able to avail free calling benefits offered on their landline phone as the state-run firm is going to roll out a convergence platform that will sync subscribers’ mobile and fixed line connections.“We are in the process of rolling out fix mobile convergence platform by Diwali. This will enable consumers avail value added service in mobile phones, make free night calls from mobile phones if they have subscribed to landline and host of other modern facilities,” BSNL Chairman and MD Anupam Shrivastava told PTI.He said that with this roll out, consumers will be able to link their mobile and landline accounts.“The sync between the two accounts will be such that it will enable our subscribers receive their landline calls on mobile phones,” Shrivastava said.BSNL has invested over Rs 400 crore to modernise its landlines.The company slipped to sixth position in terms of overall subscriber base in April. At the end of August, BSNL’s total subscriber base was around 7.8 crore. After a long period, BSNL in July and August 2015 ranked among top five mobile players in terms of net addition of monthly subscribers.BSNL, however, has been losing customers in landline space despite offering free night calls from landline to any phone in India.“We have been able to arrest decline rate in landline connections. In a few months and with launch of fix mobile convergence, our landline should turn positive. We have already turned gainer for mobile subscribers under mobile number portability scheme,” Shrivastava said.The company has launched free roaming scheme which enables its subscribers to attend free incoming calls while travelling anywhere in the country at no extra cost.“Free roaming scheme has become one of the major growth drivers for uptake in mobile subscriber number,” Shrivastava added.The company is also in the process to tie up with Hitachi’s ATM business unit which will allow its landline customers, who pay bill offline, to make payment anytime during the day.“Many landline users still pay bill at our counter. The counters are open for limited time and between peak office hours i.e. 10am — 2pm. We are partnering with Hitachi. It will install ATM at our premise which will also accept cash.BSNL customers will be able to pay their bills at this ATM as per their convenience,” Shrivastava said.He said that Hitachi ATM machines will be rolled out initially in small cities around March 2016.ll also get revenue share from each transaction made on ATMs installed in its premise.
                                      நன்றி :- தி ஹிந்து 

Saturday, October 17, 2015

சிறப்பு செயற்குழு கூட்டம்

சிறப்பு செயற்குழு கூட்டம் 
தலைமை :-A சமுத்திரகனி 
இடம் :- மாவட்ட சங்க அலுவலகம் 
நாள் :- 19/10/2015 
நேரம் :- மாலை 4 மணி 
ஆய் படு  பொருள் :-
1.மாவட்ட மாநாட்டு நிதி 
2.ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாடு 
3. மாறுதல்கள் பற்றி ஓர் ஆய்வு 
4.வொர்க் கமிட்டி ,மற்றும் மாவட்ட சங்க நிர்வாகி நியமனம் 
5.  தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
நன்றியுரை :- மாவட்ட பொருளாளர் 

தற்காலிக போனஸ் வழங்க கோரி தர்ணா போராட்டம்

பிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர்


பிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் 

PLI கோரி 19.10.2015 அன்று நாடு தழுவிய தர்ணா போராட்டம்

 Forum சுற்றறிக்கை படிக்க :Click Here

Friday, October 16, 2015

தேவை விஜிலன்ஸ் விசாரணை

குவார்ட்டர்ஸ் கோல்மால்  
நமது மாவட்டத்தில் இலாகா குடியிருப்புகளை ஒதுக்குவதில் விதிகளை முறையாக கடைபிடிக்காமல் , தன்னிச்சை போக்கில் முடிவு எடுப்பதை மாவட்ட பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .காத்திருப்போர் பட்டியல்  மனம் போன போக்கில் (சிலர் விருப்பம் போல ) கையாள படுகிறது . waiting list  ஏன் மாறியிருக்கிறது என்பதை DGM (CFA) தெரிந்த பிறகும் தவறான தகவல் அவருக்கு கீழ் மட்ட அதிகாரிகளால் தரப்படுவது ஏன் ?
        தேவை விஜிலன்ஸ்  விசாரணை 

Tuesday, October 13, 2015

ஜெயம் கொண்டான் BSNLEU

                                தர்மம் வெல்லும் 
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கோட்டத்தில் டெலிகாம் மெக்கானிக் கேடரில் சுழல் மாற்றல் போடுவதில் திட்டமிட்டு வேண்டும் என்றே ஒரு சங்கம் செய்த பித்தலாட்டம் நமது சங்கம் இன்று நடத்திய போராட்டத்தில் தவிடு பொடியாக்கப்பட்டது.மாவட்டம் முழுவதும் நமது தோழர்கள் பெரும் திரளாக இன்று நடை பெற்ற பெரும் திரள் முறையீடு போராட்டத்தில் பங்கேற்றனர் .ராஜபாளையம் கோட்ட பொறியாளரை தவறான கருத்துக்களை கூறி திசை திருப்பியவர்களின் கனவை சிதைந்தது நமது உறுதியான போராட்டம் .குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்தவர்களுக்கு மீண்டும் மரண அடி கொடுத்தது நமது எழுச்சிமிகு போராட்டம் .கோட்ட பொறியாளர் மாறுதல் உத்தரவை முறையாக பிறப்பித்த பின் நமது போராட்டம் விலக்கி கொள்ள பட்டது. தொடர்ந்து நமது சங்கத்திற்கு எதிராக தேவையற்ற தொல்லைகளை தரும் இவர்களின் செயல்களை மாவட்ட சங்கம் விரைவில் RTI முலமாக அம்பலப்படுத்தும் .நமது தமிழ் மாநில சங்கத்தின் வழிகாட்டலுக்கு நமது மாவட்ட சங்கத்தின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .போராட்டத்தில் உறுதி பூர்வமாக பங்கேற்ற அனைத்து தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .பேச்சு வார்த்தையில் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்திய DGM (ADMN ) மற்றும் AGM(Admn), SDOT,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியோருக்கு மாவட்ட சங்கம் தன் நன்றியை தெரிவித்து கொள்கிறது .
                            

Monday, October 12, 2015

அரங்கேறும் நாடகத்தை அம்பலபடுத்த போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கோட்டத்தில் outdoor பணி புரியும் தோழர் ஒருவர் 2 முறை உடல்நலகுறைவால் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார் .கடந்த 5 மாதங்களுக்கு முன்பே இப் பிரச்னை SDOT ,ஸ்ரீவில்லிபுத்தூர் முன்பாக விவாதிக்க பட்டது .OUTDOOR பகுதியில் வேலை பார்க்க விருப்பம் கேட்கபட்டு  அதற்க்கு ஒருவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை .ஆதலால் சுழற்சி மாறுதல் அடிப்படையில் SDOT ,ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள் ஒரு மாறுதல் பட்டியலை கோட்ட பொறியாளர் , ராஜபாளையம் அவர்கள் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார் .ஆனால் DE அவர்கள் அதற்க்கு அப்ருவல் கொடுக்காமல் recommend  செய்து அனுப்பியதை SDOT , ஸ்ரீவில்லிபுத்தூர் ஏற்று கொள்ள மறுத்துவிட்டார் .ஏன் என்று நமது சங்கம் கேட்ட போது ஒரு சங்கம் இதை ஏற்று கொள்ள மறுக்கிறது என்று கூறியுள்ளார் .சுழற்சி மாறுதலில் ஒரு கருத்து ஒற்றுமை ஊழியர்களிடம் இல்லை என்பதால் விதிகளின் அடிப்படையில் போட வேண்டும் என்ற நமது சங்க நிலைபாட்டை ஒரு நபர் ஏற்று கொள்ள வில்லை என்பதால் அந்த நபரை ஒரு சங்கம் தன பகடை காயாய் பயன்படுத்தி இந்த மாறுதலை போட வேண்டாம் என வலியுறுத்தியதை DE , ராஜபாளையம் ஏற்று கொண்டு நான் அனுப்பி விட்டேன் .நீங்கள் SDOT , ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்களிடம் பேசுங்கள் என தட்டி கழிக்க ,நாம் SDOT  ,ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்களிடம் பேசினால் நீங்கள் DE அவர்களிடம் பேசி கொள்ளுங்கள்  என்று தட்டி கழிக்க ஆக "அவரை கேட்டால் இவர் என்பார் .இவரை கேட்டால் அவர் என்பார் " ஆக ஒரு அருமையான நாடகத்தை இருவரும் அரங்கேற்றி கொண்டு உள்ளனர் .ஏப்ரல் மே மாதம் போட வேண்டிய சுழல் மாற்றத்தை நிர்வாகம் திட்டமிட்டு நாள்களை கடத்தி கொண்டு விட்டு தற்போது நாடகம் ஆடுவதை நாம் அனுமதிக்க முடியாது என்று உறுதியாக மாவட்ட நிர்வாகத்திடம் கூறி விட்டோம் ..கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுத்த பின்பு கூட  போக்கு காட்டும் DE ,ராஜபாளையம் , மற்றும் SDOT , ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆகியோர் சுழல் மாற்றம் விசயமாக உறுதியான முடிவை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மாபெரும் பெரும் திரள் முறையீட்டு போராட்டத்தை மாவட்ட சங்கம் 13/10/2015 அன்று மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தில் நடத்தும் .சிலர் மீன் பிடிக்க இவர்கள் துணை போவதை BSNLEU சங்கம் ஒரு போதும்  அனுமதிக்காது .

                                                                    ஒன்று திரள்வோம்

Tuesday, October 6, 2015

போனஸ்

தற்காலிக போனஸ் வழங்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் FORUM சார்பாக நடைபெற்ற ஆர்பாட்ட காட்சிகள் 
GM அலுவலகம் 
சிவகாசி 
ராஜபாளையம் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...