ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கோட்டத்தில் outdoor பணி புரியும் தோழர் ஒருவர் 2 முறை உடல்நலகுறைவால் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார் .கடந்த 5 மாதங்களுக்கு முன்பே இப் பிரச்னை SDOT ,ஸ்ரீவில்லிபுத்தூர் முன்பாக விவாதிக்க பட்டது .OUTDOOR பகுதியில் வேலை பார்க்க விருப்பம் கேட்கபட்டு அதற்க்கு ஒருவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை .ஆதலால் சுழற்சி மாறுதல் அடிப்படையில் SDOT ,ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள் ஒரு மாறுதல் பட்டியலை கோட்ட பொறியாளர் , ராஜபாளையம் அவர்கள் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார் .ஆனால் DE அவர்கள் அதற்க்கு அப்ருவல் கொடுக்காமல் recommend செய்து அனுப்பியதை SDOT , ஸ்ரீவில்லிபுத்தூர் ஏற்று கொள்ள மறுத்துவிட்டார் .ஏன் என்று நமது சங்கம் கேட்ட போது ஒரு சங்கம் இதை ஏற்று கொள்ள மறுக்கிறது என்று கூறியுள்ளார் .சுழற்சி மாறுதலில் ஒரு கருத்து ஒற்றுமை ஊழியர்களிடம் இல்லை என்பதால் விதிகளின் அடிப்படையில் போட வேண்டும் என்ற நமது சங்க நிலைபாட்டை ஒரு நபர் ஏற்று கொள்ள வில்லை என்பதால் அந்த நபரை ஒரு சங்கம் தன பகடை காயாய் பயன்படுத்தி இந்த மாறுதலை போட வேண்டாம் என வலியுறுத்தியதை DE , ராஜபாளையம் ஏற்று கொண்டு நான் அனுப்பி விட்டேன் .நீங்கள் SDOT , ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்களிடம் பேசுங்கள் என தட்டி கழிக்க ,நாம் SDOT ,ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்களிடம் பேசினால் நீங்கள் DE அவர்களிடம் பேசி கொள்ளுங்கள் என்று தட்டி கழிக்க ஆக "அவரை கேட்டால் இவர் என்பார் .இவரை கேட்டால் அவர் என்பார் " ஆக ஒரு அருமையான நாடகத்தை இருவரும் அரங்கேற்றி கொண்டு உள்ளனர் .ஏப்ரல் மே மாதம் போட வேண்டிய சுழல் மாற்றத்தை நிர்வாகம் திட்டமிட்டு நாள்களை கடத்தி கொண்டு விட்டு தற்போது நாடகம் ஆடுவதை நாம் அனுமதிக்க முடியாது என்று உறுதியாக மாவட்ட நிர்வாகத்திடம் கூறி விட்டோம் ..கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுத்த பின்பு கூட போக்கு காட்டும் DE ,ராஜபாளையம் , மற்றும் SDOT , ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியோர் சுழல் மாற்றம் விசயமாக உறுதியான முடிவை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மாபெரும் பெரும் திரள் முறையீட்டு போராட்டத்தை மாவட்ட சங்கம் 13/10/2015 அன்று மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தில் நடத்தும் .சிலர் மீன் பிடிக்க இவர்கள் துணை போவதை BSNLEU சங்கம் ஒரு போதும் அனுமதிக்காது .
ஒன்று திரள்வோம்
No comments:
Post a Comment