தர்மம் வெல்லும்
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கோட்டத்தில் டெலிகாம் மெக்கானிக் கேடரில் சுழல் மாற்றல் போடுவதில் திட்டமிட்டு வேண்டும் என்றே ஒரு சங்கம் செய்த பித்தலாட்டம் நமது சங்கம் இன்று நடத்திய போராட்டத்தில் தவிடு பொடியாக்கப்பட்டது.மாவட்டம் முழுவதும் நமது தோழர்கள் பெரும் திரளாக இன்று நடை பெற்ற பெரும் திரள் முறையீடு போராட்டத்தில் பங்கேற்றனர் .ராஜபாளையம் கோட்ட பொறியாளரை தவறான கருத்துக்களை கூறி திசை திருப்பியவர்களின் கனவை சிதைந்தது நமது உறுதியான போராட்டம் .குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்தவர்களுக்கு மீண்டும் மரண அடி கொடுத்தது நமது எழுச்சிமிகு போராட்டம் .கோட்ட பொறியாளர் மாறுதல் உத்தரவை முறையாக பிறப்பித்த பின் நமது போராட்டம் விலக்கி கொள்ள பட்டது. தொடர்ந்து நமது சங்கத்திற்கு எதிராக தேவையற்ற தொல்லைகளை தரும் இவர்களின் செயல்களை மாவட்ட சங்கம் விரைவில் RTI முலமாக அம்பலப்படுத்தும் .நமது தமிழ் மாநில சங்கத்தின் வழிகாட்டலுக்கு நமது மாவட்ட சங்கத்தின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .போராட்டத்தில் உறுதி பூர்வமாக பங்கேற்ற அனைத்து தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .பேச்சு வார்த்தையில் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்திய DGM (ADMN ) மற்றும் AGM(Admn), SDOT,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியோருக்கு மாவட்ட சங்கம் தன் நன்றியை தெரிவித்து கொள்கிறது .
No comments:
Post a Comment